12.2.18

அரசியல் மண்டி - 1 - உதயநிதி ரஜினி கமல்

உதயநிதி அரசியலுக்கு வருகிறாராம் 

நன்றாக நடிக்கத் தெரிந்தவர்களெல்லாம்
வயதாகி நடிக்க முடியாமல்
அரசியலுக்கு வரும்போது 

நடிக்கவே தெரியாதவன் 
அரசியலுக்கு வருவதில் 
தப்பில்லை என்று நினைத்திருக்கலாம் 


ரஜினியும் கமலும் கூட்டாம் 

ஒன்றாக சேர்ந்தே  நடிக்க முடியாதவர்கள் 
ஒன்றாக உழைப்போம் என்பதெல்லாம் 
நடக்காத காரியம் 

[சந்திரமுகி படத்தில் 
ரஜினி 
வடிவேலுவிடம் ஒரு குட்டிக் கதை சொல்லுவார் 
நினைவில் வருகிறதா 
ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே  வக்கில்லையாம் அவனுக்கு ...]

அந்த மாதிரி 
படத்திலே சேர்ந்து நடிக்க வக்கிலையாம் ....] 

நாங்கள் ஒருவர் முதுகில் ஒருவர் சாய்ந்து உட்கார்ந்து 
வளர்ந்தவர்கள் என்று ரஜினியும் கமலும் 
பழங்கால நட்பைப்  பற்றி பேசுவது உண்டு...

இப்போதும்  அப்படி வேண்டுமானால் 
முதுகின் மீது சாய்ந்து கொள்வார்கள் 
நமக்குத் தனியாக இருப்பது போல தெரியும்...
ஆக மொத்தம் அவர்கள் நடிப்பை விடுவதாய் இல்லை 

17.1.18

ஞானியின் இறப்பு நமக்கு இழப்பு

ஞாநி அவர்களின் ஓ பக்கங்களை யாரும் இனிமேல் படிக்க முடியாது.

பல்வேறு பிரச்சனைகளை முன்னெடுத்து விழிப்புணர்வு கொடுத்தவர்.

கலையை கையில் எடுத்தாண்டவர் .

ஆண்டாளைப்  பற்றிய சர்ச்சை பற்றி தான் இறப்பதற்கு முன்பு
அவர் செய்த பதிவு.

தமிழக மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு.

 அரசியல் பின்னணியைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.




27.12.17

வருவீயா வரமாட்டியா ' திரைப் பாடல்




அடிக்கடி இதே ரோதனையாய் போச்சு---

ஒன்னு வந்து அடிபட்டுப் போகணும்
இல்லையா
பேசாம ஒதுங்கிப் போகணும்.

இரண்டும் இல்லாம
இந்தப்பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் சரியில்லை,  சொல்லிப்புட்டேன்.

நானும் எத்துணை வருஷம்தான் காத்துக்கிட்டே இருக்கிறது.

உங்களை விட எங்களுக்கெல்லாம் வயசாயிப்போச்சு.
நாங்களும் பேரன் பேத்தி எல்லாம் பாத்தாச்சு.
ஒவ்வொரு வாட்டியும் புதுப் படம் எடுக்குறப்ப ஏதாவது பேச வேண்டியது.
அப்புறம் மலையேற வேண்டியது,
திருப்பி வந்து போட்டோ எடுக்க வேண்டியது.


நீங்கதான் தைரியமான ஆள் ஆச்சே
வாங்க வந்து பாருங்க.



4.9.17

ஆசிரியர் தினம் - அனிதாவின் செய்தி

அனிதா படித்த பள்ளியில்
ஆயிரம் பேருக்கு மேல் படித்திருப்பார்கள்.
ஆனால் எத்தனை பேர் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்பார்கள்???

அனிதா
பத்தாம் வகுப்பில் 478
பனிரெண்டாம் வகுப்பில் 1176

ஆசிரியர் யாராயிருந்தாலும் 
அனிதாவால் படிக்க முடியுமெனில் 
ஆசிரியரால் என்ன பயன்?

ஆயிரம் பேரும் ஆயிரத்திற்கு மேல் எடுத்தால்தானே
ஆசிரியருக்குப் பெருமை!

-
அது சரி -
ஆயிரத்திற்க்கு மேல் எடுத்து 
இந்த நாட்டில் என்ன செய்வது?
தற்கொலையா????

