24.3.10

வெறும் காற்றுதான் மொழியா?

வெறும் ஓசைதான் மொழி - இதில் எந்த மொழியும் உயர்ந்தது இல்லை என நமது காங்கிரஸ் கட்சியின் ஒரு கோஷ்டித் தலைவர் சொல்லியிருக்கிறார்.

இவர் புதிதாய் ஒன்றும் சொல்லிவிடவில்லை - புரட்சிகரமாய் ஒன்றும் சொல்லிவிடவுமில்லை. ஏற்கனேவே மொழி வல்லுனர்கள் அல்லது தத்துவவாதிகள் ஒரு நீண்ட தங்கள் கருத்துக் கட்டமைப்பிறகுப் பிறகு ஒரு முடிவுக்கு வந்து சொல்லியிருக்கிறார்கள். அதற்கான மாற்றுக் கருத்துக்களும் மாற்று ஆராய்ச்சி முடிவுகளும் வந்து கொண்டுதானிருக்கின்றன. அதில் ஒரு சாராரின் கருத்துக்களை இவர் வழி மொழிந்திருக்கிறார். அவ்வளவே.

ஆனால், இது போன்ற கருத்துக்களை காங்கிரஸ் காரர்கள் சொல்வதுதான் நமது கவலைக்குக் காரணம். ஒரு சிலரைத் தவிர நிறையப் பேருக்கு - தமிழில் பேசுவது அவ்வளவு கடினம். ஒருவேளை அதனால் தான் சொன்னாரோ என்னவோ.

ஒருவேளை, மனிதகுலம் முழுவதும் ஒரே இனமாய் இருக்க வேண்டும்... சண்டையிட்டு பிரிந்து போய் வாழக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் கூட அவர் சொல்லியிருக்கலாம். ஆனால் அதை - "தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு' நிகழ்ச்சி
நடத்தியவர் பிறந்த நாள் விழாவில் பேசியிருக்கக் கூடாது.

ஒரு வேளை கோஷ்டித் தகராறுகள் மாதிரி - மொழி வழி மக்கள் சண்டையிடக் கூடாது என்பதற்காக கூட சொல்லியிருக்கலாம்.
அது சரி - காங்கிரஸ் காரர்கள் மட்டும் எப்படி சண்டையிடுவதற்கு காரணம் கண்டு பிடிக்கிறார்கள். மொழி என்றால் அதையும் காரணம் காட்டி புதிதாய் இன்னொரு கோஷ்டி வந்துவிடக் கூடாது என்பதற்காகக் கூட இப்படிச் சொல்ல்லியிருக்கலாம்.

ஒரு மொழி வெறும் ஓசையா அல்லது அதன் தன்மை என்ன என்பதை எல்லாம் மொழி அறிஞர்கள் தான் நமக்கு விளக்க வேண்டும். நான் அதில் தலையிட விரும்ப வில்லை.

ஒரு செய்தி தெரியவில்லை என்றால் 'சும்மா இருப்பதே சுகம்' என்று இருப்பதே நல்லது. ஆனால் ஏன்தான் இப்படி ஆய்ந்தறிந்த அறிஞர்கள் போல எடுத்து விடுகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

மொழி வெறும் ஓசைதான் - அப்படி என்றே வைத்துக் கொள்வோம்.
அப்புறம் ஏன் ஆங்கிலத்தையும் இந்தியையும் தூக்கி நிறுத்தனும்?
அது வெறும் ஓசை என்பது தமிழ் மொழிக்கு மட்டும்தானா - இந்திக்கு இல்லையா? மராதிக்கு இல்லையா? அல்லது மலையாளத்திற்கு இல்லையா?
என் வெறும் இந்தி ஓசை மட்டும் நாட்டில் முக்கியத்துவம் பெற வேண்டும்?
வெறும் ஓசை என்றால், எல்லாருக்கும் ஹிந்தியை விட ஆங்கிலம் நன்றாகத்தெரியும் - தேசிய நெடுஞ்சாலைகளில் ஹிந்தியை இவர் அழிக்கவேண்டும் என்று சொல்லட்டும். வெறும் ஒரு ஓசைக்கு மட்டும் என்ன அதிக மதிப்பு.

எது, ஒரு ஓசை (இந்தி அல்லது ஆங்கிலம்) மிக முக்கியம் என்று தீர்மானிக்கிறது. எண்ணிக்கையா?

உங்களுக்கு என்ன நம்பிக்கையோ - அதைத் தாராளமாகச் சொல்லுங்கள் - ஆனால் எப்போதும் தமிழர்களை மட்டும் மொட்டையடிக்கும் விதத்தில் சொல்லாதீர்கள். எல்லாருக்கும் இது பொருந்தும் என்று சொன்னால் எல்லா இடத்திலும் இதைப் பேசவேண்டும்.
பெங்களூருவில் - மும்பையில் --- பேசுவாரா? கன்னடா வெறும் ஓசைதான் - மராத்தி வெறும் சத்தங்களின் கூட்டம். - பேசிவிட்டு அங்கிருந்து வந்துவிட முடியுமா?

எந்த அடிப்படையில் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வரும் போக்கு அணையிடப்படுகிறது? எதனால் கேரளாவில் அணையின் அடி உயர மறுக்கிறது?

வெறும் ஓசையினாலா?

நாம் எல்லா இடங்களிலும் அடிபட வேண்டும். இந்தக் காங்கிரஸ் காரர்கள் தெரிந்துதான் பெசிகிரார்களா இல்லை தெரியாமலே பேசுகிறார்களா?

ஒரு மொழிக்காக மக்கள் சண்டையிடுவதில் நமக்கும் உடன்பாடு இல்லை. ஆனால் ஒரு மொழி பேசும் மக்கள் பிற மொழி பேசும் மக்களால் அடிமைப் படுத்தும் போக்கை நாம் உணர வேண்டும் என்பதுதான் நமது எண்ணம். இதை எப்படி எதிர் கொள்ளவேண்டும் என்று நமக்கு அவர் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.


இசைக்குத்தான் மொழி இல்லை என்கிறார்கள் - இவர் மொழியே இல்லை என்கிறார். மிகப் பெரிய இசை வல்லுநர் போல இருக்கிறது.


மாசு படும் நீர் - ஆபத்து

ஐ. நா. பொதுச் செயலாளரின் செய்தி.

பின் வரும் வலையிலிருந்து எடுக்கப்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2010/03/23/polluted-water-kills-more-people.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+oneindia-thatstamil-all+%28Oneindia+-+thatsTamil%௨௯


நைரோபி: உலகில் போரால் ஏற்படும் உயிரிழப்புகளை விட மிக அதிக அளவிலான உயிர்களைப் பறித்து வருகிறது மாசடைந்த குடிநீர் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார்.

பாதுகாக்கப்படாத, அசுத்தமான, மாசடைந்த குடிநீரைக் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை, போரினால் ஏற்படும் உயிரிழப்பை விட அதிக அளவில் இருப்பதாக மூன் கவலை தெரிவித்துள்ளார்.

நைரோபியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மனித குலத்தை வேகமாக அழித்து வரும் மாபெரும் ஆயுதமாக மாறி நிற்கிறது மாசடைந்த குடிநீர். இது போரினால் ஏற்படும் உயிரிழப்பை விட அதிக அளவிலான உயிர்களைப் பறித்து வருகிறது.

புவிவெப்ப மாற்றம் காரணமாக சுகாதாரமான குடிநீர் கிடைப்பது அரிதாகி வருகிறது. அசுத்தமான மாசு படிந்த நீரைக் குடிப்பதால் பல்வேறு வியாதிகளுக்கு உலக மக்கள் ஆளாக நேரிடுகிறது. இது உயிரிழப்பில் போய் முடிகிறது.

குடிநீர்ப் பற்றாக்குறை, அசுத்தமான குடிநீர் ஆகியவற்றால் முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை மக்கள்தான். இந்த அவல நிலைக்கு முடிவு கட்ட வேண்டியது அவசியம் என்றார் மூன்.

உலக தண்ணீர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மேற்கண்டவாறு பேசினார் பான் கி மூன்.

23.3.10

மார்ச் 22 - உலக தண்ணீர் தினம்

உலகத்தின் உயிர் மூச்சாக இருப்பது தண்ணீர்.

நீரின்று அமையாது உலகு -

எல்லாம் எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் யாரும் அதைக் காப்பதற்கான வழிகளை கடைப் பிடிப்பதாகத் தெரியவில்லை.

தண்ணீர் பற்றாக்குறை எதனால் ஏற்படுகிறது?
மக்கள் தொகைப் பெருக்கமா?
அது சும்மா.

அது கையாலாகாத அரசுகள் சொல்லும் விளக்கம்.

சில பொருளாதார வல்லுனர்களும் சொல்கிறார்கள் - அவர்களுக்கான் பதிலை வேறு சில நிபுணர்கள் சொல்லுவதால் நமக்கு எதற்கு அந்த வேலை.

சென்னை - யில், மும்பையில், பெங்களூருவில் என்று எல்லா பெரிய நகரங்களிலும் பற்றாக்குறை.

மக்கள் ஒரு சில இடங்களிலே வந்து குவிவதற்கு யார் காரணம்...
ஒரு சில நகரங்களில் மட்டும் வேலைக்கான வாய்ப்புகள் பெருகும் பொது மக்கள் அங்கேதான் வருவார்கள்.

இருக்கிற இடங்களிலே வேலைக்கான் வாய்ப்பையும், நகரங்களில் கிடைக்கிற வசதிகள் எல்லா இடங்களிலும் கிடைக்கும்படி செய்யாமல், சென்னையை நோக்கி மக்கள் வருகிறார்கள் என்றால் யார் தவறு?

சென்னையைத்தான் தொழில் அதிபர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று சொல்லலாம். சென்னையில் மட்டும் சாலை வசதி இருந்தால், சென்னை மட்டுமே அனைத்து வசதிகளையும் பெற்றிருந்தால் என்ன செய்வார்கள்.


தமிழக அரசுதான் சிவப்புக் கம்பளம் விரித்து சென்னைக்கு வரவேற்கிறதே?

செம்பரம்பாக்கம் நீருற்றி - லிருந்து யார் நீரை உறிஞ்சு எடுக்கிறார்கள். நீங்களே வரவேற்று, நீரை உறிஞ்சும் அதிகாரத்தைக் கொடுத்து - எத்தனை பேருக்கு அதனால் பயன்....
அரசை ஏமாற்றுகிறார்கள், தொழிலாளர்களை ஏமாற்றுகிறார்கள்..

வருகிற தொழில் நிருவனஞளை தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பிரித்து விடுங்கள்... சாலைகளை இணையுங்கள்..

அதை விட்டுட்டு ...


நிலத்தடி நீரை உறிஞ்சும் நிலையை மாற்ற வேண்டும்....

மழைக் காலங்களில் நீரை சேமிக்கும் பழக்கம் நமக்கு உருவாக வேண்டும்.
ஒவ்வொரு கிராமங்களிலும் இருந்த குளம், குட்டைகள், கண்மாய், ஏரி, இவைகளெல்லாம் மீண்டும் உருவாக்கப் பட வேண்டும்.

மழை குறைந்து விட்டது.

ஏன் குறைந்தது?
மரங்கள் இல்லை...

நாம் யோசிக்க வேண்டியது நிறைய இருக்கின்றது.

குடிக்கத் தண்ணீர் இல்லை என்கிற போதுதான் நாம் யோசிப்போம்..

அதுவரை என்ன செய்யலாம்....

தேவையில்லாமல் தண்ணீரை விரயம் செய்யலாம்..

22.3.10

No to Plactics

Plastic Bag Pollution - Eco friendly Cotton Canvas Bags-EcoTrendbags
View more presentations from skpurohit.

21.3.10

சட்டத்திற்கு மேலானவன் யார்?

நான் சட்டத்திற்கு மேலானவன் என்று இலங்கை அதிபர் சொன்னதாக செய்திகள் வெளியிடப்பட்டன.

சில சமயங்களில் அவர்கள் தான் யார் என்பதை அவர்கள் வாயிலாகவே சொல்கிறார்கள்.

சட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுகின்றன. அப்படியானால், எல்லா மனிதருமே அதற்கு உட்பட்டவர்கள்தான்.

சட்டத்திற்கு அப்பாற்ப் பட்டவர்கள் யாரும் இருக்க முடியும் என்றால் இருவர் அவ்வாறு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

ஒன்று கடவுள் - மற்றொன்று மிருகம் (சாத்தான், பேய், காட்டுமிராண்டி).

சத்தியமாய் இலங்கை அதிபர் கடவுள் இல்லை...

18.3.10

தினம் தினம் - பணம் - கருப்பு -வெள்ளை

ஒவ்வொரு நாளும் புதிது புதியதாய் நிகழ்வுகள்: ஒன்றும் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.
எழுதி என்ன ஆகப் போகிறது? ஒன்றும் ஆகாமல் போனாலும், மௌனமாய் இருக்கிறபோது எதோ நாமும் இந்த நிலைக்கு காரணமாய் இருக்கிறோம் என்பது மட்டுமல்ல, இன்னும் நன்றாக இந்த ஊழல் பெருக வழி செய்கிறோமே என்கிற கோபத்தில் எழுதுகிறேன்.
நீங்கள் படித்து என்ன ஆகப்போகிறது?
இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தால் இந்த ஊழல் பெருக நீங்களும்தான் காரணிகள்: நானும்தான்.

சரி எதைப்பற்றி எழுவது? - பணம்.

பணம் - பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.
இருந்தாலும் வாங்கும் சக்தி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று மகிழ்ச்சி அடையலாம் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.

