16.3.10

உகாதி வாழ்த்துக்கள்

இன்றைக்கு உகாதி.

தமிழக பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.
ஒரு மாநிலத்தில் பிற மொழியைச் சார்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் போது அவர்களை அங்கீகரிப்பது நல்லதுதான்.

தமிழக முதல்வர் - தமிழகம் வந்தாரை வரவேற்று வாழ வைக்கும் நல்ல நாடு என்றும், "யாடும் ஊரே யாவரும் கேளீர்" என்பது புறநானூற்றில் மட்டுமல்ல, தமிழக மக்களிடமும் உள்ளது என்று மிக அற்புதமாகப் பேசியிருக்கிறார்.

அது மட்டுமல்ல பிற மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு இதுவரை எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை என்ற உண்மையையும் மிக நன்றாக எடுத்து இயம்பியிருக்கிறார். மேலும் வழக்கம் போல, "அ. தி.மு. க. காலத்தில் உகாதி விடுமுறைக்காக மறுக்கப்பட்ட விடுமுறையை மீண்டும் தி.மு.க. அரசு 2006 - லிருந்து மீண்டும் வழங்கியிருக்கிறது என்ற உண்மையையும் நமக்கு நினைவு படுத்தியிருக்கிறார்.

ஆந்திர மக்களுக்கும், தமிழகத்தில் வாழும் தெலுங்கு மொழி பேசும் நமது உடன் பிறவா சகோதர சகோதரிகளுக்கும் நமது வாழ்த்துக்கள்.

இப்போ நமக்கு சில கேள்விகள் எழுகின்றன.

தமிழகம் எப்போதும் எல்லோரையும் வாழ வைக்கிறது - ஆனால் தமிழன் மட்டும் எங்கு போனாலும் பிற மாநில மக்களாலோ அல்லது அரசுகளாலோ இங்கு அவர்கள் இருப்பது போல இருக்க முடியவில்லையே - அது ஏன்?

இவ்வளவு வசதிகள், மரியாதை, இவற்றிற்கு பிறகும், இங்கு வாழும் பிற மொழியைச் சார்ந்த நண்பர்கள், தமிழக மக்கள் மீதும், தமிழகத்தின் மீதும்
பிடிப்போடு இருப்பதில்லையே அது ஏன்?

தமிழக பள்ளிகளில் தெலுங்கு, கன்னடம் பயில விரும்புவர்களுக்கு, முறையான வசிடியை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறதே அதேபோல பிற மாநிலங்களில் தனி வல்லுநர் குழு அமைத்து தமிழ் கற்றுக்கொடுக்கப்படுகிறதா என்பதில் யார் அக்கறை காட்டுவது.

ஒரு மொழி மறைந்து போனால் அந்த இனம் அழிந்து போகும் என்பது உண்மையானால், பிற மொழி அழியாமல் நாம் காப்பாற்றுவது போல பிறரும் அந்த எண்ணத்தோடு வாழ நாம்தானே தூண்ட வேண்டும்.

அதுசரி - பிற மொழி பாடத்திட்டத்திற்காக வல்லுநர் குழு அமைத்தது இருக்கட்டும், தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவோர் நல்ல தமிழில் பேசாவிட்டாலும் பரவாயில்லை - தமிழில் பேச வேண்டும் என்ற சட்டம் இயற்றட்டும்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்