26.4.10

IPL - லிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

Black Hole


APRIL 22 - EARTH DAY

இயற்கையின் அதிசயம்



இது விளம்பரம்தான்.
ஆனாலும் நமக்குத் தேவையானதுதான்...




குமுதம் தொடரும் சர்ச்சை

குமுதம் நிர்வாக இயக்குனர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் அவர் கைது செய்யப் பட்டதை Flash செய்தது.

இது சன் குழுமத்திற்கும் குமுதம் குளுமத்திற்குமான சண்டையின் எச்சமாகத்தான் தெரிகிறது. சன் குழுமத்திற்கு ஏதாவது நடந்தால் பத்திரிகை சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அவமானம் என்கிறார்கள். ஆனால் அடுத்தவருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதிக இவர்கள் ஆதாயம் காண முயல்கிறார்கள்.
நிர்வாக இயக்குனர்களுக்குள்ளான மோதல்தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், தமிழக காவல் துறையினரின் சில நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளாதாக சிலர் கருதுகிறார்கள்.

ஒரு வேளை, குமுதத்தையும் சன் குழுமம் வாங்க முயற்சிக்கிறதோ என்னவோ?

IPL கிரிக்கெட்

IPL கிரிக்கெட் -
இருமாத கேளிக்கை முடிந்து ஒருவழியாய் சென்னை திட்டமிட்டபடியே வென்று விட்டது.
இன்றிலிருந்து இந்திய மக்கள் மாலை வேளைகளில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கித் தினறுவார்கள். என்ன செய்யலாம்? மீண்டும் திரைப் படத்திலும் - தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கித் திளைக்கலாம் - நம்மைத் தொலைக்கலாம்.
I had a dream என்று மிகப் பெரிய பேச்சு போல தனது உரையை ஆரம்பித்த மோடியினால் பாவம் மார்டின் லூதர் கிங்குக்குத்தான் அவமானம்.
எல்லாரையும் கிரிக்கெட்டுக்கு அடிமைப் படுத்த மோடிக்கு ஒரு Dream. என்ன அருமையான Dream பாருங்க. எல்லாரும் கிரிக்கெட் பாப்பாங்க இவரு பணம் பாப்பாரு.
லலித் மோடி - பகவத் கீதையிலிருந்து - பொய் ஒரு போதும் நிலைக்காது - உண்மை ஒரு போதும் அழிக்கப் படாது என்று - தன்மேல் சுமத்தப் பட்ட குற்றச் சாட்டுகள் பொய் என்று அதை வேற சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்ல தான் - கிரிக்கெட்டை பிரபலப் படுத்தும் ஒரு சேவகன் என்றும் சொல்லியிருக்கிறார். சேவகனுக்கு எதுக்கு இவ்வளவு பணம்?

விளையாட்டிற்கும் அந்த நாட்டின் பண்பாட்டிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. அது ஒரு நாட்டின் வரலாற்றையும் அந்த நாட்டு மக்களைப் பற்றிக் கூட சொல்லும்.
அமெரிக்கர்களின் ஒரு குணம் WWF - மற்றொன்று BASKET BALL. கிரிக்கெட்டிற்கு மாற்றாக BASEBALL.
எல்லா நாட்டியும் அதன் வளங்களையும் சுரண்டிய பிறகு, வேறு என்ன செய்வது என்று தெரியாமலும், நாள் முழுவதும் வெயிலில் இருக்கவும் சுகமாக பொழுது போகவும் அவர்களுக்கு கிரிக்கெட்.
ஐரோப்பியர்களுக்கு கால் பந்து.
இந்தியர்களுக்கு கிரிக்கெட் எப்படி?
ஒருவேளை கிட்டிபுல்லினால் ஏற்பட்ட பாசமா?

