கனிமொழி மற்றும் ராசா அவர்கள் செய்தவை தண்டிக்கப் படவேண்டிய தவறு என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு சரியான தண்டனை வழங்கப் படவேண்டும் என்பதே எனது கருத்து. இதை ஏற்றுக்கொண்டே பின்வரும் புனைக்கடிதத்தினைப் பதிவு செய்கிறேன்.
தனது சூழலில் இருந்து கனி மொழி சில கேள்விகளை முன்வைத்தால் எப்படி இருக்கும் என்பதற்கான விதத்தில் அவரே இனி எழுதுவது போன்று...
/////////////////////////////////////////////////////////////////////////////////////////
என் தந்தையின் உயிரினும் மேலான வாக்காளர்களே
- மன்னிக்கவும் -
மேலான வாசிப்பாளர்களே,
ஊழல் என்பது எல்லா மட்டங்களிலும் உண்டு - ....................ஆகிய என்னோடும் சேர்த்து. இந்த ஜாமீன் விஷயத்தில், எல்லாரும் திரு. ராசாவுக்குமான ஜாமினுக்கான முயற்சியிலும் சேர்ந்து இறங்கியிருந்தால் யாருக்கும் ஒன்றும் தெரிந்திருக்காது.
ஒருவேளை, அப்படி எனது கட்சிக் காரர்களும் குடும்பத்தினரும் செய்திருந்தால் இவர்கள் எல்லாரும் சேர்ந்ததுதான் ஊழல் செய்தார்கள் என்று எழுதிக் கொண்டிருப்பீர்கள். அப்படிச் செய்யாததால், மகளுக்காக உருகும் குடும்பத்தினர் என்று எழுதிக் கொண்டு இருக்கிறிர்கள்.
- இன்னும் வழக்கு விசாரணை தொடங்கப் படாத சூழலில், இரு நூற்றிப் பத்துக் கோடி ரூபாய் கலைஞர் தொலைக் காட்சிக்காகக் கொடுக்கப் பட்ட வழக்கில், இன்னும் விசாரிக்கப் படாமலே எனக்கு ஜாமீன் பல முறை மறுக்கப் பட்டிருக்கிறது. மத்திய ஆட்சியில் இருக்கும் ஒரு பாராளு மன்ற உறுப்பினர் - வெறும் இரு நூற்றிப் பத்து கோடிகளுக்காக எந்த விதமான முகாந்திரமும் இன்றி ஜாமீன் மறுக்கப் பட்டிருப்பது ஜீரணிக்கவே முடியவில்லை. ஆயிரம் கோடிகள், லட்சம் கோடிகள் ஊழல் என்கிற சூழலில் வெறும் இருநூற்றி பத்து கோடிகள் என்பதுதான் என்மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றச் சாட்டு. இதற்கே எனக்கு ஜாமீன் மறுக்கப் பட்டிருக்கிறது.
- ஜாமீன் கொடுத்திருந்தாலும் நீதித் துறையின் மீது நீங்கள் எல்லாரும் சராமாரியாக சேர்ந்தே கேள்வி எழுப்பி இருப்பிர்கள். ஆனால் எனக்குள்ளே எழும் கேள்வி - இந்த ஜாமீன் மறுக்கப் பட்டிருப்பதால் எதுவும் நன்மை வந்திருக்கிறதா? அல்லது - கனிமொழி என்கிற ஒரு தனிநபருக்கு ஜாமீன் வழங்கப் படாததில் மக்களுக்கு என்ன அவ்வளவு சந்தோசம்? நீங்கள் ஏன் இந்த மறுப்பில் இவ்வளவு மகிழ்ச்சியுறுகிறீர்கள் ? இதைத்தான் நீங்கள் எல்லாரும் கேட்டுக் கொள்ள வேண்டும்!
