5.8.11

சோ - வெனப் பெ [பொ]ய்யும் சமத் தாழ்வு மழை


தமிழகத்தின் மிகச் சிறந்த காமெடியனும், மிகச் சிறந்த பத்திரிக்கையாளரும், தலை சிறந்த அரசியல் ஆலோசகரும், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப் படக்கூடிய திறமை வாய்ந்தவரும், வாதங்களை எடுத்து வைப்பதில் வேறு யாரைக் காட்டிலும் புலமை நிறைந்தவரும், - எனப் பலராலும் போற்றப் பட்டுக் கொண்டிருக்கிற சோ - வின் தலை சிறந்த வாதங்கள் நிறைந்த கட்டுரையை வாசிக்க நேர்ந்தது.  இட்லி வடை வரை சென்று அதைப் படித்துவிட்டு பிறகு இங்கு வந்து வாசிக்கலாம். 
அதற்குப் பின்னூட்டம் போடலாம் என நினைத்து பிறகு இங்கே பதியலாம் என எழுதுகிறேன்.

அந்தக் கட்டுரைக்குப் பதில் மொழி எழுதி அக்கட்டுரை - விளம்பரப் படுத்தப் படுமோ என்கிற வேதனை இருந்தாலும் - அது என்னமோ மிகச் சிறந்த கட்டுரை என்பதுபோலவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது போலவும் எழுதியிருக்கிற மக்களைப் பார்க்கிற போது....
சோவின் வாதம் - சமத்துவம் தவறு என்பதுதான். சாதி ஒழிப்பு தவறு - பிராமண எதிர்ப்பு தவறு. - சாராம்சம் இதுதான்-  அதில் வேற சுக்கு ஒன்னும் இல்லை. இதுக்கு மேல நாம் எழுதினா நாம் வாதத்தை திசை திருப்போரோம்னு சொல்லுவாங்க. ஆனா அவர் நல்லா திருப்பலாம்.
 • ஐம்பது வருடங்களுக்கு முன்பு அவர்கள் பேசிய வசனமாம் - அப்ப இத்தனை ஆண்டுகள் எதுவும் மாறலை என்பதை விட - இவர்கள் பத்திரிகை  நடத்தி எதையும் மாற விடாமல் செய்துகொண்டிருக்கிறார்கள் - அப்படியா? நாடு எந்த விதத்திலும் வளர்ச்சியடையக் கூடாது - அப்போதுதான் இவர்கள் கிண்டல் செய்யலாம் - கேலிப் படங்கள் வரையலாம். பத்திரிகை  நடத்தலாம். 
 • சமச்சீர் என்ற சென்ற ஆட்சியாளர்கள் "ஸ்டன்ட்" அடித்தார்களாம்  ஆனால் அதை எதிர்க்கும் இன்றைய ஆட்சியாளர்கள் உண்மையானவர்களாம் - மாணவர்கள் மீது அக்கறை கொண்டவர்களாம் - திராவிடம் என்பது பற்றி பேசாமல் அதனால் சமத்துவம் பற்றி பேசாமல் - ஏற்றத் தாழ்வை எப்போதும் உயர்வாய் வைக்கிறவர்கள்.
 • இந்த வக்கீல் - ஸ்டே ஆர்டர் பற்றியெல்லாம் பேசுவார்கள் - அனால் இந்த விஷயத்தில் மட்டும் இவர்களுக்கு எதுவும் புரியவில்லை. உயர் நீதி மன்றம் தவறு - உச்ச நீதி மன்றம் தவறு- இவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் நீதி மன்றம் சரி - இல்லையென்றால் தவறு. 
 • "சமச்சீர் வக்காலத்துகள் வாய்ச்சவாடல்களாம்" - இவர்கள் மட்டும் என்ன சவடால்கள் என்று தெரியவில்லை.
  • சமச்சீருக்கும் விமானத்திற்கும் முடிச்சுப் போடுறாரு. படிக்கிற ஆளுங்கல்லாம் ஆமா - சோ தான் கரீட்டு - ன்னுறாங்க. எல்லாரும் விமானத்தில் போவதற்கான CAPABILITY இருக்காங்குறது வேற - எல்லாரும் துக்ளக் மட்டும்தான் படிக்கணும்னு சொல்லலை தலைவரே - எல்லாரும் துக்ளக் வாங்குறதுக்கான "வாங்கும் திறன்" இருக்காங்கிறதுதான் கேள்வி - அதுனால எல்லாரையும் நடந்து போகச்சொல்லலை - ரன் வே போடுறதுல மட்டும் கவனம் செலுத்தாம கிராமங்களுக்குக்கும் போக்குவரத்து வசதிக்கு வழி பண்ணுங்க - சென்னையில மட்டும் எல்லா வசதிக்கும் வழி பண்ணாதிங்க - தமிழ் நாட்டுல உள்ள எல்லாரும் வசதியோட வாழம்னு சொன்னா.. 
  • நல்ல ஹோட்டல் மோசமான ஹோட்டல்தான் இருக்குமாம் - எல்லா கடைகளிலும் கிடைக்கும் பொருள் சுத்தமான பொருளாய் இருப்பதற்கு அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் - சில கடை மோசமாய்த் தான் இருக்கும், சில கடைதான் சுத்தமாய் இருக்குமாம் - அப்புறம் என்ன ராசா -அதுதானே சொல்ல வர்றீங்க -டீ மட்டும்  சாப்பிடறவன் வக்கத்தவன் - அவன் உருப்பட மாட்டான் - நீங்க மட்டும் நல்லா இருங்க - 