கிரிக்கெட் இந்தியாவின் மிகப் பெரிய அவமானம்

இதைப் பார்த்தவுடன் பலர் கொந்தளிக்கக் கூடும். ஆனால் என்ன செய்வது? இதுதான் உண்மைஎன்றால் இதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
விளையாட்டிற்கும் மனிதனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வேட்டையாடல் உணவிற்காய் தொடங்கி பிறகு வேட்டையாடல் விளையாட்டாய் மாறியது.
மனிதனை மனிதன் அடித்துக் கொள்ளும் விளையாட்டும் அரங்கேறியது. நாகரீகத்தில் வளர்ந்த பிறகு - மனிதனை மனிதன் அடித்துக் கொள்ளும் வழக்கம் குறைந்து விலங்குகளை வேட்டையாடியதின் எச்சமாக விலங்குகளை அடக்கும் விளையாட்டுகள். அதனுடைய வளர்ச்சி பற்றி நாம் இங்கே பேச வேண்டாம்.

கிரிக்கெட்டிலும் இத்தகைய கொடூரங்கள் இருந்தன. Body line .
நமக்கும் கிரிக்கெட்டிற்கும் என்ன தொடர்பு? ஆங்கிலேயர்கள் நமது நாட்டின் தொடர் அடிமைத்தனத்திற்கு ஆங்கிலேயத்தை விட்டுச் சென்றது போல கிரிக்கெட்டையும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். நவீன அடிமைத்தனம்.

விளையாட்டு என்பது எல்லாருக்கும் தேவையானதுதான். பொழுதுபோக்கு. சிலர்க்கு அது வாழ்க்கை. [விளையாட்டு வீரர்களுக்கு.]
வாழ்வின் தினசரி அலுவல்கள் நம்மை திணறடிக்கும் போதும், அடுத்த வேலைக்கு தயாராகும் முன் நமது மூளைக்கு நல்ல ஓய்வு கொடுக்கவும் - இன்னும் பல காரணங்களுக்கும் விளையாட்டு என்பது அவசியம்தான். ஆனால் அதில் அரசியலும் பணமும், கவர்ச்சியும், முன்கூடியே முடிவைத் தீர்மானிக்கும் சக்தியும் சேரும் பொது அது விளையாட்டு என்பதைத் தாண்டி அது வெறும் பிசினஸ் என்கிற நிலைக்கு மாறுகிறது. அதற்குப் பிறகு - போலி மருந்து விற்பவர்களுக்கும் அவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போகிறது.

கோடிக்கணக்கான பணத்தை வைத்து வீரர்களை ஏலம் எடுத்ததும் - அணிகளை விலைக்கு வாங்குவதில் ஏற்பட்ட மோதல்களும் - gentlemen's விளையாட்டு இது இல்லை என்பதை நினைவு படுத்துகிறது.

ICL லைத் தொடர்ந்து ipl ஆரம்பிக்கப் பட்டதற்கான காரணம் - ஈகோ- பணம் - அதிகாரம் - இன்னும் பல.
Z t .v தான் முதலில் இந்தியாவில் ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட்டை பிரபலப் படுத்தியவர்கள். இளம் வீரர்களைக் கண்டுபிடிக்க இது உதவும் என்று மேலாகச் சொன்னாலும் அதன் அடித்தளம் பணம்தான். கபில் தேவ்வை பிசிசிஐ - லிருந்து விரட்டினார்கள். பிசிசிஐ - ல் பதவி வகிப்பவர் விளையாட்டை பிசினஸ் ஆக்கக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால், இன்று பிசிசிஐ - ல் பதவி வகிக்கும் பலர் ஒரு அணியையே சொந்தமாக வைத்திருக்கிறார்கள். இது பிசினஸ் இல்லையா.

அமைச்சர் பெருமக்கள் - பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
IPL முதல் edition - னுக்காக தேர்வையே முன்கூட்டி வைக்கலாமா என்றெல்லாம் திட்டமிட்டது தமிழகமாகத்தான் இருக்கும். திரைப்படங்களையும் வெளியிடுவதில் தாமதம்தான். தேர்வுக்கும் திரைப்பத்திற்கும் என்ன சம்பந்தம் - மோடிக்குத் தான் வெளிச்சம்.