- ஊழலைப் பற்றி ஒன்றும் செய்ய முடியாத உங்களது இயலாமையின் வெளிப்பாடாகத் தான் அதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அரசுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்படும் வகையில் ராசா செயல் பட்டிருக்கிறார்? சரி - அதனால் நாம் அவர் தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்க வேண்டியதுதான் - அதில் என் பங்கும் இருக்கும் பட்சத்தில் நானும் தண்டிக்கப் படவேண்டியவர்தான். ஆனால் இதே உறுதியை எல்லா ஊழல் வழக்குகளிலும் நீங்கள் காட்டுகிறீர்களா ? அல்லது காட்டிக் கொண்டு இருக்கிறீர்களா?
- ஒட்டு மொத்தமாக இந்தியாவின் கவனமும் திசை திரும்பும் அந்த விளையாட்டுப் போட்டிகளை பணத்திற்காக பிக்ஸ் செய்தும் அதனால் ஆயிரக் கணக்கான கோடிகள் சுருட்டியிருக்கும் லலித் மோடி வழக்கில் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்களா?
- அல்லது கிரிக்கெட் போர்ட் இந்தியாவின் பேரைத் தாங்கும் - ஆனால் அதை அரசின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் திட்டம் தவறு என்று குரல் கொடுக்கிற ஒரு மத்திய அமைச்சரின் கொள்கைகள் பற்றியும் தனியாக இருப்பதனால் அவர்கள் சுருட்டுகிற கோடிகள் பற்றி நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்களா?
- அல்லது சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப் பணத் தொகை மற்ற உலக நாடுகள் அங்கே வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை விட அதிகம் என்று இருக்கும் போது இந்திய அரசு அதில் அக்கறை காட்டத் தயங்குவது எது என்று கேள்வி எழுப்பியிருக்கிறீர்களா?
- ஏறக்குறைய முப்பதாயிரம் கோடிகளுக்கு மேல் சுருட்டிய கல்மாடி வழக்கில் அக்கறை காட்டுகிறீர்களா? இல்லையெனில் ஏன்?
சரி - ராசா அந்த இழப்பு வராத வண்ணம் செயல் பட்டிருந்தால் -
செயல் பட்டிருந்தால் - நமது நாட்டில் விலைவாசி குறைந்திருக்குமா? அல்லது எல்லாரும் நியாய தர்மத்தோடு நடந்திருப்பார்களா? ஊழல் என்பதே இல்லாத நாடு என்பது நம் நாட்டில் ஒழிக்கப் பட்டிருக்குமா?
இருந்திருக்காது என்பதைத்தான் வருத்தத்தோடு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
- ஊழல் மிகுந்த நாடுகளில், ஊழலைப் பற்றி அதிகம் அக்கறைப் படுகிறோம் என்கிற விதத்தில் ஒரு சிலரை மட்டும் பலி கடா ஆக்குவதன் மூலம் நீங்கள் ஒட்டு மொத்தமாக மற்ற ஊழல்களைப் பற்றிய மௌனத்தை கடை பிடிக்க வைக்கப்படுவீர்கள்.
- உங்களது ஒட்டுமொத்த கவனமும், ஊழலை ஒழிப்பதற்கான போராட்டம் முழுவதுமாக இந்த ஒரு வழக்கின் போக்கில் திசை திருப்பிவிடப்பட்டு, மற்ற ஊழல் பெருச்சாளிகள் அனைவரும் சுதந்திரமாக உலா வருவார்கள் அதை நீங்கள் அனுமதிப்பிர்கள் என்பதையும் நான் இந்த நேரத்தில் வருத்தத்தோடு பதிவு செய்து கொள்கிறேன்.
