பழமொழிகள் இப்போது சொல்லப்பட்டால் என்ன உதாரணம் சொல்லுவது என்று ஆசிரியர்கள் கவலைப் பட வேண்டாம். அவர்களுக்கு உதவும் விதமாக சில பழமொழிகள்.
ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்
- உதாரணம் ஒன்று - தமிழக சட்ட சபையில் மூவர் மரணதண்டனைத் தீர்ப்பை நிறுத்தி வைக்க போட்ட தீர்மானம்.
- உதாரணம் இரண்டு - கூடங்குளம் அணுமின் நிலையம் அவகாசத் தீர்மானம்.
- இதுக்கு நல்ல பழமொழி - வேற இருக்கு
- ஆடுற மாட்டை ஆடிக் கற பாடுற மாட்டை பாடிக் கற .... கறந்துட்டான்களே உள்ளாதித் தேர்தல்ல! [ஐடியா திரு ராமராஜனா?]
தொட்டிலை ஆட்டி விடுவது - பிள்ளையையும் கிள்ளி விடுவது
- மூவர் தூக்குத்தண்டனை ரத்து செய்யக் கோரும் வழக்கைத் தள்ளு படி செய்ய தமிழக அரசு வழக்குத் தாக்கல்....
புலி பதுங்குவது பாய்வதற்கே
- உதாரணம் - உள்ளாட்சித் தேர்தல் வரை அமைதி காத்து இப்போது எல்லா வற்றின் விலையையும் கடுமையாக உயர்த்தி இருக்கும் தமிழக அரசு.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பானாம்
- பெட்ரோல் விலை உயர்வினால் சூடாகி இருந்த மக்களுக்கு ஓங்கி அடி - பால் விலை உயர்வு ... பேருந்துக் கட்டணம் உயர்வு.... ரெயில் கட்டணம் உயர்வு ...
- சம்பளம் ??????????????????????????????'..
- எல்லாத்தையும் தாங்கிக்கிரீங்களே - நீங்க ரொம்ப நல்லவங்க .....
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்
- பொது நூலகங்களுக்கு புத்தகம் வாங்க இருபத்தி ஐந்து கோடி மற்றும் கட்டிடங்களுக்கு இருபத்தி ஐந்து கோடி முதல்வர் அறிவிப்பு..
கோழி மிதித்து குஞ்சு சாகுமா! அம்மா மிதித்து ...
- மாற்றான்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்காத நிலையில் தமிழக 'மக்களே' [குழந்தைகளே] உங்களிடம் இல்லமால் வேறு எங்கே போகமுடியும். சொந்தத் தாய்க்குரிய கருணையோடு நடந்து கொள்ள விலை உயர்வு தவிர்க்கப் பட முடியாததாகி விட்டது.
கரையான் புற்று பாம்புக்கு உதவுமாம் -
- விலைவாசி யுர்வுக்கு கலைஞர் அரசே காரணம் - முதல்வர் குற்றச் சாட்டு.
- கலைஞரின் புற்று அம்மாவுக்கு நன்றாக உதவுகிறது...
இதனால்தெரிந்து கொள்ள வேண்டியது:
- பசுத்தோல் போர்த்திய புலி
- உதாரணம் - சொல்லனுமா என்ன?
- பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
- விலை வாசி உயர்வுக்கு எதிராக சில கட்சிகள் போராட்டம்...
- "வெளுத்ததெல்லாம் பாலல்ல."
- 'கள்ளா' இருக்கணும்னு அவசியம் இல்லை -
- சுண்ணாம்பாக் கூட இருக்கலாம்.
- பால் உடலுக்கு நல்லதல்ல
- பிரயாணம் உடலுக்குக் களைப்பைத் தரும்
9 comments:
பின்னி பெடலேடுங்க... ஆனா ரசிக்கிற மூட் தான் இல்லை
இலவசம் என்பதை தேர்தல் அறிக்கையில் சேர்த்துதான் மிகப் பெரிய முட்டாள்தனம்...
அடுத்த தேர்தலிலாவது மக்கள் இந்த இலவச மோகத்திலிருந்து விடு படவேண்டும்...
இலவசத்தை இலவசமாவும்,விலைவாசியை விலைகொடுத்தும் வாங்கும் உயிரினங்கள் வாழும் ஊர் இது.
இது நமக்கு - 'ச்சீ ச்சீ - இந்தப் பழம் புளிக்கும்.'
பால் உடலுக்கு நல்லதல்ல
பிரயாணம் உடலுக்குக் களைப்பைத் தரும்
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
நன்றி ராஜ ராஜேஸ்வரி...
வேற வழியில்லை - இப்படித்தான் செய்ய வேண்டியிருக்கிறது... வேறு வழியில்லையே... ஐந்து வருடத்திற்கு...
@suryajeeva
வேற வழியில்லை - இப்படித்தான் செய்ய வேண்டியிருக்கிறது... வேறு வழியில்லையே... ஐந்து வருடத்திற்கு...
@ராஜா MVSஇலவசம் நம்மை ஆட்டுவிக்கிறது...
@கோகுல்
அருமையான தத்துவம்...
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்