காய்கறியை விட கோழிக்கறி மலிவாக இருக்கிறது.
தாகம் எடுத்தால் பால் வாங்கிக் குடிக்கலாம், பாலின் விலை தண்ணீரை விட குறைவாக இருக்கிறது.
ஒருவேளை பூவின் [மலர்கள்] விலையும் அதிகரித்து பணம் மலிவாகக் கிடைக்கிறதோ என்பதுதான் எனக்குள்ள சந்தேகமே?

மாயாவதிக்கு பண மாலை கிடைத்ததே அதைத்தான் சொல்கிறேன். முதலில் ஒரு கோடி-க்கு 1000 ரூபாய் நோட்டில் மாலை என்றார்கள், பிறகு, 2 கோடி, இப்போது 20 கோடி என்பது வரை வந்து நிற்கிறது.

பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது இருக்கட்டும் - அதற்காக அதை ஏதோ தோட்டத்தில் காய்த்து தொங்குவது போலவும், அதைப் பறித்து அலங்கரிப்பது போலவும் செய்வது ரொம்பக் கொடுமைப்பா.
"என்ன இங்க பணம் காய்ச்சுத் தொங்குதுன்னு" நினைச்சியா என்று பெற்றோர்கள் கேட்பார்கள். ஒருவேளை அவர்களுக்கு அதைக் காய்க்கவைக்கிற வித்தை தெரியவில்லையோ என்னோவோ.

பணத்தை வைத்து மாலை இயற்றுவது இந்த நாட்டின் அவமானமா - பெருமையா என்பது தெரியவில்லை. ஒருவேளை மாயாவதி அம்மையார், இந்திய ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை இல்லாமல் அதனைக் கேலி செய்வதற்காக இது போல செய்திருக்கலாமோ என்னவோ. ஒரு நாட்டைக் கேவலப்படுத்த அந்த நாட்டில் குண்டெல்லாம் போடவேண்டியதில்லை. தேசியக் கோடியை கிழித்தாலே போதுமானது. அரசியல் வாதிலே அதையெல்லாம் செய்யக் கூடாது என்று சுற்றிக் கழுத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

"என்மீது கொண்ட அன்பால் அவர்கள் செய்தார்கள்" என்று மாயாவதி அம்மையார் சொல்கிறார்.
நாம எவ்வளவோ பேரைப் பார்த்துட்டோம் - நமக்குத் தெரியாதா. தமிழ் நாட்டில் இது போல அன்பால் செய்தார்களியும் பார்த்துட்டோம் - வெளிநாடுகளில் இருந்து காசோலை மூலமாக அன்பு செய்வதையும் பார்த்திருக்கிறோம்.

கருப்பை - வெள்ளையாக்கும் முயற்சி. வேறென்ன?

இல்லையென்றால், தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்ளும் முயற்சி. தனக்கே மாநிலம் முழுவதும் சிலை வைத்துக் கொள்வது - பெரிய மண்டபம் கட்டிக்கொள்வது - தோட்டம் அமைத்துக் கொள்வது - இப்போது பணமாலை. தன்னைத் தானே நேசிக்கும், தன்னை மட்டுமே நேசிக்கும் ஒரு இழிநிலையின் வெளிப்பாடு.

இதை ஒரு எழுச்சியாகவும் பார்க்கலாம். மற்றவர்களுக்கு இணையான ஒரு தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு முயற்சி என்பதற்காக இது போன்ற செயலலை செய்ய வேண்டியிருக்கிறது என்று சொல்லிக்கொள்ளலாம் - ஆனால் மாயாவதி விஷயத்தில் அதை நினைத்துப் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.

ரூபாய் நோட்டில் எழுத வேண்டாம் என்றார்கள் - பூவெல்லாம் செய்யக்கூடாது என்றும் சட்டம் இயற்ற வேண்டும் போலிருக்கிறதே.

கோடி எரித்தால் கடும் சட்டம் - கோடி மிதித்தால் தண்டனை. தேசிய கீதம் அவமானப் படுத்தினால் சிறை. தேசிய பணம் --- என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்தப் பணத்தை வைத்தே இது தவறில்லை என்று சொல்ல வைக்கலாம் - யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம்...

அது சரி - நமக்கெல்லாம் இந்தப் பணம் மலர்களை விட மலிவாகக் கிடைப்பதில்லையே அது ஏன்?

இப்போது புதியதாய், ஒரு அரசியல் கட்சி - யோகா குரு பாபா ராம்தேவ் "ஸ்வபிமான் அபியான்" - ன்னு ஒரு கட்சி தொடங்கியிருக்காராம்.
அட சாமிங்களா எங்கே இருந்துதான் பணம் வருதோ.

அரசியல்வாதிகளுக்கு அச்சடித்த பணம் கசங்காமல் கிடைக்கிறது. இப்போது யோகா குருக்களுக்கு வேறு நிறையக் கிடைக்கிறது. பார்லிமெண்டில் சாக்குப்பையில் பணம் கத்தை கத்தையாய் வருகிறது.
கிரிக்கெட்டில் பணம் புரளுகின்றது.
I. P. L. கிரிக்கெட். இதனால் அரசுக்கு 200 கோடி வருமானமாம். - வருமான வரித்துறை மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. ஷாருக்கானுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்க்க 32,000 ரூபாயாம். என்னப்பா இது? எத்தனை கோடிகள்தான் புரளும்? உலகம் முழுக்க recession என்று சொல்கிறார்கள் - இந்தியா மட்டும் விதி விலக்கா.


அணு உலையினால் ஆபத்து ஏற்பட்டால் வெறும் 300 கோடி கொடுத்தால் போதும் என்று கூப்பாடு போட்டு, சட்டம் இயற்றப் போகிறார்களாம். அதுக்கு மேற்பட்டு வேணும்னா நீதி மன்றத்தில் வழக்கு போட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று விதண்ட வாதம் வேறு. நம்ம நாட்டில தான் நிலுவையில் இருக்கிற வழக்குகள் முடியவே 300 ஆண்டுகள் ஆகுமே?
[http://unmayapoyya.blogspot.com/2010/03/blog-post_07.html]

இதற்குத்தான் நமது பிரதமருக்கு "World statesman award" ஆ?

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை - அதனருகில் ஓலைக் குடிசை -
மூத்த தலைவர்கள் வாழ்க.

16.3.10

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் வள்ளலார், நேற்று அமமாவட்டத்திற்கான புதிய இணையதளம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

நல்ல முயற்சி.

மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அம்மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள், திட்டங்கள், தேவையான படிவங்கள் என்று பயணுள்ள விதத்தில் உள்ளது.

எல்லோருக்கும் இணைய இணைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்.


இணைய முகவரி:
http://www.dindigul.tn.nic.in/

உகாதி வாழ்த்துக்கள்

இன்றைக்கு உகாதி.

தமிழக பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.
ஒரு மாநிலத்தில் பிற மொழியைச் சார்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் போது அவர்களை அங்கீகரிப்பது நல்லதுதான்.

தமிழக முதல்வர் - தமிழகம் வந்தாரை வரவேற்று வாழ வைக்கும் நல்ல நாடு என்றும், "யாடும் ஊரே யாவரும் கேளீர்" என்பது புறநானூற்றில் மட்டுமல்ல, தமிழக மக்களிடமும் உள்ளது என்று மிக அற்புதமாகப் பேசியிருக்கிறார்.