- இந்த ஒரு வழக்கில் உங்கள் பார்வைகள் குவிந்திருக்கும் அந்த நேரத்தில், ஆயிரக்கணக்காண கோடிகள் இடப்பட்டிருக்கும் சுவிஸ் வங்கிக் கணக்கு பற்றி யாரும் குரல் எழுப்ப மாட்டிர்கள். அதுதானே அவர்களுக்கு வேண்டும். உண்மையிலேயே இந்த அரசோ பட்டியல் தன்னிடம் இருக்கும் போது அதை வெளியிடத் தயங்குவதும், அதைப் பற்றி மவுனம் சாதிப்பதும் எதற்காக? எங்களை மட்டும் இப்படி அலைக்கழிக்க வைத்து விட்டு யாரைக் காப்பாற்றுவதற்காக என்னைப் பலிகடாவாக ஆக்குகிறார்கள்?
- ஏதோ இதில் மட்டும்தான் ஊழல் நடந்தது என்பது போலவும் வேறெங்குமே ஊழல் நடக்காதது போலவும் நீங்கள் நினைக்க வைக்கப் படுகிறிர்கள். எந்த அரசு அலுவலகத்தில் நீங்கள் நுழைந்தாலும், வேலை நடக்க வேண்டுமென்றால் சில நூறுகளைக் குறைந்த பட்சம் தர வேண்டியிருக்கிறது. அல்லது ஆயிரங்கள் என்றும், எங்களைப் போல உள்ளவர்களிடம் லட்சங்கள் என்றும் தள்ள வேண்டியிருக்கிறது. இல்லை என்றால் நீங்கள் தான் நடையாய் நடக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த வழக்கில் இதை எல்லாம் மறந்து விடுகிறிர்கள்.
- சிறு இடம் தொடங்கி பெரிய இடம் வரை ஊழல் கொழுத்துக் கொண்டிருக்கிறது. அதையும் கணக்கில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறிர்கள் - அதிலும் அக்கறை கொள்ளுங்கள்.
- சிறு பியூன் தொடங்கி, பெரிய அமைச்சர்கள் வரை - எல்லா வற்றையும் முடக்கிப் போடுவதற்குப் பதில், ஒரு வழக்கை மட்டும் முடுக்கி விட்டு மற்ற எல்லாவற்றையும் மறைக்கும் முயற்சிக்கு எதிராகவும் நீங்கள் போராட வேண்டியிருக்கிறது.
- இந்த வழக்கில் அக்கறை காட்டும் நீங்கள், ராம் தேவ் பல ஆயிரக்கணக்கில் சொத்து வைத்திருப்பதும், அவருடைய சொத்து விபரங்களையே முழுவதும் வெளியிடாமல் இருக்க, அவர் கருப்பு பணப் பட்டியலை வெளியிட நான் போராடுவேன் என்று இன்று வரை சொல்லுவதை நீங்கள் பேசாமல் ஏற்றுக் கொள்கிறீர்களா?
- காங்கிரஸ் அவருக்கு எதிராக சொத்துப் பட்டியலை வெளியிட்டால் அது அவரை மிரட்டுகிறது என்று சொல்லுகிறீர்கள். ஆனால் ராசா மற்றும் கனி மொழி வழக்கில் மட்டும் காங்கிரஸ் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறை நேர்மையாக நடந்து கொண்டிருப்பதாக நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். அது எப்படி இந்தக் காங்கிரஸ் எங்கள் வழக்கில் மட்டும் நேர்மையாக நடக்கும் என்பதை நீங்கள் நினைக்கலாம். ராஜீவ் வழக்கிலேயே நேர்மையாக இல்லாத அரசு எப்படி எங்கள் வழக்கில் நேர்மையாக நடப்பதாக நினைக்கிறிர்கள் எனபதுதான் மிகப் பெரிய வியப்பாக எனக்கு இருக்கிறது.
- தன்னுடைய ஆதாயத்திற்காக காங்கிரசால் தொடரப் பட்ட வழக்கு இது- அதைவைத்து என்ன சாதிக்க முடியுமோ அதை இந்த அரசு சாதித்துக் கொண்டிருக்கிறது.
