முதலில் வந்ததுற்கு நன்றி -
வாசிப்பாளர்களை கவர்வது எப்படி? என்கிற கேள்விக்கு இப்பதிவு முழுமையைப் பதில் சொல்லுமா என்பது தெரியாது. நான் பதிவுலகில் மீண்டும் நுழைந்த இந்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிகம் பார்க்கப் பட்ட ஒரு பதிவினை கொண்டு பதில் சொல்லலாமென்று நினைக்கிறேன்.
இதுவரைக்கும் எந்தப் பதிவுகளும் நோட்டமிடாதப் பட அளவுக்கு "சூப்பர் சிங்கர் கலாட்டா" பார்வையிடப் பட்டிருக்கிறது. இதுவரை ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு முறைக்கு மேல் பார்வையிடப் பட்டிருக்கிறது. இது எனக்கு உண்மையிலேயே மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. பார்வையிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி -
ரூம் போட்டு யோசித்து எழுதிய பதிவுகள் கூட சில சமயங்களில் நூறைத் தாண்டாது. ஆனால் நடைமுறையில் மிகவும் பாப்புலரான சினிமா, தொலைக் காட்சி, கிரிக்கெட் இவைகள்தான் அதிகம் வாசிக்கப் பட்டிருக்கிறது. இன்றும் வசிக்கப் படுகின்றன -
அதிகம் பார்வையாளர்களைக் கவர வேண்டும் என்கிற பதிவுலக நண்பர்கள் சினிமா, தொலைக் காட்சிகள் பற்றி எழுதலாம். மிகச் சிரமப் பட்டு தலைப் பெல்லாம் தேட வேண்டியதில்லை.
அதிகம் பார்வையாளர்களைக் கவர வேண்டும் என்கிற பதிவுலக நண்பர்கள் சினிமா, தொலைக் காட்சிகள் பற்றி எழுதலாம். மிகச் சிரமப் பட்டு தலைப் பெல்லாம் தேட வேண்டியதில்லை.
இது ஒரு விதத்தில் புரிந்து கொள்ளப் படக் கூடிய விஷயம்தான். ஏனெனில் இந்தியாவை விட்டு வெளியிலிருக்கிற நண்பர்கள் தங்களது பொழுது போக்கிற்காகவும் உற்சாகம் தரக் கூடிய பதிவுகளையும் தேடி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இருக்கிற பார்வையாளர்களும் அப்படி இருப்பதைத் தான் புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கிறது. அதற்காக வெளியூரில் வசிப்பவர்கள் காத்திரமான பதிவுகளை வாசிப்பதில்லை என்றோ தமிழக வாசிப்பாளர்கள் சீரியசான விஷயங்களை படிப்பதில்லை என்றோ பொருள் கொள்ளக் கூடாது. அப்படி இருந்தால் நானும் எழுத முடியாது இங்கே யாரும் வந்து படிக்கவும் முடியாது.
சூப்பர் சிங்கரை படித்தவர்கள் எல்லாம் இந்தப் பதிவையும் பார்ப்பார்களா என்பது தெரியாது. ஆனாலும் நன்றிகள்.
ஒரு முக்கியமான விஷயம் - அதிகம் பார்க்கப் பட்ட இந்தப் பதிவு ஒருவரைக் கூட என் நண்பராக இந்த வலைப் பூவில் இணைய இழுத்து வரவில்லை. இந்த உண்மையையும் பதிவு செய்ய வேண்டும்.
நான் இந்த ஆச்சரியத்தில் உறைந்து போக வில்லை - அதை விரும்பவும் இல்லை. மிக விரைவில் அல்லது நாளையே கூட அதிகமாக பார்வையாளர்களை கொண்டு வராத பதிவு ஒன்று வரும். அதிலேயே நான் நிறைவு கொள்ளுகிறேன்.
நன்றி
------------------------------------------------------
பின்னூட்டம்
இந்தப் பதிவை நான் எனது ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளவே எழுதினேன். கடந்த கட்டுரையும் ஒரு விஷயத்தை என் பார்வையில் இருந்தே அணுகினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதைப் பகிர்ந்து கொண்டேன். அதோடு அதில் யாரும் நெருங்கி வர வில்லை என்கிற விஷயமும் ஆச்சரியத்தைத் தந்தது என்று சொன்னேன். அவ்வளவே.
அதனால் எல்லாரும் சீரியசாத் தான் பதில் எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள் அல்ல. ஒவ்வொருவரும் ஒரு தனித் தன்மையோடு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களது பதிவையும் மகிழ்வோடு படிக்கிறேன். சினிமா பற்றிய பதிவுகளையும் அல்லது கணணி பற்றிய தெளிவு கொடுக்கிற செய்திகளையும் படிக்கிறேன். அவர்கள் அப்படியே தொடர்ந்து எழுதவும் வேண்டும் என்பதும் என் ஆவல். நானும் இடையில் ஜாலியாகவும், மொக்கைப் பதிவுகளும் எழுதகிறேன். எல்லாமே நல்லா இருக்குன்னு என்னாலே சொல்ல முடியாது.
அதனால உங்கள் பாணியில், உங்களுக்கு நிறைவு தரும் விதத்தில் எழுதுங்கள். எல்லாம் கலந்து இருப்பதுதான் வாழ்க்கை - சோகம், மகிழ்ச்சி, சீரியசான தருணம் --
வாழ்க வளமுடன்.