அது மட்டுமல்ல பிற மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு இதுவரை எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை என்ற உண்மையையும் மிக நன்றாக எடுத்து இயம்பியிருக்கிறார். மேலும் வழக்கம் போல, "அ. தி.மு. க. காலத்தில் உகாதி விடுமுறைக்காக மறுக்கப்பட்ட விடுமுறையை மீண்டும் தி.மு.க. அரசு 2006 - லிருந்து மீண்டும் வழங்கியிருக்கிறது என்ற உண்மையையும் நமக்கு நினைவு படுத்தியிருக்கிறார்.

ஆந்திர மக்களுக்கும், தமிழகத்தில் வாழும் தெலுங்கு மொழி பேசும் நமது உடன் பிறவா சகோதர சகோதரிகளுக்கும் நமது வாழ்த்துக்கள்.

இப்போ நமக்கு சில கேள்விகள் எழுகின்றன.

தமிழகம் எப்போதும் எல்லோரையும் வாழ வைக்கிறது - ஆனால் தமிழன் மட்டும் எங்கு போனாலும் பிற மாநில மக்களாலோ அல்லது அரசுகளாலோ இங்கு அவர்கள் இருப்பது போல இருக்க முடியவில்லையே - அது ஏன்?

இவ்வளவு வசதிகள், மரியாதை, இவற்றிற்கு பிறகும், இங்கு வாழும் பிற மொழியைச் சார்ந்த நண்பர்கள், தமிழக மக்கள் மீதும், தமிழகத்தின் மீதும்
பிடிப்போடு இருப்பதில்லையே அது ஏன்?

தமிழக பள்ளிகளில் தெலுங்கு, கன்னடம் பயில விரும்புவர்களுக்கு, முறையான வசிடியை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறதே அதேபோல பிற மாநிலங்களில் தனி வல்லுநர் குழு அமைத்து தமிழ் கற்றுக்கொடுக்கப்படுகிறதா என்பதில் யார் அக்கறை காட்டுவது.

ஒரு மொழி மறைந்து போனால் அந்த இனம் அழிந்து போகும் என்பது உண்மையானால், பிற மொழி அழியாமல் நாம் காப்பாற்றுவது போல பிறரும் அந்த எண்ணத்தோடு வாழ நாம்தானே தூண்ட வேண்டும்.

அதுசரி - பிற மொழி பாடத்திட்டத்திற்காக வல்லுநர் குழு அமைத்தது இருக்கட்டும், தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவோர் நல்ல தமிழில் பேசாவிட்டாலும் பரவாயில்லை - தமிழில் பேச வேண்டும் என்ற சட்டம் இயற்றட்டும்.

14.3.10

பெரியார் தாசனின் மத மாற்றம்

பெரியார் தாசன்.
நான் நேசிக்கும் பல மனிதர்களில் இவரும் ஒருவர்.
காரணங்கள் பல.
அது இங்கே தேவையற்றது.

இப்போது அவர் மீண்டும் வேறொரு மதம் தழுவியதாக செய்திகள்.
ரியாத் சென்று இஸ்லாமிய மதத்தை தழுவியதாக செய்தி.

செய்தி கீழே : அராப் செய்தியிலிருந்து.

இங்கே சொடுக்கவும் : Arab நியூஸ்

RIYADH: A well-known Indian psychotherapist embraced Islam on Thursday.

Dr. Periyadarshan, who has changed his name to Abdullah, told Arab News Friday

that Islam is the only religion in the world that follows a book directly revealed from God.

He said that as a student of comparative religions he believes books of other faiths

have not been directly revealed to mankind from God.

He said the Holy Qur’an is still in the same format and style as it was revealed to the Prophet Muhammed (pbuh) from Almighty Allah.

Dr. Abdullah is a visiting professor at the University of California in Los Angeles.

He also acted in the famous Tamil film “Karuthamma” about the killing of newborn baby girls in some remote villages in India.

The production received national award from the Indian government.

“I was well known in India for my atheist theology and later I became to realize

that religion is the only way out for human beings both in this world as well as in the hereafter,” he said.

Dr. Abdullah will be performing Umrah on Saturday on his first visit to the holy cities of Makkah and Madinah.


ஒன்றிலிருந்து இல்லைஎன்று சொல்லி,
பெரியார் தாசனாகி -
[பெரியார் தாசனாக அவர் ஆற்றிய உரைகளையும்,
அது கொண்டுவந்த விழிப்புனர்வையும் நாம் எப்போதுமே கடமைப் பட்டவர்கள்.]
புத்த மதத்தின் பக்கம் சாய்ந்து,
மனோததுவத்தின் பால் சென்று -
இப்போது இஸ்லாமிய மதத்தின் பக்கம்.
[வழக்கம் போல ஆராய்ந்து பார்த்ததிலே என்றுதான் அவர் சொல்கிறார்.]

நம்பிக்கை என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
ஆராய்ச்சிக்கெல்லாம் அங்கே இடமில்லை.
மனித வாழ்க்கையில் மகிழ்ச்சிதான் முக்கியம்.
மறு உலக வாழ்க்கைக்கான அந்த நம்பிக்கையும் முக்கியம் தான்.

அதில் எது உண்மையான மதம்? எது உயர்ந்த மதம் என்பதல்லாம் தேவையல்லாத விவாதங்கள்.
கடை விரித்தேன், கொள்வாரில்லை; கட்டிக்கொண்டேன் என்பதுதான் சரி என்று படுகிறது.

எனவே இஸ்லாம் மதத்திற்கு தன்னை இணைத்துக் கொண்ட
Dr . அப்துல்லாஹ் அவர்களை வாழ்த்துகிறோம்.

தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்தின் மேல் எதிர்மறையான விமர்சனைங்கள்
தொடர்ச்சியாக மீடியாவும் உலக நாடுகளும் கட்டமைத்துக் கொண்டிருக்கிற வேளையில்,
இஸ்லாமியர்கள் தொடர்ந்து வில்லன்களாகவே பார்க்கப் படும் சூழலில் இவர் எடுத்திருக்கிற முடிவை
நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

நம் எதிர்பார்ப்பதெல்லாம், பெரியார் தாசனாக அவர் சுட்டிக் காட்டிய உண்மைகளையும்,
சமுதாயத்தின் மேல் அவருக்கு இருக்கிற அக்கறையையும் தொடர்ந்து வெளிக்காட்ட வேண்டும் என்பதுதான்.
அதற்கு அவர் ஏற்றுக்கொண்டிருக்கிற மதம் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

13.3.10

புதிய கட்டிடம் - வளாகம்

தமிழக சட்டப் பேரவைக்கென்று தனியாக ஒரு வளாகம்...

மெத்த மகிழ்ச்சி.

இந்தியத் தலைவர்கள் பலர் வருகிறார்கள்.

