4.1.12

முதல் நாள்

முதல் நாள் மழை பெய்தால் 
வருடம் முழுதும் மழை பொழியுமாம் 
செழிப்பாய் இருக்குமாம் நாடு
– பெரியவர்கள் சொல்லுகிறார்கள்.

முதல் நாள் அழுதால் 
வருடம் முழுதும் அழுவோமாம். 
மனது சொல்லுகிறது.

ஆனால்
முதல் நாள் குடித்தால் 
வருடம் முழுதும் குடிக்க நேரமோ என்றோ
முதல் நாள் விடுமுறையில் உழைக்காமல் இருந்தால் 
வருடம் முழுதும் உழைக்காமல் இருக்க நேரிடுமே என்று 
மனதும் சொல்ல மறுக்கிறது 
அரசும் சொல்ல மறுக்கிறது.


நாம் குடிப்பதற்கான காரணம் தெரிகிறதா?
நாம் சோம்பேறிகளாய் இருப்பதற்கான காரணம் புரிகிறதா?


9 comments:

விக்கியுலகம் சொன்னது…[பதிலளி]

ஸ்ஸ் அடடடா...!

Sankar Gurusamy சொன்னது…[பதிலளி]

வருட முதல்நாள் விடுப்பும்,குடியும் இப்போது ஒரு முக்கியமான சடங்காகிவிட்டது. குடிக்காதவர்கள் தேசத் துரோகிகள் என சட்டம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

MANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]

ஆஹா இப்பிடி ஒன்னும் இருக்கா அடப்பாவிகளா...!!!

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

அப்பு!
வெச்சிட்டியே ஆப்பு!

அப்பு சொன்னது…[பதிலளி]

@விக்கியுலகம்
உஸ்.. என்ன மாம்ஸ் பன்றது?

அப்பு சொன்னது…[பதிலளி]

@Sankar Gurusamy

நன்றி ஐயா

அப்பு சொன்னது…[பதிலளி]

@MANO நாஞ்சில் மனோ

ஆமால்ல...
என்ன செய்வது.... கொண்டாடனும்னு தோணுது
கொண்டாடுறோம்...
எப்படின்னுதானே தெரியலை.

அப்பு சொன்னது…[பதிலளி]

@பெயரில்லா

யாரு ஆப்பு வைச்சா நானா?

இந்த ஆப்பு பின்னூட்டத்தைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன்.
இப்பதான் வந்திருக்கு.

உங்க பேரு தெரிஞ்ச
சரியா வைக்கலாம்.
அதுக்கு வழி இல்லாம பண்ணிட்டிங்க...
அதுனால தப்பிட்டிங்க..

சென்னை பித்தன் சொன்னது…[பதிலளி]

முதல் நாள் குடியும் ,விடுமுறையும் சடங்காகிப் போய் விட்ட நிலையைச் சொல்லி நிற்கிறது கவிதை.நன்று.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்