- தென்
தமிழகத்திலிருந்துஇந்தியாவிலிருந்து, கஜினி மூலம் வட இந்தியாவிற்கு பயணம் செய்த முருகதாஸ், காஞ்சீபுரத்திலிருந்து சீனாவுக்குச் சென்ற போதிதர்மரை கதைக் களனாக வைத்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தை வெறும் திரைப் படமாகக் கருதுவதா அல்லது வரலாற்று ஆவணப் படமாக எடுத்துக் கொள்வதா என்று குழப்பம்தான் நீடிக்கிறது. - இந்தியாவை அடிமைப் படுத்த "பயோ போரை" கையிலெடுக்கிறது சீனா. அதற்குத் தடையாக ஒருவரின் ப்ராஜெக்ட் இருக்குமோ என்பதற்காக அவரைக் கொலை செய்வதற்கு சீனாவிலிருந்து ஒருவர் சென்னை வர - இந்தியா அடிமைப் பட்டதா இல்லையா என்பதுதான் கதை.
- ஹீரோ ஒருவரின் முயற்சியில் மட்டுமே நாடு முன்னேற்றம் அடையும் என்கிற சங்கரின் ஒற்றை வரிக் கதை போல இதுவும் என்று சொல்லலாம். இந்தியன் தாத்தா ஊழலை ஒழித்த மாதிரி, அந்நியனில் மீண்டும் ... .. அப்புறம் சிவாஜி கறுப்புப் பணத்தை ஒழித்த மாதிரி, . .... இதில் முருகதாஸ் ஒரு நாட்டையே நோய் நொடி இல்லாமல் செய்துவிடும் கதை. சமூக நோய் என்பதற்கு பதில் இதில் உடல் நோய்...
- திரைப் படம் என்கிற நோக்கில் பல்வேறு குறைபாடுகள் என்பதை பலர் சுட்டிக் காண்பித்து விட்டார்கள் என்பதனால் மேற்கொண்டு என்ன சொல்லுவது?
- சென்னை என்கிற ஒரு நகரத்தில் எந்த விதமான கட்டுப்பாடுகளுமின்றி வலம் வர வேண்டுமானால் சீனக் காரனாகத்தான் இருக்க வேண்டும் போல் இருக்கிறது. எத்தனைக் குழப்பங்களுக்கு மத்தியிலும் எந்தவிதமான எதிர்ப்புமின்றி சுற்றித் திரியும் அந்த சீன பாத்திரம் ..... சரி திரைப் படம் தானே என்று விட்டு விடலாம்.
- சென்னை விமான நிலையத்தில் குடியேறல் பகுதி இவ்வளவு ஆடம்பரத்தோடு மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போன்று இருக்கிறதைப் பார்க்கும் போது சரி இதுவும் சினிமாதானே என்று விட்டு விடலாம்.
- வசியம் என்பது இவ்வளவு எளிதில் சாத்தியப்படும் எனில், நண்பர் ஒருவர் கேட்டிருப்பது போன்று எதற்கு வைரஸ் கதைகளெல்லாம் - வசியம் ஒன்றின் மூலமே எல்லாரையும் அழித்து விடலாம் - ஆனால் அதனால் சீனாவிற்கு இந்தியா அடிபணியாது என்பதனால் இந்தக் கேள்வியிலிருந்து தப்பிக்கும் வசதி இருக்கிறது.
- இவ்வளவு எளிதாக ஐ.ஐ.டிக்குள் நுழைய முடியுமென்றால் வெளி நாட்டுக் காரர்கள் கூட இங்கே வந்து ஆராய்ச்சி செய்யலாம் போலிருக்கிறதே. வெளியிலிருந்து யாரும் வர முடியாது ஆனால் உள்ளே உள்ள செகுரிடி கூடவா? அது மட்டுமல்ல ஜெனெடிக் இஞ்சினியரிங்கில் ஒரு சோதனைக் கூடத்தில் அவர்கள் சொல்லுவது போலவே இன்னும் ஒரு நாள் மீதமிருக்கிற நிலையிலேயே, வெயில் படக் கூடாது என்பதையும் தாண்டி, {சுடிதார் நிழலையும் தாண்டி} - அரவிந்த் மீண்டு வருவது... இது திரைப் படம் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறது. மைனாரிட்டி ரிப்போர்ட் என்கிற டாம் க்ரூஸின் படம் ஒன்றில் இதே போல யாருக்கும் தெரியாமல் கண் மாற்று சிகிச்சை செய்கிற காட்சியை நம்புகிற மாதிரி காண்பித்திருப்பார்கள். இங்கே மிகப் பெரிய சோதனை முயற்சியை - ஜஸ்ட் லைக் தட் என்பது ... சரி படம்தானே...