இதனால் நீங்கள் அறிய வேண்டியது என்னவென்றால் -
கனி மொழி ஜாமீன் மறுப்பு மட்டும் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமென்றால் - நீங்கள் ஊழலின் ஆணி வேரையும், அரசுகள் ஊழல் ஒழிப்புத் துறையின் மீது செலுத்துகிற ஆதிக்கத்தையும் மறந்து போவீர்கள். உங்கள் வேலை நடக்க லஞ்சம் கொடுத்து ஊழலை வளர்த்து விட்டு - ஆயிரங்கள் சரி, கோடிகள் தான் ப்ராப்ளம் என்று சப்பைக் கட்டு கட்டிக் கொண்டு ஊழலுக்கு நீங்களும் துணை போவீர்கள்.
அடிப்படையில் எதுவும் மாறாமல் - இந்த வழக்கு மட்டும் ஊழலை ஒழித்து விட முடியாது.
- இந்த வழக்கை ஊழல் ஒழிப்பின் தொடக்கம் என்று சொல்லப் படுகிற அளவுக்கு நேர்மையோடும், அரசின் குறுக்கீடு இன்றியும் நடப்பது போலத் தெரியாததனால் இதை அப்படியும் சொல்ல முடியாது.
- அதனால் அதுவரை ஊழலின் ஒட்டு மொத்த உருவம் என்று என்னை முத்திரை குத்தி என் செய்திகளின் வெப்பத்தில் உங்கள் ஊழல் ஒழிப்பு எதிர்ப்பையும் சேர்த்துக் கடாசி விடுவீர்கள் - அடுத்த ஒரு உருவம் கிடைக்கும் வரை...
- அடுத்த உருவம் தேடாமல் இப்போதே எல்லா ஊழலிலும் கவனம் செலுத்துங்கள்.
ஒட்டு மொத்த ஊழலுக்கு எதிராக நீங்கள் போராடும்
அந்த நாளில்தான் என்னைப் பற்றிய செய்திகள் மட்டும்
இடத்தை அடைக்காமல் ஊழல்வாதிகள் அனைவரும் நாளிதழ்கள்
மீடியாக்களை ஆக்கிரமித்துக் கொள்ளுவார்கள்.
அப்போதுதான் இது எவ்வளவு முக்கியமற்ற வழக்கு என்பதைப்
புரிந்து கொள்வீர்கள்.
அந்த நாளை கனிவோடு நோக்கும்
[..................................]
//////////////////////////////////////////////////////
கொசுறு:
கனிமொழி திகாரில் தியானத்தில் ஆர்வத்தோடு ஈடுபடுகிறார்.
.........
23 comments:
இன்னும் இந்த விஷயத்தில் பல ஊழல்களை மறைப்பது போல் தெரியவில்லை... மாறாக மக்கள் விரோத சட்டங்களை சத்தமில்லாமல் நிறைவேற்ற இந்த திசை திருப்பும் நாடகங்கள் நடந்தேறுகிறது...
உணவு பாதுகாப்பு சட்டம்
புதிய தகவல் தொழில் நுட்ப சட்டம்.
பல் இல்லாத நில ஆர்ஜித சட்டம்.[?] [இது பற்றி முறையாக இன்னும் நான் வாசிக்கவில்லை..]
பல் பிடுங்கப் பட்ட லோக் பால் மசோதா
Excellent!
Raja.
It is not the case about corruption.Major share shud be given to the national party which leads the central govt.Entire amount shud be declared to the head of that party then the shares to be negotiated with the top level.To avoid further consequence,reasonable amount shud be sent to supreme court judges in presence of our nation's president to make sure everyone one gets something.Violating such rules of basic corruption principles brought trouble to Mr.karunanithi who is much experienced in terms of administrative corruption in Indian politics more than anyone else in his age.Hope everything will be over in coming weeks for our country's better future.
@suryajeeva
ஜீவா,
திசைதிருப்பும் நாடகங்கள் - நடந்து கொண்டே இருக்கின்றன.