450 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இக் கட்டிடத்தில் உள்ள dome - க்கு மட்டும் 25 கோடி என்று சொல்லப்படுகிறது.
ஆனால் திறப்பு விழாவிற்கு வரும் அனைவரும் பார்க்க இருப்பது 2 கோடி ருபாய் செலவில் தோட்டா தரனியால் உருவாக்கப்பட்டுள்ள போலி dome.

போலிக் கூடாரத்தின் கீழ் அரசியல் தலைவர்கள்.

உண்மையா பொய்யா?

12.3.10

ஐ.பி.எல். வந்தாச்சு - மத்ததெல்லாம் மறந்தாச்சு

நம்ம நாட்டுல எல்லாமே வரும் - போகும்.

எந்த ஒரு பிரச்சனையையும் நாம் முழுமையாக எதிர் கொள்வதாக எனக்குப் படவில்லை.

எல்லாம் சீசனல்தான்.
விலைவாசிப் பிரச்சனையைப் பற்றி எல்லாப் பத்திரிகைகளும் எழுதித் தீர்க்கும். (நாமளும்தான் - நாங்க எழுதுவோம் - நீங்க படிப்பீங்க) ஆனால் பிரச்சனை முடியாது. அதற்குள் அடுத்த பிரச்னை.

அணு ஒப்பந்தம் பற்றி எழுதுவோம். அடுத்தவாரம் அந்தப் பிரச்சனையை ஆறப்போட்டுவிடுவோம்.

யோகிகள் பற்றி எழுதுவோம். அதன் தொடர்ச்சி என்ன என்பதை நாம் சிந்திக்கக் கூட மாட்டோம்.

மகளிர் மசோதாவிற்குப் பின் உள்ள அரசியல் பற்றி எழுதுவோம். அப்புறம் அடுத்த மசோதாவிற்குத் தாவிவிடுவோம்.

நாம சீசனல் (seasonal) மட்டுமில்லை. sensational - லும்தான். -

சினிமா, விளையாட்டு என்று வந்தால் மற்றது எல்லாமே மறந்து போகும்.

இப்ப ஐ.பி.எல். வந்தாச்சு. வழக்கம் போல மற்றதெல்லாம் மறந்து யார் யார் சிக்ஸர் அடிச்சா - என்று கொஞ்ச நாள் நாமும் ஆடுவோம்.

பொழுது போகனுமா இல்லையா?

10.3.10

இந்தியா எதிர் நோக்கும் பேராபத்து - அழிவு


புதுடெல்லி : நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் 3ல் 2 பங்குக்கும் மேலான உறுப்பினர்களின் ஆதரவுடன் நேற்று நிறைவேறியது. 14 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் மாநிலங்களவை வரலாற்று சாதனை படைத்துள்ளது.



இதுக்கு பின்னாடி உள்ள அரசியல் பற்றி தினமணி ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது. படியுங்கள்.

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.
உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?

இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.

இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?
நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.

இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?



http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=208545&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

இது இப்படியே போனால் நமது நாட்டையும் மக்களையும் அழிக்க வெளியிலிருந்து யாரும் வர வேண்டாம். நம் (?) தலைவர்களே போதும்.


நமது இராணுவத்திற்கு வேலையே இல்லை...



8.3.10

மார்ச் 8 உலக மகளிர் தினம்

இந்தியத்தாய் என்கிறோம்.
தமிழ்த் தாய் பெற்றெடுத்த குழந்தை என்கிறோம்.
என் தாய் நாட்டை இழிவு படுத்துபவனை எனைப் பெற்ற தாய் தடுத்தாலும் விட மாட்டேன் என்கிறோம்.

ஆனால் இங்கேதான் பெண்களுக் கெதிரான வன்முறைகள் நிறைய நடக்கின்றன.
33 % இட ஒதுக்கீடு கூட இன்னும் சாத்தியப் படவில்லை.

பாராளுமன்றத்தில் ராஜ்ய சபா தலைவரின் மைக் பிடுங்கப்பட்டிருக்கின்றது - அதற்கு மேலும் நடந்திருக்கலாம். 33 % - த்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் இது நிகழ்ந்திருக்கின்றது.
அவர் சொல்கிறார் -

"I think this is how protest is done in a democracy. We were opposed to the Bill so we tore it; we raised slogans. I can tell you this much we will cross all limits of protest over this issue,"
said Sabir Ali, the MP who attacked the Rajya Sabha Chairman.


இன்னும் ஒரு முறை அனைத்துக் கட்சி கூட்டமாம்.


அகில உலக மகளிர் தினத்தன்று மேகாலயா துணை முதல்வர் சில (எல்லாரையும் மனதில் நினைத்து ) பெண்களை விரியன் பாம்புகள் என்று சொல்லியிருக்கிறார். அதில் தவறு ஒன்றும் இல்லை என்று மீண்டும் சப்பைக் கட்டு கட்டியிருக்கிறார். இத்தனைக்கும் மேகாலாயாவில் வம்சாவழியை தாய் வழியாகத்தான் அறிந்து கொள்கிறார்களாம்.

ஜார்கந்த் மாநிலத்தில் இன்று 40 வயதுள்ள ஒரு பெண்ணை 3 - 4 பெண்கள் சேர்ந்து அடித்துக் கொன்றதாக தகவல்.

http://www.ndtv.com/news/india/jharkhand-shocker-woman-beaten-to-death-by-villagers-17402.php?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+ndtv%2FLsgd+%28NDTV+News+-+India%29

இப்படி இருந்தால்"பெண்கள் தினம்" - தினம் தினம் கொண்டாட வேண்டும் போலிருக்கிறதே.

வாழ்க பாரதத் தாய். வாழ்க நம் நாட்டு அரசியல் வாதிகள்.

அடுத்து எங்கே - எப்போது?

நில அதிர்வுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
அடுத்து எங்கே என்ன நடக்கும் என்கிற பயம் கலந்த எதிர்பார்ப்பு எல்லா மக்களையும் வந்தடையும் நாள் வெகு தொலைவில் இல்லை.


ஹைட்டி - யில் ஜனவரி மாதம் 12- ஆம் தேதி மிகக்கடுமையான நில அதிர்வு (நில நடுக்கம்) தாக்கியது. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முற்பட்டனர்.

பிப்ரவரி மாதம் 7- ஆம் தேதி ஜப்பானில் நில நடுக்கம்.

பிப்ரவரி மாதம் 27 - ஆம் தேதி சில்லி - யில் நில அதிர்வு.

அதற்கு அடுத்த நாள் - இஸ்லாமாபாத்தில் ....

இன்று காலை துருக்கி..


நாளை...




ஒரு இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உலக மக்கள் முயல்கிற போது - அடுத்த இடத்திலிருந்து அதிர்ச்சி தகவல்கள்.
சரி - இப்படி எத்தனை நாளைக்குத்தான் எல்லாம் நடந்த பிறகு வருத்தப் படுவது.

ஏன் இப்படி நடக்கிறது என்பதை நாம் என்றைக்கு சிந்திப்போம் -

நடந்த பின் யோசிப்பதைக் காட்டிலும் வருமுன் சிந்திப்பது நல்லது தானே.


