7.10.11

சாமியின் மூன்று படிப்பினைகளும் ஐந்து இலக்குகளும்


சுப்பிரமணி சாமி எப்படியும் தன்னை எப்போதும் மீடியாவின் பார்வைக்குள் வைத்திருக்கும் ஒரு வசியக்காரர். சில சமயம் காமெடியன் போலப் பேசுவார் - சில சமயம் மந்திரக் காரர் போலப் பேசுவார் - சில சமயம் விசயக் காரார் போலப் பேசுவார். இந்தியா தீவிர வாதிகளிடமிருந்து காப்பாற்றப் பட வேண்டுமென்பதில் நாம் என்ன படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தனது ஐந்து strategic திட்டங்களையும் ஒரு கட்டுரையாக [சூலை பதினாறு] வடிக்கப் போய் வழக்கை எதிர் நோக்கியிருக்கும் ஒரு ... தீவிர வாதி?

அப்படி என்ன குழப்பத்தை விளைவிக்கும் அளவுக்கு அதில் இருந்தது என்பதை சுருக்கித் தந்திருக்கிறேன். ஆங்கிலத்தில் படிக்க கீழ்க்கண்ட இணையத்தில் படிக்கலாம். 
சில முன்முடிவுகளோடு தான் அவர் தொடங்குகிறார். தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள் மட்டுமே. அவர்கள்தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

இதில் எழுதப் பட்டிருப்பவை அனைத்தும் சுப்பிரமணி சாமியின் கருத்துக்களே - எனது கோணக் கேள்விகள் மட்டும் சிவப்பில்.
அவரின் கட்டுரைக்கு  ஆதாரம்:
http://www.dnaindia.com/analysis/comment_analysis-how-to-wipe-out-islamic-terror_1566203-all

அவரது படிப்பினை ஒன்று -
இஸ்லாமிய தீவிர வாதத்தில் ஒரு இந்து இறந்தால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்துவும் கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறான். எனவே இந்துக்கள் கூட்டு மன நிலையோடு இந்து என்பதில் ஒன்றிணைய வேண்டும். இதில் இஸ்லாமியர்களும் தங்களது முன்னோர்கள் இந்துக்கள் என்பதை உணர்ந்து இதில் ஒன்றிணைய வேண்டும். அப்படி எல்லாரும் சேர்ந்து இந்து ஆட்சியை நிறுவ வேண்டும்.
ஒவ்வொரு இஸ்லாமியனும் இறக்கும் போதும் எல்லா இஸ்லாமியர்களும்தானே இறக்கிறார்கள். நீங்கள் சரியென்றால் அவர்களும் சரிதானே?
 

இரண்டாவது படிப்பினை
எது நடந்தாலும் இஸ்லாமியத் தீவிர வாதத்தின் மிரட்டலுக்குப் பணியக் கூடாது.
சரி

மூன்றாவது படிப்பினை
எவ்வளவு குறைவான தீவிர வாதமாக இருந்தாலும் இந்திய இந்துக்கள் முழுவதும் ஒன்றிணைத்து தங்களது முழு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். உதாரணத்திற்கு, அயோத்யா கோவில் தாக்கப் பட்டத்திற்கு உடனே அங்கே ராம் கோவில் கட்டியிருக்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அதே இடத்திலேயே மசூதி கட்டனுமா?

பரிந்துரைக்கும் ஐந்து STRATEGIC இலக்குகள்

ஒன்று - ஜம்மு காஷ்மீர் விவகாரம் - இதில் அரசு அதற்குக் கொடுத்திருக்கிற சிறப்பு ஸ்டேடசை ரத்து செய்து விட்டு அங்கே முன்னாள் ராணுவ வீரர்களை குடியமர்த்தி அதை இந்துக்களின் இடமாகவும், தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலும் அமைக்க வேண்டும்.
பாகிஸ்தான் பார்டரில்  இந்துக்களைக் குடியமர்த்தலாம் - நீங்கள் முதல் ஆளா? ராஜ பக்ஷே அங்கே பண்றதுக்கும் இதுக்கும் பெர்ய வித்யாசம் இல்லையே. அவர்தான் உங்கள் குருவா?
இரண்டு - கோவில்களில் வெடிவைத்து இந்துக்களைக் கொள்ளும் அவர்களின் முயற்சிகளுக்கு பதிலடியா இந்துக்கள் கோவில்களுக்கு அருகில் உள்ள ஏறக்குறைய முன்னூறு மசூதிகளை உடனடியாக அகற்றுதல்.
அப்படியே இஸ்லாமியர்களும் தங்கள் மசூதிக்கு அருகில் உள்ள 300 கோவில்களை அகற்றலாமா?
மூன்று - இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முயற்சிக்கும் அவர்களது முயற்சிக்கு -
எல்லாருக்கும் ஒரே மாதிரியான சட்ட நடைமுறையை முன்னிறுத்தி, தங்களது முன்னோர் இந்துக்கள் என்று ஏற்றுக்கொள்ளுகிரவர்களுக்கு மட்டும் வாக்குரிமை அளித்து இந்தியா என்பதை ஹிந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும்.
எங்கள் முன்னோர்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் ஓட்டுரிமை இல்லையா? எங்கள் முன்னோர்கள் மதங்களற்ற வானரங்கள் என்று ஏற்றுக் கொண்டால் ஓட்டுரிமை இல்லையா?
நான்கு - குடும்பக் கட்டுப் பாட்டுக்கு ஒத்துழைக்காத அந்த முஸ்லிம்களுக்கு - பதிலடியாக மத மாற்றத்தைத் தடை செய்வது - ஆனால் இந்துக்களாக யாரும் மாறுவதற்கு தடை விதிக்கப் படக் கூடாது. சாதி என்பது பிறப்பால் அல்ல மாறாக அது ஒழுக்க நெறி என்று அறிவிப்பது. இந்துக்கள் அல்லாதவர்கள் மீண்டும் இந்துக்களாக வரும் போது அவர்கள் விரும்பும் சாதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொடுப்பது.
உங்கள் அறிவிப்பில் எல்லாம் சரியாகி விடுமா? அப்பா சாதி ஒழியக் கூடாது - அதுதானே உங்கள் நோக்கம்.
ஐந்தாவது - இந்து மன நிலையை வேகமாக வளரச் செய்வது.
அதாவது சாதி மன நிலை அப்படித்தானே?