-

இந்த நாட்டில்
ஆசிரியர்களுக்கு வேலை இல்லை...

நீட் - டி முழங்கி
கோச்சிங் செண்ட்டர்கள்
அந்த வேலையை எடுத்துக் கொண்டுவிட்டன..
படிக்காதவர்கள்
கல்வி அமைச்சர்களாய் இருக்கும் நாட்டில்
கோச்சிங் செண்டர்களுக்குத்தான் வேலை.

இருந்தாலும்

ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்

---




2.9.17

தமிழகத் தற்கொலைகள் - இப்போது அனிதா

கடந்த ஒரு வாராக் காய்ச்சலுக்குப் பிறகு 
கணினியைத் திறந்தால் 
நீட் தேர்வின் கொடூர அரக்கனை எதிர் கொண்டு போராடியும் வெற்றி காண இயலாமல், தன்னை மாய்த்துக் கொண்ட அனிதாவின் தற்கொலை 
இதயத்தை இன்னும் கனமாக்கியது.

1196 மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வினை எதிர்த்து உச்ச நீதி மன்றம் வரை போராடிய ஒரு சாதாரண மாணவியால் வேறென்ன செய்ய முடியும்?

தற்கொலைகள் தவறுதான்.
ஆனால் இவைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசுகள் தானே. அவைகள் தவறு செய்யும் போது மக்களுக்கு உதவ வேண்டியவைகள் நீதி மன்றங்கள் தானே.
அரியலூர் மண்ணைச் சேர்ந்த அந்த மாணவி டெல்லி வரை சென்றாள் - தனது வாதத்தை எடுத்து வைத்திருக்கிறாள். ஒரு சாதாரண பிரஜையின் வாதத்தை உணர்ந்து கொள்ளாத அரசு எப்படி மக்கள் அரசாக இருக்க முடியும்?

தமிழகத்தில் ஒரு தலைவர் சொல்லுகிறார் - அவள் இன்னும் இரண்டு முறை நீட் எழுதியிருக்க வேண்டுமாம் - அப்படியும் தேர்ச்சி பெறவில்லை என்றால் வேறு ஏதாவது பாடத்திட்டத்தை தேர்வு செய்ய வேண்டுமாம். சமூக நீதி பேசி புகழ் பெற்ற தலைவர்கள் எல்லாம் இப்படிப் பேசத் தொடங்கிவிட்டார்கள். அதாவது 1196 மதிப்பெண் எடுத்தும் நான் விரும்பியதை படிக்க எனக்கு முடியவில்லை என்றால் இந்த பள்ளிகள் எதற்கு இந்தத் தேர்வுகள் எதற்கு? 
18 வயது நிறைவில் நீங்கள் நீட் தேர்வு எழுதினால் போதும் என்றால் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மார்க்குகள் வீண் தானே. 

என்ன உடுத்த வேண்டும்? என்ன மொழி பேச வேண்டும்?  என்ன உண்ண வேண்டும் என்பது வரைக்கும் முடிவு செய்தாயிற்று? இப்போது யார் எதைப் படிக்க வேண்டும் என்று சொல்லுகிற நவீன குருகுலக் கல்வியைத் திணிக்கிறது அரசு. இதையே முன்மொழியும் அரசுகள் இருக்கும் வரை, தலைவர்கள் இருக்கும் வரை அனிதாக்கள் தற்கொலைகளைத் தடுக்க முடியாது.
-
தமிழகத்தின் கவிஞர் 

"அனிதா விரும்பியது கிடைக்கவில்லை என்றால் 
கிடைப்பதை விரும்ப வேண்டும்" அதற்காக உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று சொன்னதோடு விட்டிருந்தாலாவது பரவாயில்லை - அப்படி இந்தியாவில் விரும்பியது கிடைக்க வில்லை என்று தற்கொலைகள் செய்து கொண்டால் இந்திய ஜனத் தொகையில் பாதிப் பேர் தற்கொலை செய்து கொள்வார்களாம்.

இந்திய ஜனத் தொகையில் பாதிப் பேர் தங்கள் விரும்பியதைச் செய்ய முடியவில்லை என்றால் என்ன நாடு இது? என்ன அரசு இது? என்ன கவிஞர் இவர்?
-

இப்போது கூட தமிழகம் விழிக்க வில்லை என்றால்
பின்னர் 
எழுவது மிகக் கடினம்.