சிறுதுளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுதுளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26.8.16

கிழிஞ்ச பேப்பர் - பழைய சிதறல்கள் - 1

மரம் 

மரத்தை அழித்து விடாதே
வரும் காலமதை அழ விடாதே.
-

 மரமது செம்மையானால்
வாழ்வது செம்மையாகும் - மாந்தரே செழுமையாவர்.

---

மழை

வானம் கீழே வந்தால்தான்
வரப்பே உயரும்

வரப்பு உயர்ந்தால்தான்
வாழ்வு உயரும்

-

மண் 

செம்மண்ணை
நம்மால் செய்ய முடியுமெனில்
செடி கொடிகள்
விரைவாய் வளருமே

மண்ணைக் கூட
மாற்ற முடியாதே மனிதா
மரபணுவை
மாற்றலாமா ???

---

10.11.15

தீபாவலியா - தீபாவளியா - தீப/ஒளியா ?

படித்தேன் ரசித்தேன்

"தீபாவளிக்கு ஆகும் செலவைப் பார்த்தால்
பேசாமல் கிருஷ்ண பகவான் நரகாசுரனை
மன்னித்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது." யாரோ எழுதியது.



- தீபாவலி இதுதான்

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


பீகாரை மையம் கொண்ட
சூறாவளி
இந்தியா முழுதும் அடிக்கும்
என்று எதிர்பார்க்கப் படுகிறது............


இது  தீபா - வளி

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))



காவிரி ஆற்றில் ஒரு சொட்டுக் கூட
கொடுக்க முடியாது
என்று கர்னாடகா
கை விரித்த நேரத்தில்
வந்த மழை
எம் விவசாயிகளுக்கு  மிகப் பெரிய ஒளி

))))))))))))))))))))))))))))



16.9.13

பாராட்டு, பானம், பாலியல் குற்றங்கள் -

பாராட்டு 
செய்தித் தாளைப் புரட்டினால் மோடி சகட்டு மேனிக்கு எல்லாரையும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் என்கிற செய்தியை பத்திரிக்கைகள் புகழ்ந்து தள்ளியிருக்கின்றன:  பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் வாஜ்பேய் மற்றும் அத்வானிக்குப் புகழாரம். ராணுவ அதிகாரிகளுக்கு மோடி பாராட்டு. இந்திய விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு. இதைப் பார்த்த உடனே தங்கள் பங்குக்கு சளைத்தவர்கள் இல்லை என மோடியைப் பலர் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். மோடி பன்முகத்தன்மை கொண்டவர் என வெங்கையா நாயுடு புகழாரம். ஒரு முகத்தை பார்க்கவே பல பேருக்கு பயமா இருக்கு இதுல பன்முகமா... மோடிய அறிவித்ததில் ஒரே வருத்தம் திரு அத்வானிக்குத்தான்... ஆனாலும் அவர் எப்படியாவது வழிக்கு வந்து விடுவார். அந்த நம்பிக்கையை திரு ஜஸ்வந்த் சிங் தெரிவித்திருக்கிறார்.
என்ன செய்வது இடிக்கத் தூண்டியவரை விட எரிக்கத் தூண்டியவர் மேலானவர் ஆகிவிட்டார் என்கிற வருத்தமோ என்னவோ?

பானம்

  • லண்டனில் பிறந்த காங்கிரஸ் எம்.பி சசிதரூர் ஐ.பி. எல். ஊழல் பற்றி எதோ வர தனது அமைச்சர் பதவியை தாரை வார்க்க வேண்டியிருந்தது. ஊழல் குற்றம் சாட்டப் பட்ட எந்த அமைச்சர் தண்டிக்கப் பட்டார்... வழக்கம் போல மீண்டும் பதவி. சும்மா இல்லாமல் விவேகானத்தர் சிலை திறக்கப் போன இடத்தில் விவேகானந்தருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்தது  என்று உளறியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.  கலகம் விளைவிப்பவர்கள் எல்லாம் பதிவியில் இருக்கும் போது மது அருந்தியவர் மகானாக இருக்கக் கூடாதா என்ன​? 


  • பார்களைத் தமிழகம் முழுதும் தொடங்கி அதைப் பராமரித்து அதனால் வரும் வருமானத்தை வைத்து நமது நாடு நட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது அம்மாவை மிஞ்ச அரசியலில் யாரும் இல்லை. நேற்றுக் கூட பத்திரிக்கையாளர் சோ அவர்கள் அம்மாவைப் பார்த்தார்களாம். அவர் வெறும் பத்திரிக்கையாளரா என்ன​? அது கிடக்கட்டும். மோடி அவர்கள் மதுரையில் கூட நிற்கப் போவதாகக் கேள்வி. அது என்னமோ தெரியலை எரித்தலுக்கும் திரு மோடி அவர்களுக்கும் நெருங்கிய சொந்தம் போல - கண்ணகி எரித்த மதுரையில் நிற்கப் போகிறாரே அதனால் சொன்னேன். இதற்கும் கோத்ரா எரிப்புக்கும் ஒரு தொடர்பும் இல்லை.  அது என்னமோ தெரியலை தமிழகத்தை கலவர பூமியாக ஆக்குவதில் எல்லாருக்கும் என்ன சந்தோஷமோ தெரியலை...


