25.9.10

டெர்ரி ஜோன்ஸ் - நவீன யூதாஸ் [கிறித்தவத் தீவிரவாதம்]

கிறித்தவர்களின் புனித நூலான புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வாழ்க்கை வரலாறும் அதில் இயேசுவைக்  காட்டிக் கொடுத்த யூதாஸ் பற்றியும் குறிப்புகள் உள்ளன.
யூதாஸ் இயேசுவை சரியாகப் புரிந்து கொள்ளாமல் காட்டிக் கொடுத்தவன்.  கிறித்துவைப் பின்பற்றுகிற பலர் இன்றும் வெறும் யூதாசாகவே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் - டெர்ரி ஜோன்ஸ்.
உலக குர்ரான் எரிப்புத் திட்டம் - 9 / 11 என்கிற ஒரு தீவிரவாதத் திட்டத்தை டெர்ரி ஜோன்ஸ் முன்மொழிய உலகத்தின் பல மூலைகளிலும் இதற்கு எதிர்ப்பு வலுத்தது.
கிறித்துவ அடிப்படை வாதத்தின் முகம் பலருக்கு வெளியில் தெரியாமல் இருந்தது. இப்போது அது மிக நன்றாய் வெளியே தெரிய ஆரம்பித்து இருக்கிறது. அதற்குப் பிறகு அத்திட்டம் கைவிடப் பட்டதைச் சொன்னாலும் யாரோ ஒருவர் குரானை எரித்து விட பிடித்தது சூடு.

  • இது தீவிரவாதத்திற்கு எதிரானனது என்ற கதையை டெர்ரி ஜோன்ஸ் கட்டினாலும் இது இஸ்லாமியத்திற்கு எதிரான நவீன சிலுவைப் போர் என்பதையே இது காட்டுகிறது. 
  • இத்தகையே செயலே தீவிரவாதத்தின் அடித்தளம் தானே தவிர வேறொன்றுமில்லை. இதுமட்டுமில்லாமல் இததான் அடிப்படை வாதத்தின் ஆணி வேர்.
  • கிருத்துவத்தின் அடிப்படை நற்செய்தியைக் கூட புரிந்து கொள்ளாதவர் பாஸ்டர் என்றால் அவரை யூதாஸ் என்று சொல்லாமல் வேறென்ன வென்று சொல்வது.
  • இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான் "இரட்டைக் கோபுரங்களின்" தகர்ப்பிற்குகாரணம் என்று வைத்துக் கொண்டாலும் கூட - அதற்காக ஒரு மதத்தைத் தாக்குவது எந்த விதத்தில் நியாயம். ஒரு கிறித்தவன் தீவிர வாதச் செயலில் ஈடுபட்டால் ... பைபிளை எரித்தால் சரியாகிவிடுமா? 
  • ஒருவன் புகழ் பெற பல வழிகளைக் கடைப் பிடிக்கின்றனர் - சிலர் இதுபோல... ஆனால் எல்லாவற்றையும் பூதாகாரப் படுத்தி - காலை முதல் இரவு வரை காமெராவைத் தூக்கிச் சென்று அவனைப் பிரபலப் படுத்தும் அமெரிக்க ஊடகங்களும் இதற்குக் காரணம் - அவைகளுக்குத் தொழில் முக்கியம்.
  • இதனால் அறிவது என்னவென்றால்... மதம் எல்லாரையும் மதம் பிடிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. அதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்தலாம். 

5.9.10

உலகத்தின் நோக்கம் 7

நான் ஏதோ எழுத நினைத்து எங்கெங்கேயோ சுற்றித் திரிந்து விட்டேன்.

அது என் தவறே!

உலகத்திற்கு நோக்கம் இருக்கிறதா இல்லையா என்பது பெரிய விவாதங்களை உள்ளடக்கியது.

இக்கட்டுரையின்
மூலம் ஏதாவது ஒன்றை நாம் நிருபித்துவிட முடியும் என்ற எண்ணம் எனக்கு இல்லைஅதில் ஒரு முடிவுக்கும் வர இயலாது.

