1.10.11

சூப்பர் சிங்கர் கலாட்டா

சூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும்.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்டுமா என்றுதான் எழுதாமல் இருந்தேன். ஆனால் நேற்று முன்தினம் சத்யாவிற்காக அனைத்து இசையுலக ஜாம்பவான்களும் பாராட்டுக் கொடுத்ததைப் பார்த்த போது சரி எழுதுவோம் என்று தோன்றியது.

இசை என்பது எல்லார் மனதையும் வருடக் கூடியது. இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை - நீட்ஷே உட்பட. அவருக்கும் வாக்னருக்கும் ஆன உறவு இசையால் எழுந்தது  - பின்பு ஈகோவால் அழிந்தது. சரி விஷயத்திற்கு வருவோம். அப்படித்தான் இந்த இசை நிகழ்ச்சி எனக்கு சில வேளைகளில் மகிழ்ச்சி தந்தது.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிவுகள் பல பேருக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. எனக்கு அப்படி இருந்தது. மிகவும் நன்றாக சத்யா பாடினார். சாய் நன்றாகப் பாடினார். அப்படித்தான் சொல்ல முடியும். ஆனால் மக்கள் வாக்கு ஏன் சாய்க்கு அதிகமாகக் கிடைத்தது என்பது பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

முதலில் - அந்த மக்கள் வாக்கு என்பது உண்மையானதா என்பதிலேயே சந்தேகம். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே வாக்குகள் போடலாம் - போடலாம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். மக்கள் கையில் முடிவு இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். எல்லா நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி. ரேட்டிங்கைக் கூட்டுவதற்கான முயற்சி - இதில் சில நடுவர்களின் ஒத்துழைப்பு இன்றி இந்த நிகழ்ச்சியை அவ்வளவு சஸ்பென்ஸ் உள்ளதாகக் காட்டிக் கொள்ள முடியாது.

மக்கள் எஸ்.எம்.எஸ் அனுப்பவதால் ஸ்பான்சருக்கு லாபம் - தான் விரும்பியவருக்கு பட்டம் கொடுக்கலாம். மக்கள் கொடுத்தார்கள் என்று சொல்லலாம். கேட்டால் நாமளா ஒரு எண்ணிக்கையைக் கொடுக்கலாம். வோயில்டு கார்ட் ரவுண்டில் சாய் சரண் தேர்ந்தெடுக்கப் பட்ட போதே அந்தச் சந்தேகம் இருந்தது. அதை மக்கள் எதிர்பார்க்காதவருக்குக் கொடுக்கலாம். அப்படியாக அந்த நிகழ்ச்சியினை பார்க்கும் எண்ணிக்கையை அதிகப் படுத்திக் கொள்ளலாம். இதுதான் அவர்களது நோக்கம்.

அது சிம்புவின் அழுகையாக இருக்கட்டும் - ரம்பாவின் கோபமாக இருக்கட்டும். இதில் என்ன செய்யலாம் என்று பார்த்தார்கள் - சத்யா நன்றாகப் பாடுகிறார் ஆனால் சாய் பட்டம் வெல்கிறார். பிறகு இசைக் கலைஞர்கள் எல்லாம் சேர்ந்து சாயை விட ஏறக்குறைய நாற்பது மார்க்குகளை சத்யா பெற்றிருக்கிறார் என்று விளக்கம் வேறு. உண்மையிலேயே இதுதான் எண்ணிக்கை என்றால் இந்த எண்ணிக்கையை மேடையில் அறிவிப்பதற்கு என்ன வந்தது? - உண்மையில் அப்போது எண்ணிக்கை இருந்திருக்காது. அவ்வளவுதான் - அந்த முடிவு வந்தால்தான் போட்டி முடிந்தும் திருப்பி ஏர் டெல் சூப்பர் சிங்கர் இந்த வாரமும் ஒளி பரப்ப முடியும். ஆக மொத்தம் விறு விறுப்பாக நடத்தப் படவே ஒரு நிகழ்ச்சி.

