உணவுப் பாதுகாப்புத் திட்டம்
- மிக வெற்றிகரமாக ஏழை மக்கள் அனைவரும் நிச்சயமாக உணவைப் பெறுவதற்கான திட்டத்தை நாங்கள் நிறைவேற்ற மிகப் பெரிய போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்று இந்திய அன்னை சோனியா காந்தி சொல்லியிருக்கிறார்கள். இது ராஜீவ் காந்தியின் கனவு என்று சொல்லியிருக்கிறார். அவர் இருந்த போது இந்தியப் பாதுகாப்பு என்று போபார்ஸ் பீரங்கிகளை வாங்குவது அவர் கனவாக இருந்து நிறைவேற்றினார். இப்போது இன்னொரு கனவை இவர்கள் நிறைவேற்றுகிறார்கள் போல.
- இப்பதான் மத்தியத் திட்டக் கமிஷன் ஒரு நாளைக்கு முப்பது ரூபா சம்பாரிச்சா ஏழைகள் இல்லைன்னு சொல்லுச்சு... அப்படிப் பாத்தா ரோட்டுல பிச்சை எடுக்குறவங்க கூட ஏழைகள் இல்லைன்னு சொன்னது. இவங்க 67 சதவீதம் மக்கள் பயனடைவார்கள் என்று சொல்றாங்க...
- பூச்சி புழுத்து கிடங்குகளில் கிடக்கும் அரிசிகளை ஏழை மக்களுக்கு குடுங்கன்னு நீதி மன்றம் சொன்னதற்கு இதே காந்தியின் பேரன்களெல்லாம் அரசு விஷயத்தில் நீதி மன்றம் தலையிடக் கூடாது அப்படின்னு சொன்னாங்க. இப்ப திடீர் கரிசனை மக்கள் மேல்....
அணுநீர்க் கசிவு
- ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இப்போதும் பணியாளர்கள் அணு உலையைக் குளிர்விக்க வேலை செய்து கொண்டிருக்கிறார்களாம். இப்போது ஏறக்குறைய 300 டன் கதிர்வீச்சு நீர் கசிவதாகவும் எந்தத் தொட்டியில் இருந்து கசிகிறது என்று கண்டு பிடிக்க வேலை செய்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். கூடங்குளத்த நினைச்சா என் எதிர்கால சந்ததியின் வாழ்க்கை முகமூடிகளுக்கு பின்னால்தான் என்று தோன்றுகிறது. அப்படி ஒரு நிலையில், ஒருவேளை இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டம் உதவி செய்யலாம்.
கச்சத் தீவு
- கச்சத்தீவு பற்றி மூச்சே விடக்கூடாது என்று இலங்கை அமைச்சர் சொல்லியிருக்கிறார். கவலைப் படாதீங்க...நீங்க மீனவர்களைச் சுடுங்க... நீங்க புத்தர் சண்டை போடச் சொன்னார்னு சொல்லுங்க... தமிழர்கள் அறிவில்லாதவங்கன்னு சொல்லுங்க... தமிழர்கள் நாட்டைப் பிரிக்க சதின்னு மாண்புமிகு பிரதம மந்திரி மன்மோகன் சிங்குகிட்ட சொல்லுங்க... அவர் உங்களுக்கு நன்றி சொல்லுவார். நீங்க பினான்ஸ் பண்ணி படம் எடுத்தாக் கூட இங்க யாரும் ஒன்னும் சொல்ல மாட்டான். கவலைப் படாதிங்க.
தடை
- ஜான் ஆப்ரஹாம் நடித்த படம் தமிழர்களை இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாக காண்பிப்பதாகவும் படத்தை தடை செய்ய வேண்டுமென்றும் சொல்கிறார்கள். ஜான் ஆப்ரஹாம் இலங்கையில் இலங்கை அதிகாரிகள் யாரையும் பார்க்க வில்லை என்று சொன்ன மறு நிமிடம் அவர் இலங்கை அதிகாரிகளைப் பார்ப்பதற்காக இருந்த ஆதாரங்கள் முகப்புத்தகத்தில் வெளி வந்திருக்கின்றன. ஆமாம் நான் பார்க்கப் போனேன்... அவன்தான் ஸ்பான்சர் பண்றான்னு ஒப்பனா சொல்லிட்டா நம்ம பிரதமரே பாதுகாப்புக் குடுப்பாரே இதுக்குப் போய் யாராவது பொய் சொல்லுவாங்களா ஆப்ரஹாம்.
- ரா இந்திய உளவுத் துறை என்றெல்லாம் சொல்லுகிறார்கள்... இலங்கை உளவுத்துறை ரொம்ப ஒப்பன் போல இருக்கிறது..
- தமிழர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்தால்தான் தமிழர்களின் நலன் கிடைக்கும் என்கிற ஒரு செய்தியை படம் பார்ப்பவர்கள் எடுத்துக் கொண்டால் போகிறது ஏனெனில் மலையாளர் ஒருவர்தான் மிக சிரத்தையோடு ராஜீவ் இந்தியாவைக் காப்பாற்ற போராடுகிறாராம்.
இளையராஜா
- சினிமாக் காரர்கள் எல்லாருக்கும் தங்களது பர்ஸ் நிறைந்தால் போதும் என்கிற அளவுக்கு மட்டுமே இருக்கிறார்கள். அதுதான் ஆப்ரஹாமை பொய் சொல்ல வைத்திருக்கிறது. பொதுவாக இலங்கைத் தமிழர்களை மனதில் வைத்தே பல திரைப் பட கலைஞர்கள் தங்கள் டாலர்களையும் பவுண்டுகளையும் குறி வைக்கிறார்கள். இளையராஜா என்றும் ராஜாதான். அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லைதான். அவரும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்பதைத் தான் தொடர்ச்சியாக வரும் அவரது கான்செர்ட்ட்டுகள் சொல்லுகின்றன. அதாவது பணத்திற்கு மட்டும் அவர்கள் வேண்டும் ஆனால் ஆதரவுக் கருத்து என்கிற அளவில் கூட சில சமயம் எதுவம் சத்தமாய்ப் பேசுவதில்லை... அதனால் இங்கிலாந்தில் விற்பனை மந்தம் என்று சொல்லுகிறார்கள்.
- இருபத்தி நான்காம் தேதிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் வேளையில் இன்னும் அரங்கு நிறையாமல் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அதனால் உலக நாயகன் முதற்கொண்டு எல்லாரும் வாங்க வாங்கன்னு கூவி விக்கிறாங்க...
- இதெல்லாம் தேவையான்னுதான் விசய் ஒரு படத்துக்கு இருபது கோடி வாங்குறாராம். அடப் பாவிங்களா காச என்னதான் பண்ணுவீங்க? நீங்களெல்லாம் உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிச்சா உலகத்துக்கே சாப்பாடு போடலாம் போல இருக்கே?
0 comments:
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்