  • சொல்ல வந்த செய்தியை விட்டு எங்கேயோ போயாச்சே - புதிதாக அம்மா குடி நீர்... அம்மா உணவகம். குறைந்த விலையில் நிறைந்த தரம். பஸ் ஸ்டாண்டுல குறைந்த விலை போல பார்ஸ்டாண்டிலும் இது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பாலியல் குற்றங்கள்
பெண் பாலியல் வழக்கில் நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்த பிறகு பாலியல் பலாத்காரம் அதிகரித்திருக்கிறது. குற்றவாளிகளுக்காக வாதாடிய வக்கீல் மரணதண்டனை கொடுத்தால் குற்றம் குறைந்து விடும் என்றால் நானே குற்றவாளிகளைத் தூக்கிலிட எழுதிக் கொடுப்பேன் என்று சவால் விட்டாராம். அதுமட்டுமல்ல பலாத்காரம் செய்யப் பட்ட பெண்மீது அவள் இஷ்டத்துக்கு ஊரைச் சுற்றிய பெண். அப்படிப் பட்ட பெண் எனக்கு இருந்திருந்தால் பெட்ரோல் ஊற்றிக் கொழுத்தியிருப்பேன் என்று சொல்லியிருக்கிறார். நல்ல வழக்கறிஞர். இப்படிப் பட்டவர்கள் இருந்தால் நீதிமன்றம் சிறந்து விளங்கும்.
அவர் வாய் வைத்த நேரமோ என்னமோ...
சிதம்பரத்தில், ருவாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை ருவாண்டா நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பலாத்காரம் செய்ய, அப்பெண் மருத்துவ மனையிலும் இவர் தமிழக சிறையிலும் இருக்கின்றார்.
ஓடும் பஸ்ஸில் நடந்தது போல ஓடும் ரயிலில் ஏசி கோச்சில் இருந்த ஒரு டாக்டரை பலாத்காரம் செய்ய முற்பட்ட ஒரு சி.பி.ஐ வீரரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
இதாவது பரவாயில்லை.  சோழவரத்தில் ஒரு சிறுமியைக் கடத்திச் சென்று ஒரு கும்பல் வன்முறை செய்திருக்கிறது
இது போன்ற செய்திகளை இன்னும் அதிகமாகவே பார்க்க முடியும்...
என்னதான் தண்டனைகள் அதிகரித்தாலும் குற்றங்களும் அதிகமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் காரணம் வேறு எங்கோ இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்காது. தகவல் உரிமைச் சட்டத்திலிருந்து அரசியல்வாதிகளை விடுவித்த அரசாங்கம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
தமிழக அரசாங்கம் இந்த நிதி ஆண்டில் பத்து கோடி அதிகமாக ஒதுக்கீடு செய்திருக்கிறது - எதுக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளுக்கு உணவு வாங்கிக் கொடுப்பதற்கான தொகையை 35 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்திக் கொடுப்பதற்காக.... அம்மா உணவகத்தில அவங்க சாப்பிட மாட்டாங்களா என்ன? சாதாரண மக்களை விட அவங்க சாப்பாட்டுக்கு அதிக பணம்... பேஷ் பேஷ்...


சசி தரூர் அவர்களுக்கும், அனைத்து மலையாளர்களுக்கும் ஓணம் வாழ்த்துக்கள். அதனால் இன்று சென்னை, கோவை, உதகமண்டலம் மற்றும் எல்லா இடங்களிலும் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை... வாழ்க தமிழ்!