20.4.10

மோடி விளையாட்டு

கிரிக்கெட்டின் IPL version வந்த போது கிரிக்கெட்டிற்கு மறு வாழ்வு வந்தது போல பலர் நினைத்தார்கள்.
அதில் உள்ள பல பிரச்சனைகள் பற்றி பிறகு அலசுவோம்.

இப்போது சசி தரூர் மற்றும் லலித் மோடி இருவருக்கும் சண்டை வெடித்து தரூர் தன் ஊருக்குத் திரும்ப வேண்டிய நிலை வரை வந்தாயிற்று.

இப்போது பிரதமர் IPL - லின் நிதி நிலையை கழுகுக் கண் கண்டு பார்ப்போம் என்று சவால் விட்டிருக்கிறார்.

அய்யா சாமி!

லலித் மோடி ஏற்கனவே பல முறை இந்த ஆண்டு கடந்த ஆண்டை விடை 200 கோடி 300 கோடி வரை லாபம் அதிகமாக இருக்கும் [எனக்குக் கணக்குத் தெரியாது] என்று எல்லாப் பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுத்த போதெல்லாம் உங்கள் கண் எங்க போச்சு.

சசி தரூர் - கூட பிரச்சனைன்ன உடனே அங்கே எப்படி income tax raid போனாங்க.
அதுக்கு முன்னாடி வரைக்கும் கோடி கோடியா சம்பாதிகிறவன்கிட்ட பிரச்சனை இருக்கும்னு தெரியாதா?

அமைச்சர் ஒருத்தர் பதவி விலகுற வரைக்கும் போனதுக்கப்புறம்தான் அங்க வில்லங்கம் இருக்குன்னு தெரியுதா.
அதுக்கப்புறமும் ஏன் இப்படி அறிக்கை.
இது லலித் மோடியை அலெர்ட் பண்றதுக்காக சொல்லறீங்களா? அதனால் எல்லா டாகுமென்ட்ஸ்- ஐயும் லலித் மோடி ஒழுங்கா வச்சுக்க ---

என்ன நடக்குதுங்க?
கவுண்டமணி சொல்லறமாதிரி - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! தான் சொல்லணும்.

இல்ல நரேந்திர மோடியைத் தான் ஒன்னும் பண்ண முடியலை - லலித் மோடியையாவது ஏதாவது பண்ணலாம்னா?

அதாவது - ஒரு அமைச்சரைத் தொட்டாத்தான் நாட்டில நடக்குற ஊழல் வெளில வரணும்னா - எல்லாரும் அமைச்சரோடதான் போட்டி போடணும்.
சாதாரண ஆள் போட முடியாது. அப்பா லலித் மோடி மாதிரி பெரிய கோடி
[எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்] தான் சண்டை போட முடியும்.

அதாவது ஊழலை ஊழலால்தான் எதிர்க்க முடியும்.
பணத்தை பணத்தால்தான் எதிர்க்க முடியும்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்.

ஷங்கர் சிவாஜில சொன்னது சாரியாப் போயிரும் போல இருக்கேப்பா?

18.4.10

சிலி பூகம்பம்

சிலியில் ஏற்பட்ட நிலா அதிர்வால் பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் அதிகரித்திருப்பதாக் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

அதைப் பற்றிய கட்டுரை இது.
வாசிக்க இங்கே சொடுக்கவும்.

எரிமலை ஏன் வெடித்தது

iceland - டில் எரிமலை வெடித்து அது மனிதருக்கு ஆபத்து வருமளவுக்கு புகையைக் கக்கிக் கொண்டிருக்கிறது. சில நாட்களாக விமானப் போக்குவரத்து பதிக்கப் பட்டிருக்கின்றது.

இயற்கை இதற்காகத்தான் செய்கிறது என்று சொல்லவதற்கில்லை என்றாலும் - பூமியின் செய்கைகளுக்கு நாம் செவி மடுப்பது அவசியம்.


வளம் செறிந்த கவிதையொன்று நான் கண்டேன்.
வாசிக்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்.

