62 வது குடியரசு தினம் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.
ஒரு ஜனநாயக நாட்டில், ஒரு மாவட்ட ஆட்சியருக்கே, அவரது உயிருக்கே, பாதுகாப்பற்று இருக்கும் போது நாமது நாட்டைக் குடியரசு என்று சொல்லுவது தகுமா? அல்லது மக்களாட்சி என்பது இதுதானா? தான் செய்வதை சரி என்று சொல்வதற்கும் அதற்காக ஒருவனை உயிருடன் எரிப்பதற்கும் நாம் இன்றும் தயாராக இருக்கிறோம் என்றால் என்ன குடியரசு இது.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், நீதியும், நேர்மையும், உண்மையான உழைப்பும் நமது மதிப்பீடுகளாக மாறமுடியாமல் போனது யார் குற்றம்? மதிப்பீடுகள் தெரியாமல் பிறரை ஏமாற்றி வாழ வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் குற்றமா? அல்லது ஊழல் தான் நமது உயிர் மூச்சு என்று முன்மாதிரி காட்டிக் கொண்டிருக்கிற அரசியல் வாதிகள் குற்றமா? அல்லது மதிப்பீடுகளை கற்பித்துக் கொடுக்க மறந்த அதிகாரிகள் குற்றமா? அல்லது ஏமாற்றினால்தான் இன்றைய பொருளாதார சூழலில் வாழ முடியும் என்கிற நிலைக்குத தள்ளியிருக்கிற பொருளாதார முறையா? அல்லது சமூக அமைப்பு முறையா?
அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை என்றும், அதற்கான ஆதாரத்தை தராமல் வேண்டுமென்றே எங்கள் மீது பழி சுமத்துகிற முயற்சி என்று இலங்கை சொல்லிவந்த நிலையில்; சென்னை புத்தக் கோவில் ஒன்றில் தாக்குதல் நடந்த பிறகு இலங்கைத் தூதர் "இனிமேல் தாக்குதல் நடை பெறாது" என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
வெறும் கோரிக்கைகள் ஒன்றிற்கும் உதவாது என்ற நிலையில் அரசு இருப்பது யார் குற்றம்?
தாக்குதல் நடத்தியவர்களை விஷமிகள் [உபயம் - தினகரன்] என்று பத்திரிக்கைகள் எழுதியதும், இலங்கைக் கடற்படையினரின் அநீத செயல்களைக் கண்டிக்காமல் எழுதும் வியாபாரப் பத்திரிக்கைகள் இங்கே இருப்பது யார் குற்றம்?
பாதிக்கப் பட்டவன்தான் குரல் எழுப்ப வேண்டும் என்பதா குடியரசு?
பராசக்தி - பார்த்துக் கொண்டா இருக்கிறாய்!
- பார்த்து சிரித்துக் கொண்டா இருக்கிறாய்.
- குடியரசு தினக் கொண்டாட்டத்தை - நாசிக் அருகே பெட்ரோலில் கலப்படம் செய்த கும்பல் ஒன்று கூடுதல் மாவட்ட ஆட்சியரை [கலக்டர் சோனாவானேவை ] உயிருடன் எரித்து - தொடங்கி வைத்திருக்கிறது. மக்களாட்சியைக் கொண்டாட இதை விட சிறப்பான கொண்டாட்டம் இருக்கமுடியுமா?
ஒரு ஜனநாயக நாட்டில், ஒரு மாவட்ட ஆட்சியருக்கே, அவரது உயிருக்கே, பாதுகாப்பற்று இருக்கும் போது நாமது நாட்டைக் குடியரசு என்று சொல்லுவது தகுமா? அல்லது மக்களாட்சி என்பது இதுதானா? தான் செய்வதை சரி என்று சொல்வதற்கும் அதற்காக ஒருவனை உயிருடன் எரிப்பதற்கும் நாம் இன்றும் தயாராக இருக்கிறோம் என்றால் என்ன குடியரசு இது.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், நீதியும், நேர்மையும், உண்மையான உழைப்பும் நமது மதிப்பீடுகளாக மாறமுடியாமல் போனது யார் குற்றம்? மதிப்பீடுகள் தெரியாமல் பிறரை ஏமாற்றி வாழ வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் குற்றமா? அல்லது ஊழல் தான் நமது உயிர் மூச்சு என்று முன்மாதிரி காட்டிக் கொண்டிருக்கிற அரசியல் வாதிகள் குற்றமா? அல்லது மதிப்பீடுகளை கற்பித்துக் கொடுக்க மறந்த அதிகாரிகள் குற்றமா? அல்லது ஏமாற்றினால்தான் இன்றைய பொருளாதார சூழலில் வாழ முடியும் என்கிற நிலைக்குத தள்ளியிருக்கிற பொருளாதார முறையா? அல்லது சமூக அமைப்பு முறையா?
- இறந்த அந்த மாவட்ட அதிகாரியின் நினைவு இல்லாமலே குடியரசு தினம் நிறைவு பெரும். நமது நாட்டைப் போல வேறு ஜனநாயக நாடு இல்லவே இல்லை என்கிற பெருமையோடு இந்த விழாவும் நிறைவு பெரும்.
அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை என்றும், அதற்கான ஆதாரத்தை தராமல் வேண்டுமென்றே எங்கள் மீது பழி சுமத்துகிற முயற்சி என்று இலங்கை சொல்லிவந்த நிலையில்; சென்னை புத்தக் கோவில் ஒன்றில் தாக்குதல் நடந்த பிறகு இலங்கைத் தூதர் "இனிமேல் தாக்குதல் நடை பெறாது" என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
வெறும் கோரிக்கைகள் ஒன்றிற்கும் உதவாது என்ற நிலையில் அரசு இருப்பது யார் குற்றம்?
தாக்குதல் நடத்தியவர்களை விஷமிகள் [உபயம் - தினகரன்] என்று பத்திரிக்கைகள் எழுதியதும், இலங்கைக் கடற்படையினரின் அநீத செயல்களைக் கண்டிக்காமல் எழுதும் வியாபாரப் பத்திரிக்கைகள் இங்கே இருப்பது யார் குற்றம்?
- புத்தக் கோவிலில் கல்லெறிந்தால்தான் நீதி கிடைக்கும் என்கிற நிலை இருந்தால் இது யார் குற்றம்?
- இந்த அரசு எங்களுக்கு பாதுகாப்பு தரவில்லைஎன்றால் இலங்கை அரசிடம் சென்று தஞ்சமடைவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று நாகப்பட்டினம் மீனவர்கள் சொல்கிறார்களே - இது யார் குற்றம்.?
- கச்சத் தீவை சென்று கொடுத்தது யார் குற்றம்? இலங்கைக் கடற்படையினருக்கு இரண்டு கண்காணிப்புக் கப்பலை வழங்கியதே இந்த இந்திய அரசு - இது யார் குற்றம். இறந்து போன மீனவர்கள் குற்றமா?
- என்நாட்டு மக்களைக் கொள்கிற ஹிட்லரே மேல் என்று இந்த நாட்டு மக்களை நினைக்க வைப்பதுதான் குடியரசா?
பாதிக்கப் பட்டவன்தான் குரல் எழுப்ப வேண்டும் என்பதா குடியரசு?
பராசக்தி - பார்த்துக் கொண்டா இருக்கிறாய்!
- பார்த்து சிரித்துக் கொண்டா இருக்கிறாய்.
0 comments:
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்