முடிவில் -
"Even if half the Hindu voters are persuaded to collectively vote as Hindus, and for a party sincerely committed to a Hindu agenda, then we can forge an instrument for change. And that is the bottom line in the strategy to deter terrorism in a democratic Hindustan at this moment of truth." - சுப்ரமணிய சுவாமி


இது நூற்றி ஐம்பதாவது பதிவு

12 comments:

suryajeeva சொன்னது…[பதிலளி]

தீவிரவாதம் என்பதே மிருக குணம் கொண்டது, அவற்றில் ஜாதி மத வித்தியாசங்கள் எதற்கு... நான் எப்பொழுதும் கேட்பதையே இங்கும் கேட்கிறேன்... மிருகத்தில என்னய்யா மதம்?

அப்பு சொன்னது…[பதிலளி]

"தீவிரவாதம் என்பதே மிருக குணம் கொண்டது, அவற்றில் ஜாதி மத வித்தியாசங்கள் எதற்கு... நான் எப்பொழுதும் கேட்பதையே இங்கும் கேட்கிறேன்... மிருகத்தில என்னய்யா மதம்?"

கொஞ்சம் படித்தவர்கள் அடிப்படை வாதத்தை எப்படி அழகாக முன்வைக்கிறார் என்பதற்கு சாமி நல்ல உதாரணம். அவர் நிறையவே படித்தவர் - படிப்பு உண்மையிலேயே அடிப்படை வாதத்திலிருந்து நம்மை விளக்கி வைக்கும் என்பதற்கு இவரே நல்ல உதாரணம்.

அப்பு சொன்னது…[பதிலளி]

பத்ரி சொன்னாரல்லவா - பல்வேறு விபத்துக்களுக்கு படிக்காதவர்கள் தான் காரணம் என்று - [மீண்டும் வெடிக்கும் அணுஉலை விவாதம்]. அவரின் கூற்றுக்கு சாமியின் கட்டுரை கொண்டே பதில் சொல்லலாம்.

த. ஜார்ஜ் சொன்னது…[பதிலளி]

இலவசம்.. ஆடி தள்ளுபடி... போனஸ்... விழாக்கால சலுகை... இந்துவாக மாறினால் விரும்பிய மதம் இலவசம்.. முந்துங்கள்.. வாய்ப்பை தவற வீடு விடாதீர்கள்.

அப்பு சொன்னது…[பதிலளி]

வணக்கம் - வாங்க ஜார்ஜ் - நன்றி
இது மதமாற்றம் பற்றிய விஷயம் அல்ல. அதற்கு அப்பால் உள்ள பல விஷயங்கள் கவனிக்கப் பட வேண்டியன. எந்த வற்புறுத்தலுமின்றி கிறித்தவத்திற்கு மாறுவதோ அல்லது இஸ்லாமியத்திற்கு மாறுவதோ அல்லது இந்து மதத்திற்கு மாறுவதோ இதன் அடிநாதம் அல்ல. மாறாக எப்படி அரசியல் வாதிகளும் மத அடிப்படை வாதிகளும் எப்படி மதங்களை மக்களை ஏமாற்றும் விதத்தில் வளைத்துக் கொள்ளுகிறார்கள்.

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

அவருக்கு தேவை இலவச விளம்பரம்...கோடம்பாக்க கோமாளிகள் போல...
அவரை யாரும் கொல்லாத அளவுக்கு பேச்சு திறமை அவருக்கு...

நிறைய நேரங்களில் அவரைக்கண்டு பொறாமைப்பட்டதுண்டு...

அப்பு சொன்னது…[பதிலளி]

ரெவரி, வாங்க.
நீங்க சொன்னது சரி.
ஆனா எனக்கு டவுட்டு - அதெப்படி அவரு சொல்றத மட்டும், செய்யுறத மட்டும் எல்லாப் பத்திரிகைகளும் உடனே போடுதுங்க. திடீர்னு வழக்கு போடுறாரு. அவர் மேல வழக்குப் போட்டா மன்மோகன் சிங் தலையிடனும் கிறாரு.

த. ஜார்ஜ் சொன்னது…[பதிலளி]

//இந்துவாக மாறினால் விரும்பிய மதம் இலவசம்.. முந்துங்கள்.//

அது விரும்பிய 'சாதி' என்றுதான் சொல்லவந்தேன். தட்டச்சும் போது தவறிவிட்டது.

அப்பு சொன்னது…[பதிலளி]

மீண்டும் வந்ததற்கு நன்றி - தட்டச்சுப் பிழையைச் சரி செய்ததற்கு நன்றி.

மாய உலகம் சொன்னது…[பதிலளி]

நூற்றி ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..சகோ!

மாய உலகம் சொன்னது…[பதிலளி]

விளம்பரம் தேடும் அரசியல் வாதிகள்

அப்பு சொன்னது…[பதிலளி]

ராஜேஷ், நன்றி...

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்