13.2.13

தடைகளுக்குப் பின்னால் ....தமிழ்த் திரை உலகத்தில் உதித்திருக்கிற இந்த தடை விவகாரங்கள் தமிழக மக்களை பல்வேறு விதத்தில் கூறு போட்டிருக்கிறது. தன்னுடைய நிலைப்பாட்டைச் சார்ந்து தனது அடையாளத்தை நிலை நிறுத்தும் முயற்சியில் தான் அறிந்தோ அறியாமலோ பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவைகளுக்குப் பின்னால் வேண்டுமென்றே இனத்தைக் கூறு போடும் சக்திகள் இருப்பதை இந்தப் பலர் அறியாமல் இருப்பது வேதனைதான்.
உண்மையிலேயே அது தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், தனது சமூகம் ஒரு குரல் எழுப்பியது என்பதற்காக அதனோடு சேர்ந்த இஸ்லாமிய சமூகம் ஒரு புறம் – கமலின் விஸ்வரூபத்தை தடை செய்வதா – எனில் அமீரின் ஆதி பகவானைத் தடை செய் என்று இந்து முன்னணி வீரர்கள் ஒரு புறம் – எல்லாரும் பாதிக்கப்பட்டால் கிறித்தவ சமூகம் என்னாவது என்று சப்பைக் கட்டுக் கட்டும் சில கிறித்தவர்கள் ஒரு புறம் – இந்த தடைகளின் தேவைகள் என்ன? எதற்காக இந்தப் போராட்டங்கள்? இவைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?
  • -    ஒவ்வொரு மனிதனின் அடையாளமும் மிக முக்கியம். ‘அடையாளப் படுத்துதல்’ என்பது எப்போதும் உள்ளதுதான். ஆனால் அவைகளின் தாக்கம் என்பது மிக அதிகமாக உள்ளது இரு நூற்றாண்டுகளாகத் தான். இப்போது தனது அடையாளம் என்பது தனது இனத்தைத் தாண்டி உலக அளவில் அல்லது இந்திய அளவில் தங்களது அடையாளத்தை நிலை நிறுத்தும் முயற்சி தான் இது.
  • -    தனக்கான எதிரி யார் என்பதை இஸ்லாமியர்கள் கட்டமைக்கிற முயற்சியில் இந்துக்களை எதிரிகளாகக் கருதி தங்களது தமிழ் இனத்தின் அடையாளத்தை மறந்து உலக இஸ்லாமியர்களோடு ஒன்று படுத்துகிற முயற்சி என்பது ஒரு புறம். 
  •   தங்களது எதிரிகளாக இஸ்லாமியர்களை உருவாக்கி அதன் வழியாக இந்திய இந்துக்களாக, இந்து, இந்தியா என்ற அடையாளத்திற்குள் வரையறுத்து தங்களது சொந்த இன அடையாளத்திற்கு எதிரான ஒரு நிலைப் பாட்டையும் எடுக்கிறார்கள். இவர்களுடைய அந்தக் கட்டமைப்பில்தான் இஸ்லாமியர்கள் அந்த நிலைப்பாட்டிற்குத் தள்ளப் படுகிறார்கள் என்பதும் உண்மைதான். 
  •   இதில் கிறித்தவத்தையும், கிறித்தவர்களையும் சில சமயங்களில் தங்களது எதிரிகளாக, வெளியிலிருந்து வந்த ஐரோப்பியர்களோடு அடையாளப் படுத்தப் படுவதில் தங்களது தமிழின அடையாளத்தை மறக்கவும் சமயத்தின் அடையாளத்தை முன்னிறுத்தவும் நிர்ப்பந்தப் படுத்தப்படுகிறார்கள். அதனாலேயே தேவையற்ற நேரங்களில் கூட, சிலர் கிறித்தவ அடையாளத்தை முன்னே வைக்கிறார்கள் – கடல் திரைப்படத் தடை வழியாக.
  •  அடிப்படையில் ஒரு மனிதன் தனது சமூகக் குழு உறுப்பினராகவே இந்த மண்ணில் கால் வைக்கிறான். மனித அடையாளத்தின் அடிப்படை என்றால் அது அவர் சார்ந்த இனம்தான். இதுதான் ஒரு மனிதனின் அடிப்படை அடையாளம். அதே வேளை சமயம் – மதம் என்பது ஒரு மனித வாழ்வின் தொடர்ச்சி அல்லது இலக்கு என்கிற வகையில் அதுவும் மிக முக்கியமான அடையாளத்தைத் தருகிறது. தனது அடிப்படை அடையாளம் தகர்க்கப் படுகிற போது, தன்னை வாழ்வின் இறுதி இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்கும் சமய அடையாளத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதாவது தமிழ் இன அடையாளம் என்பது அழிக்கப் பட்டு, அவனை சாதிய வழியில் பிரித்த போது தன்னை இந்து சமயத்தின் புறந்தள்ளப் பட்ட ஒரு இனமாகவே அடையாளப் படுத்த தள்ளப்பட்டார்கள். எனவே தலித் அடையாளம் என்பது தேவையும், அவசியமும் ஆகிறது. ஆனால் இதில் தமிழ் இன அடையாளம் நமது அடிப்படை என்பதும் முன் வைக்கப் படுகிற போது – இந்திய இந்துக்கள் மீண்டும் அனைவரையும் சமய அடிப்படையில் ஒன்று சேர்க்கவும் தங்களது அடிப்படை அடையாளத்தை மறக்கவும் கையிலெடுத்ததுதான் இந்துத்துவம். அதற்காக கட்டமைக்கப் பட்ட எதிரிகள்தான் இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும்.
  •   ஒரு பயங்கரமான எதிரி கட்டமைக்கப் படுகிற போது, அந்த எதிரியை எதிர் கொள்ள வேண்டிய அவசியத்தைப் பற்றி மட்டும் யோசிப்பவர்கள், அடிப்படை அடையாளத்தை மறந்து ‘மத’ அடிப்படைவாதத்தை முன்னெடுக்க கட்டமைக்கப் பட்ட எதிரிகள் எதைச் செய்தாலும் அதனை தவறாகப் புரிந்து கொள்ளவும், இன்னும் பயங்கரமான எதிரிகளாகக் கட்டமைக்கும் பணியும் தொடர்ந்து நடக்கிறது.
  • -    இதைத்தான் இந்த திரைப்படத் தடை விவகாரங்களில் பார்க்கலாம். விஸ்வரூபம் தடைக்குப் பின்னால் இருக்கிற அரசியலை அலச தனிக்கட்டுரை அவசியம். ஆனால் இது நடந்த பிறகு ஒரு தொலைக் காட்சியின் விவாத மேடையில் ஆதி பகவானைத் தடை செய்ய கோரும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சில காரணங்கள்: அவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? நாங்கள் புண்பட மாட்டோமா? அது மட்டுமல்ல – வள்ளுவர் மைலாப்பூரில் இருந்தார் என்பதற்கான ஆதாரமே இல்லை – என்று அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.   இறுதிக் காரணம்தான் மிக முக்கியமானது. ராமர் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது ஆனால் வள்ளுவர் என்பவர் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்பது மைலாப்பூரில் மட்டுமல்ல – தமிழகத்திலே இல்லை என்பதற்கான முதல் படிதான்.
  •   இதுதான் இங்கே காரணம். மீண்டும் மீண்டும் ஆதிக்க சக்தியின் கைகளையும் கால்களையும் விரித்து அடிமையாக்கும் நவீன அடிமைத்தனம். அதுதான் மதங்களின் அடையாளத்தை முன்னிறுத்தும் தந்திரம்.