நிறைய நடக்கின்றன.
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.




என்ன கொடுமை சார்?

என்ன கொடுமை சார்?


* மக்கள் ஏன் சில சமயம் ஆவேசப்பட்டு குற்றம் செய்தவர்களை உதைக்கமுடியாட்டியும் அவங்க படத்தையும், இருந்த இடத்தையும் ஏன் உடைக்கிறாங்கன்னு இப்பதான் புரியுது.

* இது நம்மல நம்ப வச்சு கழுத்த அறுத்துட்டானே என்கிற கோபம் பெரிதாக இருப்பதைக்காட்டிலும், இனிமேல் மற்றவர்கள் ஏமாறக் கூடாது என்கிற நல்ல என்னத்தைக் காட்டிலும், நாம் ஏமாந்து போய்ட்டோமே என்கிற ஆதங்கத்தில்தான் மக்கள் இப்படி செயல் படுகிறார்களோ? உண்மையா?

* இல்லாட்டி இப்படி இருக்குமோ - ஒரு வேளை, நீதித்துறை எப்ப தீர்ப்பு குடுத்து - அப்படின்னும் யோசிக்கிறாங்களோ என்னவோ யாரு கண்டா? ஏன்னா -
எனக்கு என்னமோ அப்படிதான் தோனுது.

இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க இன்னும் 300 ஆண்டுகளுக்கு மேலாகும் என்று ஒரு நீதிபதி கூறியுள்ளார். இந்த நிலைமை இருந்தா என்ன நடக்கும். யாருக்கு நீதி கிடைக்கும்?

(நம்ம செத்த பிறகு நம்ம ஆவிக்காவது நீதி கிடைச்சா சரிதான்.)

என்ன கொடுமை சார்?


இதுக்கு இடையில நித்தியானந்தம் உண்மைகளை சேகரிக்கிறிராம். நம்ம நீதிபதியின் செய்தியை அவரும் படிச்சிருப்பாரோ என்னவோ.

நித்தியானந்தா ஒரு வீடியோவில் பின்வரும் செய்தியை கூறியிருப்பதாக ஒரு நாளிதழ் சொல்கிறது.
We are in the process of collecting evidence on the persons behind the false video footage. Very soon the truth will be unearthed and I will come before the media with necessary evidence,” he said in his 4-minute video statement.


http://www.thehindu.com/2010/03/08/stories/2010030863841200.htm


இதுக்கு நடுவுல இவுங்க வேற:

சென்னை இந்து எழுச்சியை ஏற்படுத்திய இளம்ஞானி நித்யானந்தாவை பாதுகாக்க வேண்டும் என்று பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியின் தமிழகப் பிரிவு கூறியுள்ளது.



என்ன கொடுமை சார்?

7.3.10

பாராட்டு

தமிழக அரசியலில் நல்ல மாற்றம் வருவதைத் தாராள உள்ளத்தோடு பாராட்டுவோம்.

ஸ்டாலின் ஜெயாவுக்கு அழைப்பிதல் அனுப்பியதையும் அதற்கு ஜெயா அம்மையார் பதில் அனுப்பிருப்பதை வாசிக்கும் போது - நமது நாட்டு அரசியல்வாதிகள் மாறிக்கொண்டு வரும் சூழல் நல்லதாகவே தோன்றுகிறது.

இதில் அரசியல் இல்லைஎன்றால் நல்லது.

நான் வாசித்த செய்தி


ஜெ. அனுப்பிய பதிலுக்கு நன்றி...

இங்கு வந்திருக்கிற தலைவர்கள் அனைவரும் விழாவுக்கு வருவதாக சம்மதம் தெரிவித்து பதில் அனுப்பியவுடன் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவுக்கும் கடிதம் எழுதினேன். அதற்கு அவரிடம் இருந்து பதில் கடிதம் வந்திருக்கிறது. கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. சில அலுவல் காரணமாக நான் பங்கேற்க இயலாது என அவர் பதில் அனுப்பி இருந்தார்.

அவருக்கும் விழாவில் பங்கேற்க அத்தனை பேருக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

1970ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டு வரை 36 ஆண்டுகளில் தமிழகத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 77,627.

ஐந்தாம் முறையாக கருணாநிதி முதல்வராகப் பொறுப்பு ஏற்ற பின் 2006ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை 82,000 வீடுகள் கட்டப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டு இதுவரை இந்த 4 ஆண்டுகளில் 42,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 40,000 வீடுகளும் விரைவில் கட்டப்பட்டு திறப்பு விழா காணப்பட இருக்கிறது.

ஆதிதிராவிட மக்களுக்காக 1973ம் ஆண்டில் இந்திரா தொகுப்பு வீடு திட்டத்தை தொடங்கியதும் திமுகஅரசு தான். அந்த திட்டத்தின் தொடக்க விழா செங்கல்பட்டு அருகே காட்டுப்பாக்கம் என்ற இடத்தில் நடந்தபோது அதில் கலந்து கொண்டு பேசிய பாபு ஜெகஜீவன் ராம், மக்கள் நல அரசு என்ற வார்த்தைக்கு உண்மையான விசுவாசத்துடன் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு பணியாற்றி வருவதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பாராட்டினார்.

பல திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிற ஊரக வளர்ச்சி துறைக்கு இப்போது இந்த கலைஞர் வீட்டு திட்டத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதை எனது வாழ்வில் கிடைக்கப் பெறாத பெரும் பேறாக கருதுகிறேன் என்றார் ஸ்டாலின்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், ஏழை மக்களின் கனவுத் திட்டமான இந்த திட்டத்தை வழங்கியதற்காக பாமக சார்பில் நான் நன்றியை தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்.

மேலும் விபரத்திற்கு -


http://thatstamil.oneindia.in/news

6.3.10

நித்யானந்தம் - மீண்டும்

பின்வரும் இணைப்புகள் உங்களுக்குப் பிடிக்கலாம்.

http://idlyvadai.blogspot.com/2010/03/blog-post_3022.html

http://idlyvadai.blogspot.com/2010/03/4-3-2010.html

பத்திரிக்கை சுதந்திரம்

பல நாட்களாகியும் இந்தப் பிரச்சனை முடிந்த பாடில்லை.

சன் (தொ. கா.) மற்றும் நமது முதல்வர் - இன்னும் ஒரு விவாதத்தை தொடங்கி வைத்திருக்கின்றார்கள்.

பத்திரிக்கை சுதந்திரம் காக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.

தமிழக முதல்வர் - இது போன்ற (நித்தியானந்தம் படுக்கைக்) காட்சிகள் முதலில் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் - அதன் பிறகே இதை ஒளிபரப்ப வேண்டும் என்று சொல்கிறார் -
(அவர் கைது செய்யப்பட்ட போது இதைச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்). - அப்படிச் செய்தால் என்ன ஆகும்?