14.9.13

மரணம் - பெட்ரோல் - மோடி - அப்பு மண்டி ஆவணி 29


  • டெல்லி  வன்கொடுமை வழக்கில் நான்கு நபர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இந்த நேரத்தில் தண்டனை பற்றி ஏதாவது பேசினால் நான் ஆணாதிக்க வாதியாக சித்தரிக்கப் பட வாய்ப்பு உள்ள காரணத்தினால் அதைத் தவிர்த்து விடுவதே நல்லது. இந்த மரண தண்டனை பெண்களைக் கொடுமைப்படுத்த நினைக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய பாடமாக இருக்கும். 
பழங்குடி மக்கள் மீதான் பாலியல் வன்முறைகள் - 
மற்றும் காடுகளில் தேடல் வேட்டையில் ஈடுபட்ட அரசு காவலர்கள் பெண்களை வன்கொடுமைகள் செய்ததற்கான 
பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.
மனிதாபிமானம் உள்ள அனைவரும் 
இதையும் கவனிக்க வேண்டியது அவசியம். 
  • கலைஞருக்கு கரண்ட்ல கண்டம் - காங்கிரசுக்கு கண்டதெல்லாம் கண்டம். ஊழல் எதிர்ப்பாளர்கள், தமிழ் உணர்வாளர்கள், அணு உலை எதிர்ப்பாளர்கள் - சிறு வியாபாரிகள் - பெட்ரோல் வண்டி பயன்படுத்தும் அனைவரும் என, காங்கிரசுக்கு எதிரானவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. காங்கிரசின் ஆட்சி நிச்சயமாய்க் கவிழும்... இதற்கென்று ஆருடம் தெரிய வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை.  நேற்று நள்ளிரவில் இருந்து மீண்டும் பெட்ரோல் விலை ஏறியிருக்கிறது. ஏறக்குறைய எண்பது  ரூபாயைத் தொட்டு விட்டது. ஆனால் முப்பது ரூபாய் ஒரு நாள் செலவழித்தால் அவர்கள் ஏழைகள் இல்லை என்ற தங்களது கண்டு பிடிப்பை நிலை நிறுத்தும் வண்ணம் எல்லாரையும் பணக்காரர்களாய் ஆக்குவது ஒன்றே தனது குறிக்கோள் என்று காங்கிரஸ் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.
தொன்னூறுகளில் தொடங்கிய தாரள மயமாக்கள் கொள்கைகளின் விளைவைத் தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்....  
தொடங்கி வைத்த பெருமை 
அமைதிப் பேரரசர் மன்மோகன் அவர்களையே சாரும்... 
என்னதான் நடந்தாலும் 
எதுவுமே நடக்காதது போல அவர்கள் இருப்பதுதான் அவர்களின் ப்ளஸ்... 
இவ்வளவு நடந்தும் 
ஒன்றும் நடக்காதது போல இருப்பதுதான் நமது ப்ளஸ்..
  • மோடி பா. ஜ. க... வின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருக்கிறார். அத்வானி மன வருத்தத்தில் இருக்கிறார். நிச்சயமாய் இதை வைத்து பா.ஜ. க பிளவு படாது. மோடி நிச்சயமாய் ஒரு ஒளிரும் இந்தியாவை முன்னிறுத்தப் போகிறார்... "மாற்றம் ஒன்றே நமது இலக்கு" என்று இந்துயாவை முன்னிருத்துவார். கமல் ரசிகர்கள் நாங்கள் பா. ஜ.க. ஆதரவாளர்கள். எனவே திருச்சி வரும் மோடியை சந்தித்து ஜெயாவுடன் கூட்டணி கூடாது என்று சொல்ல இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். (விஷவரூபம் படத்தை பலர் எதிர்க்க இதுவும் ஒரு காரணம் போல). ஆனால், மோடியோ தமிழக முதல்வரோ இதற்கெல்லாம் சளைத்தவர்கள் அல்ல... நிச்சயமாய் பா.ஜ.க அ. தி.மு.க  கூட்டணி நிச்சயம். 
மோடி தனது கறைகளை எல்லாம் மறைக்காமலே 
பிரதம வேட்பாளர் அறிவிப்பு வெளி வந்திருக்கிறது... 
இனிமேல் எந்தக் கறையையும் தாங்கும் ஆற்றலையும் 
அவர் நிச்சயம் பெறுவார்.. 
கறை நல்லது என்கிற வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ 
பிரதம வேட்பாளர் அவர்களுக்கு நிச்சயம் பொருந்தும். 
மோடி வெற்றி பெற்றால் அவரை வெற்றி பெறச் செய்த பெருமை எல்லாம் அ.தி-மு.க. வை அல்ல அது காங்கிரசையே சாரும்.
தாராளமாய் காங்கிரஸ்காரர்கள் 
வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் என்னைச் சேரும் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம். 
காங்கிரசுக்கு அ.தி.மு.க கூட்டணி கிடைக்காவிட்டாலும் 
நிச்சயமாய் எம்.ஜி.ஆர். பாட்டைப் பாடுகிற புண்ணியமாவது கிடைக்கும். 
கரண்டு கண்டமும் பெட்ரோல் கண்டமும் ஒன்னாய்ச் சேர்ந்திருப்பதால் 
காந்தி வந்தால் கூட காங்கிரசைக் காப்பாற்ற முடியாது.


22.8.13

'அப்பு மண்டி' - ஆவணி ஆறு

உணவுப்  பாதுகாப்புத் திட்டம்
  • மிக வெற்றிகரமாக ஏழை மக்கள் அனைவரும் நிச்சயமாக உணவைப் பெறுவதற்கான திட்டத்தை நாங்கள் நிறைவேற்ற மிகப் பெரிய போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்று இந்திய அன்னை சோனியா காந்தி சொல்லியிருக்கிறார்கள். இது ராஜீவ் காந்தியின் கனவு என்று சொல்லியிருக்கிறார். அவர் இருந்த போது இந்தியப் பாதுகாப்பு என்று போபார்ஸ் பீரங்கிகளை வாங்குவது அவர் கனவாக இருந்து நிறைவேற்றினார். இப்போது இன்னொரு கனவை இவர்கள் நிறைவேற்றுகிறார்கள் போல.
  •  இப்பதான் மத்தியத் திட்டக் கமிஷன் ஒரு நாளைக்கு முப்பது ரூபா சம்பாரிச்சா ஏழைகள் இல்லைன்னு சொல்லுச்சு... அப்படிப் பாத்தா ரோட்டுல பிச்சை எடுக்குறவங்க கூட ஏழைகள் இல்லைன்னு சொன்னது. இவங்க 67 சதவீதம் மக்கள் பயனடைவார்கள் என்று சொல்றாங்க...  
  • பூச்சி புழுத்து கிடங்குகளில் கிடக்கும் அரிசிகளை ஏழை மக்களுக்கு குடுங்கன்னு நீதி மன்றம் சொன்னதற்கு இதே காந்தியின் பேரன்களெல்லாம்  அரசு விஷயத்தில் நீதி மன்றம் தலையிடக் கூடாது அப்படின்னு சொன்னாங்க. இப்ப திடீர் கரிசனை மக்கள் மேல்....
அணுநீர்க் கசிவு 

  • ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இப்போதும் பணியாளர்கள் அணு உலையைக் குளிர்விக்க வேலை செய்து கொண்டிருக்கிறார்களாம். இப்போது ஏறக்குறைய 300 டன் கதிர்வீச்சு நீர் கசிவதாகவும் எந்தத் தொட்டியில் இருந்து கசிகிறது என்று கண்டு பிடிக்க வேலை செய்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். கூடங்குளத்த நினைச்சா என் எதிர்கால சந்ததியின் வாழ்க்கை முகமூடிகளுக்கு பின்னால்தான் என்று தோன்றுகிறது. அப்படி ஒரு நிலையில், ஒருவேளை இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டம் உதவி செய்யலாம். 
கச்சத் தீவு 
  • கச்சத்தீவு பற்றி மூச்சே விடக்கூடாது என்று இலங்கை அமைச்சர் சொல்லியிருக்கிறார். கவலைப் படாதீங்க...நீங்க மீனவர்களைச் சுடுங்க... நீங்க புத்தர் சண்டை போடச் சொன்னார்னு சொல்லுங்க... தமிழர்கள் அறிவில்லாதவங்கன்னு சொல்லுங்க... தமிழர்கள் நாட்டைப் பிரிக்க சதின்னு மாண்புமிகு பிரதம மந்திரி மன்மோகன் சிங்குகிட்ட சொல்லுங்க... அவர் உங்களுக்கு நன்றி சொல்லுவார். நீங்க பினான்ஸ் பண்ணி படம் எடுத்தாக் கூட இங்க யாரும் ஒன்னும் சொல்ல மாட்டான். கவலைப் படாதிங்க. 
தடை
  • ஜான் ஆப்ரஹாம் நடித்த படம் தமிழர்களை இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாக காண்பிப்பதாகவும் படத்தை தடை செய்ய வேண்டுமென்றும் சொல்கிறார்கள். ஜான் ஆப்ரஹாம் இலங்கையில் இலங்கை அதிகாரிகள் யாரையும் பார்க்க வில்லை என்று சொன்ன மறு நிமிடம் அவர் இலங்கை அதிகாரிகளைப் பார்ப்பதற்காக இருந்த ஆதாரங்கள் முகப்புத்தகத்தில் வெளி வந்திருக்கின்றன. ஆமாம் நான் பார்க்கப் போனேன்... அவன்தான் ஸ்பான்சர் பண்றான்னு ஒப்பனா சொல்லிட்டா நம்ம பிரதமரே பாதுகாப்புக் குடுப்பாரே இதுக்குப் போய்  யாராவது பொய்  சொல்லுவாங்களா ஆப்ரஹாம்.
  • ரா இந்திய உளவுத் துறை என்றெல்லாம் சொல்லுகிறார்கள்... இலங்கை உளவுத்துறை ரொம்ப ஒப்பன் போல இருக்கிறது..
  • தமிழர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்தால்தான் தமிழர்களின் நலன் கிடைக்கும் என்கிற ஒரு செய்தியை படம் பார்ப்பவர்கள் எடுத்துக் கொண்டால் போகிறது ஏனெனில் மலையாளர் ஒருவர்தான் மிக சிரத்தையோடு ராஜீவ் இந்தியாவைக் காப்பாற்ற போராடுகிறாராம்.
இளையராஜா 
  • சினிமாக் காரர்கள் எல்லாருக்கும் தங்களது பர்ஸ் நிறைந்தால் போதும் என்கிற அளவுக்கு மட்டுமே இருக்கிறார்கள். அதுதான் ஆப்ரஹாமை பொய் சொல்ல வைத்திருக்கிறது. பொதுவாக இலங்கைத் தமிழர்களை மனதில் வைத்தே பல திரைப் பட கலைஞர்கள் தங்கள் டாலர்களையும் பவுண்டுகளையும் குறி வைக்கிறார்கள். இளையராஜா என்றும் ராஜாதான். அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லைதான். அவரும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்பதைத் தான் தொடர்ச்சியாக வரும் அவரது கான்செர்ட்ட்டுகள் சொல்லுகின்றன. அதாவது பணத்திற்கு மட்டும் அவர்கள் வேண்டும் ஆனால் ஆதரவுக் கருத்து என்கிற அளவில் கூட சில சமயம் எதுவம் சத்தமாய்ப் பேசுவதில்லை... அதனால் இங்கிலாந்தில் விற்பனை மந்தம் என்று சொல்லுகிறார்கள்.
  • இருபத்தி நான்காம் தேதிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் வேளையில் இன்னும் அரங்கு நிறையாமல் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அதனால் உலக நாயகன் முதற்கொண்டு எல்லாரும் வாங்க வாங்கன்னு கூவி விக்கிறாங்க... 
  • இதெல்லாம் தேவையான்னுதான் விசய் ஒரு படத்துக்கு இருபது கோடி வாங்குறாராம். அடப் பாவிங்களா காச என்னதான் பண்ணுவீங்க? நீங்களெல்லாம் உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிச்சா உலகத்துக்கே சாப்பாடு போடலாம் போல இருக்கே?

14.8.12

ஒலிம்பிக்கில் இந்தியா முதலிடம்...



கேட்பதற்கு பிதற்றல் போல இருந்தாலும் இது உண்மைதான். மொத்தம் எழுபத்தி ஒன்பது நாடுகள் பதக்கங்கள் வாங்கியிருக்கின்றன... அதில் எல்லா பட்டியல்களிலும், அமேரிக்கா தான் முதலிடம் பெற்றிருப்பதாகச் சொல்லுகின்றன அப்புறம் எப்படி இந்தியா என்று நீங்கள் யோசிப்பீர்கள். நான் சொல்லுவது உண்மைதான்.

எல்லாரும் சொல்லும் பட்டியலில் இந்தியா ஐம்பத்தி ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தங்கம் பெறாதவர்கள் பட்டியல் என்று ஒன்று உண்டு... 
இந்தப் பட்டியலில் இந்தியாதான் முதலிடம். அதாவது இரண்டு வெள்ளி மற்றும் நன்கு வெண்கலம் பெற்று மொத்தம் ஆறு பதக்கங்கள் பெற்று தங்கப் பதக்கங்கள் பெறாதவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

என்னதான் இந்திய அரசு பற்றிய விமர்சனத்தை முன்வைத்தாலும், இந்தியா முதலிடம் என்று சொல்லும் போது அந்த நாட்டின் குடிமகன் என்ற முறையி பெருமையாகத்தானே இருக்கிறது. அதற்காகத்தான் இந்த மாத்தி யோசி..... உங்களுக்கும் பெருமையா இருக்கா???