எந்த ஒரு நிலைப்பாடும் ஏதாவது ஒரு பார்வையிலிருந்து பல்வேறு சிக்கல்களையும், பல கேள்விகளையும் சந்திக்க நேரிடும்.


எல்லாமே interpretations என்கிற விதத்தில்
பல்வேறு சிக்கல்களையும் சந்திக்க நேரும்.
தங்களின் interpretationsபடி அவரவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் ஊன்றியிருக்கிரார்கள்.

அதை சரி என்றோ தவறு என்றோ
திட்டவட்டமாக சொல்வதற்கு நமக்கு முடியாது.

ஆனால் ஒன்றை மட்டும் நாம் சொல்ல முயற்சிக்கலாம்.

நாமாக நோக்கத்தை கண்டுபிடிக்கிறோமோ
அல்லது உண்மைலே இருக்கிறதா என்கிற விவாதம் தேவையற்றது.


நாம் இருக்கிற இந்த இயந்திரத்தனமான உலகத்தில்
நாமும் வேதிப் பொருள்களையும்,
மற்ற உயிரினங்கள் கொண்டிருக்கிற materialsஐயும் கொண்டிருந்தாலும்
ஏதோ ஒருவிதத்தில்
நாம் மேம்பட்டவர்களாகவே இருக்கிறோம்.


இதில் யாரும் மறுப்பதற்கு எதுவும் இருக்காது என்றே நம்புகிறோம்

அவர்கள் materialistsஆக இருந்தாலும் சரி அல்லது Idealists ஆக இருந்தாலும் சரிutilitarianism பேசுகிறவர்களாக இருக்கட்டும் அல்லது, பயன்பாடு நிலையைக் கடந்தவர்களாக இருக்கட்டும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், மனித நம்பிக்கையுள்ளவர்கள்யாராக இருந்தாலும் சரி

மனிதர்கள் மற்ற விலங்குகளைக் காட்டிலும் சற்றே மேலானவர்கள் என்பதை மறுக்க மாட்டார்கள்.

அந்த மேலான குணம் எது என்பதைப் பற்றிய விவாதம் மேலும் பிரிவினையைத்தான் உண்டாக்கும்.

எனவே அந்த விவாதத்தையும் தவிர்த்து விடலாம்.


ஆனால் அந்த மேலான குணம் என்பதுதாவரங்களைக் காட்டிலும், ஆடு மாடுகளைக் காட்டிலும் மேலானது என்றால்ஏதாவது ஒரு விதத்தில் நாம் பயனுள்ளவர்களாக இருப்பதே சரி என்று படுகிறது.


அதில் முதன்மையானதுமரம் பயனுள்ளதைப் போல (அதற்கு நோக்கம் என்று ஒன்று இல்லாவிட்டால் கூட), விலங்குகள், பயனுள்ளதைப் போலநாம் பயனுள்ளவர்களாக இருப்பதுதான்.


இயற்கை விதிகளின் படி நமது கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ளாத விதிகள் அல்லது
அதற்கு அப்பாற்பட்ட புதிய டெக்னாலஜி என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்.
அப்படிப்பட்ட இவ்வுலகத்தை நாம் அதன் போக்கிலேயே அழிய விடுவோம்.


அதற்கு நாம் உதவி செய்ய வேண்டியதில்லை. அதுவாய் அழிந்து போகட்டும்.


நாம் வாழ்வதற்கு உகந்ததாய் இருந்த இவ்வுலகம் இன்னும் பல தலைமுறைகளைக் காணட்டும். அதற்கு நாம் பெரிதாய் ஒன்றும் செய்யாவிட்டாலும்அதை அழிவுக்கு உட்படுத்தும் செயல்களைச் செய்யாமலே இருக்கலாம் என்பதுதான்.


