24.3.10

வெறும் காற்றுதான் மொழியா?

வெறும் ஓசைதான் மொழி - இதில் எந்த மொழியும் உயர்ந்தது இல்லை என நமது காங்கிரஸ் கட்சியின் ஒரு கோஷ்டித் தலைவர் சொல்லியிருக்கிறார்.

இவர் புதிதாய் ஒன்றும் சொல்லிவிடவில்லை - புரட்சிகரமாய் ஒன்றும் சொல்லிவிடவுமில்லை. ஏற்கனேவே மொழி வல்லுனர்கள் அல்லது தத்துவவாதிகள் ஒரு நீண்ட தங்கள் கருத்துக் கட்டமைப்பிறகுப் பிறகு ஒரு முடிவுக்கு வந்து சொல்லியிருக்கிறார்கள். அதற்கான மாற்றுக் கருத்துக்களும் மாற்று ஆராய்ச்சி முடிவுகளும் வந்து கொண்டுதானிருக்கின்றன. அதில் ஒரு சாராரின் கருத்துக்களை இவர் வழி மொழிந்திருக்கிறார். அவ்வளவே.

ஆனால், இது போன்ற கருத்துக்களை காங்கிரஸ் காரர்கள் சொல்வதுதான் நமது கவலைக்குக் காரணம். ஒரு சிலரைத் தவிர நிறையப் பேருக்கு - தமிழில் பேசுவது அவ்வளவு கடினம். ஒருவேளை அதனால் தான் சொன்னாரோ என்னவோ.

ஒருவேளை, மனிதகுலம் முழுவதும் ஒரே இனமாய் இருக்க வேண்டும்... சண்டையிட்டு பிரிந்து போய் வாழக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் கூட அவர் சொல்லியிருக்கலாம். ஆனால் அதை - "தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு' நிகழ்ச்சி
நடத்தியவர் பிறந்த நாள் விழாவில் பேசியிருக்கக் கூடாது.

ஒரு வேளை கோஷ்டித் தகராறுகள் மாதிரி - மொழி வழி மக்கள் சண்டையிடக் கூடாது என்பதற்காக கூட சொல்லியிருக்கலாம்.
அது சரி - காங்கிரஸ் காரர்கள் மட்டும் எப்படி சண்டையிடுவதற்கு காரணம் கண்டு பிடிக்கிறார்கள். மொழி என்றால் அதையும் காரணம் காட்டி புதிதாய் இன்னொரு கோஷ்டி வந்துவிடக் கூடாது என்பதற்காகக் கூட இப்படிச் சொல்ல்லியிருக்கலாம்.

ஒரு மொழி வெறும் ஓசையா அல்லது அதன் தன்மை என்ன என்பதை எல்லாம் மொழி அறிஞர்கள் தான் நமக்கு விளக்க வேண்டும். நான் அதில் தலையிட விரும்ப வில்லை.

ஒரு செய்தி தெரியவில்லை என்றால் 'சும்மா இருப்பதே சுகம்' என்று இருப்பதே நல்லது. ஆனால் ஏன்தான் இப்படி ஆய்ந்தறிந்த அறிஞர்கள் போல எடுத்து விடுகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

மொழி வெறும் ஓசைதான் - அப்படி என்றே வைத்துக் கொள்வோம்.
அப்புறம் ஏன் ஆங்கிலத்தையும் இந்தியையும் தூக்கி நிறுத்தனும்?
அது வெறும் ஓசை என்பது தமிழ் மொழிக்கு மட்டும்தானா - இந்திக்கு இல்லையா? மராதிக்கு இல்லையா? அல்லது மலையாளத்திற்கு இல்லையா?
என் வெறும் இந்தி ஓசை மட்டும் நாட்டில் முக்கியத்துவம் பெற வேண்டும்?
வெறும் ஓசை என்றால், எல்லாருக்கும் ஹிந்தியை விட ஆங்கிலம் நன்றாகத்தெரியும் - தேசிய நெடுஞ்சாலைகளில் ஹிந்தியை இவர் அழிக்கவேண்டும் என்று சொல்லட்டும். வெறும் ஒரு ஓசைக்கு மட்டும் என்ன அதிக மதிப்பு.

எது, ஒரு ஓசை (இந்தி அல்லது ஆங்கிலம்) மிக முக்கியம் என்று தீர்மானிக்கிறது. எண்ணிக்கையா?

உங்களுக்கு என்ன நம்பிக்கையோ - அதைத் தாராளமாகச் சொல்லுங்கள் - ஆனால் எப்போதும் தமிழர்களை மட்டும் மொட்டையடிக்கும் விதத்தில் சொல்லாதீர்கள். எல்லாருக்கும் இது பொருந்தும் என்று சொன்னால் எல்லா இடத்திலும் இதைப் பேசவேண்டும்.
பெங்களூருவில் - மும்பையில் --- பேசுவாரா? கன்னடா வெறும் ஓசைதான் - மராத்தி வெறும் சத்தங்களின் கூட்டம். - பேசிவிட்டு அங்கிருந்து வந்துவிட முடியுமா?

எந்த அடிப்படையில் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வரும் போக்கு அணையிடப்படுகிறது? எதனால் கேரளாவில் அணையின் அடி உயர மறுக்கிறது?

வெறும் ஓசையினாலா?

நாம் எல்லா இடங்களிலும் அடிபட வேண்டும். இந்தக் காங்கிரஸ் காரர்கள் தெரிந்துதான் பெசிகிரார்களா இல்லை தெரியாமலே பேசுகிறார்களா?

ஒரு மொழிக்காக மக்கள் சண்டையிடுவதில் நமக்கும் உடன்பாடு இல்லை. ஆனால் ஒரு மொழி பேசும் மக்கள் பிற மொழி பேசும் மக்களால் அடிமைப் படுத்தும் போக்கை நாம் உணர வேண்டும் என்பதுதான் நமது எண்ணம். இதை எப்படி எதிர் கொள்ளவேண்டும் என்று நமக்கு அவர் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.


இசைக்குத்தான் மொழி இல்லை என்கிறார்கள் - இவர் மொழியே இல்லை என்கிறார். மிகப் பெரிய இசை வல்லுநர் போல இருக்கிறது.


0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்