தீப விழா வாழ்த்துக்கள்...
நல்லாக் குளிப்போம் - எண்ணெய் தேய்த்துக் குளித்தல் உடம்புக்கு நல்லது...
கந்தலானாலும் கசக்கிக் கட்டுவோம் - ஆனால் அப்படிப் பட்டவர்கள் யாரும் வலைப் பக்கம் வருவதில்லை என்பதனால்
கசக்கிக் கட்டும் யாருக்காவது ஒரு புதிய உடை பரிசளிப்போம்.
நன்றாய் உணவருந்தி - அருகில் இருப்போரோடு பகிர்ந்துன்னுவோம்.
இருக்கிற விலை வாசியில்
யாரும் பட்டாசு கொழுத்தி காசை கரியாக்க வேண்டாம்.
அந்தக் கரியால் சூழலை மாசு படுத்த வேண்டாம்.
[சிவகாசி மக்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது]
அது மட்டுமல்ல வெடி வெடிக்கிற ஆசைதான் நம்மை அணு வெடி, அணு குண்டு வரை விட்டிருக்கிறது. இப்போ அணு உலை வெடி பார்ப்பது வரை நம்மை வளர்த்து விட்டிருக்கிறது.
தீப விழாவில் மின்சார விளக்குகளை அனைத்து விட்டு [அப்படியே தொல்லைக் காட்சியையும் சேர்த்து] எண்ணெய் விளக்குகள் ஏற்றி, அந்தத் தீப ஒளி வெள்ளத்தில் குடும்பத்தோடு கும்மாளம் இடுங்கள்.
அனைவருக்கும் தீப விழா வாழ்த்துக்கள்.
11 comments:
மகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@suryajeeva
நன்றி
உங்களோடு எனது மகிழ்வைப் பகிர்ந்து கொள்வதில் இன்னும் மகிழ்ச்சியே.
@வைரை சதிஷ்
சதீஷ்,
மிக்க நன்றி...
உங்களுக்கும் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
@Rathnavel
ஐயா, அம்மா,
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
தீபாவளிக்கு ஏற்ற புத்திமதியே. சூழலும் சுகமும் நலமபெற சொன்ன வரிகளுக்கு தீபாவளிவாழ்ததுடன் இணைந்த வாழ்த்துகள்.
@சந்திரகௌரி
வாருங்கள்...
நன்றியும் வாழ்த்துக்களும்..
எண்ணெய் விளக்குகள் ஏற்றி, அந்தத் தீப ஒளி வெள்ளத்தில் குடும்பத்தோடு கும்மாளம் இடுங்கள்.//
அருமையா சொல்லியிருக்கீங்க சகோ!
சிறப்பா சொல்லி இருக்கீங்க.. இப்பல்லாம் தீபாவளி என்றாலே டீவி யும் பட்டசும் இனிப்பும் மட்டுமே என்று ஆகிவிட்டது.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
http://anubhudhi.blogspot.com/
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்