4.10.11

மீண்டும் வெடிக்கும் அணு உலை விவாதம்

பத்ரி சேஷாத்ரி மிகவும் துணிச்சலாகவும், விவாத முறைகளையும் முன்வைத்து எழுதும் ஒரு நல்ல கட்டுரையாளர். அவரை நான் அவ்வப்போது வாசிப்பதுண்டு. அணு உலை பற்றி தமிழ் பேப்பரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் - இந்தக் கட்டுரையைப் படித்த பின்பு அவர் எழுதிய கட்டுரைகளில் தெளிவின்றி, விவாத முறைகள் குழப்பப் பட்டு உள்ள கட்டுரை அல்லது கேள்வி பதில் என்றால் இதைச் சொல்லலாம் என்றே கருதுகிறேன். அது அவரது பிரச்சனை அல்ல - அவர் பதிவின் பொருள் அப்படி - "அணு." அதுதான் அவரை அலைக்கழித்து விட்டது என்று கருதுகிறேன்.

அவரது கட்டுரை கொடுக்காத சில உண்மையான தகவல்களை அதிலுள்ள பின்னூட்டங்களிலேயே காணலாம். இருந்தாலும் சில தெளிவுகள் தர வேண்டிய அவசியம் உள்ளதால் இந்தப் பதிவு. ஏனெனில் மீண்டும் ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் அறிவிக்கப் பட்டிருக்கிற நிலையில் இதைப் போன்ற கட்டுரைகள் வரலாம் என்பதால் இந்தப் பதிவு.

இந்திய ஜனநாயகத்தில் மக்கள் போராட்டங்கள் பெற்றிருக்கிற வெற்றி ஜனநாயகம் வளர்ந்து வருவதற்கான வெற்றி என்று பாராட்டிவிட்டு,  பத்ரி [பலர் எழுப்பும் கேள்விகளுக்கு] தனது கேள்வி பதில்களுக்குச் செல்கிறார். 
என்னைப் பொறுத்தவரை - அவர் கேள்வியை முன்வைத்திருப்பதில் உள்ள கருத்துத் தெளிவு பதில்களில் இல்லை என்றே தோன்றுகிறது. 

முதல் கேள்வியின் சாரம் - அணுமின்சாரம் தயாரிக்க நிறைய செலவு ஆகிறது - மின்சாரமும் போதிய அளவு கிடைப்பதில்லை அப்புறம் ஏன் ஆபத்தான இதைக் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டும் என்று கேட்கிறார். 
இந்தக் கேள்விக்கான பதிலை - கேள்வியில் எங்கே தவறு இருக்கிறதென்று பார்ப்போம் என்று சொல்லி தவறையும் சுட்டிக் காட்ட வில்லை - அவர் எழுப்பிய கேள்விக்கான பதிலும் இல்லை. அதாவது இதில் மின்சாரம் தயாரிக்க நிறைய செலவு ஆகவில்லை என்பதோ அல்லது மின்சாரம் போதிய அளவு கிடைக்கும் என்பதோ அவரது பதிலாக இல்லை. அந்தப் பதில் எப்படிக் குழப்பப் பட்டிருக்கிறது என்று நீங்கள் தான் படிக்க வேண்டும். அதாவது இந்தக் கேள்வியின் தவறு என்பது நாம் அணு ஆயுதச் சோதனை செய்தது என்கிறார். வரலாற்றை நீங்கள் மாற்ற முடியுமா? அதாவது 20  ஆண்டுகளுக்கு முன்பே இவைகள் கட்டப் பட்டிருந்தால் இந்தக் கேள்விகள் எழுந்திருக்காது என்கிறார்.

