10.10.11

முரண் செய்திகள்

முரண் படம் வந்தாலும் வந்தது என் கண்ணில் எல்லாம் முரணான செய்திகளாகவே படுகிறது.

  • முரண் படம் ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த STRANGERS ON A TRAIN படத்தின் [முழு விமர்சனம் பிரபாகரனின் தத்து பித்துவங்களில் பார்க்கலாம்] கதையை சுட்டு எடுத்து வந்தாலும் திரைப் படத்தின் தொடக்கத்தில் ஏதோ தன்னுடைய கற்பனையில் உதித்த கதை போல "இப்படத்தில் வரும் நபர்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல" அப்படின்னு தொடங்குறது எவ்வளவு பெரிய முரண்.
  • ஜெயலலிதா வந்த பிறகு மாநகரப் பேருந்துகள் எல்லாம் பச்சைக்கு மாறுகிறதாம். அம்மையார் மோடியின் நண்பர். மோடி எப்படி என்பது நமக்குத் தெரியும். அப்படியும் ஏன்  பச்சை கலர் ஜெயலலிதாவின் கலராகிப் போனது என்பது எவ்வளவு பெரிய முரண். உண்மையில் அது காவிக் கலராகத் தானே இருக்க வேண்டும்.

  • புதுச் சேரியில் கல்வி அமைச்சர் இன்னும் பத்தாவது கூடப் பாஸ் பண்ணலையாம். கல்வி அமைச்சராக இருப்பதே எவ்வளவு பெரிய முரண். இதில் ஆள் மாறாட்டம் செய்து வேற பரீட்சை எழுதியது எவ்வளவு பெரிய கள்ளத் தனம். பத்தாவது படிச்சாத்தான் டாக்டர் பட்டம் வாங்க முடியுமோ? டாக்டர் விஜய காந்த் பத்தாவது பாஸ் பண்ணிட்டாரா?

  • சென்னையில் பல ஸ்டார் ஹோட்டல்களில் நேற்று  விபச்சாரப் புரோக்கர்களைக் கைது செய்தார்களாம். பிரபல ஸ்டார் ஹோட்டல்களில் என்று மட்டும் பத்திரிகைகள் எழுதிவிட்டு தனி நபர்களின் பெயர்களை வெளிப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களின் உதவி இல்லாமல் இது அவர்களது ஹோட்டலில் நடக்குமா என்ன? எப்படி ஒரு இருட்டடிப்பு?  அதோடு இதையும் படிங்க - அந்த புரோக்கர்கள் பாத்திமா, பரிதா பானு, சிவா மற்றும் சாந்தியாம். அதாவது மத வேறுபாடு என்பது இதில் இல்லை. [http://www.thinaboomi.com/2011/10/08/7119.html ]
  • தொலைக் காட்சிப் பேட்டி ஒன்றில், அர்விந்த் கெஜ்ரிவால் - அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் இருப்பேன் என்று சொல்லி மிரட்டுவதற்கான உரிமை உண்டு - ஏனெனில் அவர் பாராளு மன்றத்திற்கு மேலானவர் என்று சொல்லியிருக்கிறார். அவர் மட்டுமல்ல எல்லா குடிமகன்களும் பாராளுமன்றத்திற்கு மேலானவர்கள் என்றும் சொல்லியிருக்கிறார். அதனால் அரசை மிரட்டும் உரிமை இருக்கிறது என்கிறார். இங்கே ஒரு ஊரே சேர்ந்து போராடுது அதை கேட்க ஆளில்லை.
    • பின்னூட்டம்
      • இதில் எல்லாரும் பாராளுமன்றத்திற்கு மேலானவர்கள்தான். ஆனால் அதை யாரும் மதிக்கிறதில்லை என்பதுதான் முரணான சேதி. அதில் இரண்டாவது இங்கேயும் ஒரு ஊர் முழுவதுமாகப் போராடி மீண்டும் போராட்டம் ஆரம்பித்திருக்கிறார்கள் எவ்வளவு தூரம் பாராளுமன்றத்திற்கு மேலானவர்கள் போராட வேண்டியிருக்கிறதும் முரன் தானே.