எண்ணிக்கை கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும் - வாக்குகள் ஓரளவிற்கு உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் - இது மக்கள் நடுவர்களுக்கு கொடுத்த எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. சஸ்பெண்சிற்காக நடுவர்கள் ஆடிய ஆட்டம் போல மக்கள் ஆடியிருக்கிறார்கள் என்றே பார்க்க வேண்டியிருக்கிறது. நடுவர்கள் எல்லாம் எழுந்து கை தட்டி விட்டால் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுபோலவும் - அவர்கள் சொல்லியதற்கு மறு வார்த்தை இல்லை என்பது போலவும் இருந்ததற்கு மக்களின் பதில்.

ஒரு உதாரணம்.

கடைசி வாரத்தில் மூன்று பேர் மட்டும் பாடிய முதல் நாளில் சத்யாவிற்கு எல்லாரும் ஆறு மதிப்பெண் கொடுத்த போதே நான் முடிவு செய்து விட்டேன் - நிச்சயமாக சத்யா முதல் இரண்டு பேரில் உள்ளே இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று. ஏன்னா ஆறு மார்க்கு வாங்கி இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவது என்பது கஷ்டம் - அப்படி எல்லாரையும் நினைக்க வைத்து கடைசியில் மிகவும் சர்ப்ரைசாக சாயை விட புள்ளி ஐந்து மதிப்பெண்கள் வாங்கி உள்ளே நுழைந்ததாக நடுவர்கள் அறிவித்தார்கள். சாய் வெளியேறினார். மீண்டும் மலையாள வாடையோடு உள்ளவர் உள்ளே அனுப்பப் பட்டார். இத்தனைக்கும் அந்த வாரத்தைப் பொறுத்த வரைக்கும் உள்ள நான்கு நாட்கள் பெர்பார்மன்சில் சாய் இரண்டு பகுதிகளில் சிறந்த பாடகருக்கான விருதைப் பெற்றார் - சத்யா ஒன்று - பூஜா ஒன்று - ஆனால் சத்யா புள்ளி. ஐந்து கூடப் பெற்றதாகச் சொன்னார்கள். நடுவர்கள் சரியான தீர்ப்பு வழங்காத பொது மக்கள் கேட்பதற்கு முடிய வில்லை.
ஆனால் அன்று ஒருவேளை சத்யா வெளியேறி சாயைப் போல போட்டி போட்டு வந்திருந்தால்சத்யா வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒருவனை எப்படி நோகடிக்க முடியுமோ அப்படி நோகடித்து - எல்லாரையும் நோகடித்து எதிர்பார்க்காத சஸ்பென்சை சீரியல் போல அளிப்பதில் அவர்களுக்கான ரேட்டிங்கைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

சரி ஏன் சாய் சரணைத் தேர்ந்தெடுத்தார்கள்?

1 . ஏற்கனவே மூன்று வருடங்களாகச் சாய் சரணின் தொல்லை தாங்கலை - இப்போது பட்டம் வெல்ல வில்லையென்றால் மீண்டும் அடுத்த சீசனிலும் வந்து விடுவாரோ என்ற பயம்

2 . ஏற்கனவே நான்கு சீசன்களில் மூன்று மலையாள சகோதர சகோதரி வந்து விட்டார்கள் - எனவே இந்த முறையாவது ஒரு தமிழ் பிராமனருக்கு கொடுப்போம் என்று இருந்திருக்கலாம்.

  • எது எப்படியோ விஜய் ஸ்டார் தனது பார்வையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டது.

  • எனக்கு இன்னும் புரியாத விஷயம் - ஏன் நம்ம கோபிநாத் எழுந்து எழுந்து நின்று தபேலா வாசித்தார் என்பதுதான்.  
  •  சத்யாவிற்குப் பிறகு எனக்குப் பிடித்த குரல் கவுதம் தான்.

