22.9.11

அரசியல் உண்ணா விரதங்களும் - மக்கள் போராட்ட உண்ணா விரதமும்

அன்னா ஹசாரே

 • தெரிந்தோ தெரியாமலோ வேண்டுமென்றோ - ஒட்டு மொத்த பத்திரிகை உலகமும் அன்னா ஹசாரேவின் உண்ணா விரதப் போராட்டத்திற்கு அதரவு அளித்து தினம் முழுப் பக்க செய்தியை வெளியிட, தொலைக்காட்சிகள் நேரடி காட்சிகளை ஒளிபரப்ப அதற்குப் பிறகு உண்ணா விரதப் போராட்டம் என்பது தனிநபரை முன்னிறுத்தும் ஒரு நல்ல விளம்பரம் என அரசியல் வாதிகளுக்கு மனதில் பட்டு விட அவர்கள் ஒவ்வொருவரும் உண்ணா விரதம் மேற்கொள்ளுவதை வழக்கமாகிக் கொண்டுவிட்டார்கள்.
சங்கர் சிங் வகேலாவும், நரேந்திர மோடியும்,
 • சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நரேந்திர மோடி உண்ணா விரதம். இதில் நரேந்திர மோடி மத நல்லிணக்கத்திற்கு எதிரான அவரது செயல்பாடுகளைப் பற்றியும், மதக் கலவரங்களை கண்டு கொள்ளாமல் இருந்தது பற்றியும், அவரது வேண்டுகோளின்றியே அனைத்துப் பத்திரிக்கைகளும் வெளியிட்டதாக ஞாபகம். இப்போது அதை மாற்றும் விதமாக அனைத்துப் பத்திரிக்கைகளிலும் அவரது உண்ணா விரதம் பற்றிய விளம்பரம் இருந்தது. காரணமின்றி இருக்கும் உண்ணா விரதத்ததிற்கு இந்தியா முழுவதுமான விளம்பரம் கிடைக்காது என்று அறிந்து அவராக விளம்பரம் கொடுத்துக் கொண்டு இந்தியா முழுவதுமான சரிந்து போன தனது இமேஜை சரிக் கட்டிக் கொள்கிறார் - அதாவது உண்ணா விரதம் என்கிற பேரில். இந்தியப் பிரதமராக தான் விஷ்வ ரூபம் எடுப்பதற்கான வாய்ப்பாக இவர் பயன்படுத்திக் கொண்டார். அவரைப் பொறுத்த வரை உண்ணா விரதம் என்பது தனது இமேஜை சரி செய்து கொள்ளுகிற ஓர் ஆயுதம்.
 • அதே பாணியைப் பின்பற்றி இப்போது பீகார் முதல்வர் ஐந்து மாதம் யாத்ரா தொடங்க இருக்கிறாராம். தனது திட்டங்களை பற்றி மக்களிடம் கருத்துக் கேட்க. இதென்ன கொடுமைடா? 
 • நம்ம முதல்வர்கள் எல்லாம் எதோ அரசர்கள் போலவும், நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாதது போலவும், யாத்ரா வைத்துத் தான் மக்களிடம் கேட்க வேண்டும் என்பதுபோலவும் - அப்படிக் கேட்கவேண்டும் என்றால் மாதம் மும்மாரி பொழிகிறதா என்று தங்கள் அமைச்சர்களை வைத்துக் கேட்க வேண்டியதுதானே - அப்படியே இல்லையென்றாலும், இரவில் மாறு வேடத்தில் போய் அறிந்து கொள்ள வேண்டியதுதானே.
 • இப்படி முதல்வர்களே உண்ணா விரதம் இருப்பது - எதற்காகவும் இல்லாமல் வெறும் விளம்பரத்திற்காக இருப்பது - தனி நபர் மையப் படுத்தலை மட்டுமே முன்னிறுத்துவது - இந்திய பிரதமாராக முன்மொழியப் பட அனைத்து மாநிலங்களுக்கும் தெரியச் செய்வதற்காக உண்ணா விரதம் இருப்பது - 