  • இருபது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டிருந்தாலும் அல்லது நிறைய மின்தேவைகளைப் பூர்த்தி செய்திருந்தாலும், அப்படி உலக அரங்கில் அவைகளைக் கட்டமைத்த நாடுகளில் இன்றைய பொழுதில் அவைகளை நிறுத்துவதற்கான முயற்சியில் இன்று இருக்கிறப் போது, இந்தியாவில் அப்படி முப்பது ஆண்டுகள் முன்பு அமைத்திருந்தாலும் இன்றைக்கு அந்தக் கேள்வி மீண்டும் எழவே செய்யும்.
இரண்டாவது கேள்வி - கதிர்வீச்சு அபாயம் பற்றி - அது ஆமாம் உண்மைதான் என்கிறார் பத்ரி. ஆனால் புகுஷிமாவில் கூட அத்தகைய கதிர்வீச்சுகள் ஏற்படவில்லை என்று பத்ரி சொல்லுகிறார்.  ஆனால் அது தவறு என்பதை புலவர் தருமி பின்னூட்டத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார். 
  • இந்தக் கேள்வியில் தான் பத்ரி தனியாய்த் தெரிகிறார். அதாவது நில நடுக்கம் இல்லாத இடங்களில்தான் அணு உலை அமைக்கிறார்கள் என்கிறார் - அப்படி முற்றும் வராத இடங்கள் என்று ஏதாவது இருக்கிறதா - அப்படி அறிவியலாளர்கள் ஒரு இடத்தைக் காண்பிக்க முடியுமா - நிலத்தின் தன்மையை வைத்து இங்கே ஏற்படுவது கடினம் என்று சொல்லலாம். ஆனால் அப்படிப் பட்ட இடங்களிலெல்லாம் நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நினைவு படுத்தலாம்.  
  • சரி அப்படியே நில நடுக்கம் ஏற்படாத பகுதிகள் என்றால் - அதற்காக மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் வைக்க முடியுமா? பின்னூட்டத்தில் உள்ளது போல அண்ணா நகர் பக்கத்திலோ, அல்லது கடல் அருகில்தான் வைக்க வேண்டும் என்றால் மும்பையிலோ அல்லது கொச்சினிலோ வைக்கலாமே.  
  • இவ்வளவு பணிகள் முடிவடைந்த நிலையில் இதைக் கைவிட முடியுமா என்று அடுத்த கேள்வியைக் கேட்கலாம் - அதற்காக முப்பது வருஷத்துக்கு முன்னாடி உள்ள அருதப் பழசை இப்பக் கட்டி அழனுமா என்ன?
  • அப்படி ஏன் இந்த அபாயத்தை நாம் கட்டி அழணும்னா நமக்குத் தேவை இருக்கு அப்படின்கிறார் பத்ரி. இதுக்கு என்ன பதில் சொல்ல முடியும் - இது எவ்வளவு மின்சாரத் தேவையை நிறைவேற்றும் என்று பதிலைச் சொல்லாத வரை இதைப் பற்றி பேச முடியாது. ஆனால் இதற்குச் செலவழிக்கும் தொகையையும் அதனுடைய பராமரிப்புச் செலவுக்கும், சில ஆண்டுகள் கழித்து மூட வேண்டிய அவசியம் உள்ள இந்த அணு உலைகள், கழிவுகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்றெல்லாம் பார்த்தால் - இதனால் கிடைக்கும் மின் உற்பத்தி அதிகம் என்று சொல்லுவதிர்கில்லை.
  • எல்லா மின் நிலையங்களும் மிகப் பாதுகாப்பானவை - உடனே கதிரியக்கத்தை செயலிழக்கச் செய்யுமாம் - ஆனால் புகுஷிமாவில் அது நிகழாமல் போனதற்கு காரணம் மனித காரணமாம். இதனால்தானே மீண்டும் மீண்டும் சொல்கிறோம். இது ஒத்து வராதுன்னு. 
  • ஜப்பானிலேயே இப்படி என்றால் நமக்கெல்லாம் இது சரி வராது என்கிற வாதம் தவறு என்றும், இந்தியாவிலே கவனமின்மை என்பது படிக்காதவர்களிடமிருந்தும் சாக்கடை அல்லுபவர்களிடமிருந்தும், மின்சாரம் திருடபவர்களிடமிருந்தும் தான் வருகிறது என்றும் அழுத்திச் சொல்லுகிறார். இதற்கு படிப்பவர்கள்தான் [இந்தப் பதிவைப் படிப்பவர்கள்] பதில் சொல்ல வேண்டும். அணு மின் உலையைப் பொறுத்த வரை எல்லாம் படித்த விஞ்ஞானிகள் தான் வேலை செய்வார்களாம். அதனால் எந்தக் கவனமின்மையும் நிகழாதாம்.