மக்கள் விரோத சட்டங்கள் நிறைவேற்றப் பட்டுக் கொண்டே இருக்கின்றன...
வழி மொழிகிறேன்.
@பெயரில்லா
Raja,
thanks for the visit and the comment.
@பெயரில்லா
Dear Friend, ...
Thanks for taking time to read and to comment.
it probably is true that the whole issue around Raja and Kanimozhi is about the fight about sharing the booty.
இப்போழுது வழக்குகள் கூட ஒரு திரைமறைவு நாடகமாக ஆகிவிட்டது...
மக்களை திசைத் திருப்பும் ஒரு யுக்த்தி...
If Kanimozhi is so true to herself in asking "By arresting me has corruption ended", she can also take the first step by resigning from her Rajya Sabha seat and disclosing publicly what she / her father knows about the corruption done by the chairperson of the party running the present government.
This first step will not be taken because, if she does so, she cannot enjoy the booty earned. She know pretty well that "THIS TOO WILL PASS" (her being in jail) and she can come back and enjoy.
Can she tell from her heart that she does not the roots of the transaction for Rs.214 crores.
When no corrupt person is true, including Kanimozhi, how can she expect sympathy. Better spend her time in Meditation and come back to enjoy the booty, Shameless people.
The same applies to "ALL" people be it politician or corrupt Government servants or corrupt corporates.
@ராஜா MVS
செந்தில் ராஜா,
நன்றி,
இணைப்புக் கொடுத்ததற்கு ...
திரை மறைவு நாடகங்கள் அரசியலில் சகஜம்தானே ...
@sridhar
Sridhar,
First of all thanks for taking time to write here your inspiring questions:
I would like to remind here few things.
1. The letter published here is only an imaginary letter.
2. this is in a sense a kind of 'situational comedy'.
3. However, this is words of Kanimozhi are addressed not to raise sympathy for her - but a kind of awareness that is needed on the part of those who watch this case so closely.
4. this also shows how the government's interference seems to be obvious in the case for political reasons.
5. one important case should not blind us against other corruptions as well.
at the end I share the same feeling as of you - that the all corrupt politicians should be imprisoned ...But will there be any one left?
அனைத்து ஊழல்களிலும் ஒரே மாதிரியான கவனம் செலுத்தப் படவேண்டும்...
//1. The letter published here is only an imaginary letter.//
my comment was to bring to the fore that even in imaginary situations no sympathy for those who wanted to enjoy the privileges which they do not deserve.
//3. However, this is words of Kanimozhi are addressed not to raise sympathy for her - but a kind of awareness that is needed on the part of those who watch this case so closely.//
My view is, this case could have been fought vigourously to root out corruption if the persons accused used their power, which was used to bring benefits to them, to bring to the forefront all activities they know, so that it will end corruption once for all.
This will not be done because it will not benefit them.
My only wish is "கனிமொழி கற்றுக் கொடுக்கும் பாடம்", all corrupt persons should learn from her that crores cannot bail you out of your sins.
//4. this also shows how the government's interference seems to be obvious in the case for political reasons.//
I don't think so, it is a mirage created by the politicians through their affliated media.
//But will there be any one left? //
Definitely will be.
கொசுறு:
கனிமொழி திகாரில் தியானத்தில் ஆர்வத்தோடு ஈடுபடுகிறார்.//
வேற என்ன செய்யமுடியும், இம்மாம் பெரிய கடல்லையே அந்த ஜா"மீன் இல்லையாமே ஹி ஹி, உப்பை தின்னவள் தண்ணி குடிக்ககடவள்...!!!
Our country's law and order wil always go after people like Dr.binayak sen etc.It wil never touch anyone frm indian royal families...Karuna's family is one among them....Early parlimentary poll wil possibily increase the bargainig power of Karuna, will offer seats to congress more than it deserves....this approach wil likely bring the tainted relationship back on track.Then 2g wil follow the foot steps of BOFARS. Since other issues will occupy our political platform.....2g will disappear slowly....
