8.11.16

மாசுவுக்கு மாஸ்க்தான் தீர்வா?


நேற்று செய்தித் தாள்கள் டெல்லியில்  மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின.
பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரும் வெளியில் வரக்கூடாதாம்.
உடல் நிலை பாதிக்கப் படுமாம்.

ஏன்  மாசு உருவாகிறது என்பதை விவாதித்து அதைக் குறைப்பதற்கான வேலையை விட்டுவிட்டு, மாஸ்க்குகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நிறைவாய் பட்டாசு வெடிக்கலாம். இஷ்டத்துக்கு இண்டஸ்ட்ரிகளை வைத்துக் கொள்ளலாம்.

நமக்கு வேண்டுமானால் மாஸ்க்குகளை அணிந்து கொள்ளலாம்.

பிரச்சைனையின் ஆணி வேரைப்  பார்க்காமல் நாம் அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று மட்டுமே யோசிக்கும்  ஜென்மங்கள் இருக்கும் வரை
இந்த நாட்டின் எதிர்கால சந்ததி மட்டுமல்ல இக்கால சந்ததியும் இங்கே வாழத் தகுதியற்ற நிலையை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

வாருங்கள் அனைவரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவோம்.
2 comments:

செல்வ ராஜ் சொன்னது…[பதிலளி]

நண்பரே, நலமா? உங்களின் கட்டுரைகள் பிரச்சினைகளின் வேரை அசைத்துப் பார்க்கிறது. டில்லியின் காற்று மாசு முதல் தமிழ்நாட்டின் டாஸ்மாக் மாசு வரை மக்களின் அரசுகள்? தொடர்ந்து மக்களை கண்டுகொள்ளாத, மக்களுக்கு எதிரான அரசுகளாகவே செயல்படுகின்றன. பதினொன்றாம் அவதாரமாய் மக்கள் நாம் எழவேண்டியுள்ளது. தொடரும் உங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

நன்றி நண்பரே...

அருகில் வந்ததாய்க் கேள்விப்பட்டேன்.
மகிழ்ச்சி.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்