18.8.11

"இங்கிலாந்துக் கலவரம் - "கலவரம் கண்ணை மறைக்கும்


கடந்த வாரம் - அமெரிக்கக் கலவரத்தைப் பற்றி எழுதுகிற போதே இங்கிலாந்துக் கலவரம் பற்றியும் எழுத வேண்டும் என்றுதான் தொடங்கினேன் - அமெரிக்கக் கலவரம் நமக்கு கடனில் கவனம் தேவை என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறது. இங்கிலாந்துக் கலவரம் - காவல் பற்றிய கேள்வியை எழுப்பியிருக்கிறது.
காவல்துறையினரின் ஒரு தவறால், ஒரு நபர் இறந்து போக வந்தது கலவரம். என்னதான் வளர்ந்த நாடாக இருந்தாலும் - கலவரம் காட்டுத் தீ போல பரவியது - அது சிதைந்த நாடாகத்தான் தோன்றியது. எனக்கு வீர பாண்டிய கட்ட பொம்மனில் - ஒருவர்  சொல்லுவாரே "சூரியன் கூட எங்களைக் கேட்டுத் தான் எழும்" பாவம் இங்கிலாந்து. அவர்கள் சொன்னால் கூட யாரும் கேட்பதற்கு இல்லை - எங்கே இவர்களிடம் வந்து PERMISSION கேட்பது.

தங்களது உணர்ச்சி வேகத்தில் எடுக்கிற சில முடிவுகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இங்கிலாந்துக் கலவரம் காட்டியது. FACE புக் BASE புக் ஆகிவிட்டது. இந்தக் கலவரம் சமூகத் தொடர்பு வலைகள் வழியாகவே மிக வேகமாகப் பரவியிருக்கிறது. ஒருங்கிணைக்கப் பட்ட ஒரு போராட்டமாகவே இது இருந்தது.

கறுப்பின சகோதரர்களின் கோபத்தின் விளைவாகவே இது இருந்தது. தங்களது அடக்குமுறைக்கு எதிரான ஒரு போராட்டமாக இதைப் பார்க்கலாம். ஆனால் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எல்லாரும் சமம் என்பது எல்லாம் ஏட்டளவிலே இருந்தாலும், சமூகத் தளத்தில் கருப்பர்கள் அங்கீகாரம் இழந்தவர்களாகவே இருக்கிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகளின் அடக்கு முறையின் வெளிப்பாடு.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கல்லூரி மாணவர் [ஆப்ரிக்க இன நண்பர் ]- பெல்ஜியத்தில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கு விசா வாங்கச் சென்றார். அவருக்கு விசா மறுக்கப் பட - அந்த அலுவலரை அனாவசியத்திற்கு திட்டிவிட்டு வந்ததாகச் சொன்னார் - "எங்க நாட்டிற்கு வந்து எங்களை அடிமைப் படுத்த யாரிடம் விசா வணங்கி வந்தீர்கள் - இப்போ எதற்கு அனுமதி மறுக்கிறாய்" - என்று கத்தினாராம்.
என்ன கத்தினாலும் விசா கிடைக்காது. கிடைக்க வில்லை.

இங்கிலாந்தில் உள்ள பல ஆப்ரிக்க இனத்தவர் உள் நுழைய நிறைய அனுமதி தொண்ணூறுகளுக்குப் பிறகு நிறையவே வழங்கப் பட்டு இருக்கிறது. ஆனாலும் முதலில், அடிமைகளாக அழைத்து வரப் பட்டவர்கள்தான் முதலில் அதிகம். இப்போது புகலிடம் தேடி இங்கு வந்தவர்கள் ... ஏற்கனவே ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த ஆப்ரிக்க நாடுகளில் இருந்துதான் நிறைய புகலிடம் தேடி வருகிறார்கள். இந்த வன்முறையில் அவர்களது பங்கு என்ன என்பது தெரியவில்லை. ஆனால் ஒட்டு மொத்த ஆப்பிரிக்க இனத்தின் மீதான கரும் புள்ளியாகவே இது அமைந்து விட்டது.

ஒரு புறம் அவர்களின் கோபம் நியாயமானதாய்த் தெரிந்தாலும், மறுபுறம் கோபத்தினை வெளிப்படுத்தும் வழி இதுதானா என்கிற கேள்வியும் கூட எழுகிறது. அல்லது - தங்களது கோபத்தை வெளிப்படுத்தக் கூட அவர்களுக்கான உரிமை மறுக்கப் படுகிறதா என்பதும் தெரிய வில்லை.

ஆனால் - பொருளாதார ரீதியாய் மிகவும் பின் தங்கியவர்களாக ஆப்ரிக்க இனத்தவர்கள் இங்கிலாந்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. அதனால்தான் - கடைகளை உடைத்து பொருட்களை அள்ளிக்கொண்டு செல்லும் நிலைக்கு அவர்களை அழைத்துச் சென்றிருக்கிறது. இதுதான் அவர்களது போராட்டத்தைக் கூட கலவரம் என்று சொல்ல வைத்திருக்கிறது.

அமேரிக்கா கடன் வாங்கி பிரச்சனையில் மாட்டிக் கொண்டது. கடன் வாங்கக் கூட வழியில்லாமல் கடை உடைத்து பொருள் அல்லும் நிலையில் இங்கிலாந்தவர்கள் இருக்கிறார்கள். அதுதான் அவர்கள் கண்ணை மறைத்து விட்டது போல...

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்