30.8.11

காஞ்சிபுரத்துக் கண்ணகியா மதுரைச் செங்கொடியா?


நீதி
கேட்டு மதுரையை
எரித்தாளாம் கண்ணகி –
      
          நீதி
         கேட்டு உன்னையே
          எரித்தாயே செங்கொடி

ஆராயாமல்
வழங்கிய அநீதிக்கு
மதுரை எரிந்தது

          அடித்து/உதைத்து
          வழங்கிய அநீதிக்கு
          நீ எரிந்தாய்.

ஒருவன் இறந்ததற்காய் 
ஊரே எரிந்தது அன்று

          மூவர் உயிர் வாழ
          உன் உடல் எரிந்ததே இன்று

அன்றும் அநீதி
இன்றும் அநீதி [தமிழகத்தில்]
நீதி கேட்டவள்
அன்றும் பெண் இன்றும் பெண்.

நீ காஞ்சிபுரத்துக் கண்ணகிதான்.

ஆனால்
கண்கண்ட கணவனுக்காய்
ஊரை எரித்த கண்ணகியைக் காட்டிலும்
காணாத தமிழருக்காய்
உன்னையே எரித்த செங்கோடியே -
நீ ஆயிரம் மடங்கு மேல்.

நீதி கேட்டு
யாரேனும் வெகுண்டு எழுந்தால்
அடித்துச் சொல்லுவேன்
அவள் செங்கோடி என்று.

* * *

நீதிகேட்ட செங்கோடியே, உனக்கும் முத்துக்குமாருக்கும் ஏதாவது சொந்தமா? பந்தமா? இருவருமே உங்கள் உடலை போராட்டத்திற்கான ஆயுதமாக்க வேண்டும் என்றல்லவா எரித்திருக்கிறீர்கள். உயிர் கொடுத்துப் போராடும் திட மனம் படைத்தவர்கள் இப்படி ஒவ்வொருவராய் மாண்டு கொண்டிருந்தால் யார்தான் திடமாய் களத்தில் நிற்பார்? உறுதியாய் நின்று களத்தில் மடியாமல் உயிரை மாய்த்தல் தவறே.

தன்னைச் சாய்த்துக் கொள்ளுதல் சத்தியாக்கிரகம்தான் – அன்னா சாய்ந்தால் அது சத்தியாக் கிரகம் – நீ சாய்ந்தால் சத்தியாக்கிரகமா – பின்னால் மீடியாக்கள் வருமா? நீதி உரத்தக் கேட்குமா? யாரும் வரவில்லைஎனினும் இதுவும் சத்தியாக் கிரகம்தான். ஆனாலும் உறுதியாய் நின்று களத்தில் மடியாமல் உயிரை மாய்த்தல் தவறே.

நீ செய்தது சரியில்லைதான் – இருந்தால் இன்னும் நிறைய குரல் கொடுத்திருக்கலாம்தான் – எரிந்தே இங்கே பலருக்கு அது தெரியவில்லையே பேசியிருந்தால் கேட்டிருக்குமா?

* * *

எழுதி அடித்தது

[எரிந்து போகும் கண்ணகியை விட / எரிக்கும் கண்ணகிதான் தேவையோ?]

அடித்துதான் எழுத வேண்டும் போலிருக்கிறது.

* * *

காஞ்சிபுரத்துக் கண்ணகியே
கண்ணகி சிலையையே
மதிக்காதவர்
கண்ணகியின் உயிர் பிரிவை
மதிப்பாரா?

* * *



5 comments:

N.H. Narasimma Prasad சொன்னது…[பதிலளி]

சிலிர்க்க வைக்கும் கவிதை.

rajamelaiyur சொன்னது…[பதிலளி]

Really super

Unknown சொன்னது…[பதிலளி]

நன்றி தோழர்களே

கவிதை பூக்கள் பாலா சொன்னது…[பதிலளி]

kavithai arumai aanal thayavu seithu itha aatharikkaatheerkal . porattathil uyir pokalaam ippadi thannai thaane eriththu kolvathu seiyatha kutrathirkku ivarkal etharku uyiraividadum athuvum kodumaiyaaka, moovarin uyirai kappatrathan porattame athil entha uttamum seiyatha oru ilam pen thee kuliththu maranam kettkum pothe thudikinrathu.

Unknown சொன்னது…[பதிலளி]

"kavithai arumai aanal thayavu seithu itha aatharikkaatheerkal . porattathil uyir pokalaam ippadi thannai thaane eriththu kolvathu seiyatha kutrathirkku ivarkal etharku uyiraividadum athuvum kodumaiyaaka, moovarin uyirai kappatrathan porattame athil entha uttamum seiyatha oru ilam pen thee kuliththu maranam kettkum pothe thudikinrathu."

பாலா, கருத்துக்கு நன்றி.
அவரது பார்வையில் இருந்து அவரின் உயிர் மாய்த்தல் உயிர் கொடுக்கும் என்று நினைத்து இறந்தவருக்கான அஞ்சலியே தவிர
இது வழி மொழிவதல்ல.
நான் இத்தகைய தற்கொலைகளை ஏற்பவன் அல்ல.
"உறுதியாய் நின்று களத்தில் மடியாமல் உயிரை மாய்த்தல் தவறே."
"ஆனாலும் உறுதியாய் நின்று களத்தில் மடியாமல் உயிரை மாய்த்தல் தவறே."
என்று இருமுறை பதிவு செய்திருக்கிறேன்.
என்ன அது தவறென்று இன்னும் அழுத்தமாய்ச் சொல்லியிருக்கலாம் தானே.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்