- இது போல லாஜிக் இல்லாத கதையமைப்பு... சுருக்கமாய் சொன்னால் இது "லாஜிக் இல்லா மாஜிக்" - ஆனால் அந்த மாஜிக்கையும் ஒழுங்காய் செய்ய வில்லை.
- சூர்யாவின் நடிப்பு அருமை. கண்கள் நிறையப் பேசுகிறது. அதென்ன கஜினியில் நயன் தாராவின் ஆராய்ச்சிப் பொருள் சூர்யா... இங்கே ஸ்ருதியின் ஆராய்ச்சிப் பொருள் சூர்யா... பெண்களின் ஆராய்ச்சிப் பொருளா சூர்யா!
- இதை இந்தக் கோணத்தில் பார்த்தால் தசாவதார முதல் இருபது நிமிடங்களை விட இது பல மடங்கு பரவாயில்லை என்றே தோன்றுகிறது. வரலாற்றுப் பதிவுகளை நன்றாகப் பிரசன்ட் செய்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு பிறகு வருவது தான் மேலே சொன்னது. இன்னும் கடினமாய் உழைக்க வேண்டியிருக்கிறது.
- அங்கே உலகத்தையே அழிக்க ஒரு "பயோ போர்" இங்கே இந்தியாவை அழிக்க ஒரு பயோ போர். இரண்டிலுமே காட்டிக் கொடுக்கும் விஞ்ஞானிகள் தமிழர்கள். இந்தக் கொடுமைய எங்கே போய் சொல்லுவது?
கேள்விகள் .... கேள்விகள்
அதற்காக இந்தப் படத்தில் எதுவுமே இல்லை என்று சொல்லி விடமுடியாது. சொல்லுகிற உண்மைகள், கருத்துக்களைப் பதிவு செய்ததில்தான் தகராறே தவிர சொல்லிய கருத்துக்கள் பல கவனிக்கப் பட வேண்டியவை - அவை நிறைய, நிறைய உண்டு.
- வீரமாமுனிவர் என்று அழைக்கப் படுகிற ஒருவர் - சதுரகாதி, தேம்பாவணி மற்றும் கலைச்சொற்கள் அகராதி என்று பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதினர். ஆனால் அவர் இதாலியிலிருந்து வந்தவர். இத்தாலியில் யாருக்காவது பெஸ்கி என்று யாராவது தெரியுமா என்றால் நிச்சயம் தெரியாது. இத்தாலியில் அந்த வரலாறு இருக்குமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் மொழி தெரியாத ஒருவர் வந்து மற்றொரு நாட்டிற்குச் சென்று பணிபுரிவதேல்லாம் எல்லாக் காலங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக நடப்பதுதான். ஆனால் நாம்தான் அவைகளைப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
- எனவே போதி தர்மரைப் பற்றி நமக்குத் தெரியாமல் இருந்தது குறித்து வருத்தப் பட வேண்டிய அவசியமில்லை. இப்போது தெரிந்து கொண்டோம் அதைப் பதிவு செய்துகொள்வோம்.
- இன்னும் கேட்க வேண்டிய கேள்விகளையும் இன்னும் பல ஆராய்ச்சிகளுக்கும் இது இட்டுச் செல்ல வேண்டும். அவர்களுடைய ஆராய்ச்சியில் வெறும் கூகுளிங் மட்டும் செய்தே உண்மையைச் சொல்லுகிறார்கள். ஆனால் அது மட்டும் உண்மையைச் சொல்லி விடாது. ஏனெனில் அது எல்லாவற்றையும் காட்டும். ஆழ்ந்த ஆராய்ச்சி தேவைப் படுகிறது [கூகுல் பற்றி எழுதி விட்டேன் அது என்னைத் தடை செய்து விடுமோ - தெரியவில்லை. உடான்சுக்கு எதிராக நான் ஒன்றுமே எழுதவில்லை ஆனால் ஏனோ தெரியவில்லை என்னை ப்ளாக் செய்திருகிறார்கள். எதுவும் எழுத முடியவில்லைடா சாமி ... ]
- போதி தர்மர் மட்டுமல்ல அவரோடு சேர்ந்து கற்றுக் கொண்ட, இங்கேயே இருந்த மக்களின் வரலாறு என்ன ஆனது? இங்கே அது வளராமல் போனதற்கான காரணம் என்ன? அறிவியல் நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகளாக மாற்றியது எது? அல்லது மாறிப் போனது எப்போது?, என்கிற நிறைய கேள்விகளை இது கொண்டுவருகிறது. அவைகளை மீண்டும் எழுப்புவது, ஆய்வது நமது கையில்தான் இருக்கிறது.
