30.9.11

வசன கவிதை

நாங்களும் எழுதுவோம்ல கவிதைன்னு வம்புக்கா எழுதலை.
சில வசனங்களை மடித்து எழுதினால்
அது கவிதை மாதிரி வருகிறதா
என்று பார்க்க ஒரு முயற்சி.
வசன கவிதையாகவாவது இருக்குமா என்று தெரியாது.
--
"ஹௌ டு ஸ்டாப் ஸ்மோகிங்"
புத்தகத்தை படித்து முடித்து விட்டு
பற்ற வைத்தேன்
ஒரு சிகரெட்டு.
--

எடையைக் குறைக்க
முதல் மாடியில் உள்ள
ஜிம்-முக்குப் போகப் 
பயன்படுத்தினேன் 
லிப்ட்.
--
எங்கேயும் எப்போதும்
பார்த்துவிட்டு
வீட்டுக்கு வேகமாய்ப்
போகும் போது
விபத்து
 --
டி. ஆர். பாலு, சோனியாவையும்
எஸ். பி. பாலு, சோனாவையும்
சந்தித்தார்களாம் -
நலம்
விசாரிக்க மட்டுமே.
--
இனிமேல் கவிதை
எழுதுவதில்லை
என்று முடிவெடுத்திருக்கிறேன்
அடுத்த முறை
எழுதும் வரை.
---     

 

10 comments:

suryajeeva சொன்னது…[பதிலளி]

twitter இல் முயற்சி செய்து பாருங்கள், வசனமாகவே வரும்... படிக்கவும் சுவராசியமாய் இருக்கும்

அப்பு சொன்னது…[பதிலளி]

////"twitter இல் முயற்சி செய்து பாருங்கள், வசனமாகவே வரும்... படிக்கவும் சுவராசியமாய் இருக்கும்" ////

நன்றி, சூர்ய ஜீவா;
எப்போதும் ரொம்பவே சீரியசா எழுதிக்கிட்டே இருக்கோமே - கொஞ்சம் லைட்டா இருக்கட்டுமேன்னு ஒரு சின்னக் கிறுக்கல்.
ட்விட்டர்க்கு போகலாம் எனக்குத் தற்சமயம் உள்ள வேலைப் பளுவில் பதிவு எழுதுவதே கடினமாகிக் கொண்டு வருகிறது. பார்ப்போம்.

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

இதமா இருந்ததா எழுதியபின்...?

வைரை சதிஷ் சொன்னது…[பதிலளி]

/////எடையைக் குறைக்க
முதல் மாடியில் உள்ள
ஜிம்-முக்குப் போகப்
பயன்படுத்தினேன்
லிப்ட்./////////

ஹா........ஹா......அய்யோ காமெடிய பாருங்கப்பா

அப்பு சொன்னது…[பதிலளி]

ரெவரி & சதீஷ், நன்றி.
இதமாய் இருந்தது - எனக்குள் இருந்த லொள்ளுதான் வெளியே வந்தது.

Philosophy Prabhakaran சொன்னது…[பதிலளி]

கடைசி கவிதைதான் சூப்பர் தலைவா...

மாய உலகம் சொன்னது…[பதிலளி]

சூப்பர் சகோ! முரன் வசன கவிதை கலக்கல்... தொடர்ந்து கலக்குங்க

அப்பு சொன்னது…[பதிலளி]

நன்றி பிரபாகரன்

அப்பு சொன்னது…[பதிலளி]

ராஜேஷ்,
முரண் வசன கவிதை என்பதுதான் சரி.
நன்றி

அம்பாளடியாள் சொன்னது…[பதிலளி]

அடடா உங்களுக்கும் கவிதை வரும் ஆனா ........!!!வராது என்று இல்லை .வரும் வரும் முயற்சியுங்கள் .வாழ்த்துக்கள் .நான் ஒரு கவிதைப் பிசாசு .அதனால்தான் இங்கே என் கருத்தை விட்டுச் செல்கின்றேன் .உங்கள் வாழ்த்தோ ஏச்சோ அதை வாங்கிக் கட்டவும் என் தளத்தில் காத்திருக்கின்றேன் .முடிந்தால் வாருங்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .....

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்