  • அதாவது இதை வேறொரு கோணத்தில் பார்த்தால் இன்னும் நமக்குச் சரியாகப் புரியும். ' இந்தியாவில் கவனக் குறைவினால் ஏற்படும் விபத்துக்கள் படிக்காதவர்களிடமிருந்துதான் வருகிறது. அப்படியானால் படித்தவர்கள், நிச்சயமாய் கவனத்தோடும், ஆழ்ந்த அறிவுப் புலத்தொடும், மிகவும் பொறுப்புணர்வோடும் அல்லது ரெச்பான்சிபிலாகவும் நடந்து கொள்ளுவார்கள். இதைச் சரி என்றால், எங்கெல்லாம் விபத்து நடக்கிறதோ அங்கெல்லாம் படிக்காதவர்கள் இருக்கிறார்கள் - எங்கெல்லாம் பொறுப்புணர்வு குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் படிக்காதவர்கள் இருக்கிறார்கள் என்றுதானே பொருள்.  நான் செய்வது விதண்ட வாதம் என்று எனக்குத் தெரியும். ஆனால் "நம் நாட்டில் நடக்கும் கவனமின்மை காரணமான தவறுகள், கல்வி அறிவு அற்றவர்களிடமிருந்து ஏற்படுகிறது. அது பூச்சிமருந்தைச் சரியாகப் பயன்படுத்தாதலிருந்து மின்சாரத்தைக் கொக்கிபோட்டு இழுப்பதிலிருந்து சரியான பாதுகாப்புக் கவசங்களை அணியாமல் சாக்கடையை அல்லது கழிப்பறைக் கிடங்குகளைச் சுத்தம் செய்வதுவரை செல்கிறது." - இந்த பதிலுக்கு வேறெப்படி பதில் சொல்லுவது என்று எனக்குத் தெரிய வில்லை. அவர் சொல்லுவதே உண்மைஎன்றால் இந்திய அரசின் முதல் கவனம் முழுவதும் இந்திய தேசத்தை கல்வியறிவு உள்ள நாடாக ஆக்குவதற்குத் தானே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படித் தானே எல்லாரையும் படிப்பறிவு உள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் மாற்ற முடியும்.
  • அது மட்டுமல்ல இந்தியா என்கிற தேசத்தை மிகவும் பாதுகாப்புள்ளதாக, இந்த தேசம் இப்படித் தான் இருக்கும் என்கிற எண்ணத்தை அணு உலைப் பாதுகாப்பிலிருந்து தொடங்குவோம் என்கிறார். எனக்கு அந்த நம்பிக்கையின் மீது சந்தேகம் இல்லை. இந்தியா மிகவும் பாதுகாப்பான மற்றும் பொறுப்புணர்வு உள்ள குடிமக்களை உருவாக்க வேண்டும் என்பதிலோ அல்லது அப்படி வருவோம் என்பதிலே எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. அதற்காக இந்தப் பாதுகாப்பிலிருந்து மாற்றத்திற்குப் போவோம் என்பதுதான் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடிய வில்லை.  அது எப்படி அணு உலையிலேர்ந்து சாதாரண குடிமகன்களின் பொறுப்புணர்வுக்குப் போக முடியும் என்பதே கேள்வி. 
அடுத்து பத்ரியின் கேள்வி - மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் ஏன் இதை அமைக்க வேண்டும் என்பதற்கு நாட்டில் எங்கே மக்கள் இல்லை என்கிற கேள்வியைக் கேட்கிறார். அதோடு மக்களே எதிர்பார்க்காத அளவுக்கு நஷ்ட ஈடு கொடுத்து அவர்களை மாற்று இடங்களில் அமர்த்த வேண்டும் என்கிறார். அதாவது கூடங்குளம் பகுதியில் மக்கள் அடர்த்தியாக வசிப்பது போலத்தான் இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் குடியிருப்பதாகச் சொல்லுகின்றார் - அப்படியெனில் இந்தியா சீனாவை முந்தியிருக்க வேண்டு எண்ணிக்கையில்- சரி அதை விடுங்க...