- இது தமிழரின் பெருமை பாராட்ட மட்டுமல்ல -
- காப்புரிமை என்கிற பெயரில் நமது வளங்களை பறித்துக் கொண்டிருக்கிற சூழலை எதிர் கொள்வது எப்படி? அல்லது ஏற்கனவே மஞ்சள், வேப்ப இலை என்று பல பறி போன நிலையில் இருப்பதைக் காப்பாற்றுவது எப்படி? என்று அடுக்கடுக்கான கேள்விகள், நம்மை நாமே மீண்டும் மதிப்பிட்டுக் கொள்வதற்காகவும், நமது வாழ்வின் சூழலை மேம்படுத்துவதற்காகவும். .
- இது போன்ற கேள்விகள் ஏற்கனவே கேட்கப் படாமல் இல்லை என்பது அர்த்தமல்ல. நீங்கள் கூகுளிங் செய்தாலே இதைப் பற்றிய விபரம் தெரியவரும்.
- நம் உலகம் திரை உலகம் என்பதனால் ஒரு செய்தியை திரை வழி சொன்னால்தான் பேசப் படுகிறது. எனக்குத் தெரிந்து அந்த வேலையை இந்தப் படம் செய்திருக்கிறது.
- அதில் சொல்லப் பட்டிருக்கிற செய்திகள் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகளைக் கொண்டிருக்கிறது. சீனா நல்லவர்களைக் கொண்டிருந்தாலும் அதன் அரசு மென்வன்முறையை கட்டவிழ்த்து விடுகிற நாடாக இருக்கிறது என்பதும், அது இது போன்ற செயல்களைச் செய்வதற்குத் தயங்காது என்பதும் மனதில் வைத்து கொள்ளலாம்.
- சீனா என்று மட்டுமல்ல, இன்றைக்கு மருந்து உற்பத்தி செய்கிற நாடுகளோ அல்லது ஆயதங்கள் உற்பத்தி செய்கிற நாடுகளோ எதுவாக இருந்தாலும் தங்களது பொருட்களை விற்பனை செய்வதற்கு எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். ஆன்டி-வைரஸ் கம்பெனிகள் வைரஸ்களைப் பரப்பி தங்களது வைரஸ் பாதுகாப்புகளின் விற்பனையைப் பெருக்கிக் கொள்வது போல...
ஜீன்களை உசுப்பேத்திவிட வேண்டும் என்பதல்ல - நம் மனதில் மறைந்து மறந்து போயிருக்கிற, மறைந்து போயிருக்கிற பல வரலாற்று உண்மைகளையும் உசுப்பி விட வேண்டியிருக்கிறது. {பூம்புகாரை வைத்தே ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது}
இது வெறும் பெருமைக்காக மட்டுமல்ல - தமிழர்களின் பொற்காலம் என்று சொல்லப்படுகிற கால கட்டங்களில் ரோமும், கிரேக்கமும், சீனாவும் கூட நாகரிகத்தில் வளர்ந்து இருந்தததாக சொல்லப் படுகிறது. அந்த ஒட்டு மொத்த நாகரிகமும் சில காலங்களில் அழிந்து போனது. அப்படியெனில் எது அவைகளிலிருந்து மாற்றியது என்கிற பறந்து பட்ட கேள்வியையும் முன்வைக்க வேண்டியிருக்கிறது.
கொசுறு:
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர்
நெறிப்படுத்தினரே.
- "மரபியல்" தொல்காப்பியம்
நமக்கு ஆறறிவு இருந்தாலே போதும் - தமிழர்குலம் நிச்சயம் மாபெரும் குலமாய் இருக்கும்.