பல கோடிக் கணக்கான ஆண்டுகளாய் ஏறக்குறைய சரியாய் இருந்த இந்த உலகத்தை மிக விரைவாய் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவியலாளர்களும் நமக்குச் சொல்கிறார்கள்.
Global Warming - ஐ நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மிக வேகமாய் பூமி சூடாகி வருகிறது
அதற்கு modern (நவீன )மனிதர்களாகிய நாம்தான் காரணம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நம் தந்தை கடன் வாங்கினால் அதை நாம் அடைப்பது போல, பிறர் செய்த தவறுகளுக்கும் நாமே பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.



ஊரை எல்லாம் பயன்படுத்திய ஐரோப்பிய நாடுகள் செய்த தவறுகளின் விளைவை நாமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். என்ன செய்வது? பாதிப்பு என்பது அனைவருக்கும்தான்.

மரங்கள் இருப்பது நல்லது. இயற்கை சக்தியை விரயமாக்காமல் பயன்படுத்துவதுமக்கள் பரந்து விரிந்து வாழ்வது
விளை நிலங்கள் விளைநிலங்களாகவே இருக்க விடுவது
ஒவ்வொரு கிராமத்தையும் நகரத்தையும் முன்பு இருந்தது போல self-sufficient ஆக இருக்க வைப்பது
இன்னும் இவைகளைப் போல என்ன செய்யலாம் என்பதை
அரசுகளும் நாமும் தான் தொடர்ந்து யோசிக்க வேண்டும்.

நமது சிறு செயல்களால், இன்னும் ஒரு ஆண்டாவது இந்த பூமி கூட வாழும் என்றால் அதுவே நாம் நமக்கு முன்பு மாசு படாமல் இந்த உலகை நமக்கு விட்டுச் சென்றவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்
நாம் வாழ நம்மை அனுமதிக்கும் (தெரியாமல்தான்)
இந்த உலகத்திற்கு செலுத்தும் மரியாதை.

இல்லையென்றால், நம் உலகைத் தூய்மைப் படுத்தி நமக்கு உணவைக் கொடுக்கும் மரங்களை விட நாம் கீழானவர்கள் தான்.
மண்ணை விடக் கேவலமானவர்கள்தான்.

நமக்குப் பின் மண்ணும் மரமும் இருக்கும்
நாம்தான் மாய்ந்து போவோம்.
எப்படி இருந்தாலும் மாய்ந்து போகும் நாம்
நல்லதை செய்து மாயலாமேமாயமாகலாமே!


ஏன் என்று கேட்பவர்கள் - முதல் கட்டுரையைப் படிக்கவும்.

4.9.10

உலகத்தின் நோக்கம் - 6

உலகத்திற்கு நோக்கம் உண்டா நோக்கம் இல்லையா என்கிற விவாதம் நேற்று இன்று பிறந்ததல்ல. பல நூற்றாண்டுகளாக இருக்கின்ற ஒரு விவாதம்.

நமது கேள்விகள் ஒன்றும் புதியவை அல்ல. எல்லாம் ஏற்கனவே விவாதிக்கப் பட்டவைகள்தான்.

நம் நாக்கு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் பேசும். ஏனெனில், அதை எப்படியும் பயன்படுத்த நமக்குள்ள அறிவு பலம் கொடுக்கிறது.
அதுதான் அறிவின் பலவீனமும்.

அறிவின் வழி எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாது.
ஏதாவது ஒரு இடத்தில் அறிவால் நிரப்பப் பட முடியாத வெற்றிடம் எப்போதும் இருக்கும்.

அதனை வெறும் வெற்றிடம் என்று சொல்பவர்கள் நோக்கம் இல்லை என்கிறார்கள்.
அதனை மிஸ்டரி என்று புரிந்து கொள்கிறவர்கள் ஒரு நோக்கத்தினால் ஒருவனால் படைக்கப் பட்டது என்று சொல்கிறார்கள்.

அந்த நோக்கம் இதுதான் என்று சொல்வதும்
அதை நிறைவேற்றாமல் இருப்பது பாவம் என்று சொல்கிற போதும்,
நோக்கம் கற்பிக்கிறவன் எல்லாவற்றையும் அறிந்தவனாக -
தனது ஆளுமையை அனைவர் மீதும் திணிக்கப் பார்க்கிறான்.