அரசியல் அரங்கம் மனிதாபிமானம் அற்றது

ஈழப் போராட்ட தலைவர் பிரபாகரனின் தாயார் கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்த போது, அவரை திருப்பி மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பியது மிகவும் கேவலமான செயல்.

ஒரு நாட்டிற்கு வருகிறபோது அந்நாட்டில் நுழைய குடியேறல் சீட்டு [விசா] இருந்தால் போதுமானது. அப்படி இந்தியா வழங்கியிருக்கிற விசாவை மதிக்காமல் இருந்ததற்காக இந்திய இறையாண்மையில் நம்பிக்கை இல்லாமல் இதைச் செய்தார் என்று நாட்டிற்குள் அனுமதி மறுத்தவர் மீது வழக்குப் போடலாமா?

ஒருவர் அனுமதி மறுக்கப்படுகிறார் என்றால் ஒன்று அவர் குற்றவாளியாகவோ அல்லது தீவிர வாதியாகவோ இருக்க வேண்டும். அப்படி என்றாலும் அவரை நாட்டிற்குள் அனுமதித்து சிறையில்தான் அடைக்க வேண்டும். வயதான ஒருவர் - பிரபாகரனின் தாய் என்பதற்காகவே - சிகிச்சைக் காகக் கூட அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறார் என்றால் - அது தமிழர்கள் தாயை தெய்வமாக மதிக்கிறார்கள் என்பதெல்லாம் வெறும் வேஷம்தான்.

செம்மொழியை - வளர்க்கும் செயலை விட ஒருவரை மனிதராக, தமிழராக மதிப்பதுதான் மிகவும் அவசியம். தமிழர்களை மிதித்து மொழி வளரப் பதில் ஒரு பயனும் இல்லை.

இது யாரையோ யாரோ திருப்திப் படுத்தும் செயல்.
அதற்காக இவ்வளவு தரம் தாழ்ந்து போகவேண்டிய அவசியம் இல்லை.

14.4.10

நீதியும் தொழிலும்

நீதிமன்றத்தின் தொடர் ஆதரவு

தில்லி - மாநகராட்சியின் அனுமதி பெறாமல் பல இடங்களில் செல் போன் டவர் வைத்திருந்த பல்வேறு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அதன் பிறகும் அனுமதி பெறாமல் இருந்த டாடா நிறுவனத்தின் 35 செல் போன் டவர்களை சீல் வைத்திருக்கிறது மாநகராட்சி.
இதை எதிர்த்து - தங்களது தொழில் பாதிக்கப் படுகிறது என்று உயர் நீதி மன்றத்தில் டாடா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
உயர் நீதி மன்றம் சீல் வைத்தது தவறு என்று சொல்லி உடனடியாக சீல்களை அகற்றும்படி உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.

பணம் உள்ளவனுக்கு சார்பாகத்தான் நீதி எப்போதும் இருக்கும் என்பதற்கு மற்றொரு உதாரணம்.
இருக்க இடமில்லாதவன் ஒரு குடிசை போட்டால் அது
- செல் டவர் இருந்தால் - அது அவர்களது உரிமையா -


இந்திய நாட்டின் மிகச் சிறந்த தொழிலதிபர் - இப்படி இருந்தால் எல்லாரும்தான் தொழிலதிபராக இருக்கலாம்?

இப்படி நீதித்துறை இருந்தால் எல்லா இடங்களிலும் அனுமதி பெறாமலே செல் டவர் வைக்கலாம்.

வக்கீல்கள்

வக்கீல்கள்

எந்த நிரபராதியும் எந்த விதத்திலும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பது தான்
வக்கீல்களின் "தொழிலை" மிகவும் உயர்ந்ததாகவும்,
இன்னும் சொல்லப் போனால்
புனிதமாகவும் கருதும் நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.

சந்தர்ப்ப நிலையினாலும்,
அல்லது பிறரின் சூழ்ச்சிக்கு பலியாகவும்
அல்லது பணபலத்தினால் குற்றங்கள் கட்டமைக்கப் பட்டு
அதனால் குற்றம் சாற்றப் படும் நிலையில்,
குற்றம் செய்யாத நபர்கள் தங்களது குற்றமின்மையை
எடுத்துரைப்பதற்கு உதவியாகவும் - நிரபராதிகளை விடுவிக்கவும்
வக்கீல்கள் உதவியாக இருக்கிறார்கள்.