8.8.12

ஒலிம்பிக் - ஐந்து வளையங்கள்

௦ ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நாடாகவும் அதல பாதாளத்தில் இருக்கிற நாடு கிரீஸ்: ஏறக்குறைய கடைசியில் இருக்கிற அந்த நாடு ஒலிம்பிக் தொடக்க விழாவில் [எல்லா ஒலிம்பிக்குகளிலும்] முதலாவது வந்து தொடங்கி பொருளாதார பாதாளத்திற்கு பாலன்ஸ் செய்கிறார்கள்... ஏனெனில் முதலில் வருவது பெருமை.  

௦ ஒலிம்பிக் விழாவில் மிகவும் கவனிக்கப் பட வேண்டிய விடயம் - ஐ. நா. வின் பட்டியலில் இடம்பெறாத நாடுகளைக் கூட ஒலிம்பிக் ஏற்றுக்கொண்டிருப்பது  மிகவும் பாராட்டப் படவேண்டியது.  பாலஸ்தீனம் போன்ற நாடுகள் இடம் பெற்றிருப்பது மிகவும் பாராட்டப் பட வேண்டியதுதானே. ஈழம் சகோதர சகோதரிகள் - முன்னமேயேஒலிம்பிக் விழாவில் பங்கேற்று இருக்கலாம் என்றே தோன்றுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசிலிருந்து ஈழ  சகோதரர்கள் இப்போது கூட முயற்சி செய்யலாமே என்றும் தோன்றுகிறது. ஒருவேளை அதற்கான முதல் அங்கீகாரம் ஒலிம்பிக்கில் கூட கிடைக்கலாம்.

௦ இந்த ஒலிம்பிக் இன்னொரு விதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது வரை நடந்து முடிந்த எந்த ஒலிம்பிக்கிற்கும் இல்லாத சிறப்பு இந்த ஒலிம்பிற்கு கிடைத்திருக்கிறது. பங்கேற்கும் அனைத்து நாடுகளிலிருந்தும் பெண் வீரர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு... எல்லா நாடுகளிலும் பெண்கள் பங்கேற்பதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதில் இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் பெருமை - வீரர்கள் பட்டியலிலேயே இல்லாத பெண் கூட வீரர்கள் அணிவகுப்பில் வரும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது...

௦  லண்டன் தொடக்க விழாவில் எப்படி இயற்கையோடு இருந்த நிலையிலிருந்து, தொடர்ந்து கருவிகள், ஆலைகள், தொழில் நுட்ப வளர்ச்சி என்று மிக அட்டகாசமாக காண்பித்தார்கள். தங்கள் நாடு பிடிக்கிற ஆசையில் உலகம் முழுவதும் சென்று வெறித்தனமாக நிறைவேற்றிய அராஜகங்கள் மட்டும் மிஸ்ஸிங்... ஐ திங் தட் திஸ் அம்னீசியா டிசர்வ்ஸ் ய கோல்ட் மெடல்!


௦ தொடக்க விழாவில் வீரர்கள் அணிவகுப்பில் முதலில் கிரேக்கம் வருவது போல கடைசியில் ஒலிம்பிக்கை நடாத்தும் நாடு வருவது பெருமைக்குரிய விஷயமாம். எனக்குள்ள சந்தேகம் - முதலில் வருவது பெருமையா  கடைசியில் வருவது பெருமையா? இரண்டும் என்றால் - இந்தியா பதக்கப் பட்டியலில் கடைசியில் வரும் என்று நினைத்திருந்தேன். அந்த பெருமை கை நழுவிப் போனதில் எனக்கு மிக வருத்தமாகவே இருக்கிறது. 





4.1.12

முதல் நாள்

முதல் நாள் மழை பெய்தால் 
வருடம் முழுதும் மழை பொழியுமாம் 
செழிப்பாய் இருக்குமாம் நாடு
– பெரியவர்கள் சொல்லுகிறார்கள்.

முதல் நாள் அழுதால் 
வருடம் முழுதும் அழுவோமாம். 
மனது சொல்லுகிறது.

ஆனால்
முதல் நாள் குடித்தால் 
வருடம் முழுதும் குடிக்க நேரமோ என்றோ
முதல் நாள் விடுமுறையில் உழைக்காமல் இருந்தால் 
வருடம் முழுதும் உழைக்காமல் இருக்க நேரிடுமே என்று 
மனதும் சொல்ல மறுக்கிறது 
அரசும் சொல்ல மறுக்கிறது.


நாம் குடிப்பதற்கான காரணம் தெரிகிறதா?
நாம் சோம்பேறிகளாய் இருப்பதற்கான காரணம் புரிகிறதா?


11.12.11

ஒய் திஸ் கொல வெறி?ஜஸ்ட் ஜாலியா ஒன் ...


மனதில் எண்ணம் ...
கையில் ... 
ஒன்லி இங்க்லீஷ் - 
ஒ.கே . மாமு....
மைண்ட்ல தாட்டு - 
ஹாண்ட்ல கீ போர்ட்  
வாட் டு ரைட்டு நவ்வு .... ன்னு தான் 
இந்தப் பதிவ ஆரம்பிச்சேன். 
ஆனா நம்மால முடியாதுடா சாமி.
***

இந்தப் பாட்டு வந்து பல விஷயங்கள் நடந்து விட்டது.
படத்தின் - ப்ரமோவுக்காக தனுஷ் ஜாலியா ஒரு பாட்டுப் பண்ணி ....
- என்ன விஷயம்னா நம்ம விஜய்  பாடினா  இப்போது பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய் ன்னு நம்மைக் கொன்னே போடுவாங்க... இவரை நேராவே காட்டிட்டாங்க...
***
ஒய் திஸ் கொல வெறி பாட்டு வந்த நேரத்துல விலை வாசி ஏறிப் போய் எல்லாரும் அம்மா மேல கடுப்புல இருந்த அன்னைக்கு [அன்னைக்குதான் நான் பார்த்தேன்] இந்தப் பாட்டு வந்து எல்லாரும் அம்மாவைத் திட்டுற மாதிரி ஒரு தலைப்பைப் போட்டு, திருப்பித் திருப்பிப் போட்டுக் கேட்டு, 
அம்மாவைப் பார்த்து எல்லாரும் ஒய் திஸ் கொல வெறின்னு கேட்டாங்களாம்.
***

திருப்பித் திருப்பி போட்டுக் கேட்டதுல கடுப்பாகி ஒய் திஸ் கொல வெறி - உங்களுக்கு என்னாங்கடா வேணும் - இந்தாங்கடா 
தங்க மெடல் ன்னு யு டியூப் குடுத்து 
அதோட முடிச்சுக்கலாம்னு பார்த்தா...

