30.8.10

உலகத்தின் நோக்கம் 1

நாம் வாழும் உலகம், இயற்கை என்பது உருவானதா அல்லது உருவாக்கப்பட்டதா என்ற விவாதத்தை நாம் தொடர வேண்டிய அவசியம் இல்லை.

இயற்கை எப்படி இருக்கிறது என்பதை மட்டும் நாம் சிந்தித்தால் நல்லது.

அறிவியலாளர்கள் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவர்கள் சொல்லும் அடிப்படைக் கருத்துக்களை யாரும் மறுக்கவும் முடியாது.
உலகம் எப்படித்தோன்றியது என்று அவர்கள் சொல்லும் கருத்துருவிலும், பரிணாமவாதத்திலும் நமக்கும் அடிப்படையில் உடன்பாடு உண்டு.

ஆனாலும் அதன் தொடர்ச்சிகள், அதன் விளைவுகள் எந்த அளவிற்கு நமது வாழ்க்கைக்கு உதவும் என்பது ஒரு புறம் இருந்தாலும்,
அது கொணரும் கேள்விகளும் நிறைய இருக்கின்றன என்பதைத்தான் நாம் முன் வைக்க நினைக்கின்றோம்.

இதனை மிகவும் விரிவாகவே மெய்யியலாலர்களும், இன்னும் அறிஞர்களும் பல்வேறு கோணங்களிலிருந்து விவாதித்து, பல விளைவுகளையும், எதிர் மறையான முடிவுகளையும் முன்வைக்கிறார்கள்.
அது நமக்குத் தேவையற்றது.

இக்கட்டுரையின் நோக்கம் மிகவும் அடிப்படையானது. இவ்வுலகில் நமது இருப்பின் பொறுப்புனர்வைப் பற்றி பேசுகிறது.
அதற்கான சில கேள்விகளை முன்வைக்கிறது. அவ்வளவே!

இயற்கைக்கு நோக்கம் ஒன்றும் இல்லை. அதுவாகத் தோன்றியது. அதுவாக இருக்கிறது. அதுவாக மறையும் - என்ற கொள்கையோடு பலர் நமது மத்தியில் இருக்கிறார்கள்.
அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். அதில் படித்தவர்களும் உண்டு, படிக்காதவர்களும் உண்டு.

கோடிக்கணக்கான ஆண்டுகளாய் நெருப்புப் பிழம்பாய் இருந்தது பின் பிரிந்து
(
எதிலிருந்து நெருப்பு வந்தது என்று கேட்கக் கூடாது)
அதன் பிறகு குளிர்ந்து, நீர் வந்து, மரங்கள் தோன்றி
அதன் பிறகு ஒன்று இரண்டு என உயிர்கள் தோன்றி, அது
பலதாய் பெருகி, இத்தகைய சூழ் நிலைகளுக்கு ஏற்ப
எதெல்லாம் ஈடு கொடுக்க முடிந்ததோ அவைகள் வாழ்ந்து -
பின் வாழ முடியாதவைகள் எல்லாம் மடிந்து -
இறுதியில்,
இயற்கையின் போக்கிற்கு ஈடு கொடுக்க முடிந்தவைகள் மட்டும் உயிர் வாழ்கின்றன.
அப்படி வாழ்ந்த உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் பல நிலைகளைக் கடந்து மனித உயிர்கள் தோன்றி -
நாம் இன்று இருக்கக் கூடிய நிலையை அடைய கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன.

இதனடிப்படையில், பலர் தங்கள் வாதங்களையும் முன் வைக்கிறார்கள்.
இதில் எதுவுமே ஒரு நோக்கத்தோடு நடை பெற வில்லை.
அதுவாய்த் தோன்றியது. அதுவே நடந்தது.
மனித உயிர்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்பது
இயற்கையின் நோக்கம் அல்ல.
காலப் போக்கில் அது நடந்தது. பரிணாம வளர்ச்சியில் இது நடந்ததே தவிர இதற்கு நோக்கம் கற்பிப்பது அபத்தம் என்று சொல்கிறார்கள்.

மேலும்....

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்