17.11.11

பிரித்தாளும் சூழ்ச்சி - ஆங்கிலேய அரசியலின் எச்சம்

பிரித்தாளும் சூழ்ச்சியால் தான் ஆங்கிலேயரின் ஆதிக்கம் இந்த மண்ணில் நீண்ட நாட்களாக இருந்தது என்பதை வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லுகின்றன. அந்த வரிசையில் பல்வேறு போராட்டங்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியின் சூத்திரத்தின் படியே அரசு இயந்திரங்கள் தொடர்ந்து மேற்கொள்வது நாம் இன்னமும் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் தான் இருக்கிறோமா என்று நினைக்கத் தோன்றுகிறது.


நம் அரசியல் வாதிகள் பல்வேறு வழிகளில் ஒரு போராட்டத்தை உடைக்கப் பார்ப்பார்கள். கூடங்குளம் அணுஉலை பிரச்சனையில் ஒவ்வொன்றாக முயற்சி செய்தார்கள். இதை அவர்களாகவும் செய்வார்கள் மற்றவர்களை வைத்தும் செய்வார்கள். சில சமயங்களில் பத்திரிக்கைகள் செய்கின்றன. உல் நோக்கத்தினால் தூண்டப் படுகிற சில தனி நபர்கள், இயக்கங்கள் என அதற்குப் பல முகங்கள் உண்டு. பிளவுகளை தமிழகம் முழுவதும் இன்னும் அதிகப் படுத்தி - கூடங்குளம் என்கிற ஒன்றை தமிழகத்தின் ஒரு சிறு பகுதியின் உள்ள பிரச்சனையாகவும் அதனால் மற்ற பகுதிகளில் உள்ள மக்களெல்லாம் அவர்களுக்கு எதிராக குரல் எழுப்ப முயற்சி செய்து வருகிறார்கள். இதன் மூலம் அந்தப் பகுதி மக்கள் எல்லாம் அறிவியல், தொழில் நுட்ப வளரச்சிகளுக்கு எதிரானவர்களாகவும், பழமை வாதிகளாகவும் சித்தரிக்க ஒரு முயற்சி. 
  • அறிவற்றவர்கள் vs அறிவுள்ளவர்கள் 
    • அறிவற்றவர்கள் vs அறிவுள்ளவர்கள் என்கிற பிளவினை உண்டு பண்ணப் பார்த்தார்கள். அதாவது போராடும் மக்களுக்கு பொருளாதார அறிவு இல்லை அதோடு அறிவியல் அறிவும் இல்லை என்று நினைத்து இந்த இரண்டில் அவர்களை போராட்டக் காரார்களை வெற்றி பெறச் செய்ய முடியுமா என்று பார்த்தார்கள்... இவ்வளவு கோடிக்கணக்கில் செலவு செய்ததற்குப் பிறகு அதை எதிர்த்தால் அவர்களுக்கு அறிவில்லதானே என்றார்கள். 
      • இதற்குப் பதில் ஒரு பாட்டி சொன்னதாக மாலதி மைத்ரி பகிர்ந்து கொண்டதை ஜெயமோகன் தனது அனுபவப் பகிர்வில் பகிர்ந்து கொண்டிருந்தார். அதை அப்படியே பதிவு செய்கிறேன். "இத்தனை செலவிட்டபின் இதை நிறுத்தமுடியுமா என்று இன்று இதழ்களில் எழுதியிருக்கிறார்கள். இங்கே ஒரு பாட்டியிடம் அதைப்பற்றி கேட்டேன். ’பத்துலட்சம் செலவு செய்து பந்தல் போட்டுவிட்டு பையனுக்கு எய்ட்ஸ் சீக்கு என்று தெரிந்தால் கல்யாணத்தை நிறுத்தமாட்டோமா? இல்லை பந்தலுக்காகத் திருமணத்தை நடத்துவோமா?’ என்று கேட்டார்’ என்றார்."   [நன்றி - திரு. ஜெயமோகன் ]
      • பல கோடிகள் செலவிட்டு அணு ஆயுதம் வெடிக்கலாம் - ராக்கெட் செயலிழந்து போகலாம் - அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை... அதற்கெல்லாம்தான் கோடி கோடியாகச் செலவு செய்தார்கள். அதனால்தான் பல கோடிகள் செலவு செய்து ஆயுதங்கள் வாங்கிக் குவித்து விட்டு வேஸ்டா போகுதுன்னுதான் பாகிஸ்தானோட சண்டை போடுறீங்களா ... அப்ப வச்சிருக்கோம் வேஸ்ட்டா போகுதுன்னு சண்டைக்கு கூப்பிடுறீங்களா? அது சரி பாட்டி கேட்ட கேள்விக்கே பதிலைக் காணோம் அப்புறம் எதுக்கு இன்னமும் கேள்வி..
  •  தெற்கு Vs வடக்கு 
