இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.4.10

அரசியல் அரங்கம் மனிதாபிமானம் அற்றது

ஈழப் போராட்ட தலைவர் பிரபாகரனின் தாயார் கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்த போது, அவரை திருப்பி மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பியது மிகவும் கேவலமான செயல்.

ஒரு நாட்டிற்கு வருகிறபோது அந்நாட்டில் நுழைய குடியேறல் சீட்டு [விசா] இருந்தால் போதுமானது. அப்படி இந்தியா வழங்கியிருக்கிற விசாவை மதிக்காமல் இருந்ததற்காக இந்திய இறையாண்மையில் நம்பிக்கை இல்லாமல் இதைச் செய்தார் என்று நாட்டிற்குள் அனுமதி மறுத்தவர் மீது வழக்குப் போடலாமா?

ஒருவர் அனுமதி மறுக்கப்படுகிறார் என்றால் ஒன்று அவர் குற்றவாளியாகவோ அல்லது தீவிர வாதியாகவோ இருக்க வேண்டும். அப்படி என்றாலும் அவரை நாட்டிற்குள் அனுமதித்து சிறையில்தான் அடைக்க வேண்டும். வயதான ஒருவர் - பிரபாகரனின் தாய் என்பதற்காகவே - சிகிச்சைக் காகக் கூட அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறார் என்றால் - அது தமிழர்கள் தாயை தெய்வமாக மதிக்கிறார்கள் என்பதெல்லாம் வெறும் வேஷம்தான்.

செம்மொழியை - வளர்க்கும் செயலை விட ஒருவரை மனிதராக, தமிழராக மதிப்பதுதான் மிகவும் அவசியம். தமிழர்களை மிதித்து மொழி வளரப் பதில் ஒரு பயனும் இல்லை.

இது யாரையோ யாரோ திருப்திப் படுத்தும் செயல்.
அதற்காக இவ்வளவு தரம் தாழ்ந்து போகவேண்டிய அவசியம் இல்லை.

21.3.10

சட்டத்திற்கு மேலானவன் யார்?

நான் சட்டத்திற்கு மேலானவன் என்று இலங்கை அதிபர் சொன்னதாக செய்திகள் வெளியிடப்பட்டன.

சில சமயங்களில் அவர்கள் தான் யார் என்பதை அவர்கள் வாயிலாகவே சொல்கிறார்கள்.

சட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுகின்றன. அப்படியானால், எல்லா மனிதருமே அதற்கு உட்பட்டவர்கள்தான்.

சட்டத்திற்கு அப்பாற்ப் பட்டவர்கள் யாரும் இருக்க முடியும் என்றால் இருவர் அவ்வாறு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

ஒன்று கடவுள் - மற்றொன்று மிருகம் (சாத்தான், பேய், காட்டுமிராண்டி).

சத்தியமாய் இலங்கை அதிபர் கடவுள் இல்லை...