28.11.11

அது என்ன 999 ?


டேம் பற்றிய படம் - பற்றிய தடை சரியில்லை என்று சொன்ன போது, கேரளா உள் குத்தோடும், நடக்கிறது என்று எழுதியதற்கு - புது அணை கட்டுவதில் தப்பென்ன என்று கேட்டார்கள்.

அதற்கு முன்பு - இந்தப் படம் முல்லைப் பெரியாறு அணை பற்றிய படம் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இந்த 999 என்பது சில உள் குத்தோடு எடுக்கப்பட்டது என்று சொன்னோம். இந்த எண் முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்த வருடங்களைக் குறிக்கிற எண்.

சின்ன விளக்கம் - நீங்கள் யாரிடமோ அல்லது உங்களிடம் யாரோ சில ஆண்டுக்கான ஒப்பந்தத்தை போடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட காலம் முடியும் முன்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதென்றால், சட்டச் சிக்கல்கள் வரும். அல்லது நீங்கள் போட்ட ஒப்பந்தத்தை நீங்களே முடித்துக் கொள்வதாக அறிவித்தால் அதற்காக நீங்கள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.

தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகளுக்குப் போடப்பட்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ஏறக்குறைய இன்னும் எண்ணூறு ஆண்டுகளாவது கேரளா அரசு காத்திருக்க வேண்டும். அதற்கு நஷ்ட ஈடு கொடுக்கவும் கூடாது அதே சமயம் ஒப்பந்தத்தையும் முறிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.... அணை வலு இழந்து விட்டது.... மக்கள் பீதி... என்கிற ஒன்றில்தான் அதைச் சாதிக்க முடியும். அதைத் தான் அவர்கள் செய்கிறார்கள்.

வரலாற்றில் சில பிழைகள், மிகப் பெரிய சிக்கல்களாக எதிர் காலச் சந்ததியினருக்கு மாறிப் போகும் வாய்ப்புகள் நிறைய உண்டு. அப்படி ஒன்றுதான் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை. அதாவது இப்போது அணை கட்டப் பட்டிருக்கிற இடம் திருவாங்குருக்குச் சொந்தமானது என்று நினைத்து தவறாக நூற்றி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தில், வருடா வருடம் ஒப்பந்தப் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறது கேரளா. இதை மீறும் வகையில் இடுக்கியில் ஒரு அணை வேறு கட்டியது. அதற்கான நீர் வரத்து இல்லாத காரணத்தால் இந்த புளுகைக் கிளப்பி விடுகிறது.

வீணாய்க் கடலில் கலக்கும் ஆற்றை தமிழகம் பகுதியில் திருப்பிவிட ஒரு அணை கட்டப்படவும், அதற்கு சரியான இடம் தேடும் பணியில் இப்போது அணை கட்டப்பட்டிருக்கும் இடத்தையும் தேர்ந்தெடுத்து ஒப்பந்தப் பணம் கட்டி... அணையைப் பராமரித்து வரும் தமிழகம் ... இடையில் இவர்கள் சொன்ன புளுகிற்காக மேலும் பனிரெண்டு கோடிகளுக்கு மேல் செலவழித்தது. இறுதியாக முடியவேண்டிய ஒரு வேலையை செய்ய விடாமல் கேரள காட்டு அதிகாரிகள் - தப்பா எடுத்துக் கொள்ளாதீர்கள் பாரஸ்ட் ஆபிசர்ஸ் - வழக்கு போட்டு சிலரை மானபங்கப் படுத்தவும் செய்ததார்கள். இந்த ஒப்பந்தம் மற்றும் அணையை ஒன்றுமில்லாமல் செய்தால்தான் அவர்களுக்கு இடுக்கியிலோ அல்லது அவர்கள் புதிதாய்க் கட்டும் அனையிலிருந்தோ மின்சார உற்பத்தியைத் தொடங்க முடியும். இதைத் தான் நான் சகுனி வேலை என்று கடந்த பதிவில் குறிப்பிட்டேன்.

இப்படித் தவாறாக திருவாங்கூர் சமஸ்தானத்த்திற்கு சொந்தமான பகுதி என்று நினைத்ததுப் போடப் பட்ட ஒப்பந்த்தம் அதன் பிழையில்தான் அதிகமாக தமிழர்கள் வசித்த அந்தப் பகுதிகள் எல்லாம் சுதந்திரம் பெற்ற போது கேரளாவிற்குச் சென்றது. அந்த ஒப்பந்தம் தவறு என்று அவர்கள் சொல்வார்களேயானால், அந்தப் பகுதிகள் எல்லாம் பிறகு தமிழர்களின் பகுதி என்றாகிவிடும். எனவே ஒப்பந்தம் தவறு என்று அவர்கள் சொல்ல முடியாது. அதனால் ஒரே வழி இந்த ஆணை வலுவிழந்தது என்று சொல்வதுதான் அதைத் தான் அவர்கள் செய்கிறார்கள்.

உண்மை நிலவரம் அறிய - மற்றும் முழு வரலாற்றை அறிய பின்வரும் கானொளியில் பாருங்கள்.
இதை அறியத்தந்த நண்பர் பூபதி பெருமாள் [கடந்த பதிவில் பின்னூட்டத்தில்] மற்றும் வீரா இளவரசு அவர்களுக்கு நன்றி.



The Mullai Periyar DAM Problem from Veera Elavarasu on Vimeo.