அதே மேட்டரை அதே மெட்டோட அல்லாரும் திருப்பித் திருப்பி, சின்னவன், பொண்ணு ன்னு மாத்தி மாத்தி பாடி - என்னா எடிட்டிங்க்டா சாமி. சீக்கிரம் பாலைக் குடுங்கடா தூங்கனும்கிற ரேஞ்சுக்கு அந்தப் பொடியன் பாட - எனக்கென்னமோ அந்தப் பையன் அவங்க அம்மாவைப் பார்த்துதான் 
ஒய் திஸ் கோல வெறின்னு பாடுற மாதிரி இருக்கு.
***

ஒருத்தர் தனுஷ் ஏன்  தமிழில் எழுதலைன்னு ரொம்பக் கஷ்டப் பட்டு 
ஏன் இந்தக் கொல வெறி ... கொல வெறின்னு ....
கஷ்டப் பட்டு மொழி மாற்றம் பண்ணி - அதுல ஸ்ருதிக்கு பதிலா ஒரு பொண்ண  நடிக்க வச்சு ----உஷ் அப்பப்பா ஏன்யா இந்தக் கொல வெறி.
***

என் டி டிவி வரைக்கும் தனுஷ் பேட்டி குடுத்து
வி ஆர்  ஹியர் டு என்டர்டெயின் யு நோ.... 
அப்படின்னு விளக்கம் குடுத்துருக்கார். 
ஒய்? ஒய் திஸ் யா?
***

சிம்பு ரசிகர்கள் எல்லாம் தனுஷை வெறுப்பேத்துற மாதிரி பேச - வெறுப்பேத்துற மாதிரி என்னை விட என்னடா அவரைப் பத்தி அதிகம் பேசுகிறீர்கள் என்று தன் ரசிகர்களுக்கு ஒய் திஸ் கொலை வெறி ன்னு சொல்லி -  நீங்க பேசாம இருங்க நான் பாத்துக்கிறேன் அப்படின்னு சொன்னாராம்.

என்னாடா பண்ணப் போறாருன்னு பார்த்தா டி ஆரையும் எல். ஆரையும் வச்சு ஒரு பாட்டு பண்ணி -....
டி. ஆர் . சார் அண்ட் சிம்பு சார் 
ஏன்  இந்தக் கொல வெறி?
***

கவிஞர்கள் (!) கடுப்பாகி இதெல்லாம் ஒரு பாட்டான்னு தனுஷைக் கிண்டல் பண்ணி  ஒய் திஸ் கொல வெறின்னு கேட்கப் போய்.

என் மேல் உங்களுக்கு ஏன்யா இந்தக் கொல வெறின்னு கடுப்பாகி - தனுஷ் இசைக்கு மொழி தேவையில்லை - அது என்ன மொழின்னு தெரியணும்னா தெரிஞ்சுக்க இந்தா ...  "இந்தியனால் எழுதப்பட்ட இந்திய மொழின்னு" டுவீட் பண்ணி, ....

அடேங்கப்பா ... ஏன் எல்லாருக்கும் இந்தக் கொலைவெறி...
ஆமா எனக்கு ஏன் இந்தக் கொல வெறி?

ஒரு வழியா தனுஷ்ல ஆரம்பிச்சு தனுஷ்ல முடிச்சுட்டேனா?

இதனால் அறிவது என்னவென்றால்.....
  • இந்திய மொழி என்று ஒன்று உண்டு.... அது இங்கிளிபிஷு

***************************************************************************
  • கேரளாவில்  எல்லாரும் சேர்ந்தது தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கூடாது என்பதில் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக இருக்கிறார்கள். அங்குள்ள கிறித்தவப் பாதிரியார்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளுகிறார்களாம். தமிழ் நாட்டில் இருந்து சபரி மலைக்குச் சென்ற தமிழக பக்தர்கள் மீது அவர்களின் வண்டிகளின் மீது தாக்குதல் நடத்தியதால் பக்தர்கள் சிலர் இங்கேயே முடி இறக்கவும் முடிவு செய்தார்களாம். பரமண்டல பிதாவும் சாமி ஐயப்பனும் ஒன்று சேர்ந்து தாக்குதல் கொடுக்கிறார்களா? சாமிகள் பேரைச் சொல்லி வம்பு வழக்கும் ஆசாமிகளே ஒய் திஸ் கொல வெறி?
    • யார் சொன்னது நமது நாட்டில் மத வேறுபாட்டினால் பிளவு என்று? 

      • இத்தனைக்குப் பிறகும் சில தமிழர்கள் கட்டாயம் அங்கே போய்தான் முடி இறக்க வேண்டும் என்று முடிவோடு இருக்கிறார்களாம். ஒய்? ஒய் திஸ் கொல வெறி?



19.11.11

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு ... பதம்!

பழமொழிகள் இப்போது சொல்லப்பட்டால் என்ன உதாரணம் சொல்லுவது என்று ஆசிரியர்கள் கவலைப் பட வேண்டாம். அவர்களுக்கு உதவும் விதமாக சில பழமொழிகள். 

ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்
  •  உதாரணம் ஒன்று -  தமிழக சட்ட சபையில் மூவர் மரணதண்டனைத் தீர்ப்பை நிறுத்தி வைக்க போட்ட தீர்மானம்.
  • உதாரணம் இரண்டு -  கூடங்குளம் அணுமின் நிலையம் அவகாசத் தீர்மானம்.
  • இதுக்கு நல்ல பழமொழி - வேற இருக்கு 
  • ஆடுற மாட்டை ஆடிக் கற பாடுற மாட்டை பாடிக் கற .... கறந்துட்டான்களே உள்ளாதித் தேர்தல்ல! [ஐடியா திரு ராமராஜனா?]
தொட்டிலை ஆட்டி விடுவது - பிள்ளையையும் கிள்ளி விடுவது
  • மூவர் தூக்குத்தண்டனை ரத்து செய்யக் கோரும் வழக்கைத் தள்ளு படி செய்ய தமிழக அரசு வழக்குத் தாக்கல்.... 
புலி பதுங்குவது பாய்வதற்கே
  • உதாரணம் - உள்ளாட்சித் தேர்தல் வரை அமைதி காத்து இப்போது எல்லா வற்றின் விலையையும் கடுமையாக உயர்த்தி இருக்கும் தமிழக அரசு.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பானாம் 
  • பெட்ரோல் விலை உயர்வினால் சூடாகி இருந்த மக்களுக்கு ஓங்கி அடி - பால் விலை உயர்வு ... பேருந்துக் கட்டணம் உயர்வு.... ரெயில் கட்டணம் உயர்வு ... 
  • சம்பளம் ??????????????????????????????'..
  • எல்லாத்தையும் தாங்கிக்கிரீங்களே - நீங்க ரொம்ப நல்லவங்க ..... 
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்
  • பொது நூலகங்களுக்கு புத்தகம் வாங்க இருபத்தி ஐந்து கோடி மற்றும் கட்டிடங்களுக்கு இருபத்தி ஐந்து கோடி முதல்வர் அறிவிப்பு.. 
கோழி மிதித்து குஞ்சு சாகுமா! அம்மா மிதித்து ...
  • மாற்றான்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்காத நிலையில் தமிழக 'மக்களே' [குழந்தைகளே] உங்களிடம் இல்லமால் வேறு எங்கே போகமுடியும். சொந்தத் தாய்க்குரிய கருணையோடு நடந்து கொள்ள விலை உயர்வு தவிர்க்கப் பட முடியாததாகி விட்டது.  
கரையான் புற்று பாம்புக்கு உதவுமாம் - 
  • விலைவாசி யுர்வுக்கு கலைஞர் அரசே காரணம் - முதல்வர் குற்றச் சாட்டு.
  • கலைஞரின் புற்று அம்மாவுக்கு நன்றாக உதவுகிறது... 
இதனால்தெரிந்து கொள்ள வேண்டியது:
  • பசுத்தோல் போர்த்திய புலி
    • உதாரணம் - சொல்லனுமா என்ன? 
  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
    • விலை வாசி உயர்வுக்கு எதிராக சில கட்சிகள் போராட்டம்...
  •  "வெளுத்ததெல்லாம் பாலல்ல."  
    • 'கள்ளா' இருக்கணும்னு அவசியம் இல்லை -
    •  சுண்ணாம்பாக் கூட இருக்கலாம். 
இது நமக்கு - 'ச்சீ ச்சீ - இந்தப் பழம் புளிக்கும்.'
  • பால் உடலுக்கு நல்லதல்ல
  • பிரயாணம் உடலுக்குக் களைப்பைத் தரும்

7.11.11

சிறுதுளி: விஜய் அம்மா கலைஞர் !

இது விஜயின் அம்மா கலைஞரா என்று விவாதிக்கிற பட்டிமன்றம் அல்ல: இது விஜய் பற்றியும், அவரது அம்மா பற்றியும், நம்ம அம்மா பற்றியும், கலைஞர் பற்றியும், உள்ளடக்கிய சில செய்திகளையும் சில கேள்விகளையும் முன்வைக்கிற ஜாலியான பதிவு...
சில சீரியஸ் விஷயங்களை காமேடியாக்குவதே அவர்கள்தான் நாம் காமெடி பண்ணினால் தப்பா?

--------------------------
செய்தி: தமிழ்நாடு அரசு இசைப் பள்ளிகளுக்கான அறிவுரைஞராக ஷோபா சந்திரசேகரன் நியமனம்.

பாராட்டு - விஜயின் பாடும் திறனை வைத்தே அவரது தாய் எவ்வளவு பெரிய இசைமேதை என்று நாம் உணர்ந்துவிடலாம் அல்லவா?

கேள்வி: தமிழ்நாடு அரசு கலையியல் கல்லூரிகளின் அறிவுரைஞராக அடுத்த நியமனம் விஜய்யா?
---------------------------------------------------
  • செய்தி: மழையினால் ரோடுகள் குண்டும் குழியுமாய் இருக்கின்றன சீரமைக்க ஐநூறு கூடி ஆகும்.
  • கேள்வி: அவ்வளவுக்கும் ரோடு போட்டிருவீங்களா?
  • சந்தேகக் கேள்வி: கலைஞரின் ஊழல் சாலைகள் என்று ஏதாவது கேஸ் போடுவீங்களா?
----------------------------------------------------------------------
செய்தி:  அம்மா ஆறு அமைச்சர்களை அதிரடியாக நீக்கி புதிய அமைச்சர்கள் நியமனம்?

கேள்வி: ஆஹா! அம்மா மறுபடியும் ஆரம்பிச்சுட்டுங்களா?

