25.11.11

அணை பற்றிய படத்திற்கான தடை சரியா?

உடையும் அணை பற்றி ஊரே பற்றி எரிகிற மாதிரி விவாதம். கலைஞர் முதற்கொண்டு எல்லாரும் இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று மாற்றி மாற்றி அறிக்கை விடுகிறார்கள். தமிழக முதல்வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் காட்டி தடை செய்திருக்கிறார். இதுபோன்ற படங்களுக்கான எதிர்வினை ஆற்ற வேண்டியது அல்லது எதிர்ப்பைக் காட்ட வேண்டியது அவசியம்தான் - ஆனால் தடை செய்து எதிர்ப்பைக் காட்டுவது சரியானது அல்ல என்பதனால் மட்டுமல்ல - இந்தத் தடையோடு நம் அரசியல்வாதிகள் முல்லைப் பெரியாரைப் பற்றி மறந்து போவார்களே என்பதனாலும்தான்.

*     *      *      *      *      *      *     *     *     *    *     *     *

முல்லைப் பெரியாறு அணை விவாகரம் என்பது பற்றி விரிவாக எழுத தனிப் பதிவோ அல்லது தொடர் பதிவோ அவசியம் என்பதனால் இதில் அதைப் பற்றி எதுவும் எழுதப் போவது இல்லைஅது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா சுய நல நோக்கத்தோடு இதுவரை இருந்திருக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இப்போது வரை அது தங்களது தனிப்பட்ட விருப்பத்தை, மற்றும் உள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே பலப் பல வழிகளில் முயல்கிறது முயலும் என்பதையும் யாம் அறிவோம்.
அது ஒருக்காலும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கவனித்தது இல்லை என்பதோடு அருகில் உள்ள தமிழகத்தின் நலன் கருதி எல்லாம் அது சிந்தித்ததும் இல்லை என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.
  
   *     *     *     *     *     *     *      *     *     *    *     *     *

இந்தத் திரைப் படம் உள் நோக்கத்தோடு எடுக்கப் பட்டிருந்தாலும், அல்லது கேரள அரசு ஆசிரோடே இந்தப் படம் எடுக்கப் பட்டிருந்தாலும், இந்த ராய் தனது கடின உழைப்பினால் மட்டுமே ஹாலிவுட் வரை சென்று வார்னர் சகோதரர்களைப் பார்த்து தயாரித்தார்  என்பது பொய்யாகவே இருந்தாலும் - டேம் 999  தடை செய்வது தவறு மற்றும் நியாயமற்றது என்று தோன்றுகிறது. ஏன்? ஒரு திரைப் படம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்கிற விதத்தில் மட்டும் இந்த விஷயத்தை அணுக வேண்டிய அவசியம் என்பதில் இந்தத் தடை நியாயமற்றது.
டா வின்சி கோட் என்கிற ஒரு படம் வந்தபோது கிறித்தவ நண்பர்கள் எல்லாம் சேர்ந்து அந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரினார்கள். சில சிறப்புக் காட்சிகள் வெளியிட்டு பார்த்தார்கள் - என்ன நடந்தது அந்தப் படமும் அந்தப் புத்தகமும் இன்னும் பிரபலமானது. இந்தப் படத்திற்கான இவ்வளவு பெரிய பிரச்சாரம் தேவையா?

டேம் தொள்ளாயிரத்து தொண்ணுற்றி ஒன்பது [என்ன நம்பர் அது - இதற்குப் பின்னால்தான் கேரள அரசின் மற்றும் இயக்குனரின் சகுனித்தனம் ஒளிந்திருக்கிறது] என்ற படம் ஏதோ ஒரு ராயால் எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு வார்னர் சகோதரர்கள் பணம் பட்டுவாடா செய்திருக்கிறார்கள். எனவே ஹாலிவுட் தரம் என்று சொல்லப் படுகிறது.

கருத்துச் சுதந்திரம் மதிக்கப் படவேண்டும் என்று குரல் எழுப்பும் யாரும் இந்தப் படத்தை தடை செய்வதற்கான நியாயமான காரணத்தை முன்வைக்க முடியுமா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. இது வெறும் பயத்தை, பீதியைக் கிளப்புகிற முயற்சி என்று சொன்னாலும் கூட - அதற்காக ஒரு படத்தைத் தடை செய்ய முடியுமா... தடை என்பதை விட்டுவிட்டு -- அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டுமல்லவா...