16 comments:

suryajeeva சொன்னது…[பதிலளி]

அய்யா, இந்த போட்டிக்கு போட்ட ஓட்டு எத்தனை, ஒரு ஓட்டு போட எவ்வளவு காசு?

saravananfilm சொன்னது…[பதிலளி]

உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

Press Meet Gallery

அப்பு சொன்னது…[பதிலளி]

நல்ல வேலை ஜீவா வந்தீங்க.
முதல்ல இந்த இன்ட்லிலயும், தமிழ் மனத்திலயும் ஒட்டு போடுறது எப்படின்னு சொல்லுங்க -
எவ்வளவு காசுங்கிரதைப் தனியாப் பேசிக்குவோம்.

suryajeeva சொன்னது…[பதிலளி]

இந்த மாதிரி வில்லங்கம் வரும்னு தெரிஞ்சு தான் ஓட்டு பட்டய இணைக்கல

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

sathya is my favourite. but if a contestant is from university/college. all students vote for him/her. that's what hapnd to ajish and Sai case. i guess.

வைரை சதிஷ் சொன்னது…[பதிலளி]

அய்யா இதுக்கு நாம ஓட்டு போடனுமா?

அப்பு சொன்னது…[பதிலளி]

சதீஷ் நீங்க ஏர் டெல் பயன்படுத்தினா ஒரு நம்பருக்கு கால் பண்ணுங்க. இல்லன்னா எஸ்.எம்.எஸ், பண்ணுங்க...
எந்த நம்பருக்கா...
உங்க நம்பர்லேர்ந்து உங்க நம்பருக்கே.

வைரை சதிஷ் சொன்னது…[பதிலளி]

அது என்ன ஏர்டெல்லு

Yoga.s.FR சொன்னது…[பதிலளி]

என்னத்தச் சொல்லுறது!ரி.வீ.ல்லாம் அரசியலாயிடுச்சு!

அப்பு சொன்னது…[பதிலளி]

சதீஷ் -
ஏன்னா - இது ஏர்டெல் சூப்பர் சிங்கர்

அப்பு சொன்னது…[பதிலளி]

வாங்க Yoga
வரவுக்கு நன்றி.
எப்படி இன்னும் அரசியல் கலந்திருக்குன்னு சொன்னா
எல்லாருக்கும் பயனுல்லாதா இருக்கும்.

மாய உலகம் சொன்னது…[பதிலளி]

பகிர்வுக்கு நன்றி அன்பரே

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

புஷ்ஷை தேர்ந்தெடுத்து அமெரிக்கர்கள் புலம்பியது போல் உங்க நிலை...

அப்பு சொன்னது…[பதிலளி]

நன்றி ராஜேஷ் -

அப்பு சொன்னது…[பதிலளி]

ரெவரி நன்றி -
புஷ்சுக்கு பதில் அல்கோர் வந்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும்.
இங்கே இவருக்குப் பதில் அவர் வந்தால் எதுவும் மாறி விடப் போகிறதா என்ன? யார் வந்தாலும் பெறும் பெரும் புகழும் பணமும் தனிப் பட்ட நபருக்கும், அந்த தொலைக் காட்சிக்கும் தான். நமக்கென்ன வந்தது. என்ன இப்படி த்ரில்லிங்கை எல்லா நிகழ்ச்சியிலும் சேர்த்து விடுகிறார்களே என்ற கோபம்தான்.

YADHURSHANA சொன்னது…[பதிலளி]

Enakku puriyaatha sangathi ennavendral, Malawikaum Shrinivasum finalukku wild card roundil thernthu edukka padathathu thaan. Awarhalum irunthirunthaal programme innum nandraha irunthirukum. Finaley mudintha pin gouravikapatta padaharlil yen Malawika kaanaamal poyvittaar? Aanaalum Sathya is my favourite contestant.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்