நீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.12.10

தொடர்ந்து பெய்து வரும் மழை

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மக்கள் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். சென்னை ஏரிகளுக்கு நடுவில் இருப்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது. வானம் பார்த்த பூமிகளிலயும் நல்ல மழை.

பள்ளிகளுக்கு விடுமுறை - பல பாலங்கள் உடைந்து தண்ணீர் சாலையில் பெருக்கெடுக்கிறது.

மழை - இயற்கையின் கொடை - வரும் போது மழையைச் சேமித்து வைக்கும் பழக்கம் நமக்கு முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.
இருந்த குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் என அனைத்தும் நாம் வாசம் செய்யும் வீடுகளாகி விட்டன...

காடுகளை அழித்து அங்கே விலங்குகள் வாழ விடாமல் செய்தோம். பிறகு - விலங்குகள் ஊருக்குள் நுழைகின்றன என்று கூப்பாடு போடுகிறோம்...
தண்ணீர் இருக்கும் தாழ்வான பகுதிகளில், குளங்கள், ஏரிகளில் வீடுகள் கட்டிக் கொண்டு இப்போது வீடுகளுக்குள் தண்ணீர் - வெள்ளம் என்று வேதனைப் படுகிறோம்.

ஒன்று மட்டும் நிச்சயம் - இன்னும் சில மாதங்களில் நாம் தண்ணீர் பஞ்சம் - தண்ணீர் பற்றாக் குறை என்று நாம் அலைவோம் -
அதையும் இதே நாளிதழ்கள் வெளியிடும் -
அப்போது மழை பகவானே எங்களுக்கு மழையைக் கொடு என்று சாமியை முற்றுகை இடுவோம்...

29.8.10

நகரங்களில் தரமான தண்ணீர் இல்லை


பி.பி.சி.யில் வெளிவந்த செய்தி: 


எல்லா முக்கியமான நகரங்களும் தரமான குடி நீர் கிடைப்பதில் இன்னும் பின் தங்கையே இருக்கின்றன என்பதை மாண்புமிகு அமைச்சர்கள் நமது நாடாளு மன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள். இந்தியர்கள் என்பதில் பெருமைப் படலாம்.

தமிழகத்தில் குடி நீர் கிடைக்கும் ஒரு நகரம் கூட முழுமையான மதிப்பெண்களைப் பெறவில்லை. கிடைத்த முதல் நகரத்திற்கும் இந்திய அளவில் தொண்ணூற்றி ஐந்தாவது இடம்தான். கலைகனர் பார்த்தால் நமக்குப் பின்னால் இன்னும் 350 நகரங்கள் இருக்கின்றன... தமிழகம் முன்னோடியாக இருக்கின்றது என்று பெருமைப் படுவார்..
தமிழகத்தில் முதலிடம் பாளைக்கு - தஞ்சைக்கு கடைசி இடமென்று பி.பி.சி. சொல்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியம்???
 
நன்றி – பி.பி.சி. 
முழுச் செய்திக்கு  

24.3.10

மாசு படும் நீர் - ஆபத்து

ஐ. நா. பொதுச் செயலாளரின் செய்தி.

பின் வரும் வலையிலிருந்து எடுக்கப்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2010/03/23/polluted-water-kills-more-people.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+oneindia-thatstamil-all+%28Oneindia+-+thatsTamil%௨௯


நைரோபி: உலகில் போரால் ஏற்படும் உயிரிழப்புகளை விட மிக அதிக அளவிலான உயிர்களைப் பறித்து வருகிறது மாசடைந்த குடிநீர் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார்.

பாதுகாக்கப்படாத, அசுத்தமான, மாசடைந்த குடிநீரைக் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை, போரினால் ஏற்படும் உயிரிழப்பை விட அதிக அளவில் இருப்பதாக மூன் கவலை தெரிவித்துள்ளார்.

நைரோபியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மனித குலத்தை வேகமாக அழித்து வரும் மாபெரும் ஆயுதமாக மாறி நிற்கிறது மாசடைந்த குடிநீர். இது போரினால் ஏற்படும் உயிரிழப்பை விட அதிக அளவிலான உயிர்களைப் பறித்து வருகிறது.