சந்தேகக் கேள்வி:  ஏன் அவங்களை கலைஞர் கட்டி எழுப்பினாரா என்ன?

 ------------------------------------------------------------------------------------------------

செய்தி: தோனிக்கு ராணுவத்தில் கவுரவப் பதவி -

கேள்வி: இங்கிலாந்திடம் இங்கிலாந்தில் அடிபணிந்து இந்தியாவில் திருப்பிக் கொடுத்ததற்கா?
இந்தக் கவுரவ டாக்டர், கவுரவ ராணுவ வீரர் இதற்கெல்லாம் முடிவே கிடையாதா?

சந்தேகக் கேள்வி:   தோனி போரில் குண்டு போட்டால் பேட்டால்  தடுப்பீர்களா?
-----------------------------------------------------------------------------------------------------------
  • செய்தி: உலக மக்கள் தொகை 700 கோடியைத் தொட்டது...
  • கேள்வி: நிஜமாவா - செத்தவங்களைக் கழிச்சிங்களா இல்லையா?
  • சந்தேகக் கேள்வி: ரொம்பக் கம்மியாத் தெரியுதே - - நம் ஊழல் கோடிகளோடு ஒப்பிடுகையில்...
---------------------------------------------------------------------------------------------------------------

செய்தி: பொருளாதாரத் துறை வளர நிச்சயம் நமக்கு மிகப் பெரிய சக்தி தேவை, அதை நிறைவேற்ற நிச்சயம் நமக்கு அணுசக்தி அவசியம் என்று முன்னால் இந்தியக் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். மேலும் கதிர் வீச்சு வெளிவராத வண்ணம் பாதுகாப்பாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

கேள்வி:  ஐயா ஏற்கனவே வளர்ந்திருக்கிற பொருளாதார வளர்ச்சியில் விளைந்த விலை வாசி உயர்வையே எங்களால் சமாளிக்க முடியலையே - இன்னும் வளர்ச்சியடைந்தா நாங்க என்னய்யா பண்ணுவோம்?

சந்தேகக் கேள்வி:  அய்யா ! உங்க பங்களாவை அங்கே வைச்சுக்குவீங்களா?
                 
                     -----------------------------------------------------------------------

தொடர்புடைய பதிவு:

அப்துல் கலாமும் அணு உலையும். 



27.10.11

சிறுதுளி 271011 - கூவத்தில் சென்னை -

சென்னை
  • சென்னையில் கூவம் இருக்கிறது என்பது தெரிந்தவர்களுக்கு மழை பெய்தால் ஒட்டு மொத்த சென்னையே கூவமாகி விடும் என்பது தெரியாததல்ல.  
    • புதிய சென்னையின் புதிய மேயர் [விரிவாக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் என்பதற்கும் புதிய சென்னையின் புதிய மேயர் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்...] பொறுப்பேற்றிருக்கிற நிலையில் பருவ மழை தீவிரமடைந்து அவரை உடனே வேலைக்கு அழைத்திருக்கிறது.
  • சென்னை: மழை இல்லை என்றாலும் தத்தளிக்கும், மழை வந்தாலும் தத்தளிக்கும். சரியான திட்டமிடல் இல்லை. இந்நிலையில் "போர்க்கால அடிப்படையில் சென்னையில் குப்பைகள் அகற்றப்படும்" புதிய மேயர் அறிவித்திருக்கிறார். எல்லா குப்பைகளும் தண்ணீரில் அடித்துக் கொண்டு ஊருக்குள்ளே வந்துவிட்டது.
  • கூவத்தை சுத்தம் செய்தால் மழைக் காலங்களில் சுத்தமான நீர் சென்னை முழுவதும் இப்போது போல சென்னை தத்தளித்தாலும் நீருக்குள் நகரமாக வெனிஸ் நகரம் போல இருக்கும்.
வெனிஸ் பற்றித் தெரியாதவர்கள் யாராவது உண்டா? இருந்தாலும் ஒரு சிறு காணொளி.




இல்லைன்னா மன்மதன் அம்பு பாருங்கோ!

  • சென்னையில் மழை வந்தால் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அல்லது நீர் வடியும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
  • மழை வந்தால் அனைத்தும் கூவத்தில் கலக்கிறது சென்னையே கூவமாகிவிடுகிறது. வெயில் வந்தால் சென்னை சஹாராவாகி விடுகிறது 
    • இதற்குச் சென்னையா காரணம்?
மேதாவித்தனம்
  • கடந்த பதிவில் சொன்ன ஒரு விஷயத்திற்கு ஒரு சிறு உதாரணம்.
  • கலைஞர் ஒரு அறிக்கையில் - தனித்து போட்டியிட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறோம் என்று அறிக்கை ஒன்றில் சொல்லியிருக்கிறார். சட்டப் பேரவைத் தேர்தலில் இருபத்தி இரண்டு சதவீதமும் தற்போது இருபத்தி ஆறு சதவிதமும் பெற்றிருக்கிறோம்.
    • முக்கியமான விஷயம் இனிமேதான் - 
    • ஆனால் இது காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் என்று சொல்ல முடியாது. அதே சமயம் அ.தி.மு.க. வுக்கு எதிரான வாக்குகள் என்றும் சொல்ல முடியாது என்று சொல்லியிருக்கிறார். 
    • என்னைக் கேட்டால் எதுவுமே சொல்ல முடியாது என்று பேசாமல் இருந்திருக்கலாம்.
காங்கிரசுக்கு எதிரான வாக்குகள்னா ஒரு வேளை ஜாமீன் கிடைக்காது. ஏன் இது அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் - ன்னு சொல்ல முடியாதுன்னுதான் ஒரே கன்பியுஷன்!