பின் எதற்காக இந்த அரசியல்வாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தது தடை கோருகிறார்கள்.? இந்தப் பிரச்சனையைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும். எனவே தடை செய் என்கிறார்கள். இதையே கேரள முதல்வர் கிராபிக்ஸ் செய்து தனது வலைப் பக்கத்தில் போட்டபோது தமிழக அரசின் மற்றும் அரசியல் வாதிகளின் செயல்பாடு எப்படி இருந்தது? வை.கோ வைத் தவிர வேறு யாரும் எதுவும் பேசினார்களா - என்ன செய்ய முடிந்தது. தங்களது எண்ணத்தை, நிறைவேற்ற பரவலாக்க, இன்னும் பரவலாக்கவும், ஒட்டு மொத்த கேரளாவும் - கட்சி வேறுபாடு இன்றி - முடிவு செய்கிறார்கள்.

தடை செய்யச் சொல்லி போராட்டம் நடத்தி விட்டால் இந்த விடயத்தில் தமிழக அரசியல்வாதிகள் தன் பங்கிற்கான கடமை முடிந்து விட்டது என்று சொல்லி மீண்டும் இந்த விஷயத்தை நீதி மன்றத்தின் பார்வைக்கு விடலாம். நாம் அமைதியாய் இருப்போம். அப்புறம் அவர்கள் நீதி மன்றத்தின் கருத்துக்களை சட்டை செய்யாமல் வேறு ஏதாவது செய்வார்கள்... அப்போதெல்லாம் நாம் கட்சி சண்டை போட்டுக் கொண்டு பேசாமல் இருப்போம்.

எது எப்படி இருந்தாலும் வெறும் கோஷங்கள் போடுவதால், அல்லது தடை செய்வதுதான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றி விட்டு அப்புறம் அந்தத் தீர்மானங்களை குப்பையில் போடுவதை விட்டு விட்டு கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறோம் என்கிற [பேருக்காவது] அளவிலாவது நாம் இருக்க வேண்டியது அவசியம். அவரால் ஒன்றை மிக்ஸ் செய்ய முடிகிறது என்றால், நீங்கள் கேரளா பற்றி ஏதாவது மிக்ஸ் செய்ய ஹாலிவுட்டுக்கு ஆள் அனுப்புங்கள் - அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்... நமக்குள் அடித்துக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது...

கேரளா சகோதரர்கள் எங்கே இருந்தாலும் கேரள அரசின் மற்றும் தங்களது நலனை மட்டுமே முன்னிறுத்தும் விதத்தைக் நாம் கற்றுக் கொண்டாலே போதும் - இங்கே தமிழர் நலனை அழிப்பதற்கென்றே தமிழக அரசும். மத்திய அரசும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது - இதில் இந்த DAMN dam 999  அதைவிடப் பெரியதாய் என்ன செய்து விடப் போகிறது?


கொசுறு? 1 
கேட்பாரா நாராயணசாமி?
யார் இந்த ராய் - ஹாலிவுட்டில் படம் எடுக்கும் அளவுக்கு எப்படி உயர்ந்தார்? கேரளா அரசின் உதவியில்லாமல் இப்படிப் படம் எடுக்க முடியுமா?  கணக்கு வழக்கு வைத்திருக்கிறாயா என்று அவரிடம் நாராயணசாமி கேட்பாரா? .... கேட்டாத் தெரியும் எல்லா நாயரும் சேர்ந்தே அடிப்பாங்க.

கொசுறு 2 
படிப்பினை - பிளவை ஏற்படுத்துமா?
எத்தனைக் கேரளா சகோதரர்கள் தமிழ் நாட்டிலேயே வளர்ந்து வாழ்ந்து தமிழர்களின் உணர்வுகளோடு இருக்கிறார்கள்? எத்தனை ஆண்டுகள் இங்கே வாழ்ந்தாலும், தங்களது பூர்விக சொத்தும், மனதும் எப்போதும் கேரளா விடம் மட்டும் தான் அவர்களுக்கு இருக்கும். இதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், என்றைக்காவது இங்கேயே வாழும் அந்தச் சகோதரர்கள் தமிழர் நலுனுக்காக குரல் கொடுத்தது உண்டா... இந்தியப் பிரஜை என்பதற்காக அல்ல, நாம் இங்கேதானே வசிக்கிறோம் அந்த நல்லெண்ணத்தின் அடிப்பைடயில் என்பதற்காக அல்ல, குறைந்த பட்சம் மனிதாபிமான அடிப்படையிலாவது.... ஏற்கனவே அவர்கள் பிளந்துதானே இருக்கிறார்கள் அப்புறம் என்ன பெரிதாய் இந்தப் படம் வந்து பிளவை ஏற்படுத்தப் போகிறது. அப்புறம் எதுக்குப் பயப்படனும்?