இது மனிதனின் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் - அறிவால் தானே தீர்மானிக்கும் நிலையில் இருக்கும் மனிதனை கட்டுப் படுத்தி சிறுவனாகவே பாவிக்கும் மனநிலை தவறு என்கிற நிலையில் - இது ஒரு கருத்தை மற்றவர் மீது திணிக்கும் மேலாதிக்கம் என்பதனாலும், நோக்கத்தையே மறுக்கும் நிலைக்கு நாம் கொணரப்படுகிறோம்.

இந்த அடிமை நிலையிலிருந்து நான் விடுபட -
நோக்கம் இல்லை என்றும் எல்லாவற்றையும் நமது அறிவால் அறிந்து கொள்ள முடியும் என்கிற எண்ணம் தோன்றுகிறது.
ஆனாலும் எல்லாவற்றையும் அறிவால் விளக்க முடிய வில்லை.

நமது உடலைப் பற்றிய புரிதலும்,
இந்த உலகில் எந்திரத் தனமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகமும்,
பரந்து விரிந்த கடலும்,
விண்ணைத் தொடும் இமய மலையும்,
அங்கிருந்து பார்க்கிறபோது அது கொடுக்கிற பயம் கலந்த வியப்பும்,
நம் உடலோடு உறவாடும் தென்றல் வருடும் சுகமும் -

மெல்லிசை கொடுக்கிற திளைப்பும்,
கவிதை கொடுக்கிற மகிழ்ச்சியும்,
நட்பு கொடுக்கிற ஆனந்தமும்,
அன்பு கொடுக்கிற திருப்தியும்
-------- ........................................................

அறிவால் புரிந்து கொள்ள முடியுமா என்பதுதான் புரியவில்லை.

இயற்கை கொடுக்கிற இன்பத்துக்காகவே நாம் சுற்றுலா செல்கிறோம்.
வெறும் கட்டிடங்களைப் பார்ப்பது மிகவும் குறைவு...
மலையகங்களுக்குச் செல்வதும்,
நீர் வீழ்சிகளுக்குச் செல்வதும்,
கடற்கரைகளுக்குச் செல்வதும்,
இயற்கையின் இன்ப வனத்தில் நாம் நம்மை மறப்பதற்காகவும் - அது கொடுக்கும் கிளர்ச்சிக்காகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம் - பார்க்கலாம் - அனுபவிக்கலாம்....
அறிவால் இதில் பயனில்லை.


எழுத்தில் திளைப்பவனுக்கும் - கவிஞனுக்கும் அறிவு தேவை என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனாலும் வெறும் அறிவு மட்டுமே ஒருவனை கவிஞனாக்கி விடும் என்பதை எந்த கவிஞனும் சொல்ல மாட்டான்.
கவிஞன் அறிவு கடந்தவன் -
அறிவால் அவ்வளவு பயனில்லை.

ஆனால் அறிவு இல்லையெனில்,
தெரிந்தவன் ஆள்பவனாகவும் தெரியாதவன் அடிமையாகவுக் இருக்க நேரிடும் என்பதை வரலாறு சொல்வதனால் அறிவின் செயல்பாட்டை அடியோடு மறுப்பதற்கும் இல்லை.
ஆனாலும் அறிவால் அனைத்தையும் அறிந்து கொள்ளவும் முடியாது -
வெற்றிடம் இல்லாமல் பேசவும் முடியாது.
மேலும்...

3.9.10

உலகத்தின் நோக்கம் 5

சரி தவறு என்றால் அது அறம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகிறது.
அறம் என்பதை நிலை நிறுத்த நோக்கம் இல்லையென்றால் அது தேவை என்று சொல்வதும் கடினம்.

ஆனாலும் நமக்காகத் தான் நாம் அதை உருவாக்கிக் கொள்கிறோம் - என்றால் அதை மிகவும் மென்மையாகவே வலியுறுத்த முடியும்.

எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அப்படியெனில் பெரும்பான்மையின் அடிப்படியிலும் சரி தவறு என்பதை நிர்ணயம் சித்துவிட முடியாது. மெயன்ஸ்ட்ரீமுக்குள் வராத மக்களின் விருப்பமும், வாழும் வழி வகைகளும் தவறு என்றும் சொல்லிவிட முடியாது.

ஏனெனில் அவர்களும் மனிதர்கள் என்ற அளவிலாவது அவர்களின் விருப்பமும் சரியாகிறது. எந்த ஒரு தனி மனிதனின் விருப்பத்தையும் தவறு என்பது அதிகார போதையிலிருந்து வருவதாகவே இருக்கும்.

பணம் தான் ஒருவனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்கிற விதத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையைத் தான் எல்லாரும் முன் வைக்க விரும்புகிறார்கள்.
அமெரிக்கா தன் நாடு தன் மக்கள், தன் வாழ்வு என்கிற விதத்தில் எல்லா நாட்டையும் இன்னும் சுரண்டிக் கொண்டிருக்கிறது.

எனில் இயற்கைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை தவறு என்று சொல்லிவிட முடியாது. கரியமில வாயு வெளியிடுவதைக் குறைப்பதற்கு அமெரிக்கா ஒரு போதும் முன்வராது. ஏனெனில் அதன் நிலைப் படி அது அவர்களின் வாழ்வின் வசதி வாய்ப்புகளைப் பாதிக்கும்.

ஏனெனில் எதற்கும் நோக்கம் இல்லாத பொழுது நாம் எதனை முன்னிறுத்தியும் பயனில்லை.
எனவே நோக்கம் இயற்கைக்கும் உண்டு என்கிற கட்டமைப்பில் இறங்க வேண்டுமோ என்பதுதான் மனதுக்குப் படுகிறது.
மேலும்... 

2.9.10

உலகத்தின் நோக்கம் 4

நமக்கு நாமே சிலவற்றைக் கற்பித்துக் கொள்வோம்.
சில சரி பல தவறு என்று அர்த்தம் கற்பித்துக் கொள்வோம்.


சிவப்பு விளக்கில் சாலையைக் கடக்கக்கூடாது.
கடந்தால் தவறு என்போம்.

அதற்கு அடுத்த நிலையில் தவறு என்பதைத் தாண்டி
அதைக் குற்றம் என்போம்.
குற்றத்தைக் கண்காணிக்க காவலர்களை நியமிப்போம்.


நமக்கு நாமே இவைகளை எல்லாம் கற்பித்துக் கொள்வதனால்
நமக்கு முன்னிரிமை தர வேண்டும்:
எனவே நமக்கு உரிமை உண்டு என்பதையும் வலியுறுத்தி,
நாம் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க நீதிமன்றங்களை ஏற்படுத்துவோம்.

உரிமையை நிலை நிறுத்தியது போலவும் ஆச்சு குற்றங்களை குறைத்தது போலவும் ஆச்சு.

பின் என்ன செய்யலாம் - எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவும்,
எல்லாரும் சமமாக மதிக்கப் படவும் வேண்டி அரசுகளை ஏற்படுத்துவோம் அல்லது அரசுகளின் வழி காவல்துறையையும் நீதிமன்றங்களையும் ஏற்படுத்துவோம்..


நாம் தனி மனிதர்கள் தான் ஆனாலும் நாம் விலங்குகளிலிருந்து மாறுபட்டு வாழ நாம் இந்த சமுதாய வாழ்க்கை முறைக்குள் ஒப்பந்தம் செய்து கொள்வோம்.

இதைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை.

நான் நன்றாக இருக்க வேண்டும்.
அதற்காக இவைகளை உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

அவ்வளவுதான் - இந்த உலகம் என்பது ஒன்றுமில்லாதது -
அதை நான் படைத்துக் கொள்கிறேன்.

