ஒரு மாறுதலுக்காக - அறிவியல்
எனது சிறிய காமெராவில் எடுத்த புகைப் படங்கள்.
பார்க்கத் தவறியர்கள் பார்ப்பதற்காக.
நிலா, சந்திரன், பௌர்ணமி, பூரண நிலவு என்று முழு நிலவு பல பெயர்களிலும் அழைக்கப் படுகின்றன. ஒவ்வொரு மாதத்திற்கும் உள்ள முழு நிலவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.
இன்று இரவு ஒன்பதாம் தேதி [அநேகமாக அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு இன்னும் இரவு வரவில்லை] முழு நிலவும் ஜுபிடரும் [வியாழன்] அருகருகே இருக்கும் அற்புதமான காட்சியைக் கண்டு களிக்கலாம். நண்பர் ஒருவர் சொன்ன பிறகே நான் அதைக் கவனிக்க நேர்ந்தது. எனது அறையில் இருக்கும் மிகப் பெரிய சன்னல் வழியாக அந்தக் காட்சியைக் கண்டுகொண்டே எழுதுகிறேன்.
சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்கள் உண்டு என்பதை நாம் படித்திருந்தாலும், இப்போது எட்டு கிரகங்கள் மட்டுமே இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள் [நமது பள்ளிக் கூடங்களில் இப்போது என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள்?]. புளூட்டோ ஒரு கிரகம் இல்லை என்று சொல்லுகிறார்கள். இருக்கிற எட்டு கிரகங்களில் மிகப் பெரிய கிரகமான ஜுபிடர் நிலவுக்கு அருகில் மிகவும் பிரகாசமாக இருக்கிறது.
நவம்பர் மாத முழு நிலவை Hunter 's மூன் என்று அழைக்கிறார்கள். பல பெயர்கள் அமெரிந்தியர்கள் இட்ட பெயர்களாகவே இருக்கின்றன. ஒவ்வொரு மாதத்திற்கான முழு நிலவுக்கும் பெயர் உண்டு. சமஸ்கிருதத்திலும், தமிழிலும் அதற்கான பெயர்கள் உண்டு என்றே நினைக்கிறேன்.
எனது சிறிய காமெராவில் எடுத்த புகைப் படங்கள்.
பார்க்கத் தவறியர்கள் பார்ப்பதற்காக.
இதைப் பற்றிய ஆராய்ச்சி நிறையச் செய்யலாம். ஆர்வம் உள்ளவர்கள் முயலலாம்.
1. http://earthsky.org/tonight
2. http://en.wikipedia.org/wiki/Full_moon
8 comments:
@Rathnavel
வருகைக்கு நன்றி
கடந்த வருடம் இதே காலத்தில் இரவுப்பணியில்
இருந்த போது கண்டேன்.இப்போது தவறிவிட்டேன்.
உங்கள் புகைப்படம் மூலம் பார்த்தாச்சு!
சில மாதங்களுக்கு முன்பு இதுபோல் நிலவு அருகே 2கிரகம் வந்தது என்று நினைக்கிறேன்...
பகிர்வுக்கு நன்றி... நண்பரே...
போட்டோ கண்டு மகிழ்ந்தேன், சூப்பர் பதிவு நன்றி...!!!
@கோகுல்
நல்லது கோகுல்,
நான் இப்போதுதான் அது என்ன வென்று தெரிந்து பார்த்தேன். சில சமயங்களில் சில கூட்டமைப்புகள் கூட மிக அழகாக இருக்கும். ஆனால் என்னவென்று தெரியாமலே ரசிப்பதோடு நின்று விடுவேன்.
@ராஜா MVS
இருக்கலாம்.
நமக்கு கம்பியூட்டர் மட்டுமே பாத்துப் பழகிப் போச்சு - கிரகமெல்லாம் கம்ப்யுட்டரில் பார்த்தால்தான் உண்டு. இந்த மாதத்தில் அப்படி நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். வானியல் நிபுணர்கள் சொன்னார் அறிந்து கொள்ளலாம்.
உங்கள் பகிர்வுக்கு நன்றி.
@MANO நாஞ்சில் மனோ
ரொம்ப நன்றி மனோ,
இரவில் எடுக்கும் போது ஸ்டாண்ட் இல்லாமல் எடுக்கும்போது ஷேக் ஆகிவிடுகிறது.
ஆனால் நேராய்ப் பார்க்கும் போது சிறிதாய்த் தெரியும் அந்த ஜூபிடர் மிகப் பிரகாசமாய் இருந்தது.
வணக்கம்,(இரவு)அப்பு!அருமையான ஒரு தகவலைப் பகிர்ந்திருக்கிறீர்கள்!
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்