கொசுறு 3 
அதுமட்டுமல்ல இந்த நாட்டில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிற பாட புத்தகங்கள் இன்னும் தடை செய்யப் படாமல் இருக்கிறது. அடிமைத்தன எண்ணங்களை விதைக்கிற படங்கள், முயற்சிகள், நபர்கள், கொஞ்சம் கொஞ்சமாய் மக்களின் என்னத்திற்குள் தங்கள் ஜாதிய வெறியை நிலை நிறுத்தும் மற்றும் நியாயப் படுத்தும் படங்கள், புத்தகங்கள் - நாளிதழ்கள் --- இன்ன பிற இத்யாதி இத்தியாதிகளை எல்லாம் தடை செய்ய வேண்டியிருக்கிறது.   
தினமலரும்தான் பிரிவினை மற்றும் பிளவை உண்டு பண்ணும் விதத்தில் தினம் செய்தியை வெளியிடுகிறது - அண்மையில் கூட ஒரு மரண தண்டனை கொடுக்கப்பட்டதற்காக தமிழ் ஆர்வலர்கள் கேரளா அரசுக்கு எதிராக எழ வேண்டாமா என்று கேட்டது.....அதற்காக யாராவது அதைத் தடை செய்ய வேண்டுமெண்டு குரல் கொடுக்கிறார்களா என்ன...?


28 comments:

rajamelaiyur சொன்னது…[பதிலளி]

நல்ல அலசல்
வணக்கத்துடன் :
ராஜா

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

rajamelaiyur சொன்னது…[பதிலளி]

மக்களுக்கு தவறான தகவல் தரும் எதையும் தடை செய்யலாம்
வணக்கத்துடன் :
ராஜா

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

SURYAJEEVA சொன்னது…[பதிலளி]

தோழர்,
மாற்றுக் கருத்துக்களை அனுமதிக்கும் தைரியம் இங்கு யாருக்கும் இல்லை... அப்படியே மாற்றுக் கருத்து இருந்தாலும் அதை சுய மனித தாக்குதலில் இறங்கி கொச்சைப் படுத்துபவர்கள் அதிகம்.. ஒரு விஷயம் குறித்து விவாதிக்கும் பொழுது எது சரி எது தவறு என்று விவாதிப்பதை விட்டு விட்டு.. யார் சரி என்று இறங்குவதில் தான் பிரச்சினை இருக்கிறது...

Unknown சொன்னது…[பதிலளி]

@"என் ராஜபாட்டை"- ராஜா
இன்னும் முழுமையான அலசல் தரவில்லை. ஏனெனில் இதைப் பற்றி நிறைய அலச வேண்டியிருக்கிறது.

Unknown சொன்னது…[பதிலளி]

@"என் ராஜபாட்டை"- ராஜா

மக்களுக்கு எதிரான எதையும் தடை செய்யலாம் - யார் செய்வது? என்ன அளவுகோல் என்று பல சிக்கல் இருக்கிறது..

Unknown சொன்னது…[பதிலளி]

@suryajeeva
நிச்சயமாக...
தனி நபர் தாக்குதலில் இறங்கியிருக்கும் தினமலர் பற்றிதான் அடுத்து வெளிக்கொணரத் திட்டம். பார்ப்போம். மாற்றுக் கருத்தை எதிர் கொள்வதிலும் அதற்கான கோணத்தில் இருந்து பார்ப்பதிலும் இன்னும் அதிக வளர்ச்சி தேவை என்றே தோன்றுகிறது.

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

hello, what is the problem in making new dam?

ராஜா MVS சொன்னது…[பதிலளி]

படத்தை பார்த்துதான் ஒருவன் கலவரத்தில் ஈடுபடவேண்டும் என்று இல்லை... பல கலவரங்களை இவர்கள் நலனுக்காக தூண்டிவிடுபவர்களே இவர்கள்தான்...
ஒரு படத்தை தடை செய்துவிட்டால் அதில் உள்ள உண்மைகள் இல்லை என்று ஆகிவிடாது...
தான் மக்கள் நலனுக்காக மட்டுமே வாழ்பவன் என்று மக்களை ஏமாற்ற, இப்ப கிடைத்த ஒரு துருப்புச் சீட்டு இந்த படம் அவ்வளவுதான்...

ராஜா MVS சொன்னது…[பதிலளி]

கொசுறு 1: நெத்தியடி....