அடுத்தது அணுஉலைக் கழிவுகள் பற்றியது - ஆமாம் அது அபாயம்தான் - என்கிறார். ஆனால் எதிர் கொள்ளக் கூடிய பிரச்சனை என்று சொல்லுகிறார்.
அதே போல மரபு சாரா முறைகள் வழியாக மின்சாரம் தயாரிப்பதால் இப்போதையத் தேவையை நாம் நிவர்த்தி செய்ய முடியாது என்பதோடு மட்டுமல்ல நாம் இதைப் பற்றி நியமான கேள்விகள் எழுப்பலாம் ஆனால் அதிகமாக பயமுறுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது என்பதோடு கட்டுரை முடிகிறது.

  • கேட்கப் படுகிற கேள்விகளுக்கு சரியான விளக்கம் இருந்தால் யாரும் மீண்டும் மீண்டும் கேட்கப் போவதில்லை. ஒவ்வொரு முறையும் கேட்கப் படும் கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை என்பதனால்தான் மீண்டும் மீண்டும் கேட்கப் படுகின்றன. நியமான கேள்விகளை எழுப்பிய பத்ரியின் கேள்விகளுக்கே அவராலேயே நியாயமான பதில்களைச் சொல்ல முடியவில்லை என்பதிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். 
  • பத்ரியின் கட்டுரையைப் படிப்பவர்கள் எல்லாரும் அவரது கட்டுரையில், கேள்விகளையும் அதைத் தொடர்ந்து வரும் முதல் பத்தியை மட்டும் படித்தீர்களானால், அணு உலை ஆபத்து என்பது எவ்வவளவு அதிகம் என்று தெரியும். எல்லாவற்றையும் ஒத்துக் கொள்ளுகிற அவர் ஏன் இன்றும் அணு உலை தேவை என்பதைத் தெளிவின்றியே - குழப்பியே எடுத்து வைக்கிறார். இது எப்படி இருக்கிறதென்றால் - நான் மன்மோகனைக் குறை சொல்வேன். அது சரியில்லை, இது சரியில்லை ஆனால் யாருக்கு அடுத்த முறை ஓட்டுப் போடுவாய் என்று கேட்டால் மன்மோகனுக்குத் தான் என்று நான் சொல்லுவது எவ்வளவு அபத்தமோ அப்படித் தான் அணு உலை அபாயமும். அணு உலை அபாயம்தான் ஆனால் அதுதான் வேண்டும் என்பது. 
  • அல்லது இப்போது உள்ள சூழலில் மன்மோகன்தான் ஒரே சாய்ஸ் என்பது போல அணு தான் ஒரே சாய்ஸ் என்று வாதிடலாம். அது தவறு - மாற்று பற்றி எதுவும் யோசிக்காமல், அது ஒத்து வராது என்பது தவறல்லவா. மாற்று வழி மின்சாரம் எதையும் முன்னேடுக்காமலேயே -[உ.ம். சூரிய ஒளியிலிருந்து] அதெல்லாம் ஒத்து வராது என்பது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை.
  • பத்ரியின் கேள்வி மற்றும் பதில்களின் முதல் பத்தி அடிப்படையில் பத்ரி அணு உலை எதிர்ப்பாளராகவே தெரிகிறார். 
  • ஆனால் ஏன் இதற்கும் மேலான கருத்துக்களை உள்ளடக்கி தமிழ் பேப்பரிலேயே வந்த கட்டுரைகளைஎல்லாம் கவனிக்க மறந்தார் என்பது தெரியவில்லை.

இந்தப் பகுதிகளை வாசிக்க இணைப்பான்களைச் சுட்டவும்.

பத்ரியின் முரனான கருத்துக்களுக்கு புலவர் தருமியின் பின்னூட்டம் - கட்டுரையின் பக்கமே.

சிறில் அலெக்ஸின் இரண்டு கட்டுரைகள்.

பாமரனின் கடிதம் - சோவியத் அதிபருக்கு 





6 comments:

SURYAJEEVA சொன்னது…[பதிலளி]

கலக்கிட்டீங்க தோழர்... அதை விட கொடுமை சூரிய சக்தியை பயன்படுத்துவது சரி வராது என்று இவர்கள் கூறும் காரணங்கள் தான்... அனைத்தும் மேற்கு நாடுகளின் சூழ்நிலையை வைத்து கூறுகிறார்கள், நம் நாட்டில் அதற்க்கான எண்ணமே நம் அரசுக்கு வரவில்லை போலிருக்கிறது

Unknown சொன்னது…[பதிலளி]

ஜீவா நன்றி.
அதாவது அணு உலை வேண்டாமென்று சொல்லுகிறவர்கள் அறிவியலின் வளர்ச்சி வேண்டாம் என்று சொல்லுவதாகத் தவறாகவே புரிந்து கொள்ளுகிறார்கள். நாம் வளர்ச்சியின் எதிரிகள் அல்ல.
நமக்கு அணுஉலை வேண்டாம் மாறாக அதற்கான மாற்று வழிகளை முன்னெடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

கூடல் பாலா சொன்னது…[பதிலளி]

நல்ல விளக்கமான பதிவு அண்ணாச்சி .எனக்கு சமுதாயத்தின் மீதான கவலை ஒன்று உள்ளது .சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பதற்காகவே அணு உலைக்கெதிராக உயிரைப் பணயம் வைத்து போராடுகிறோம் .ஆனால் நம் தமிழ் சமுதாயத்தின் பெரும்பகுதி அணு உலையை இன்னமும் ஆதரிக்கிறது .அனேக இணைய தளங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகள் இதற்கு சான்றாக உள்ளது .தேவையான விஷயங்களில் தக்க சமயத்தில் விழிப்புணர்வடையாவிட்டால் அனைவரும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியது வரும் .

Unknown சொன்னது…[பதிலளி]

வணக்கம் கூடல் பாலா,
உண்ணாவிரதப் போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்று மீண்டு வந்ததற்கு.
முடிந்த வரை மக்களின் அணு உலை ஆதரிப்பில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்ட முயற்சிப்போம்.

Unknown சொன்னது…[பதிலளி]

ஒரு நல்ல விஷயத்தை நல்ல கட்டுரையாக போட்டுருக்கீங்க நண்பா

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

உயிரோடு விளையாடும் எந்த தொழில் நுட்பத்துக்கும் ஆதரவாக பேசுபவர் எவ்வளவு பெரிய கவியாக இருந்தாலும்...கட்டுரையாளராய் இருந்தாலும் அடிப்படையில் முட்டாளே...

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்