ஜாமீன்
ஏறக்குறைய நாற்பதாயிரம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்த ஹாசனை - வெறும் எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க ஜாமீனில் விடுதலை செய்திருக்கிறது உயர் நீதி மன்றம்.
ஒருவேளை ஹாசன் இதையே தி. மு. க. விலிருந்து செய்திருந்தால், தொகுதிப் பங்கீடு முடியும் வரை, அல்லது, கேட்ட இடங்கள் கிடைக்கிற வரை, அல்லது வென்று கூட்டணி ஆட்சி முடிவு கட்டுகிற வரை, அதிலும் கேட்ட பதவி கிடைக்கிற வரை... சிறையில் இருந்திருக்க வேண்டியிருக்கும். ஒருவேளை ராசாவிடம் எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய் கூட இல்லையோ என்னவோ!
நம்புங்கள் -
- சி. பி. ஐ... ஊழலை ஒழிக்க உதவுகிறது. ஆளும் கட்சிக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதனால்தான் அண்ணா அறிவாலயத்தில் விசாரணை தொடர்கிறது....
- கட்சியிலிருந்து வரி ஏய்ப்போ, ஊழலோ செய்யாதீர்கள் - தனியாய் செய்தால் நிச்சயமாய் தப்பிக்கலாம் - ஹாசன் போல.
- ஹாசன் வெளியில் வந்து தனக்கெதிரான சாட்சியங்களை எல்லாம் அழித்து விடவோ, யாரையோ விலை கொடுத்து வாங்கி விடவோ மாட்டார் - ஏனெனில் அவர் நேர்மையாளர்.
- காந்தியைப் போல காங்கிரசும், உண்மையையே கடவுள் என்றும், நேர்மையையே மதிப்பீடு என்றும், தூய்மையே தங்கள் வழிகாட்டி என்றம் இருக்கிறது.
0 comments:
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்