6.3.10

பல கேள்விகள் - புரியாமலே !

ஊடகங்கள் எதையும் செய்ய முடியும் என்பதற்கு நடந்து முடிந்த நிகழ்வுகள் சாட்சிகளாக இருக்கின்றன.

கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதாக நினைத்துக்கொண்டு ஒரு மனிதனின் படுக்கையறைக்குள் படம் பிடித்திருக்கிறார்கள். இது சரியென்று ஒரு புறம் ஒரு சாராரும், இல்லை இது தவறு என்று மறுபுறமும், எதிர் எதிர் அணிகளாக ...

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த நித்யா பல கேள்விகளை விவாதப் பொருளாய் மீண்டும் நமது மத்தியில் உலவ விட்டதுதான்.

1. பக்தியை வியாபாரப் பொருளாய் ஆக்குவது சரியா தவறா?

2. ஒருவன் கடவுளின் பெயரால் எதைச் சொன்னாலும் நம்பலாமா? நான்தான் இதைச் சொல்கிறேன்னா உனக்கு எங்க போச்சுன்னு கேட்குறாரு.
கேக்கிறவன் கேனப்பயல்னா கேப்பையில நெய் வடியும்னு சொல்வாங்களாம்.. நான் நெய் வடியுதுன்னு சொல்றேன் - நீ கேட்ட கேளு இல்லாட்டி போ - யாரு மேல தப்பு?

3. இது போல பச்சோந்திகளின் சுயநலத்தினால கடவுள் மேல கோவிச்சுக்க முடியுமா? அப்படின்னா கடவுளைப் பத்தி சொல்றவன் எப்படி இருக்கணும்?

4. தனிப் பட்ட வாழ்வுக்கும் பொது வாழ்வுக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா?
* அப்படி இருந்தால் அது சாமியார்களுக்கு மட்டும்தானா அல்லது பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் எல்லாருக்குமா? - யார் யாரெல்லாம் பொது வாழ்க்கைக்கு உட்படுவார்கள்? அரசியல்வாதிகளும், சினிமாக் காரர்களும், மட்டும்தானா? பத்திரிக்கையாளர்கள் அதில் அடங்க மாட்டார்களா?
* அப்புறம் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், காவலர்கள், சின்னத்திரையில் இருப்பவர்கள், புத்தகம் எழுதுபவர்கள், தர்மம் எதிர்பார்ப்பவர்கள் (நாம் நல்லவர்களாக இருப்பதற்காக அவர்கள் நாள் முழுவதும் வெளியில், வெயிலில் இருப்பதும் பொது வாழ்க்கைதானே). அப்புறம் நீங்கள் நான் ....

அது சரி ...


4. கடவுளின் பெயரால் எதைச்சொன்னாலும் மக்கள் கேட்கிறார்களே அது ஏன்? உண்மை அதில் இருப்பதாலா அல்லது கேட்க சுகமாக இருக்கிறது என்பதற்காகவா?

5. நல்ல செய்தியை யார் சொன்னால் என்ன - யார் சொன்னார் என்பதைக் காட்டிலும் என்ன சொன்னார்கள் என்பதுதானே முக்கியம். நித்தியானந்தம் சொன்னாலும் சொல்வார். - அதுக்காக அனுராதாவும் நக்மாவும் ஆன்மிகம் பேசலாமா?

6. எனவே, என்ன சொல்லப்படுகிறது என்பதைக்காட்டிலும் யார் சொன்னார்கள் என்பது முக்கியம்தானே. அதன் உள் நோக்கம் தெரிய வேண்டியது அவசியம்தானே. அப்படின்னா கருத்து முக்கியமா - சொல்ற ஆளு முக்கியமா?

7. இதுனால சந்தோஷமா இருக்காது யாருன்னா நம்ம ப்ரைம் மினிஸ்டர் மன்மோகன் சிங் தானாம்.
என்னன்னா -
விலைவாசிப் பிரச்சனையை எல்லாரும் மறந்துட்டோம்.


இது போல இன்னும் நிறைய கேள்விகள் வந்திருக்கின்றன... உங்க கேள்விகளையும் கோர்த்து விடுங்க...

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்