புவிவெப்ப மாற்றம் காரணமாக சுகாதாரமான குடிநீர் கிடைப்பது அரிதாகி வருகிறது. அசுத்தமான மாசு படிந்த நீரைக் குடிப்பதால் பல்வேறு வியாதிகளுக்கு உலக மக்கள் ஆளாக நேரிடுகிறது. இது உயிரிழப்பில் போய் முடிகிறது.

குடிநீர்ப் பற்றாக்குறை, அசுத்தமான குடிநீர் ஆகியவற்றால் முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை மக்கள்தான். இந்த அவல நிலைக்கு முடிவு கட்ட வேண்டியது அவசியம் என்றார் மூன்.

உலக தண்ணீர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மேற்கண்டவாறு பேசினார் பான் கி மூன்.

23.3.10

மார்ச் 22 - உலக தண்ணீர் தினம்

உலகத்தின் உயிர் மூச்சாக இருப்பது தண்ணீர்.

நீரின்று அமையாது உலகு -

எல்லாம் எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் யாரும் அதைக் காப்பதற்கான வழிகளை கடைப் பிடிப்பதாகத் தெரியவில்லை.

தண்ணீர் பற்றாக்குறை எதனால் ஏற்படுகிறது?
மக்கள் தொகைப் பெருக்கமா?
அது சும்மா.

அது கையாலாகாத அரசுகள் சொல்லும் விளக்கம்.

சில பொருளாதார வல்லுனர்களும் சொல்கிறார்கள் - அவர்களுக்கான் பதிலை வேறு சில நிபுணர்கள் சொல்லுவதால் நமக்கு எதற்கு அந்த வேலை.

சென்னை - யில், மும்பையில், பெங்களூருவில் என்று எல்லா பெரிய நகரங்களிலும் பற்றாக்குறை.

மக்கள் ஒரு சில இடங்களிலே வந்து குவிவதற்கு யார் காரணம்...
ஒரு சில நகரங்களில் மட்டும் வேலைக்கான வாய்ப்புகள் பெருகும் பொது மக்கள் அங்கேதான் வருவார்கள்.

இருக்கிற இடங்களிலே வேலைக்கான் வாய்ப்பையும், நகரங்களில் கிடைக்கிற வசதிகள் எல்லா இடங்களிலும் கிடைக்கும்படி செய்யாமல், சென்னையை நோக்கி மக்கள் வருகிறார்கள் என்றால் யார் தவறு?

சென்னையைத்தான் தொழில் அதிபர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று சொல்லலாம். சென்னையில் மட்டும் சாலை வசதி இருந்தால், சென்னை மட்டுமே அனைத்து வசதிகளையும் பெற்றிருந்தால் என்ன செய்வார்கள்.


தமிழக அரசுதான் சிவப்புக் கம்பளம் விரித்து சென்னைக்கு வரவேற்கிறதே?

செம்பரம்பாக்கம் நீருற்றி - லிருந்து யார் நீரை உறிஞ்சு எடுக்கிறார்கள். நீங்களே வரவேற்று, நீரை உறிஞ்சும் அதிகாரத்தைக் கொடுத்து - எத்தனை பேருக்கு அதனால் பயன்....
அரசை ஏமாற்றுகிறார்கள், தொழிலாளர்களை ஏமாற்றுகிறார்கள்..

வருகிற தொழில் நிருவனஞளை தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பிரித்து விடுங்கள்... சாலைகளை இணையுங்கள்..

அதை விட்டுட்டு ...


நிலத்தடி நீரை உறிஞ்சும் நிலையை மாற்ற வேண்டும்....

மழைக் காலங்களில் நீரை சேமிக்கும் பழக்கம் நமக்கு உருவாக வேண்டும்.
ஒவ்வொரு கிராமங்களிலும் இருந்த குளம், குட்டைகள், கண்மாய், ஏரி, இவைகளெல்லாம் மீண்டும் உருவாக்கப் பட வேண்டும்.

மழை குறைந்து விட்டது.

ஏன் குறைந்தது?
மரங்கள் இல்லை...

நாம் யோசிக்க வேண்டியது நிறைய இருக்கின்றது.

குடிக்கத் தண்ணீர் இல்லை என்கிற போதுதான் நாம் யோசிப்போம்..

அதுவரை என்ன செய்யலாம்....

தேவையில்லாமல் தண்ணீரை விரயம் செய்யலாம்..