9 comments:
பொழுது போக்கிற்காக மன அமைதிக்காக வருபவர்கள் ஏதாவது கிசு கிசு செய்திகள், வாய்க்கு அவல் செய்திகளை தேடி வருகிறார்கள்... ஆனால் அவர்கள் உங்கள் வலைப்பூவை தொடர்ந்து வர மாட்டார்கள்... ஒரு வலைப்பூவை தொடர வேண்டும் என்றால் அது களஞ்சியமாக இருக்க வேண்டும்... அப்பொழுது உடனே அநேகர் தொடர்வர்... கணினி சம்பந்த பட்ட வலை பூக்கள் அநேகர் தொடர்வர், மீண்டும் மீண்டும் வருவர்... என் வலைப்பூவை தொடங்கும் பொழுது தெரிந்தே தான் தொடங்கினேன்.. இதை யாரும் பின்தொடர மாட்டார்கள் என்று... வெறும் மக்களின் மன நிலையை எடை போடவே என் வலைப்பூவை தொடங்கினேன்... என் எழுத்துக்களுக்கு முன்னோட்டம் எடுக்கவே வலைப்பூவை தொடங்கினேன்.. ஆனால் என் பதிவுகளுக்கு வரும் தொடர் வருகையாளர்களை என்னை ஆச்சரியப் படுத்துகிறார்கள்...
என் பதிவுகளுக்கு வரும் தொடர் வருகையாளர்களை என்னை ஆச்சரியப் படுத்துகிறார்கள்...
யோவ்...இனி வரலை...
அப்பு..நீங்களும் ஒரு முடிவோடு...அலைபாய்வதை காண முடிகிறது...
ஜீவா மிக்க நன்றி...
உண்மையைச் சொல்லப் போனால் நானும் பதிவுலகிற்கு வந்தது நான் நினைக்கிற சில கருத்துக்களை எழுத வேண்டும் என்பதற்காகவும், அது ஒரு சிலரையாவது சென்று சேர வேண்டும் என்பதற்காகவும் தான். எனவே தொடர்ந்து பதிவெழுதக் கூடிய நேரமோ, வாய்ப்போ எனக்கு இன்னும் அமைய வில்லை. அதற்கு எனக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் தேவைப் படுகிறது.
நான் ஏற்கனவே மேலே எழுதியது போல இங்கே வருகிற நீங்களெல்லாம் காத்திரமான பதிவுகளைப் பார்த்துத் தான் வந்தீர்கள். அதில் எனக்கு மகிழ்ச்சியே.
////யோவ்...இனி வரலை... ///
ரெவரி - வாங்க
இப்படி நீங்க கோவிச்சுக்கிட்டா எப்படி.
வாங்க -
நமக்கு வாக்குகளோ, வலைப் பூவில் இனைபவர்களது எண்ணிக்கையோ அல்லது முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதோ அல்லது அதில் பணம் பார்க்க வேண்டும் என்பதோ அல்ல.
தொடர்ந்து வாங்க...
நன்றி
கடந்த மாதத்தில் மிகவும் சீரியசான பதிவுகள் எழுதிக் கொண்டிருந்த நண்பர்கள் வலைப் பூக்களில் சில இந்த மாதத்தில் நிறைய விளம்பரங்களை உள்ளடக்கி - திடீர் திடீரென்று பாப் அப் விண்டோஸ் -- விளம்பரங்கள் . இந்த வளர்ச்சி நல்லதா என்று தெரிய வில்லை.
என்னய்யா பதிவு போட்டுருக்கீங்க
நானும் பதிவு தலைப்ப பாத்துட்டு ஓடிவந்தேன்.
சதீஷ்,
அதுதான் சொல்லியிருக்கேனே - மக்களை அதிகம் கவரக் கூடிய பொருள்கள் பற்றி எழுத வேண்டும்.
சூப்பர் சிங்கர் எல்லாரையும் கவர்ந்தது. அதைப் பற்றி எழுதினேன். அதனால் வாசிப்பாளர்கள் கவரப் பட்டார்கள். அதைப் போல இன்னும் பல துறைகள், நிகழ்வுகள் இருக்கின்றன அல்லாவா. அதைப் பற்றி எழுத வேண்டும் என்பாதாக எழுதினேன்.
வந்ததற்கு நன்றி.
இந்தப் பதிவை நான் எனது ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளவே எழுதினேன். கடந்த கட்டுரையும் ஒரு விஷயத்தை என் பார்வையில் இருந்தே அணுகினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதைப் பகிர்ந்து கொண்டேன். அதோடு அதில் யாரும் நெருங்கி வர வில்லை என்கிற விஷயமும் ஆச்சரியத்தைத் தந்தது என்று சொன்னேன். அவ்வளவே.
அதனால் எல்லாரும் சீரியசாத் தான் பதில் எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள் அல்ல. ஒவ்வொருவரும் ஒரு தனித் தன்மையோடு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களது பதிவையும் மகிழ்வோடு படிக்கிறேன். சினிமா பற்றிய பதிவுகளையும் அல்லது கணணி பற்றிய தெளிவு கொடுக்கிற செய்திகளையும் படிக்கிறேன். அவர்கள் அப்படியே தொடர்ந்து எழுதவும் வேண்டும் என்பதும் என் ஆவல். நானும் இடையில் ஜாலியாகவும், மொக்கைப் பதிவுகளும் எழுதகிறேன். எல்லாமே நல்லா இருக்குன்னு என்னாலே சொல்ல முடியாது.
அதனால உங்கள் பாணியில், உங்களுக்கு நிறைவு தரும் விதத்தில் எழுதுங்கள். எல்லாம் கலந்து இருப்பதுதான் வாழ்க்கை - சோகம், மகிழ்ச்சி, சீரியசான தருணம் --
வாழ்க வளமுடன்.
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்