  • அப்புறம் அரசுப் போக்குவரத்து - அரசு அலுவலர்கள் அரசுப் போக்குவரத்துப் பேருந்தில் போகச் சொல்லுவதில் கிண்டல் வேற... ஹுண்டாய் ல வேலை பார்க்கிற இவர் மாருதி கார்ல போய் இறங்கச் சொல்லுங்க ... இவங்க கோயில்ல மட்டும் வேற யாரும் போகக் கூடாது ஆனா அரசு அலுவலகங்கள்ல வேலை பார்க்கிறவன் அரசுப் பேருந்துல போகச் சொன்னா இவருக்கு என் வருத்தமா இருக்கு...
  • இது போல நிறைய சவாடல்கள் ---
 •  எவ்வளவு கோபம் பாருங்க - "ல்லாம் சமத்தாழ்வு வேண்டாமா? இதுதான் லட்சியம் என்றால் – பேசாமல், கம்யூனிஸப் பிரேதத்தை, அதன் சமாதியிலிருந்து தோண்டி எடுத்து, அந்தப் பிரேதத்திற்கு சமநீதி இயந்திரத்தைப் பொருத்தி, அதை இயக்கி, முழு சமத்தாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்!"    அவருக்கு என்ன பிரச்சனைன்னா உயர் நிலையில இருக்கிற எல்லாரையும் கீழ இழுக்கிறோம் அப்படின்றதுதான் பிரச்சனை. 
 • தரமான கல்வி கொடுக்கத்தான் ஜெயலலிதா சமத் தாழ்வு கல்வியை எதிர்க்கிறாராம் - தரமான கல்விக்கு தமிழக முதல்வரும் மிகச் சிறந்த உதாரணமாம்.  என்ன அருமையா - முந்தைய ஆட்சியாளர்கள் ஸ்டன்ட் அடிக்கிறார்களாம் - இவர் மட்டும் தரம் தரும் தனியார் கல்வியை ஊக்குவிக்கும் உத்தமாராம் - 
 • அடுத்து சித்த மருத்துவம் பற்றி வேற - அய்யா - மாற்று மருத்துவத்திற்கு வழி விடுங்க -
 • இதுக்கு மேல எழுதணுமா என்ன? 
 • விழித்துக் கொள்ள வேண்டும் என்று வேறு எழுதியிருக்கிறார் - நாம்தான் விழித்துக் கொள்ள வேண்டும் - சமச்சீர் கல்வியை vதிர்ப்பதன் மூலம் - நாட்டில் ஏற்றத் தாழ்வும், சீர் கெடும், சாதியமும் தலை விரித்தாடும் - அதுதான் வேண்டும் என்று ஷோ காட்டியிருக்கிறார். 
 • அவரது வாதங்களுக்குப் பின்னே உள்ளது ஒன்றே ஒன்றுதான் - அதை ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. முன்பு மோசமாய் இருந்த பாடத்திட்டமே கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கெல்லாம் போதும். அவர்களுக்கு எல்லாம் பள்ளிக் கூடமே தேவையில்லை - இதுல இதுவேறயா என்பதுதான் சோ - வின் வதம். ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் இருக்க வேண்டும் - இதுதான் அவரின் நோக்கம். விஷத்தை எவ்வளவு அழகாய்ப் பூசி மொழுகுகிறார். 
  • எல்லாரும் எழுத வந்துட்டா என்ன ஆகிறது - சோ - வுக்கு வருத்தமெல்லாம் பதிவர்கள் மீதுதான் - எல்லாரும் எழுத வந்துட்டால்--- அவனவன் அவனவனுக்குப் பகவான் கொடுத்த வேலையைச் செய்துடால் அவாளுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.  நம்மாலும் படிக்கிறதுனால, எழுதுறதுனாலதான் பிரச்சனையே. அதனால் சோ எனா சொல்ல வர்றார்ணா ...
 • ஏற்கனவே இது போன்ற விவாதங்கள் பற்றிய ஒரு கட்டுரை- 
சோவெனப் பெய்திருக்கும் இந்தப் பொய் மழையில்,  இது சமத்தாழ்வு என்பதற்கான எந்த வாதமும் இல்லை. வெறும் பொய் வாதங்கள் - மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட வசனங்கள் - கிண்டல் என்ற பெயரில் விஷம் - அரசு பஸ் - இல்லை அரசுப் பேருந்து - தமிழ் கூட அவருக்குக் கிண்டல் ஆகிவிட்டது.  பேருந்தை அவா எப்படிச் ஷோல்லுவான்னு ஷோன்னா நன்னாயிருக்கும். இதை வெளியிட்டு இட்லி வடை - தயிர் வடையாகிக் கொண்டிருக்கிறதே என்பதுதான் எனது வருத்தம் - 

  0 comments:

  கருத்துரையிடுக

  பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்