அருமை... நண்பரே...

நெல்லை கபே சொன்னது…[பதிலளி]

@suryajeeva

சரியாகச் சொன்னீர்கள். தடை செய்தால் விவாதம் உண்மையிலேயே திசை திரும்பிவிடுகிறது. அப்புறம்...அதான் தடை செய்தாச்சே! வேற என்ன என்றாகிவிடுகிறது. அது என்ன பிரச்னை என்ன என்றே தெரியாமல். இவ்வளவு ஊடகங்கள் இருந்தும் விவாதத்திற்கான மனநிலை தமிழர்களிடம் இல்லையோ! எந்தக் குழுவிலும் முன் வரிசையில் நிற்பவர்கள் தப்பான ஆட்களாகவே இருக்கிறார்கள். உலகத்துக்கு அவர்கள்தான் அந்தக் குழுவிற்கு 'முகம்' என்று அறியாமல்.

Unknown சொன்னது…[பதிலளி]

@பெயரில்லா

வணக்கம் பெயரில்லா நண்பருக்கு,
வந்ததற்கு நன்றி.
புது டேம் கட்டுறதுல தப்ப இல்லையான்னு இன்னொரு நாள் பாக்கலாம். வாய்ப்பு கிடைத்தால் எழுதுகிறேன்.
இந்தப் படத்தை தடை செய்ய வேண்டாம்னு சொன்னதுக்கு ஒன்னும் சொல்லாமப் போறிங்களே. இது நியாயமா இருக்கா..

நெல்லை கபே சொன்னது…[பதிலளி]

தடைசெய்து அந்தப் படத்திற்கு நல்ல விளம்பரம் தேடித் தந்து விட்டார்கள்.

Unknown சொன்னது…[பதிலளி]

@ராஜா MVS

வணக்கம் ராஜா,
நன்றி-
மக்கள் தான் நெற்றியடி கொடுக்க வேண்டும்.. பாவம் எல்லாரும் நெற்றியடி வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

Unknown சொன்னது…[பதிலளி]

@மாயன் :ahamumpuramum.blogspot.com

உண்மைதான்,
தேவையற்ற விளம்பரம்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]

நீங்கள் சொல்வது ஆயிரம் சதவீதம் உண்மை, அரிசி மட்டும் தமிழ்நாட்டில் இருந்து வேண்டும்....!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]

கேரள எழுத்தாளர் சக்கரியா மலையாளிகளை பற்றி எழுதிய வரிகள் [[மலையாளத்தில்]]என்ன தெரியுமா...???

கேரளாவுக்கு கறிவேப்பிலையில் இருந்து, குருவூரப்பா கோவிலுக்கு சூட்டும் மாலை வரை, தமிழ்நாட்டில் இருந்துதான் வருகிறது, அப்படி இருந்தும், மலையாளிகள் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது...?

[[இதை மலையாளத்தில் வாசிக்கும் போது இன்னும் அழுத்தல் தெரிகிறது அவர் எழுத்தில்]]

MANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]

யோவ், தண்ணிதான் தரலை மற்றபடி, பொண்ணுங்களை நமக்கு சூப்பரா சப்ளை பண்ணுராணுக அது போதாதாக்கும்,

பத்மினி
ரோஷினி
ஊர்வசி
கல்பனா
அம்பிகா
ராதா
நதியா
மீனா
பானுப்பிரியா
சாந்தப்பிரியா
ரேகா
சம்யுக்த வர்மா
காவ்யா மாதவன்
பிந்து பணிக்கர்
பூர்ணிமா
மாதவி
பானு
அசின்
சரண்யா[[சின்ன]]
நயன்தாரா
இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம் ஹி ஹி....

Unknown சொன்னது…[பதிலளி]

@MANO நாஞ்சில் மனோ

மனோ, வணக்கம் வாங்க

Unknown சொன்னது…[பதிலளி]

@MANO நாஞ்சில் மனோ
எழுத்தாளர் சகரியா சொன்ன வரிகளை நினைவூட்டியதற்காக நன்றி மனோ.
நான் பல மலையாள எழுத்தாளர்களை நேசிக்கிறேன். சிலரது ஆத்மார்த்தமான அர்ப்பணத்தை நன்றியோடு நினைக்கிறேன். ஆனால் அரசியல் மற்றும் பொது மனப் பான்மை என்ற நோக்கில்தான் அவர்களோடு சில உரசல்கள். மற்றபடி அவர்கள் நம் உறவுக்காரர்கள் தானே.