36 comments:
குழப்பமா இருக்கே,
எனக்கும் அப்படித்தான் இருக்கு
இப்படி ஓவராய் பில்ட் அப் பண்ணும்போதே தெரியும். ஊத்திக்கபோதுண்ணு. இப்ப சரியாய்ப் போச்சு.
தென் தமிழகத்திலிருந்து //
மன்னிக்கவும் சகோ.. வட தமிழகத்திலிருந்து என்று வரவேண்டும் சகோ... அவர் கள்ளக்குறிச்சி...
ஹீரோ ஒருவரின் முயற்சியில் மட்டுமே நாடு முன்னேற்றம் அடையும் என்கிற சங்கரின் ஒற்றை வரிக் கதை போல இதுவும் என்று சொல்லலாம். இந்தியன் தாத்தா ஊழலை ஒழித்த மாதிரி, அந்நியனில் மீண்டும் ... .. அப்புறம் சிவாஜி கறுப்புப் பணத்தை ஒழித்த மாதிரி, . .... இதில் முருகதாஸ் ஒரு நாட்டையே நோய் நொடி இல்லாமல் செய்துவிடும் கதை. சமூக நோய் என்பதற்கு பதில் இதில் உடல் நோய்...//
அசத்தலான அலசல்...
சூர்யாவின் நடிப்பு அருமை. கண்கள் நிறையப் பேசுகிறது. அதென்ன கஜினியில் நயன் தாராவின் ஆராய்ச்சிப் பொருள் சூர்யா... இங்கே ஸ்ருதியின் ஆராய்ச்சிப் பொருள் சூர்யா... பெண்களின் ஆராய்ச்சிப் பொருளா சூர்யா!//
ரெண்டுமே முருகதாஸ் படம் என்பதால் அவர் மைண்டில் செட் ஆகிருக்கலாம் சகோ ஹா ஹா
@மாய உலகம்
நன்றி ராஜேஷ்,
தென் இந்தியாவிலிருந்து என்று எழுத நினைத்து தட்டச்சில் தென் தமிழகம் என்று வந்து விட்டது...
நினைவுக்கும் செயலுக்கும் உள்ள இணைப்பை உசுப்பி விட வேண்டியிருக்கிறது.
வரலாற்றுப் பதிவுகளை நன்றாகப் பிரசன்ட் செய்திருக்கிறார்கள்//
இது ஒன்றே படத்திற்கு பிளஸாக அமைந்துவிடும் சகோ!
போதி தர்மரைப் பற்றி நமக்குத் தெரியாமல் இருந்தது குறித்து வருத்தப் பட வேண்டிய அவசியமில்லை. இப்போது தெரிந்து கொண்டோம் அதைப் பதிவு செய்துகொள்வோம்.//
இங்கே முருகதாஸ் நின்றுவிட்டார் போலிருக்கிறது...
@மாய உலகம்
சூர்யா என்ற நடிகனை, அதற்காக அவர் தரும் உழைப்பு, அதை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். அவர் பெண்களின் ஆராய்ச்சிப் பொருள் மட்டுமல்ல -
இது தமிழரின் பெருமை பாராட்ட மட்டுமல்ல -
காப்புரிமை என்கிற பெயரில் நமது வளங்களை பறித்துக் கொண்டிருக்கிற சூழலை எதிர் கொள்வது எப்படி? அல்லது ஏற்கனவே மஞ்சள், வேப்ப இலை என்று பல பறி போன நிலையில் இருப்பதைக் காப்பாற்றுவது எப்படி? என்று அடுக்கடுக்கான கேள்விகள், நம்மை நாமே மீண்டும் மதிப்பிட்டுக் கொள்வதற்காகவும், நமது வாழ்வின் சூழலை மேம்படுத்துவதற்காகவும். .//
இது போதுமே.... அசத்தல் சகோ!
எதுவும் எழுத முடியவில்லைடா சாமி ... ]//
சுதந்திரம் என்பது நாட்டில் நிறைய விசயத்தில் பொய்யாக உலாவிக்கொண்டிருக்கிறது...