கொசுறு

கூடங்குளம் வெடித்தால் என்ன ஆகும் என்று யாராவது படம் எடுத்தால் நன்றாக இருக்கும். 
ஏனெனில் உண்மை பேசும் டாகுமெண்டரி மற்றும் போராட்டங்களை விட இப்படி சென்சேஷனல் படங்கள்தான் விளைவை ஏற்படுத்துகின்றது.... ஒருவேளை அப்படி கூடங்குளம் பற்றி எடுத்தால்
ஹாலிவுட் கனக்ஷன் இருந்தால் நல்லது. 
ஆனால் அதற்கு கேரளா உதவி செய்யுமா?

14 comments:

அப்துல் ரஹ்மான் சொன்னது…[பதிலளி]

தமிழர்களாகிய எங்களுக்கே இதுவரை இந்த அணையின் உண்மையான முழு விபரங்கள் தெரியாது. மிகத் தெளிவாக விளக்கம் தந்ததற்கு மிகவும் நன்றி.

Unknown சொன்னது…[பதிலளி]

பகிர்வுக்கு நன்றி

Unknown சொன்னது…[பதிலளி]

@நண்டு @நொரண்டு -ஈரோடு

நன்றி ஐயா... வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன்.

Unknown சொன்னது…[பதிலளி]

@அப்துல் ரஹ்மான்

நண்பரே, எல்லாருக்கும் எல்லா விடயங்களும் தெரிவதில்லை. தெரிந்தவர் தெரியாதவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். உங்களுக்குத் தெரிந்த பல விஷயங்கள் எனக்குத் தெரியாது. ஒருவருக்கொருவர் உதவுவதில்தானே நம் நேயம் இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை பல வரலாற்று நிகழ்வுகள் திட்டமிட்டே மறக்கடிக்கப் படுகின்றன என்பதே.
வரவுக்கு நன்றி...

Unknown சொன்னது…[பதிலளி]

@விக்கியுலகம்

சுபாஷ் மாமா!
நன்றி...

ராஜா MVS சொன்னது…[பதிலளி]

முல்லைப் பெரியாறு அணையைப் பற்றி எனக்கு இருந்த பல சூட்டுமம் இன்றுதான் விடைக் கண்டுத் தெளிவுப் பெற்றேன்...

பொதுவாக எல்லா கானோளியும் என் கணினியில் தடை, பார்க்க முடியாது. -ஆனால் குறிப்பாக இந்த வகை கானொளி என் கணினியில் தடைசெய்யப் படவில்லை ஆகயால் தான் விபரம் முழுவது தெரிந்துக் கொள்ள உதவியாக இருந்தது... நண்பரே...

பகிர்வுக்கு மிக்க நன்றி... நண்பரே...

SURYAJEEVA சொன்னது…[பதிலளி]

அருமையான விளக்கங்கள்.. இதற்க்கு தீர்வு, நதிகளை தேசிய மயமாக்குவது என்று என் மனதில் தோன்றினாலும்.. மத்தியில் ஆள்பவர்களுக்கு சாதகம் இல்லாத அரசு மாநிலத்தில் அமர்ந்தால் என்ன விளைவு என்பதை பல மாநிலங்களில் கண் கூடை பார்க்க முடிகிறது... தேவை... மக்களை பற்றி கவலைப் படும் தலைவர்கள்..
கூடங்குளம் போராட்டமே வெளிநாட்டு சதியால் நடக்கிறது என்று கூவிக் கொண்டிருக்கிறார்கள், இன்னும் ஹாலிவுட் உதவியுடன் படம் எடுத்தால்.. ஊர்ஜிதமாகி விட்டது என்று ஊளை இடுவார்கள்... நம் மக்கள் சக்தி பெருகுகிறது... பலரின் ஆதரவும் பெருகுகிறது... தேசிய இறையாண்மை என்ற ஆயுதம் மத்திய அரசால் எடுக்கப் படாதவரை நலமே...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…[பதிலளி]

தெளிவான விளக்கங்கள்...

இப்படி ஏதாவது சகுனி வேலையை செய்துதான் கேரளா தன்னுடைய எண்ணத்தை பூர்த்தி செய்துகொள்ள துடிக்கும்...

இதை முறையாக அனுகி தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டும்...

Unknown சொன்னது…[பதிலளி]

@ராஜா MVS
இந்தக் காணொளியைத் தாங்கள் பார்க்க முடிந்தது குறித்து மகிழ்ச்சி

Unknown சொன்னது…[பதிலளி]

@suryajeeva

முதலில் உங்கள் கடந்த பதிவைச் சில நாட்கள் முகப்பில் வைத்ததற்கு நன்றி.
கடைசிக் கொசுறு நக்கல்தான்...
தினமலர் சில விஷயங்களைக் கிளப்பி விடுகிறது....அதில் எல்லாரும் உள்ளே நுழைந்து நனைந்து கொள்கிறார்கள்.

Unknown சொன்னது…[பதிலளி]

@கவிதை வீதி... // சௌந்தர் //
வணக்கம் ..
வாருங்கள்..
நன்றி.

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

கொடுத்து கொடுத்து சிவந்த கரம் கொண்டவன் தமிழன்...இப்போது பிறர் அடிக்க அடிக்க சிவப்பாகிறான்...போதாக்குறைக்கு Fair $ Lovely வேறு...

இதற்க்கெல்லாம் காரணம் நம் அறியாமை தான்...நாம் யார்..எது நமது என்ற உணர்வே இல்லாத ஜடங்களாய் மாறிவிட்டோம்...

நல்ல அறிவூட்டும்..உணர்வூட்டும் பதிவு தோழரே...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…[பதிலளி]

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். அருமையான பதிவு...வாழ்த்துக்கள். நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

rishvan சொன்னது…[பதிலளி]

பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்..... thodarungal......www.rishvan.com

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்