7.3.10

பாராட்டு

தமிழக அரசியலில் நல்ல மாற்றம் வருவதைத் தாராள உள்ளத்தோடு பாராட்டுவோம்.

ஸ்டாலின் ஜெயாவுக்கு அழைப்பிதல் அனுப்பியதையும் அதற்கு ஜெயா அம்மையார் பதில் அனுப்பிருப்பதை வாசிக்கும் போது - நமது நாட்டு அரசியல்வாதிகள் மாறிக்கொண்டு வரும் சூழல் நல்லதாகவே தோன்றுகிறது.

இதில் அரசியல் இல்லைஎன்றால் நல்லது.

நான் வாசித்த செய்தி


ஜெ. அனுப்பிய பதிலுக்கு நன்றி...

இங்கு வந்திருக்கிற தலைவர்கள் அனைவரும் விழாவுக்கு வருவதாக சம்மதம் தெரிவித்து பதில் அனுப்பியவுடன் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவுக்கும் கடிதம் எழுதினேன். அதற்கு அவரிடம் இருந்து பதில் கடிதம் வந்திருக்கிறது. கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. சில அலுவல் காரணமாக நான் பங்கேற்க இயலாது என அவர் பதில் அனுப்பி இருந்தார்.

அவருக்கும் விழாவில் பங்கேற்க அத்தனை பேருக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

1970ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டு வரை 36 ஆண்டுகளில் தமிழகத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 77,627.

ஐந்தாம் முறையாக கருணாநிதி முதல்வராகப் பொறுப்பு ஏற்ற பின் 2006ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை 82,000 வீடுகள் கட்டப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டு இதுவரை இந்த 4 ஆண்டுகளில் 42,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 40,000 வீடுகளும் விரைவில் கட்டப்பட்டு திறப்பு விழா காணப்பட இருக்கிறது.

ஆதிதிராவிட மக்களுக்காக 1973ம் ஆண்டில் இந்திரா தொகுப்பு வீடு திட்டத்தை தொடங்கியதும் திமுகஅரசு தான். அந்த திட்டத்தின் தொடக்க விழா செங்கல்பட்டு அருகே காட்டுப்பாக்கம் என்ற இடத்தில் நடந்தபோது அதில் கலந்து கொண்டு பேசிய பாபு ஜெகஜீவன் ராம், மக்கள் நல அரசு என்ற வார்த்தைக்கு உண்மையான விசுவாசத்துடன் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு பணியாற்றி வருவதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பாராட்டினார்.

பல திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிற ஊரக வளர்ச்சி துறைக்கு இப்போது இந்த கலைஞர் வீட்டு திட்டத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதை எனது வாழ்வில் கிடைக்கப் பெறாத பெரும் பேறாக கருதுகிறேன் என்றார் ஸ்டாலின்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், ஏழை மக்களின் கனவுத் திட்டமான இந்த திட்டத்தை வழங்கியதற்காக பாமக சார்பில் நான் நன்றியை தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்.

மேலும் விபரத்திற்கு -


http://thatstamil.oneindia.in/news

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்