அல்லது குற்றம் சாற்றப் பட்டவர்கள்
எந்த விதத்திலும் தப்பித்து விடாமல் இருக்கவும்,
அதன் வழியாய் நீதி நிலைநாட்டப் பாடவும்
உதவியாகவும் அவர்கள் செயல்பட வேண்டும்.
அதனால்தான் அவர்களுக்கென்று சிறப்பான ஒழுக்க நெறிகள் உள்ளன.

ஆனால் அந்தத் தொழிலும் வெறும் பணம் அறுவடை செய்யும்
தொழிலாகவே மாறிக் கொண்டிருப்பது வேதனையான விஷயம்தான்.
போலி மருந்து விற்பனை செய்து மாட்டிக் கொண்ட தொழில் அதிபருக்கு ஆதரவாக அமைச்சரின் மனைவி ஒருவர் வாதாட இருப்பதாக உள்ள செய்திகள்
அரசுக்கும் குற்றவாளிகளுக்கும் உள்ள நெருக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

சட்டம் அறிந்தவர்கள் என்பதனால்,
சட்டத்திலிருந்து தப்பிக்கும் விதத்தில்
குற்றங்களை செய்வதற்கான
திட்ட வரையரைகளை செய்வதிலிருந்து -
அதிலுருந்து விடுபடுவது எப்படி என்பதுவரை எல்லா திட்டங்களை செயல் படுத்த உதவியாய்
இருப்பதனால் அவர்கள் வக்கீல்கள் என்பதையும் தாண்டி
குற்ற உற்பத்தியாளர்களாகவே தெரிகிறார்கள்.

11.4.10

உலகம் வெப்பமாவதைத் தடுக்க கணினி பயன் படுத்துவோர் என்ன செய்யலாம்

பின்வரும் பக்கத்தைப் படிக்கலாம்.

படிக்க இங்கே சொடுக்கவும்.

7.4.10

தீக் குளித்தலும் - நமது அரசியலும்

தீக் குளித்தலும் - நமது அரசியலும்

அ.தி. மு.க தொண்டர் தங்கவேலு இடைத்தேர்தல் ஒன்றில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்ததை அடுத்து தந்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். அவரது மனைவியை யாரும் காண முடியாத அம்மா சென்று ஆறுதல் சொல்லியிருக்கின்றார்.

தமிழர்கள் தங்கள் தலைவர்கள் இறந்தால் தீக் குளிப்பதும், தங்கள் கட்சி தோற்றால் தற்கொலை செய்து கொள்வதும் நடிகர்களுக்கு கோவில் கட்டுவதும், கிரிக்கெட் வீரர்களை கடவுள் என்று கொண்டாடுகிற வரையிலும் நாம் இப்படியேதான் இருப்போம்.
அது சரி யாரும் எளிதில் காண முடியாத அம்மா எதற்கு சென்று ஆறுதல் சொன்னார் - தன கணவன் இறந்ததை நினைத்து வருந்தியதைக் காட்டிலும், அம்மா நேரில் வந்ததை என் வாழ் நாள் முழுக்க மறக்க மாட்டேன் என்று புளகாங்கிதம் அதிகமாக அடைந்திருக்கிறார்.

அம்மா நேரில் சென்று - மற்றவர்களுக்கு என்ன சொல்ல விரும்பினார்? யாரவது தற்கொலை செய்து கொண்டால் நான் கொட நாட்டுக்குப் போவதற்கு முன் நேரில் வந்து சந்திப்பேன் என்றா?
அம்மாவைப் பார்க்க வேண்டும் என்றால் யாரவது தீக் குளிக்க வேண்டும் போலிருக்கிறதே?

சானியாவும் திருமணமும்


சானியா இந்தியக் குடிமகள் - அவருக்கும் ஒரு பாகிஸ்தான் விளையாட்டு வீரருடன் நடக்க இருந்த திருமணம் ஒரு பெரும் சர்ச்சையை உண்டாக்கிருக்கிறது.