 • இதெல்லாம் தனி நபர் முன்னிருத்தலின்றி மக்களின் தேவைகளை நிறைவேற்றவும், அல்லது மக்களுக்கெதிரான கொடுமைகளை அழிக்கக் கோரி இருக்கும் போராட்டங்களை கேவலப் படுத்துகிற செயலாகவே தோன்றுகிறது. 127 பேரின் உண்ணா விரதத்திற்கு கொடுக்கப் பட்ட முக்கியத்துவத்தை விட ஒருவரின் [பொது] நோக்கமற்ற ஒரு உண்ணா விரதத்தை முன்னிறுத்துவது அநாகரிகமானது. இவர்கள் இந்திய அளவில் தலைவர்களானால்  பாவம் மக்கள்.
சில கற்பனை உண்ணா விரதங்கள் 
 • பேசாமல் ஊழலை ஒழிக்க திரு. மன்மோகன் சிங் மூன்று நாட்கள் உண்ணா விரதம் இருக்கலாம். அதையும் நாம் எல்லாரும் தூக்கிப் பிடிப்போம். யாருக்கு எதிராக என்றெல்லாம் கேட்கக் கூடாது. மோடி யாரிடம் சமூக நல்லிணக்கம் வேண்டுமென்று உண்ணா விரதம் இருந்தார். நாம் ஏதாவது கேட்டோமா? பிரதமரும் இருந்து விட்டுப் போகட்டுமே ! 
 • அல்லது தமிழக காவல் துறை ஆணையர் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட மூன்று நாட்கள் உண்ணா விரதம் இருக்கட்டும். 
 • அல்லது காங்கிரஸ் அமைச்சர்கள் எல்லாரும் சேர்ந்து பெட்ரோல் விலை உயர்வை குறைக்க உண்ணா விரதம் இருக்கட்டும். இருந்தாலும் இருப்பார்கள் அவர்கள். ராகுல் காந்தி விவசாய வேஷம் போடுரவரா ஆச்சே. நாமலே ஐடியா குடுக்குரோமே இது நமக்குத் தேவையா?
பதவியில் இருப்பவர்கள் உண்ணா விரதம் இருந்தால் தங்கள் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்கிற சட்டம் இயற்றினால் நல்ல இருக்கும். 
 • ஏன்னா - இப்படி முதல் அமைச்சர்களும், அதிகாரத்தில் இருப்பவர்களுமே உண்ணா விரதம் இருந்தால் - (ஒன்று) அவர்களுக்கு அவர்கள் மேல் நம்பிக்கை இல்லை; அல்லது, (இரண்டு) தங்களது அதிகாரத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் நம்புகிறார்கள் - அல்லது (மூன்று) தங்கள் அதிகாரத்தை வைத்து எதை வேண்டுமானாலும் செய்யலாம். அப்புறம் ஒரு உண்ணா விரதம் இருந்து நாம் நல்லவர்கள் என்று காட்டிக் கொள்ளலாம் என்று நம்புகிறார்கள். 
 • அவர்களுக்கு அவர்கள் மேலேயோ அல்லது அதிகாரத்தை வைத்தோ ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் நம்புகிறவர்கள் அல்ல. அப்படியெனில் எப்போதோ அவர்கள் தங்கள் பதவிகளைத் தூக்கி எறிந்திருப்பார்கள். எனக்கென்னவோ அவர்கள் மூன்றாவதைத் தான் நம்புகிறார்கள் என்று தோன்றுகிறது.
கூடன்குளம் அணு உலைக் கெதிரான போராட்டம் மக்கள் போராட்டம். பல்வேறு அச்சுறுத்தல்களுக்குப் பிறகும்; பல ஆண்டுகள் தொடர் அறிவுருத்தளுக்குப் பிறகு, அதன் தீமைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி பல அரசுகள் செவி மடுக்காத நிலையில் இன்று ஒன்று பட்ட போராட்டமாக உருவெடுத்து முதல்வரைப் பார்த்து எடுத்துச் சொல்லுகிற நிலைக்கு அது வந்திருக்கிறது. அதில் பல்வேறு நபர்கள் அங்கே நேரடியாக வந்து [மேதா பட்கர் ] தங்களது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள். 

