14.4.10

வக்கீல்கள்

வக்கீல்கள்

எந்த நிரபராதியும் எந்த விதத்திலும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பது தான்
வக்கீல்களின் "தொழிலை" மிகவும் உயர்ந்ததாகவும்,
இன்னும் சொல்லப் போனால்
புனிதமாகவும் கருதும் நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.

சந்தர்ப்ப நிலையினாலும்,
அல்லது பிறரின் சூழ்ச்சிக்கு பலியாகவும்
அல்லது பணபலத்தினால் குற்றங்கள் கட்டமைக்கப் பட்டு
அதனால் குற்றம் சாற்றப் படும் நிலையில்,
குற்றம் செய்யாத நபர்கள் தங்களது குற்றமின்மையை
எடுத்துரைப்பதற்கு உதவியாகவும் - நிரபராதிகளை விடுவிக்கவும்
வக்கீல்கள் உதவியாக இருக்கிறார்கள்.

அல்லது குற்றம் சாற்றப் பட்டவர்கள்
எந்த விதத்திலும் தப்பித்து விடாமல் இருக்கவும்,
அதன் வழியாய் நீதி நிலைநாட்டப் பாடவும்
உதவியாகவும் அவர்கள் செயல்பட வேண்டும்.
அதனால்தான் அவர்களுக்கென்று சிறப்பான ஒழுக்க நெறிகள் உள்ளன.

ஆனால் அந்தத் தொழிலும் வெறும் பணம் அறுவடை செய்யும்
தொழிலாகவே மாறிக் கொண்டிருப்பது வேதனையான விஷயம்தான்.
போலி மருந்து விற்பனை செய்து மாட்டிக் கொண்ட தொழில் அதிபருக்கு ஆதரவாக அமைச்சரின் மனைவி ஒருவர் வாதாட இருப்பதாக உள்ள செய்திகள்
அரசுக்கும் குற்றவாளிகளுக்கும் உள்ள நெருக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

சட்டம் அறிந்தவர்கள் என்பதனால்,
சட்டத்திலிருந்து தப்பிக்கும் விதத்தில்
குற்றங்களை செய்வதற்கான
திட்ட வரையரைகளை செய்வதிலிருந்து -
அதிலுருந்து விடுபடுவது எப்படி என்பதுவரை எல்லா திட்டங்களை செயல் படுத்த உதவியாய்
இருப்பதனால் அவர்கள் வக்கீல்கள் என்பதையும் தாண்டி
குற்ற உற்பத்தியாளர்களாகவே தெரிகிறார்கள்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்