எத்தனை நபர்களோ இது போல நாடு விட்டு திருமணமும், மதம் கடந்து திருமணமும் செய்திருக்கும் போது - இவருக்கு மட்டும் ஏன் இத்தனை விவாதங்கள்.
புகழ் பெறுகிறவர்கள் கொடுக்கும் விலை இது.

அவர் திருமணம் செய்து கொள்கிறார் என்பது பிரச்சனையா அல்லது ஒரு பாக்கிச்தானியரை திருமணம் செய்து கொள்கிறார் என்பது பிரச்சனையா அல்லது ஏற்கனவே திருமணம் ஆனவரைத் திருமணம் செய்கிறார் என்பது பிரச்சனையா?


திருமணம் அவரவர் விருப்பம். பாகிஸ்தானியர் எல்லாரும் தீவிரவாதிகள் என்று நினைத்தால் அரசுதான் கவனமாக இருக்க வேண்டும் - எல்லைகளில் கோட்டை விடாமல்...

இரண்டாவது திருமணம் செய்வது தவறென்றால் நமது தலைவர்களை நாம் பார்த்துக் கொள்வது நல்லது. இஸ்லாமிய முறைப்படி 4 பேர் வரை திருமணம் செய்துகொள்ள வழி உண்டாம். (அதாவது விவாகரத்து செய்யாமலே)

கலாச்சாரக் காவலர்கள் எல்லா இடங்களிலும் தமிழகம் உட்பட இதற்கு எதிர்ப்பு. இத்தனைக்கும் அவர் தமிழகத்தில் வசித்தாலும் பரவாயில்லை. நம்ம ஊருல கரண்ட் கட் ஆகுது, தண்ணீர் வரலை, போராடுறதுக்கு யாரையும் காணோம் - இதுல இவர் திருமணம் செய்து கொள்வதற்கு சென்னை, மதுரை என்று பல இடங்களில் ஆர்ப்பாட்டம். போரட்டங்களுக்குன்று மக்கள் வெளி வருவது நல்லதே. அது வெறும் இருப்பைக் காட்டுவதற்காகவும், கட்சியை வளர்ப்பதற்காக மட்டும் இருக்கக் கூடாது.

காங்கிரஸ் கட்சித் தலைவி நமது முன்னால் பிரதமரைத் திருமணம் செய்த போது இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடந்ததா என்ன? தெரிந்தால் சொல்லுங்கள்.

6.4.10

ஒரு வார நோயும் போலி மருந்துகளும்

தமிழர்களுக்கு ஒரு வார நோய் பிடித்திருக்கிறது.

எந்த நிகழ்வாக இருந்தாலும் அது ஒரு வாரம்தான்.
எதைப் பற்றியும் ஆழ்ந்த அக்கறை நம்மிடத்தில் இல்லை.

பள்ளிக்கூடம் தீப் பிடித்தது - பள்ளிக்கூடங்கள் எப்படி செயல்படவேண்டும் என் அதிரடி நடவடிக்கைகள். இப்போது தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் எப்படி செயல் படுகின்றன? அதிரடி நடவடிக்கைகள் என்னவாயிற்று?

மன நலம் பாதிக்கப் பட்டவர்கள் சங்கிலியில் கட்டப்பட்டு உயிர் போனபோது மனித உரிமைகள் நினைவுக்கு வந்தது. இப்ப்போது என்ன ஆயிற்று...

கள்ளச்சாராயம் குடித்து ஒரு கிராமத்தைச் சேர்ந்த பலருக்கு கண் போனது, உயிர் போனது - உடனே நடவடிக்கைகள்... அத்தோடு அதை மறந்தாயிற்று. இன்னும் ஒருமுறை பேரிழப்பு ஏற்படும் போது மட்டுமே அடுத்த போர்க்கால நடவடிக்கைகள்.