Unknown சொன்னது…[பதிலளி]

@MANO நாஞ்சில் மனோ
பொண்ணுங்க பத்தி பெரிய லிஸ்டே இருக்கு.
பானுப்ப்ரியா கேரளாவா..
நான் கலரைப் பார்த்து நம்ம ஊருன்னு நினைச்சுட்டேன்.
உங்கள் லிஸ்டை பார்த்தவுடன் ... நம்ம ஊரிலே பெண்களே இல்லையான்னு நினைக்கத் தோணுது.

ராஜ நடராஜன் சொன்னது…[பதிலளி]

படத்தை தடை செய்வது தவறு என்ற ஒற்றைக் கருத்தை தவிர உங்கள் வாதம் தமிழகம் சார்ந்தே இருக்கிறது.அதைத்தான் அரசியல்வாதிகளும் தனது கட்சி சுயநலம்(?)கருதியோ அல்லது தமிழக மக்களின் குரலாகவோ ஒலிக்கிறார்கள்.சார்ல்ஸ் டிக்கன்ஸ் காலத்து லேடி சாட்டர்லி தடை செய்யப்பட்ட காலத்தை தற்போதைய தமிழக அரசியல்,மக்கள் மனநிலையோடு ஒப்பிடு செய்கிற மாதிரியோ,சல்மான் ருஷ்டியின் சாத்தான் வேதம் ஓதுகிறது(Satanic verses)மாதிரியோ தனிமனித சுதந்திரம்,அனைத்து மக்களின் நலம் என்ற இரு மாறுபட்ட நிலையில் விவாதிக்க வேண்டிய ஒன்று 999.தனிமனித சுதந்திரமா,அனைத்து மக்களின் உணர்வா என்ற இரண்டில் யார் எந்தப் பக்கம் என்ற முடிவுக்கு வந்து விட்டால் 999ன் விடை தெரிந்து விடும்.

என்னமோ தமிழ்மக்கள் மட்டும் பிரிந்து கிடப்பது மாதிரியும்,சேட்டன்கள் கட்டித்தழுவிக்கொள்கிற மாதிரியான பிம்பம் ரொம்ப ஓவராத் தெரியல:)சேட்டன்கள் தமிழகம்,பம்பாய்,வளைகுடா ஊர்சுற்றலுக்கு அவர்களிடமில்லாத ஒற்றுமையில்லா தன்மையும் ஒரு காரணம்.அனைத்து வளங்களும் இருந்தும் சேட்டனாக இருந்தாலும் வெற்றிகரமாக ஒரு வியாபாரத்தை நீண்டகாலம் கேரளத்தில் செய்து விடமுடியாது.அதுவே தமிழக மக்களின் பெருந்தன்மையால் தமிழனாகவே வாழ்ந்து விடலாம்.அதற்கு தமிழகத்தில் வாழும் சேட்டன்,சேச்சிகள் நன்றிக்கடன் உள்ளவர்களாக இருக்க கடவர்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…[பதிலளி]

அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!

boopathy perumal சொன்னது…[பதிலளி]

The Mullai Periyar DAM Problem Hidden Truths & Solutions
http://vimeo.com/18283950

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…[பதிலளி]

ம் ...

Unknown சொன்னது…[பதிலளி]

@ராஜ நடராஜன்
நன்றி - நல்ல பகிர்வுக்கு.
கேரளா மக்கள் பல இடங்களில் பிரிந்து இருப்பது - தங்களுக்குள்ளான பிரிவினைகள் முழுமையான காரணம் இல்லை. வெளி இடங்களுக்கு இடம் பெயர்ந்தது வாழ்வதில் அவர்கள் துணிந்தவர்கள். அந்தத் துணிந்திருத்தலில், ஒருவர் அங்கே சென்றால் இன்னும் சில நாட்களில் பலரையும் அங்கே இழுத்துக் கொண்டு வாழும் தன்மை அவர்களிடம் நிறைய இருக்கிறது.
ஆனால் நினைப்பெல்லாம் இங்கே இருக்கலாம் ....

Unknown சொன்னது…[பதிலளி]

@திண்டுக்கல் தனபாலன்
நன்றி நண்பரே...

Unknown சொன்னது…[பதிலளி]

@boopathy perumal

தெரியப் படுத்தியதற்கு நன்றி

Unknown சொன்னது…[பதிலளி]

@நண்டு @நொரண்டு -ஈரோடு
ம் என்பதன் தோணி என்ன - இது சரியில்லை என்பதா அல்லது சரி என்பதா?

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்