இதுதான் ஒரு போராட்டத்திற்கான வரையறை. ஏறக்குறைய நூற்றி ஐம்பது பேர் உண்ணா விரதப் போராட்டத்தில் பங்கேற்கவும், ஆயிரக் கணக்கான மக்கள் பந்தலில் காலை முதல் இரவு வரை உண்ணாதிருந்து தங்கள் எதிர்ப்பையும் இத்தனை நாட்கள் காட்டி அதில் ஏறக்குறைய வெற்றியும் பெற்றிருப்பது தனி நபரின் ஆதாயத்திற்காகவோ அல்லது புகழ் வேண்டியோ அல்ல. 

இத்தகையப் போராட்டங்கள் தான் தேவையே தவிர - தனி நபர் அல்லது ஆட்சியில் இருக்கும் நபர்கள் நடத்தும் நாடகங்களை முதலிலேயே வேரறுக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

நமக்குத் தேவை நடிகர்கள் அல்ல - மக்கள் விழித்தால்தான் அரசியல்வாதிகள் நடிப்பதை நிறுத்துவார்கள். 
முன்பு நடிகர்கள் அரசியலுக்கு வந்தார்கள். இன்றைய சூழலில் அரசியல் வாதிகள் நன்றாகவே நடிக்கிறார்கள்.  
--
கூடங்குளம் போராட்டம் ஏறக்குறைய எதிர் பார்த்த ஒரு வெற்றி நிலையில் இருக்கிறது. இதில் வலைப் பதிவர்களின் பங்கை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒருவர் பற்றி எழுதினோம். இந்தப் போராட்டம் தொடங்கியது முதல் "இன்குலாப் ஜிந்தாபாத்" மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த சூர்ய ஜீவா நினைக்கப் பட வேண்டியவர். எல்லா பதிவுகளையும் தொகுத்துக் கொடுத்த ராஜேஷ் : வைரை சதீஷ்:   நண்டு நொரண்டு:    மனோ போன்ற எல்லாரையும் - எல்லாப் பதிவர்களின் பெயரையும் குறிக்க முடியாமைக்கு வருந்துகிறேன் - மற்றும் கூடங்குளம் பற்றி எழுதிய எல்லாப் பதிவர்களுக்கும் வணக்கங்களும் பாராட்டுதல்களும். 
 • இது எதற்கெனில் தமிழக பத்திரிகைகளுக்கு முன்னரேயும், அப்போராட்டம் தொடங்கிய நாட்கள் முதற்கொண்டு பதிவர்கள் காட்டிய அக்கறைக்காக. விளம்பரம் அல்லது சென்சேஷனல் என்றால் தான் பத்திரிக்கைகள் ஆர்வம் காட்டும். ஆனால் பதிவர்கள் நிலைப்பாடு எடுக்கிறவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருப்பதற்காக. 
--
எதிரும் புதிரும்.
மோடிக்கான ஆதரவை இட்லிவடையும் - அவரின் நாடகத்தை அரங்கேற்றும் சிந்திக்கவும் 

13 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…[பதிலளி]

முன்பு நடிகர்கள் அரசியலுக்கு வந்தார்கள். இன்றைய சூழலில் அரசியல் வாதிகள் நன்றாகவே நடிக்கிறார்கள்.//

இதுதான் உண்மை சகோ...

அப்பு சொன்னது…[பதிலளி]

என்ன செய்வது நாம் நடிகர்களைப் பார்த்தே வளர்ந்து விட்டோம்.

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

good post....sinthikka thoondum katturai..

ungalukkum paaraattu

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…[பதிலளி]

அருமை .

suryajeeva சொன்னது…[பதிலளி]

போராட்டம் தொடங்கியது முதல் கூடங்குளம் தவிர வேறு எந்த பதிவும் இடாத ரெவெரி யும் நினைக்கப் பட வேண்டியவர்
இன்குலாப் ஜிந்தாபாத்

அப்பு சொன்னது…[பதிலளி]

நன்றி சூர்யா ஜீவா -
ரெவெரி அவர்களுக்குத் தனிப்பட்ட பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
http://reverienreality.blogspot.com/

வைரை சதிஷ் சொன்னது…[பதிலளி]

அருமை நண்பா போராட்டம் வெற்றியை அடைந்திருக்கிறது.

ரெவெரி சொன்னது…[பதிலளி]

உண்ணாவிரதம் என்றவுடன் உள்ளே நுழைந்தேன்...நல்ல அலசல்...

கூடங்குளம் பற்றி என் பங்களிப்பு ரொம்ப சிறியது...நன்றி அப்பு..நன்றி சூர்யா..
சரக்கில்லை என்பதால் வேறு பதிவு இடவில்லை என்ற சாக்கு சொல்லாமல் உங்கள்
பாராட்டுகளை ஏற்றுக்கொள்கிறேன்... -:)

Philosophy Prabhakaran சொன்னது…[பதிலளி]

இட்லிவடைக்கு சோ சாம்பார் ஊற்றுவதால் அப்படித்தான் எழுதுவார்கள்...

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

///இட்லிவடைக்கு சோ சாம்பார் ஊற்றுவதால் அப்படித்தான் எழுதுவார்கள்... ///

அதனாலதான் கூடங்குளம் பத்தி எல்லாரும் பேசினப்ப, இட்லிவடை - மோடியப் பத்தி எழுதி அந்தப் படம் போட்டு சாம்பார் ஊத்தி சாப்பிட்டாங்களோ?

தங்கம்பழனி சொன்னது…[பதிலளி]

நல்ல நடிகராவதற்காகவே அரசியலில் நுழையலாம்..!! இது புதுவிதம்!

தங்கம்பழனி சொன்னது…[பதிலளி]

வலைப்பூ பிடித்தமையால் பாலோவராகவும் இணைந்துவிட்டேன்..! இனி தொடர்ந்து வருவேன்..

அப்பு சொன்னது…[பதிலளி]

மிக்க நன்றி - தங்கம் பழனி

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்