11 comments:

மாய உலகம் சொன்னது…[பதிலளி]

முற்றிலும் முரண் செய்திகள் தான்....

Sankar Gurusamy சொன்னது…[பதிலளி]

உண்மையிலேயே முரணான செய்திகள்தான்...

ஆனால் அந்த கடைசி விசயத்தில் ஏன் அன்னாவை இழுக்குறீங்கன்னு தெரியல... உண்மையில் அரவிந்த் கேஜ்ரிவால் சொன்னமாதிரி ஒவ்வொரு குடிமகனும் பாராளுமன்றத்துக்கு மேலானவன் என்கின்ற உணர்வு இல்லாவிட்டால் இந்த போராட்டம் சாத்தியப்பட்டிருக்காது என்றே எனக்கு தோன்றுகிறது...

மற்றதெல்லாம் அருமை...

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/

SURYAJEEVA சொன்னது…[பதிலளி]

நான் ஊழலுக்கு எதிராக போராடுவேன் ஆனா எந்த பதவியிலும் உட்கார மாட்டேன்.. ஏனென்றால் பதவியில் உட்கார்ந்து விட்டால் நான் வேலை செய்ய மாட்டேன்.. எவ்வளவு முரணான பதில்... பதவியில் உட்கார்ந்து வேலை செய்யாதவர் ஊழல் வாதியாக தானே இருக்க முடியும்...

Unknown சொன்னது…[பதிலளி]

நன்றி ராஜேஷ்

Unknown சொன்னது…[பதிலளி]

"ஆனால் அந்த கடைசி விசயத்தில் ஏன் அன்னாவை இழுக்குறீங்கன்னு தெரியல... " ///

சங்கர் குருசாமி, வணக்கம் - நான் அன்னா ஹசாறேவைஎல்லாம் வம்புக்கு இழுக்கலை. எல்லாரும் பாராளுமன்றத்திற்கு மேலானவர்கள்தான். ஆனால் அதை யாரும் மதிக்கிறதில்லை என்பதுதான் முரணான சேதி. அதில் இரண்டாவது இங்கேயும் ஒரு ஊர் முழுவதுமாகப் போராடி மீண்டும் போராட்டம் ஆரம்பித்திருக்கிறார்கள் எவ்வளவு தூரம் பாராளுமன்றத்திற்கு மேலானவர்கள் போராட வேண்டியிருக்கிறதும் முரன் தானே.

Unknown சொன்னது…[பதிலளி]

வணக்கம் ஜீவா,
உங்களுடைய பின்னூட்டம் ரொம்ப அருமையா இருக்கு.
என்னுடைய செய்தியில் அன்னா ஹசாரே என்ற மனிதரை விமர்சிப்பது அல்ல. மக்கள் பாராளுமன்றத்திற்கு மேலானவர்கள் என்ற கருத்தில் உள்ள முரணைச் சுட்டிக் காட்ட. விளக்கம் - சங்கர் குருசாமியின் கருத்துக்கான பின்னூட்டத்தில்.

Unknown சொன்னது…[பதிலளி]

ஆம் நண்பரே உண்மைதான்

த. ஜார்ஜ் சொன்னது…[பதிலளி]

கல்வி அமைச்சரே இந்த லட்சணமென்றால்... கல்வி..?

கோகுல் சொன்னது…[பதிலளி]

வடிவேல் ஒரு படத்துல சொல்ற மாதிரி தமிழ்நாடு டெல்லில இருந்து தூரமா இருக்கறதுனால ஊரே கூடி போராடுனாலும் அவங்களுக்கு கேக்கறது இல்ல போலிருக்கு.

Unknown சொன்னது…[பதிலளி]

// ஊரே கூடி போராடுனாலும் அவங்களுக்கு கேக்கறது இல்ல போலிருக்கு.//

வாங்க கோகுல்,
ரொம்பக் கரக்டு...
வரவுக்கு நன்றி.

Unknown சொன்னது…[பதிலளி]

"கல்வி அமைச்சரே இந்த லட்சணமென்றால்... கல்வி..?"

ஜார்ஜ்
கல்வியைப் பற்றி யாரு கவலைப் படுறாங்க..

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்