9.8.11

அதிரடித் தீர்ப்பு - சமச்சீர் கல்வி

உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

ஏறக்குறைய எழுபது நாட்கள் - ஆடிய ஆட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. யார் ஒரு புதிய இடத்திற்குச் சென்றாலும், வந்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிட முடியாது - நின்று, கவனித்து, செல்ல வேண்டும். அம்மா இப்படிப் பலமுறை நிற்காமல் சென்று பிரச்னையை எல்லாருக்கும் உருவாக்குகிறார். அது ஏன் என்பதுதான் புரியாமல் இருக்கிறது? 
  1.  உச்ச நீதி மன்றம் இதற்கு இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமா? வேறு வழியில்லையா?
  2. இந்தத் தீர்ப்பின் வழியாக சமச் சீர் கல்வியில் எல்லாம் சரி என்பதோ, அல்லது அதில் எதுவுமோ சரியில்லை என்பதோ அல்ல. அது விவாதத்துக்குரியது. ஆனால், எந்த ஒரு செயலையும் தனிப்பட்ட ஆளாக முடிவெடுக்கும் போக்குதான் இன்னும் மாறவில்லை. இதைத் தான் அனைவரும்  கவனிக்க வேண்டும். 
  3. இன்னும் சிலர் மாணவர் சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்ற அம்மாவின் கனவு நிறைவேற வில்லை என்று நினைக்கிறார்கள் - இன்னும் நாட்கள் எடுத்து ஒழுங்காக விவாதத்துக்கு உட்படுத்தி, பள்ளிகள் வைத்திருக்கும் வியாபாரிகள் இல்லாமல், கல்வியாளர்களின் ஆலோசனை கேட்டு, பரந்த விவாதத்திற்கு உட்படுத்தி செய்யவேண்டியது.  அதை அம்மாவும் கற்றுக் கொள்ள வேண்டும்  - எதிர்ப்பாளர்களும் உணர வேண்டும். 
  4. எதைச் செய்தாலும் தான்தான், தனது முடிவுதான் என்று இல்லாமல், தனி ஆளாக இல்லாமல் - தனி ஆளாக முடிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே நம் ஆசை. 
  5. மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்பதற்காக எதையும் செய்து விடலாம் என்பதோ, மாற்றிச் சிந்திப்பவர்களை அடக்கி விடலாம் என்பதோ, சமச்சீர் கல்வி பற்றி பேசும் ஆசிரியர்களை மிரட்டுவது என்பதெல்லாம் நல்லதல்ல.
  6. வெற்றி பெற்றவர் - மக்களின் நன்மையை முன்வைக்க வேண்டுமே தவிர தந்து விருப்பு, வெறுப்போ - அல்லது தன்னைச் சார்ந்தவர்களின் நன்மையையோ முன்வைப்பது அல்ல - கருணாநிதி அந்தத் தவறைச் செய்தார். அதனால்தான் அம்மா வந்தார். அம்மாவின் மேல் உள்ள அன்பினால் அல்ல. அம்மா அதேத் தவறைச் செய்தால் நட்டம் அவருக்குத் தான்....

3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…[பதிலளி]

நியாயம் ஜெயித்தது...

Unknown சொன்னது…[பதிலளி]

காழ்ப்புணர்ச்சி தோற்றது.

Unknown சொன்னது…[பதிலளி]

முதல்வரை யாரும் ஏமாற்ற முடியுமா என்று தெரியவில்லை. பார்ப்பனக்கூட்டம் யாரும் அவரை எமாற்றனுமா என்ன? அவராகவே அப்படிச் செயல் பட மாட்டாரா என்ன? அப்படி இருப்பவரிடம் எண்ணெய், பெட்ரோல் எல்லாம் ஊற்றி விடுகிறார்கள்....

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்