அப்படிச்செய்தால் இப்போது தொலைகாட்சி வியாபாரம் செய்வதை அரசே ஏற்று நடத்தும். செய்தி வெளிவராது - ஆனால் அதற்காக சம்பந்தப் பட்டவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகமாக இருக்கும்.
எத்தனை மிரட்டல்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் - எவ்வளவு பணம் கை மாற வேண்டும் - அவர்களின் காவலனாக அல்லது இறுதி வரை அவர்கள் எல்லாருக்குமே கைப்பாவையாக - ஆட்டுவிக்கிற விதத்தில் எல்லாம் ஆடுகிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள். அதற்கு இப்படி செய்தி வெளிவந்தால் பரவாயில்லை.
உண்மை வெளிவர வேண்டும் என்பதுதான் நமது முதல் அக்கறை. முதல்வர் சொல்வதுபோல செய்தால் பத்திரிக்கைகள் எல்லாம் மீண்டும் அரசின் காலடியில் கிடக்க வேண்டியதுதான்.

நாளைக்கு அரசைப்பற்றிய ஒரு சி.டி வந்தால் - அதையும் அரசிற்கு சமர்ப்பிக்க வேண்டுமா?

ஏற்கனவே தென் இந்தியாவின் (குறிப்பாக )தமிழகத்தின் பல்வேறு பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், வானொலிகள் என்று எல்லாத் தளங்களிலும் தனது அக்டோபஸ் கரங்களை விரித்து நிற்கும் ஒரு குடும்பத்தினரின் பார்வைகள் மட்டுமே உண்மையாக வெளி வருவதைத்தான் நாம் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். இப்போது திரைப்படங்கள் வெளியிடவும் தொடங்கியாற்று.

ஒருவேளை தமிழன் இப்படி வளர்ந்திருக்கிறானே என்று வேண்டுமானல் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வளரும் தொழில் அதிபர்கள் இது போன்ற செயல்களை எல்லாம் செய்துதான் ஆக வேண்டும் என்றும் நல விரும்பிகள் நினைக்கலாம். நமக்கென்ன -


யாரும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் அல்ல. அப்படி என்றால் நாம் கூட இப்படி எல்லாம் எழுதிக்கொண்டு இருக்க முடியாது. பத்திரிக்கையும் தொலைக்காட்சியும் ஒரு நாட்டின் முதுகெலும்பு என்று நாம் நம்புகிறோம்.
அடக்குமுறைக்கும், அதிகாரத்திற்கும் எதிராக - பணத்தையோ, பலத்தையோ பயன் படுத்தி உண்மையை மறைக்க நினைக்கும் அனவைருக்கும் எதிராக- உண்மையை வெளிக்கொணரும் கருவி - ஆயுதம் - வாள் --- எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

சன் தொ.கா. என்பது நமது எதிரியல்ல.
நாம் யாரை எதிரியாக நினைக்க வேண்டும்?
பத்திரிக்கை சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இதனை எழுதுகிறோம்.

இந்த வீடியோ வேறு யாரிடமாவது முதலில் போயிருந்தால் அவர்களும் இதைதான் செய்திருப்பார்கள் என்பதும் உண்மைதான். அதைத்தான் தவறு என்று சொல்கிறோம்.

ஒரு பொது நபருக்கு என்ற அறம் இருக்கிறது . அதிலிருந்து அவர் தவறும் போது அதை சுட்டிக் காட்டுகிறோம் என்பதில் உள்ள அக்கறை - அதே சமயத்தில்
பத்திரிக்கைகளுக்கும் அறம் இருக்கிறது என்பதை உணர வேண்டும் என்பதும் உண்மைதானே. ஒரு பத்திரிக்க வெளிவருகிறது என்றால் அதுவும் ஒரு பொது நபர் போலத்தானே. அப்படியெனில், அது வழி மாறும் போது அதன் தவறை யார் சுட்டிக்காட்டுவது. அது அறம் தவுறும் போது யார் வெளிக்கொணர்வது?

பத்திரிக்கை என்பது அறத்திற்கு அப்பாற்பட்டது என்று சொன்னால் - அது வெறும் வியாபாரம் என்று மட்டும் சொல்லுங்கள். வெறும் வியாபாரம் செய்கிறவர்களுக்கு மக்கள் மேல் என்ன அக்கறை. மக்கள் மேல் உள்ள அக்கறையினால் தான் இப்படிச் செய்கிறோம் என்றால் நமக்கென்று ஒரு அறம் இருக்கிறது. என்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

ஒரு சில பத்திரிக்கைகள் தவறு செய்வதால் அனைவரும் தவறுகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. இதைப் பார்த்து எல்லோரும் இப்படிச் செய்துவிடலாம் என்று வழி மாறக் கூடாதே என்ற உணர்வே இது.


எப்படி அரசாங்கம் தனது அதிகாரத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலை மாற வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ (பத்திரிக்கைகளின் உண்மையான பலத்தால் அரசின் தவற்றை சுட்ட வேண்டும், அது முடியும் )அதைப் போலவே பலம் வாய்ந்த பத்திரிக்கை நினைத்தால் எதையும் செய்துவிட முடியும் என்கிற நிலையும் மாற வேண்டும்.

அசுத்தப்படுத்துவது யாரு?

தமிழகத்தில் மக்கள் சிரிப்பதற்கு இருக்கிற ஒரே நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி மட்டுமே. யார் எதை மறந்தாலும் சனிக்கிழமை இரவு 10.00 மணியை யாரும் மறப்பதில்லை என்று (அவர்களே)எல்லாரும் சொல்கிறார்கள்.

யார் மனதையும் புண்படுத்தாத ஒரே நிகழ்ச்சி இதுதான் என்றும் சொல்கிறார்கள். எனக்கென்னமோ அப்படி எல்லாம் ஏதும் தோன்றவில்லை.

பெரியவர்கள் நன்றாகத்தான் சிரிக்கவைக்கிறார்கள்.

ஆனால், இரட்டை அர்த்த வசனங்கள். பிஞ்சில் பழுத்த பழங்கள். 10 அல்லது 15 வயது கூட இருக்காது. ஆனால், அவன் மனைவியை இவன் இழுத்துக்கொண்டு போனான், இவன் மனைவியை அவன் இழுத்துக்கொண்டு போனான் என்கிற விதத்தில் சிறுவர்கள் பேசுவதைப் பார்க்கும் போது - இந்த நாட்டில் யாருமே சரியில்லையா. எல்லாரும் இப்படிதான் இருக்கிறார்களா என்கிற கேள்வி மனதில் உதிக்க வில்லையா?

எல்லாரும் இப்படிதான் ஒழுக்கம் கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்றால்
நித்தியானந்தம் மேல்மட்டும் என்ன அக்கறை.

முதலில் 10 வயது சிறுவர்கள் ஓடிப்போவதைப்பற்றி பேசுவதை நிறுத்தட்டும். நான் வச்சிக்கலாம்னு வந்தேன் இப்படி ஓடுனா என்ன அர்த்தம் என்று சிட்டி பாபு பேசுவதையும், அதைத்தொடர்ந்து அனைவரும் கை தட்டுவதையும் நிறுத்தட்டும்.