@koodal bala
உடல் நிலை எப்படி இருக்கிறது?
இதைத் தான் நான் சொல்ல விரும்புவது...
@sridhar
Dear Sridhar,
////my comment was to bring to the fore that even in imaginary situations no sympathy for those who wanted to enjoy the privileges which they do not deserve.///
Agreed. She is not a Gandhi to appeal to a corruption-less Government and politics. Yet the purpose of the letter is not to create sympathy for her. I do not think that any body who read this is moved by sympathy for her ..
The question is whether the same attention given to all the corruption cases.....
/////////My view is, this case could have been fought vigourously to root out corruption if the persons accused used their power, which was used to bring benefits to them, to bring to the forefront all activities they know, so that it will end corruption once for all.
This will not be done because it will not benefit them.////////
I do not think: "It is not easy to end corruption once and for all..." I am not saying this : but the honorable Prime minister and the President of Congress are saying this... This is what we need to fight against...
/////"கனிமொழி கற்றுக் கொடுக்கும் பாடம்", all corrupt persons should learn from her that crores cannot bail you out of your sins.///
perfect...
////I don't think so, it is a mirage created by the politicians through their affliated media.///
Why did not the CBI oppose the bail asked by Kanimozhi - Note that it is the judge who refused to offer bail....
////
//But will there be any one left? //
Definitely will be. //////
Kindly tell us few names so that we can trust in their loyalty to the nation and the people..
@MANO நாஞ்சில் மனோ
வாங்க மனோ..
நீங்க சொன்ன மாதிரி குடிக்கட்டும்......
@பெயரில்லா
Yes - there are lots of Binayak sens... out there...
my point also was that the congress used this as a political strategy get more seats in the election and may still continue to do so.
the political involvement has to be questioned...
@sridhar
Hello Sridhar,
It seems to me that we seem to on the same boat in raising the voice against corruption in politics.
without getting into the minute perspectiveal differences, let us raise voice against corruption - hoping to win over it...
ஊழல் புரிந்தவர்கள் அனைவருமே தண்டனைக்குரியவர்கள். அதில் ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் அல்லது சொத்து குவிப்பு போன்றவைகள் மட்டும் விதிவிலக்கல்ல. இன்றைய தேதியில் கனிமொழி, இராசாவிற்கு மட்டுமே புனையப்படுவது கண்டனத்திற்குரியது. விடுபட்ட மத்திய, மாநில (பா.ஜ.க. எடியூரப்பா உட்பட) அனைத்து அரசியல்வாதிகளையும் கூண்டிலேற்றி தண்டனைத் தர முனைய வேண்டுமேயன்றி குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே மீண்டும் மீண்டும் பதிவர்கள் தாக்குவது என்பது... ஒன்று நம் புரிதல் உணர்வை பலப்படுத்த முயற்சிக்க வேண்டும் அல்லது நம் மன அரிப்பிற்க்காக பாகுபாடுடன் படைப்புகள் வருகின்றனவா என்பதை சுய ஆய்வு செய்து கொள்ளவேண்டும்.
ஸ்பெக்ட்ரத்துடன் நின்றிடாது அனைத்து ஊழல்களையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் எனும் கருத்து வரவேற்கின்றேன். கனிமொழி,இராசாவை முன் நிறுத்தி மக்கள் மன்றத்தில் உண்மையாக அனைத்தும் நிகழ்வதாக காண்பித்துக் கொண்டு திரைமறைவில் பல சங்கதிகள் நிகழ்வதை அரசும் ஊடகங்களும் மறைக்கின்றன. அரசியல்வாதிகளுக்கு நிகராக ஊடகங்களும் தரகு வேலைகளையும் திரிபு செயல்களையும் புரிவது தான் வேதனையான செய்தி.
@நெல்லி. மூர்த்தி
நன்றி...
உங்கள் கருத்துகளோடு நான் உடன்படுகிறேன்.
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்