6.10.11

சில அரசியல் காமெடிகள் - இந்த வாரம்

மறதி வாரம் - SELECTIVE அம்நிஷ்யா
 • உள்துறை அமைச்சர் ப.... சிதம்பரம் எனக்கு மறதி உண்டு என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார் - உங்களுக்கும் பிரணாப் முகர்ஜிக்கும் என்ன நடந்தது என்ற கேள்விக்கு..
 • சுபிரமனிய சாமி சூலை மாதம் எழுதிய ஒரு கட்டுரையைக் காரணம் காட்டி இப்போது சாமியைக் கைது செய்ய இருக்கிறது தில்லி போலிசு. சாமிக்கு மன்மோகன் சிங்கு தலையிடனுமாம். [இதைப் பற்றி நாளை கட்டுரை] ஏறக்குறைய இரண்டு மாதங்கள் கழித்துதான் தில்லி போலிசு விழித்திருக்கிறது .. 
 • அதாவது பரவாயில்லை - சிபிஐ இருபது ஆண்டுகள் கழித்து ஒரு காமெடி பணியிருக்கிறது. என்ன காமெடியா செத்தவங்களுக்கு பரிசு மட்டும்தான் கொடுக்க முடியுமா தூக்கே தரலாம்னுதான்.
 • ராஜிவைக் கொன்ற தனுவுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருப்பதாகச் செய்திகள் வந்திருக்கிறது.சாகும் வரை தூக்கு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் - அல்லது சாகும் வரை ஆயுள் தண்டனை என்று கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன். அதெப்படி செத்தவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு - இறந்தவரை எழுப்பி வந்து தூக்கில் போடுவார்களோ - அது ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரை எப்படியா... 
  • CBI தன்னைத் தானே காமெடி பண்ணிக் கொள்ளுகிறதா? இல்லை நம்மை வைத்துக் காமெடி பண்ணுகிறதா...
என்ன புடுங்குன?
 • பிடுங்குதல் சட்ட சபைக்குள் மட்டுமல்ல வெளியிலும் நடக்கிறது. சங்கரன் கோவிலில் விஷயகாந்தின் மைக்கை காவல் துறையினர் பிடுங்கினர் - னு செய்தி.
  • வீட்டுல அந்தக் காவலதிகாரியின் மனைவி கோபத்துல கூட என்ன பெருசாப் புடிங்கிப்புட்டன்னு கேட்க முடியாது. 
  • விஜயகாந்துதான் எலாத்தையும் புடுங்குவாறு அவருக்கேவா...
காந்தியவாதி காங்கிரசுக்கு எதிராய்
 • ஹசாரே காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய போகிறாராம். சீமானை ஆ ஊ வென்று சொன்னார்கள். வடக்கே இருந்தும் காங்கிரசுக்கு எதிர்ப்பாம். அது சரி ஹசாராவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. விட்டா காங்கிரசு தானாய் அழிந்து விடப் போகிறது. இன்றைக்கு கூட சத்ய பைட் பவனில் கலவரம் என்று எங்கள் அஞ்சா நெஞ்சம் உண்மைக் காங்கிரசுத் தலைவர் தங்க பாலு மூன்று பேரை நீக்கியிருக்கிரராம். 
  • அட... தங்க பாலுதான் இன்னும் தலைவரா?
நம்பிக் கெட்டதா?

 • அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வருமென்று சொன்னதை நம்பிக் கெட்டேன் என்று கலைஞர் ஐயா சொல்லியிருக்காகலாம். ஒரே முறை என்னை ஆட்சியில் வையுங்கள் - என் உயிர் பிரியும் முன் என்று சொன்னதை நம்பி நாமளும்தான் கேட்டோம். ஒவ்வொரு முறையும் இது கடைசி முறை கடைசி முறை...

9 comments:

suryajeeva சொன்னது…[பதிலளி]

நிஜம்...

அப்பு சொன்னது…[பதிலளி]

நன்றி

அப்பு சொன்னது…[பதிலளி]

விஜய காந்து பாவம் - இப்போதான் எழுதுக்குராறு போல. அ.தி.மு.க. ஆட்சியிலும் போலிஸ் அராஜகம் என்கிறார். பாகிஸ்தான் தீவிர வாதிகளையே அடித்து நொறுக்குகிற அவரக்கு தமிழக போலிசை ஒன்றும் செய்ய முடியவில்லையா.

வைரை சதிஷ் சொன்னது…[பதிலளி]

நல்ல பகிர்வு நண்பரே

நண்பர்களே இன்று பதிவு திருட்டு பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன்.வந்து பாருங்க

பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?

அப்பு சொன்னது…[பதிலளி]

Thanks Sathish.

மாய உலகம் சொன்னது…[பதிலளி]

CBI தன்னைத் தானே காமெடி பண்ணிக் கொள்ளுகிறதா? இல்லை நம்மை வைத்துக் காமெடி பண்ணுகிறதா...//

ஹா ஹா செம

மாய உலகம் சொன்னது…[பதிலளி]

நையாண்டியாக அரசியல் சாடல்களை அசத்தலாக பகிர்ந்துள்ளீர்கள்...

மாய உலகம் சொன்னது…[பதிலளி]

all voted

அப்பு சொன்னது…[பதிலளி]

Thanks Rajesh

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்