    •  அடுத்து பாதுகாப்பு அம்சம் பத்தி கதிர்வீச்சு இது பத்தியெல்லாம் பேசுறாங்க என்னடா பண்ணலாம் - உடனே என்ன சொன்னாங்க கல்பாக்கத்துல அணு உலை இல்லையா?அது பாதுகாப்பா இல்லையான்ன உடனே தெற்கு Vs வடக்கு அப்படின்னு போட்டுப் பாத்தாங்க. சில சென்னை நண்பர்களும் உடனே ஆமா அது சரிதானே. நாங்கல்லாம் அதுலதானே இருக்கோம் அப்புறம் உங்களுக்கு மட்டுமென்ன. 
      • உடனே அதுக்கு சிலர் ஒன்று சேர்ந்தது [பூவுலகின் நண்பர்கள் மற்றும் பலர் சேர்ந்தது] கல்பாக்கம் ஒன்னும் பாதுகாப்பா இல்லை அங்கேயும் ப்ராப்ளம் இருந்துச்சு ஆனா வெளில வர விடாம பண்ணிட்டாங்கன்னு வெளியில வந்த உடனே -[இதுவரைக்கும் கல்பாக்கத்துல ஒரு மாதிரி எவாகுவஷன் கூட செய்யவில்லை / பலருக்கு இப்பவே கதிர் வீச்சு அபாயங்கள் ' சுனாமி சமயத்தில் நடந்தது ] அதுனால இப்ப அணு உலை எங்கேயும் வேண்டாம். கல்பாக்கத்துலையும்  வேண்டாம்னு நண்பர்கள் சொல்றாங்க.
  • வசதி Vs வசதியின்மை
    •  இதென்னடா வம்பாப் போச்சுன்னு வசதி Vs வசதியின்மை அப்படின்னு ஒரு பிளவுக்கு முயற்சி செய்தார்கள். மின்வெட்டு என்பதை அதிகமாக்குவது. விலைவாசி உயர்வது, பொருளாதாரம் வீழ்கிறது. ரொம்பக் கஷ்டம் ... அடடா என்ன பண்றது... அணு  உலைதான் ஒரே தீர்வு. கலாமைக் கூப்பிட்டு சொன்னார்கள். அப்படியா?
      • இதுவரைக்கும் இந்தியாவின் மின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அணு உலை மின்சாரங்கள் இல்லை என்பதும்.. அப்படியே வைத்தாலும் அது அதிக பட்ச தேவையை எல்லாம் செய்யாது என்று சில நல்ல விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். தமிழகம்தான் காற்றாலை வழி மின்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே ஒரு அணு உலை இருக்கு. [ராஜஸ்தான்ல மட்டும்தான் இரண்டு இருக்குன்னு நினைக்கிறேன்.] 
      • என்னைப் போன்ற விவரம் தெரியாதவர்கள் என்ன கேக்குறாங்கன்னா - எதுக்கு தமிழ் நாட்டுலே இன்னொன்னு. கேரளாவிலை வை. கர்நாடகாவில வை. இதுவரைக்கும் அணு உலையே இல்லாத ஸ்டேட்ல வை....  கேட்டா உடனே திருப்பி ஒண்ணுக்குப் போவாங்க... [பாயிண்ட் நம்பர் ஒன்னுக்கு]... அதுதான் ஏற்கனவே பாட்டி சொல்லிட்டாங்களே. 
      • உற்பத்தி செய்கிற மின்சாரத்தை எல்லாம் வெளி மாநிலங்களுக்கு விற்பது, இன்னும் உலை வைத்து அதையும் விற்று நம்ம உயிருக்கும் உலை வைக்கவா... 
  •  ஆள்பவன் Vs அளப்படுபவர்கள்
    •  ஆகா இது இந்திய தேசியத்துக்கு உலை வச்சுருவாங்க போல இருக்கேன்னு அடுத்துப் போடுறா வருமான வரித்துறை...அதுதான் ஆள்பவன் Vs அளப்படுபவர்கள். [முந்தையப் பதிவைப் படியுங்கள்] உதயகுமார் ஒரே வார்த்தையில் பதில் சொல்லிட்டார். மடியில கனமில்லை வழியில பயமில்லை.
அடுத்த ஆயுதம் மதமும் சாதியையும் ----  கிறித்தவப் பாதிரியார்கள்தான் வேண்டுமென்றே குழப்பம் விளைவிக்கிறார்கள் என்று அதுக்கு மிகப் பெரிய கட்டுக்கதைகள் பல நண்பர்கள் வம்பாய் எழுதி - மக்களை தேவையில்லாமல் பிரிக்கிறது அப்படி - இது கிறித்தவத்துக்கு இழுக்கு - அப்படின்னு சென்னையில ஒரு ஆர்ப்பாட்டம் - இப்ப என்னடான்னா நல்ல விஷயத்துல எதுக்குடா வம்புன்னு - தூத்துக்குடி பெரிய பாதிரியார் எனக்கு இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்னதாகச் செய்திகள் வந்தது. 