அதில் சொல்லப் பட்டிருக்கிற செய்திகள் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகளைக் கொண்டிருக்கிறது. சீனா நல்லவர்களைக் கொண்டிருந்தாலும் அதன் அரசு மென்வன்முறையை கட்டவிழ்த்து விடுகிற நாடாக இருக்கிறது என்பதும், அது இது போன்ற செயல்களைச் செய்வதற்குத் தயங்காது என்பதும் மனதில் வைத்து கொள்ளலாம். //
உங்களது அலசல்... நிறைய விசயங்களை சொல்லித்தருகிறது... பின்னி பெடலெடுத்துட்டீங்க சகோ! நன்றி.
ஏசு நாதர் கூடத்தான் இந்தியாவுக்கு வந்து கற்றுக் கொண்டு போய் அங்கே சொல்லிக் கொடுத்தது பெரிய மதமாய் ஆயிருச்சு. பஞ்சாங்கத்தை சரியாய் கற்றுக் கொள்ள முடியாததால முஹமது நபி சந்திரன் தெரியும் மூன்றாம் பிறையை முதல் நாளாய் வைத்து ஒரு காலண்டரை உண்டாக்கினார். (அவர் அப்பா,தாத்தா எல்லாம் மகேஷ்வர் கோவிலில் குருக்கள்தான்). இந்த இரண்டு செய்தியுமே நெட்டில் கிடைத்ததுதான். இந்தியாவின் மதம்தான் எல்லா மதங்களுக்குமே தாய் என்பதுதான் உண்மை.
@மாய உலகம்
முருகதாஸ் நிச்சயமாய் சில கேள்விகளை எல்லாருக்கும் ரீச் ஆக செய்திருக்கிறார். பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும் அவைகள் இந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்குமா என்று தெரியவில்லை.
@ashokha
கூகுளிங் எல்லா வற்றையும் சொல்லும்.
சரியான ஆய்வு தேவை இல்லையா?
@மாய உலகம்
///உங்களது அலசல்... நிறைய விசயங்களை சொல்லித்தருகிறது///
ராஜேஷ்
ரொம்ப நன்றி...
இந்தத் திரைப் படம் இது பல பதிவுகளுக்கு தொடக்கம் என்றே நினைக்கிறேன்...
எழுத வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன..
ஆறாம் அறிவை ஒழுங்கா பயன் படுத்தினாலே போதும் என்பது நச்
//
தென் தமிழகத்திலிருந்து கஜினி மூலம் வட இந்தியாவிற்கு பயணம் செய்த முருகதாஸ், காஞ்சீபுரத்திலிருந்து சீனாவுக்குச் சென்ற போதிதர்மரை கதைக் களனாக வைத்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தை வெறும் திரைப் படமாகக் கருதுவதா அல்லது வரலாற்று ஆவணப் படமாக எடுத்துக் கொள்வதா என்று குழப்பம்தான் நீடிக்கிறது.
//
அதே தான் எனக்கும்
@suryajeeva
ஜீவா,
அந்த ஆறாவது அறிவை இன்னும் சரியாகப் பயன் படுத்தாதுதான் அல்லது சரியாகப் புரிந்து கொள்ளாததுதான் பிரச்சனை...
@"என் ராஜபாட்டை"- ராஜா
நன்றி..
பார்த்தாச்சு ...
அருமையான விமர்சனம் தொடர்க
இந்தியாவில் இருந்துதான் எல்லா மதங்களும் பண்பாடும் உலகத்திற்கே சென்றது என்று ஒரு கூட்டம் சொல்லி வருகிறது அசோகா என்ற நண்பரை போல. ஆமாங்கடா ஆனா எல்லா நாடும் நல்லா முன்னேறி இருக்குது. அவன் அவன் எங்கேயோ போயிகிட்டு இருக்கான் நம்ம ஆளுங்க மட்டும் இன்னும் மத்தவன் அறிவை வச்சுகிட்டு இட்லி சுட்டு சாப்பிட்டு கிட்டு இருக்கான். போங்கடா நீங்களும் உங்க வெத்து வேட்டு பெருமையும். உருப்படியா எதையாவது செய்ய பாருங்கடா.
எனக்கும் குழப்பமா இருக்கே?
வரும் காலங்களில் இது போன்ற படங்கள் தேவை.
@சி.பிரேம் குமார்
நன்றி பிரேம்..
