7.4.10

சானியாவும் திருமணமும்


சானியா இந்தியக் குடிமகள் - அவருக்கும் ஒரு பாகிஸ்தான் விளையாட்டு வீரருடன் நடக்க இருந்த திருமணம் ஒரு பெரும் சர்ச்சையை உண்டாக்கிருக்கிறது.

எத்தனை நபர்களோ இது போல நாடு விட்டு திருமணமும், மதம் கடந்து திருமணமும் செய்திருக்கும் போது - இவருக்கு மட்டும் ஏன் இத்தனை விவாதங்கள்.
புகழ் பெறுகிறவர்கள் கொடுக்கும் விலை இது.

அவர் திருமணம் செய்து கொள்கிறார் என்பது பிரச்சனையா அல்லது ஒரு பாக்கிச்தானியரை திருமணம் செய்து கொள்கிறார் என்பது பிரச்சனையா அல்லது ஏற்கனவே திருமணம் ஆனவரைத் திருமணம் செய்கிறார் என்பது பிரச்சனையா?


திருமணம் அவரவர் விருப்பம். பாகிஸ்தானியர் எல்லாரும் தீவிரவாதிகள் என்று நினைத்தால் அரசுதான் கவனமாக இருக்க வேண்டும் - எல்லைகளில் கோட்டை விடாமல்...

இரண்டாவது திருமணம் செய்வது தவறென்றால் நமது தலைவர்களை நாம் பார்த்துக் கொள்வது நல்லது. இஸ்லாமிய முறைப்படி 4 பேர் வரை திருமணம் செய்துகொள்ள வழி உண்டாம். (அதாவது விவாகரத்து செய்யாமலே)

கலாச்சாரக் காவலர்கள் எல்லா இடங்களிலும் தமிழகம் உட்பட இதற்கு எதிர்ப்பு. இத்தனைக்கும் அவர் தமிழகத்தில் வசித்தாலும் பரவாயில்லை. நம்ம ஊருல கரண்ட் கட் ஆகுது, தண்ணீர் வரலை, போராடுறதுக்கு யாரையும் காணோம் - இதுல இவர் திருமணம் செய்து கொள்வதற்கு சென்னை, மதுரை என்று பல இடங்களில் ஆர்ப்பாட்டம். போரட்டங்களுக்குன்று மக்கள் வெளி வருவது நல்லதே. அது வெறும் இருப்பைக் காட்டுவதற்காகவும், கட்சியை வளர்ப்பதற்காக மட்டும் இருக்கக் கூடாது.

காங்கிரஸ் கட்சித் தலைவி நமது முன்னால் பிரதமரைத் திருமணம் செய்த போது இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடந்ததா என்ன? தெரிந்தால் சொல்லுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்