இதற்கு அடுத்த ஆயுதத்தைக் கையிலேடுத்தாலும் தமிழர்கள் ஒன்றாக நிற்க வேண்டயது காலத்தின் கட்டாயம்.

//////////////////////

கொசுறு - வாசிப்பாளர்களுக்கு -
 எதிர்பாராத வேலைப் பளு கூடியுள்ளதால் இனிமேல் வாரம் ஒரு முறை மட்டுமே பதிவினை வெளியிட வாய்ப்பு என்று கருதுகிறேன் [அப்படா என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் நண்பர்களுக்கு - சிலசமயங்களில் இரண்டு மொக்கைகள் சேர்ந்துகூட வரலாம்]...

கொசுறு -
சென்னை நண்பர்களுக்கு


15 comments:

SURYAJEEVA சொன்னது…[பதிலளி]

இதை விட விவரமாக எழுத முடியாது... இன்குலாப் ஜிந்தாபாத்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]

இதுவரைக்கும் இந்தியாவின் மின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அணு உலை மின்சாரங்கள் இல்லை என்பதும்.. அப்படியே வைத்தாலும் அது அதிக பட்ச தேவையை எல்லாம் செய்யாது என்று சில நல்ல விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள்//

நம்ம கலாம் அண்ணாச்சி வாயை குடுத்து காமெடி பீசானதுதான் ஆச்சர்யமா இருக்கு....!!!

rajamelaiyur சொன்னது…[பதிலளி]

நல்ல விரிவான அலசல்

rajamelaiyur சொன்னது…[பதிலளி]

இன்று என் வலையில்
தூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்?":

Thozhirkalam Channel சொன்னது…[பதிலளி]

சிறப்பான பதிவுகளை வரவேற்கிறோம்..

நிவாஸ் சொன்னது…[பதிலளி]

அழகான விளக்கங்கள்

ஆனால் இதெல்லாம் தெரிந்தும், நமது தலையில் மிளகாய் அரைக்கப் பாக்கும் சிலருக்கு, பாடம் புகட்டியே ஆக வேண்டும்

ராஜா MVS சொன்னது…[பதிலளி]

பாட்டி சொன்ன பதில் சூப்பர்... இனி குதற்க்கமாக கேள்வி கேட்பவர்களுக்கு பாட்டியின் பதில் நச்...

மிக தெளிவாகவும், விபரமாகவும் பதிவிட்டிருக்கீங்கள்.. .

பகிர்வுக்கு மிக்க நன்றி... நண்பரே...

கோகுல் சொன்னது…[பதிலளி]

சூப்பரப்பு!

bike rally சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…[பதிலளி]

@suryajeeva

வணக்கம் ஜீவா,
பார்ப்போம்.. தமிழகத்தின் எல்லாப் பக்கங்களிலும் மக்கள் இணைந்தால் நல்லதுதானே.

Unknown சொன்னது…[பதிலளி]

@MANO நாஞ்சில் மனோ
வணக்கம்
அவரைச் சொல்லி என்ன ஆகப் போகுது. அவர் வளர்ச்சியை மட்டுமே மனதில் கொண்டுவிட்டார் என்றே படுகிறது.

Unknown சொன்னது…[பதிலளி]

@"என் ராஜபாட்டை"- ராஜா
பாராட்டுக்கு நன்றி...

Unknown சொன்னது…[பதிலளி]

@"என் ராஜபாட்டை"- ராஜா
ராஜா,
நீங்க இங்க வருவதற்கு முன்னமேயே உங்கள் கேள்விகளுக்கு பின்னூட்டம் கொஞ்சம் பெரிதாகவே எழுதிவிட்டேன்.

Unknown சொன்னது…[பதிலளி]

@நிவாஸ்
வணக்கம் நிவாஸ்,
நமக்குத் தெரியுது... எல்லாருக்கும் தெரியுது...
ஆனால் ஒவ்வொருவரும் சில முன்முடிவு செய்யப்பட்ட பார்வைகளோடு அணுகுவதுதான் தவறு என்று தெரிகிறது. பார்ப்போம்.

Unknown சொன்னது…[பதிலளி]

@ராஜா MVS

வாங்க ராஜா,
நம்மை விட படிக்காத மக்களின் அறிவு மிகப் பெரியது என்பதில் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு.

Unknown சொன்னது…[பதிலளி]

@கோகுல்
கோகுல்,
நன்றி.....

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்