சிக்கல்கள் -

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் - எது சரி தவறு என்பதை யார் நிர்ணயம் செய்வது?
எதனடிப் படையில் நிர்ணயம் செய்வது?


சரி தவறு என்பதை நமக்குள்ளேயே தேடுவோம். இயற்கை நமக்கு கொடுத்திருக்கிற வரத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்வோம்.

மகிழ்ச்சி நமது வாழ்க்கைக்குத் தேவை - எனவே அதன் அடிப்படையில் சரி தவறை நிர்ணயம் செய்வோம்.


இதிலும் சிக்கல் என்னவென்றால் -
குறிப்பிட்ட ஒன்றுதான் எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக மகிச்சியைக் கொடுக்கும் என்று சொல்லிவிட முடியாது.
எனக்கு எது இன்பம் தருமோ அது உங்களுக்கு இன்பம் தராது.
அப்ப எப்படி எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக இது சரி தவறு என்று சொல்வது?


பெரும்பான்மையான மக்களுக்கு எது இன்பம் தருமோ அதை சரி என்போம்.

மற்றதை தவறு என்போம்.


ஆனால் நாம் தனி மனித உரிமையையும் வலியுறுத்துகிறோம்.


எனவே எனக்கு ஒரு பெண்ணோடு வாழ்வது இன்பம் தரவில்லை பல பெண்களோடு வாழ வேண்டும் என்றால் அதைத் தவறு என்றோ மனித நோக்கத்திற்கு எதிரானது என்றோ சொல்லிவிட முடியாது - ஏனெனில் நோக்கத்தை நாம்தான் படைத்தோம் ஆனால் - உரிமையை நிலை நிறுத்தவும் வேண்டும்.


அல்லது தனது வாழ்க்கையை தானே முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஒருவன் முடிவு செய்தால் - அதுதான் இன்பம் என்றால் என்ன செய்வது -


ஒரு ஆண் இன்னொரு ஆணோடு வாழ்வதுதான் எனக்கு மகிழ்ச்சி என்றால் அதைத் தவறு என்றும் சொல்ல முடியாது.
எந்த நோக்கத்தை வைத்து அதைத் தவறு என்று சொல்ல முடியும்?
முடியாது.

அப்ப அதையும் சரி என்போம்.



ஒட்டு மொத்தமாக எல்லாரையும் வெடி வைத்துக் கொள்வதுதான் எனக்கு இன்பம் என்றால் - அதுவும் தவறா?

கவன ஈர்ப்புக்காகவும் எங்களது கோரிக்கைகளை சரி என்று என்றுக் கொள்ளவும் இப்படித்தான் செய்தாக வேண்டியிருக்கிறது என்றால் அதுவும் சரிதானே?


அப்ப இப்படி மாற்றி வைத்துக் கொள்வோம் -



மனித குலத்தை அழிக்கும் அனைத்தையும் தீவிரவாதம் என்றும், தவறு என்றும் சொல்லி அதை மிகப் பெரிய குற்றம் என்போம்.



மனித குலத்தை அழிப்பதா?


திருமணம் என்பது ஒரு நிறுவனம் - நாம் ஏற்படுத்தியது.
ஓரினத்திருமணம் சரி - அதுவும் நாம் ஏற்படுத்தியது -

abortin செய்வதும் சரி.
ஏனெனில் அது தனி மனித உரிமை.



மரங்களை அழிப்பதும் சரி - ஏனெனில் அதுவும் நாம் இன்பமாக வாழ செய்கிறோம்.

கரியமில வாயுவை அளவுக்கு அதிகமாக வெளிப் படுத்தி வெப்பத்தை அதிகரித்துக் கொண்டோம்.
என்றாவது இப்படித்தான் ஆகும் அதனால் அது தவறில்லை என்கிறோம்.


இது தொடர்ந்து நடந்தால் உலகமே இருக்காதே அப்புறம் எப்படி மனித குலம் இருக்கும்.


இதெல்லாம் நமக்குச் சரியெனப் படுகிறதா

மேலும்..