சென்னை
- சென்னையில் கூவம் இருக்கிறது என்பது தெரிந்தவர்களுக்கு மழை பெய்தால் ஒட்டு மொத்த சென்னையே கூவமாகி விடும் என்பது தெரியாததல்ல.
- புதிய சென்னையின் புதிய மேயர் [விரிவாக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் என்பதற்கும் புதிய சென்னையின் புதிய மேயர் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்...] பொறுப்பேற்றிருக்கிற நிலையில் பருவ மழை தீவிரமடைந்து அவரை உடனே வேலைக்கு அழைத்திருக்கிறது.
- சென்னை: மழை இல்லை என்றாலும் தத்தளிக்கும், மழை வந்தாலும் தத்தளிக்கும். சரியான திட்டமிடல் இல்லை. இந்நிலையில் "போர்க்கால அடிப்படையில் சென்னையில் குப்பைகள் அகற்றப்படும்" புதிய மேயர் அறிவித்திருக்கிறார். எல்லா குப்பைகளும் தண்ணீரில் அடித்துக் கொண்டு ஊருக்குள்ளே வந்துவிட்டது.
- கூவத்தை சுத்தம் செய்தால் மழைக் காலங்களில் சுத்தமான நீர் சென்னை முழுவதும் இப்போது போல சென்னை தத்தளித்தாலும் நீருக்குள் நகரமாக வெனிஸ் நகரம் போல இருக்கும்.
இல்லைன்னா மன்மதன் அம்பு பாருங்கோ!
- சென்னையில் மழை வந்தால் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அல்லது நீர் வடியும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
- மழை வந்தால் அனைத்தும் கூவத்தில் கலக்கிறது சென்னையே கூவமாகிவிடுகிறது. வெயில் வந்தால் சென்னை சஹாராவாகி விடுகிறது
- இதற்குச் சென்னையா காரணம்?
- கடந்த பதிவில் சொன்ன ஒரு விஷயத்திற்கு ஒரு சிறு உதாரணம்.
- கலைஞர் ஒரு அறிக்கையில் - தனித்து போட்டியிட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறோம் என்று அறிக்கை ஒன்றில் சொல்லியிருக்கிறார். சட்டப் பேரவைத் தேர்தலில் இருபத்தி இரண்டு சதவீதமும் தற்போது இருபத்தி ஆறு சதவிதமும் பெற்றிருக்கிறோம்.
- முக்கியமான விஷயம் இனிமேதான் -
- ஆனால் இது காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் என்று சொல்ல முடியாது. அதே சமயம் அ.தி.மு.க. வுக்கு எதிரான வாக்குகள் என்றும் சொல்ல முடியாது என்று சொல்லியிருக்கிறார்.
- என்னைக் கேட்டால் எதுவுமே சொல்ல முடியாது என்று பேசாமல் இருந்திருக்கலாம்.
4 comments:
நல்ல அலசல்.. சென்னையும் ஒரு வெனிஸ் ஆக பிரார்த்தனை செய்வோம்.
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
அது அவ்வளவு விரைவாக சாத்தியப் படும் என்று தோன்றவில்லை..
புதிய mayor ரொம்ப நல்லவர் என்று பலர் சான்றிதழ் கொடுக்கிறார்கள், அவர் இருக்கும் கட்சியை வைத்து நான் அவரை நம்பவில்லை... ஆனால் பலரும் கூறுவதால் என்ன கிழிக்க போகிறார் என்று பார்க்க ஆவலுடன் உள்ளேன்... அந்த கலைஞர் விவகாரம், சுத்தமா நான் நாக் அவுட், தந்தை பாசம் தலைவன் கண்ணை மறைக்கிறது போல் இருக்கிறது... அவரே குழம்பி போய் இருப்பதால், பார்க்கும் நாமும் குழப்பத்தில்...
@suryajeeva
ஜீவா,
என்னைப் பொறுத்த வரை இதுவரை நல்ல மேயர் ஸ்டாலின்தான் ... முதல் மேயர் என்பதனால் மட்டுமல்ல - ஒரு மேயராக சில வேலைகளை நன்றாகவே செய்தார்....
சைதை துரைசாமி - எனக்கும் அதே கருத்துதான்.... பார்க்கலாம்.
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்