நல்ல செய்தியை சொல்கிறேன் என்று அதற்கு முன்பு நாத்தம் புடிச்ச செய்தியா சொல்வதை நிறுத்தட்டும்.

நாம் அசிங்கப்படுத்தினால் அது அசத்தல் - மற்றவன் செய்தால் அசிங்கம்.

நித்யானந்தம் - உண்மை முகம்

நித்யானந்தம் பற்றி பல செய்திகள் ஏற்கனவே வெளிவந்திருக்கின்றன.
செய்திகள் அறிய இப்பக்கம் உதவலாம்.






பல கேள்விகள் - புரியாமலே !

ஊடகங்கள் எதையும் செய்ய முடியும் என்பதற்கு நடந்து முடிந்த நிகழ்வுகள் சாட்சிகளாக இருக்கின்றன.

கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதாக நினைத்துக்கொண்டு ஒரு மனிதனின் படுக்கையறைக்குள் படம் பிடித்திருக்கிறார்கள். இது சரியென்று ஒரு புறம் ஒரு சாராரும், இல்லை இது தவறு என்று மறுபுறமும், எதிர் எதிர் அணிகளாக ...

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த நித்யா பல கேள்விகளை விவாதப் பொருளாய் மீண்டும் நமது மத்தியில் உலவ விட்டதுதான்.

1. பக்தியை வியாபாரப் பொருளாய் ஆக்குவது சரியா தவறா?

2. ஒருவன் கடவுளின் பெயரால் எதைச் சொன்னாலும் நம்பலாமா? நான்தான் இதைச் சொல்கிறேன்னா உனக்கு எங்க போச்சுன்னு கேட்குறாரு.
கேக்கிறவன் கேனப்பயல்னா கேப்பையில நெய் வடியும்னு சொல்வாங்களாம்.. நான் நெய் வடியுதுன்னு சொல்றேன் - நீ கேட்ட கேளு இல்லாட்டி போ - யாரு மேல தப்பு?

3. இது போல பச்சோந்திகளின் சுயநலத்தினால கடவுள் மேல கோவிச்சுக்க முடியுமா? அப்படின்னா கடவுளைப் பத்தி சொல்றவன் எப்படி இருக்கணும்?

4. தனிப் பட்ட வாழ்வுக்கும் பொது வாழ்வுக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா?
* அப்படி இருந்தால் அது சாமியார்களுக்கு மட்டும்தானா அல்லது பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் எல்லாருக்குமா? - யார் யாரெல்லாம் பொது வாழ்க்கைக்கு உட்படுவார்கள்? அரசியல்வாதிகளும், சினிமாக் காரர்களும், மட்டும்தானா? பத்திரிக்கையாளர்கள் அதில் அடங்க மாட்டார்களா?
* அப்புறம் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், காவலர்கள், சின்னத்திரையில் இருப்பவர்கள், புத்தகம் எழுதுபவர்கள், தர்மம் எதிர்பார்ப்பவர்கள் (நாம் நல்லவர்களாக இருப்பதற்காக அவர்கள் நாள் முழுவதும் வெளியில், வெயிலில் இருப்பதும் பொது வாழ்க்கைதானே). அப்புறம் நீங்கள் நான் ....

அது சரி ...


4. கடவுளின் பெயரால் எதைச்சொன்னாலும் மக்கள் கேட்கிறார்களே அது ஏன்? உண்மை அதில் இருப்பதாலா அல்லது கேட்க சுகமாக இருக்கிறது என்பதற்காகவா?

5. நல்ல செய்தியை யார் சொன்னால் என்ன - யார் சொன்னார் என்பதைக் காட்டிலும் என்ன சொன்னார்கள் என்பதுதானே முக்கியம். நித்தியானந்தம் சொன்னாலும் சொல்வார். - அதுக்காக அனுராதாவும் நக்மாவும் ஆன்மிகம் பேசலாமா?

6. எனவே, என்ன சொல்லப்படுகிறது என்பதைக்காட்டிலும் யார் சொன்னார்கள் என்பது முக்கியம்தானே. அதன் உள் நோக்கம் தெரிய வேண்டியது அவசியம்தானே. அப்படின்னா கருத்து முக்கியமா - சொல்ற ஆளு முக்கியமா?

7. இதுனால சந்தோஷமா இருக்காது யாருன்னா நம்ம ப்ரைம் மினிஸ்டர் மன்மோகன் சிங் தானாம்.
என்னன்னா -
விலைவாசிப் பிரச்சனையை எல்லாரும் மறந்துட்டோம்.


இது போல இன்னும் நிறைய கேள்விகள் வந்திருக்கின்றன... உங்க கேள்விகளையும் கோர்த்து விடுங்க...

5.3.10

Media and Nithyanada Scandal

The role of the media in the ‘exhibition’ of Nithyanatha’s scandal is very crucial.

It is the duty and the indispensable role of the media to bring to light what the truth is. And particularly with a public figure who has been followed for his words and teachings. This helps the mass to inform that they believe in a wrong person; that they uphold a wrong figure as a guru; that they have to really be awakened to see the enlightened guru.

However, in bringing the truth to the light, the media has to expose the news objectively and modestly. In the case of Nithyantha it has neither been objective nor modest. It has not been objective – sun news has hidden the face of the actress and says that the actress names begins with R.

In what way the actress is more important than the other person. What made sun t.v. to hide the face of the lady?

May be because … she is acting in a serial with Kalaignar TV.

Or may be … the whole news is given so much importance to bring down the audience to the kalaignar TV.

Or may be there has been a fight between Nithyanatha and sun TV. (May be he was asked to write in Kungumam and not to write in kumudam and Nithyantha refused – sun TV aadhayam illamal ethuvum pannathu.

Or they give these kinds of sensational videos to show that they can also be overt like Kalaigar t.v.’s Manada Mayilada ---

Or may be to increase its TRP

Who knows the politics behind the news?

Or may be to promise the audience that there will be unexpected sensational news which only the sun TV. offers?

Who knows what?

It has not been modest – because there is a sensor board for removing the unwanted scenes from a movie to which somebody goes willingly to a cinema to watch it. But with what was shown in sun TV. nothing seems to have been censored. Whom to ask?

Added to this, they have added orgiastic (!) music – they say that the video is presented as it is – what was the need for them to insert that kind of music and still call it original – unless they have a camera which composes its own music according the scene it captures …They arouse people by music.

How many politicians are bribed, how many of them bribe, how many politicians and government employees are sleeping in the office, how many citizens are irresponsible, how many police officers themselves are perpetrating criminal activities …. (besides being sexually scandalous). I am not saying that their sex scandals have to be videoed and telecasted or not to be telecasted.

There are lots of things which a media can expose to the public – but not creating people sensational. Fortunately or unfortunately people are with senses. Could a responsible media arouse it for its own business?

What is the difference between Nithyanantha and the media? He misbehaved with one or two women. The media misbehaves with millions of people.