@வசந்த கணேஷ்
////இந்தியாவில் இருந்துதான் எல்லா மதங்களும் பண்பாடும் உலகத்திற்கே சென்றது என்று ஒரு கூட்டம் சொல்லி வருகிறது அசோகா என்ற நண்பரை போல. ஆமாங்கடா ஆனா எல்லா நாடும் நல்லா முன்னேறி இருக்குது. அவன் அவன் எங்கேயோ போயிகிட்டு இருக்கான் நம்ம ஆளுங்க மட்டும் இன்னும் மத்தவன் அறிவை வச்சுகிட்டு இட்லி சுட்டு சாப்பிட்டு கிட்டு இருக்கான்.////
உங்கள் ஆதங்கம் சரியானதுதான்.
அதற்குத்தான் சரியான ஆய்வும் தேவை என்று சொல்லியிருக்கிறேன். அதோடு கூட பதிவின் கடைசி வரிகளையும் நினைவு படுத்துகிறேன்.
தமிழர்களின் பொற்காலம் என்று சொல்லப்படுகிற கால கட்டங்களில் ரோமும், கிரேக்கமும், சீனாவும் கூட நாகரிகத்தில் வளர்ந்து இருந்தததாக சொல்லப் படுகிறது. அந்த ஒட்டு மொத்த நாகரிகமும் சில காலங்களில் அழிந்து போனது. அப்படியெனில் எது அவைகளிலிருந்து மாற்றியது என்கிற பறந்து பட்ட கேள்வியையும் முன்வைக்க வேண்டியிருக்கிறது.
@வசந்த கணேஷ்
அதுமட்டுமல்ல,
நீங்கள் சொன்ன முன்னேற்றம் என்பதின் அளவு கோல் என்ன என்பதும் விவாதிக்கப் படவேண்டியுள்ளதே!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
குழப்பத்திலிருந்து விடுதலை நிவாரணி -
இன்னும் ஆய்வு செய்திடல்தான்
@Sanjoy
வரும் காலங்களில் இதுபோன்ற ஆனால் இன்னும் சிரத்தைஎடுத்து, இன்னும் ஒழுங்காகப் பதிவு செய்ய வேண்டிய படங்கள் தேவை என்று சொல்லலாம்..
பகிர்வுக்கு நன்றி நண்பரே
நான் இதை வேறு கோணத்தில் எனது பதிவில்
எழுதியிருந்தேன்
(பிளாக் பக்கம் வந்தால் என்னை திட்டாமால் வாசிக்கவும்)
அருமையான அலசல் உங்கள் பதிவு
@ஹைதர் அலி
உங்கள் பக்கத்திற்குச் சென்றேன்.. பின்னூட்டமும் இட்டிருக்கிறேன்.
நல்ல பதிவு ..
இது போன்ற ஒரு பதிவை தனியாக எழுதலாம் - அதாவது போதி தர்மர் தமிழரா? என்கிற கேள்வியை மட்டும் வைத்து நீங்கள் எழுதியதையே மீள் பதிவு செய்யுங்கள்.
திரைப் படம் என்பது வணிகம் சம்பந்தப் பட்டது. எனவே முருகதாஸ் அந்தத் துறை சம்பந்தப் பட்டவர் என்பதால் வணிக நோக்கில் அவர் சொல்ல வந்த ஒரு செய்தியை சொல்லி இருக்கிறார். பொன்னர் சங்கர் ஒரு குத்துப் படமாகி விட்டதென்றால் அது இயக்குனர் மற்றும் கதாசிரியர் தவறு. அதற்கு பொன்னர்-சங்கர் என்ன செய்வார்கள் பாவம். அதே தான்... போதி தர்மர் வாழ்க்கை ஒழுங்காகச் சித்தரிக்கப் படவில்லைஎன்று நீங்கள் நினைத்தால் பாவம் அவர் என்ன செய்வார்?...
வணக்கம்...
பதிவுலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எழுதுகிறாற்கள் விமர்சனத்தை எனக்கு இந்த படத்தின் பாடல்கள் பிடித்திருக்கு நாளை படமும் பார்பதாய் உள்ளேன்..ஹி ஹி
@காட்டான்
நல்லாப் பார்க்கலாம்.
பாடல்கள் தனியாய்க் கேட்க நன்றாய் இருக்கிறது...
படத்தில் வரும் போது, பாடல்கள் இல்லையென்றால் இன்னும் விறுவிறுப்பாய் இருந்திருக்குமோ என்றே எனக்குத் தோன்றியது.
நல்லா விவாதிச்சிருக்கிங்க!
கடைசியா சொன்ன விஷயம் நச்!
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்