ஷேர் ஆட்டோக்கள் - மக்களை ஆடு மாடு போல ஏற்றி விபத்து ஏற்பட்ட போது, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏற்றக்கூடாது என்ற சட்டம்... இப்போது நம் நண்பர்களுக்கு பணம் தேவைப்படும் போது மட்டுமே அப்படி இருப்பதே தெரிகிறது.

போலி மருத்துவர்கள் பற்றிய சர்ச்சை வரும் போது போலி மருத்துவர்கள் சிறைப் பிடிக்கப் படுவதும் அதன் பிறகு கண்டு கொள்ளப் படாமல் இருப்பதும், ஏதோ தமிழகத்தில் இப்போது எல்லோருமே படித்த மருத்துவர்கள் தான் இருப்பது போல.

இப்போது போலி மருந்துகள். காலாவதியான மருந்துகளை வைத்து மனித உயிர்களோடு விளையாட்டு. பணம் சம்பாதிக்க எளிய வழிகள். ஒன்றும்
செய்யாமல் பணம் சேர்க்க வழி.

உழைக்காமல், உற்பத்தி செய்யாமல், முதலீடு கூட செய்யாமல் இப்படி நடப்பது புதிதல்ல... இது போன்று aநிறய நடந்திருக்கின்றன.
உண்மையைச் சொல்லப் போனால்,ஒரு வைரைசை உருவாக்குவதும் அதற்கு மாற்று மருந்து உருவாக்குவதும்
அதன் வழியாக பணம் பண்ணுவது என அதுவும் ஒரு தொழிற்சாலைதான்.

கடந்த வருடத்திலிருந்து பன்றிக் காய்ச்சல் பற்றிய பெரிய பயத்தை மக்கள் மத்தியில் விதைத்து, எனவே அவர்கள் மருந்துகளுக்காக அலைந்ததும், பல அரசுகள் கூட இவைகளை வாங்கிக் குவித்ததற்குப் பின் புலத்தில் மருந்துக் கம்பெனிகளும் (ஐ. நா. வின் பின்புலத்தில் அவர்களும் இருந்தததாக பல அரசுகள் இப்போது குற்றம் சாட்டுகின்றன.) இருந்தன.
அவர்களை எந்தக் கூண்டில் ஏற்றுவது?

மருந்துக் கம்பெனிகளும், மருத்துவர்களும் தங்களுக்குள்ளே ஒரு முதலாளித்துவத்தை விதித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களிடமிருந்து நோய் உருவாக்கும் மருந்தும் வரும். அதைத் தீர்க்கும் மருந்தென வேறு மருந்தும் வரும்.

income tax raid பற்றி செய்திகள் படிக்கிறோம். ஆனால் உணவுக் கட்டுப்பாற்றிக்கான raid குறித்து எங்கும் படிப் பதில்லை. கோகோ கோலா நிறுவனத்தின் மீது மிகப் பெரிய குற்றச் சாட்டு வந்த போது நமது அதிகாரிகள் என்ன செய்தார்கள் ?
அரசுக்கு மக்கள் மீதோ அல்லது தரம் பற்றியோ அல்லது நேர்மை பற்றியோ கவலை இல்லை. எல்லாம் பணம் - பணம் கிடைக்குமென்றால் எல்லா இடத்திலும் raid பண்ணுவார்கள் - mortuary - யிலும் கூட.

இப்போது கூட பணம் வரும் என்று எல்லா மருந்தகங்களையும் raid செய்வார்கள்? எல்லாமே நடந்து முடிந்த பிறகுதான் நாம் விழித்துக் கொள்வோமேன்றால், நாம் விழிப்பதில் அர்த்தமே இல்லை. அடுக்கடுக்காய் நடந்த பிறகும் நாம் விழிக்கவில்லை என்றால் வாழ்வதிலும் அர்த்தமில்லை.

ஒரு வாரத்திற்குப் பின் இதை மறப்போம் - வேறு ஏதாவது வரும்- பின் அதை அசைபோடுவோம். அதன் பிறகு அடுத்த வாரம். 7 நாட்களுக்குப் பின் வேறு ஏதாவது வராதா என்ன?