- வலை விரிப்பவர்களின் தந்திரம் தெரியாமல் வலையில் மாட்டும் பறவைகள் போல தமிழ் இனம் மத வலையில் மாட்டுவது பரிதாபத்துக்குரியது. இதுதான் காவிரி நீர் மறுப்பில் கர்நாடகாவுக்கு எதிராக மௌனம் சாதிக்கவும், முல்லைப் பெரியார் விவகாரத்தில் விலகி இருக்கவும், அணுமின் உலைகளுக்கு எதிரான போராட்டத்தில் பேசாமல் இருப்பதற்கும் வழி வகுக்கிறது.

-    இத்தகைய நிலையில் நம்மை வைத்து நமது அடிப்படை அடையாளத்தை மறக்கடிக்கச் செய்வதே நவீன இந்துத்துவத்தின் சாமர்த்தியம். இதை எதிர்ப்பதற்கான வழி தமிழின அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்வதே.


4 comments:

suryajeeva சொன்னது…[பதிலளி]

சில நடவடிக்கைகள் எதற்கு என்பது பல நேரங்களில் திரைக்கு முன் வருவதே இல்லை... விஸ்வரூபம் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நேரத்தில் எத்தனை பிரச்சினைகள் கண்ணுக்கு தெரியாமலே சென்றது என்பது ஒரே செய்தி காட்டிக் கொடுக்கிறது... டீசல் மொத்த கொள் முதல் விலை உயர்த்தியதால் அரசு பேருந்துகள் தனியார் பங்குகளில் டீசல் நிரப்பிக் கொள்வதால் டீசலின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறியது யார் காதுகளிலும் விழவில்லை என்பதே உண்மை... மேலும் அரசு பேருந்துகளின் இந்த நடவடிக்கையால் ஷெல் ரிலையன்ஸ் என்னை நிறுவனங்களின் விற்பனையும் அதிகரிக்கும் என்று கூறப் படுவதும் யார் பார்வையிலும் பட வில்லை... பிரித்தாளும் சூழ்ச்சியை பரங்கியன் நம்மை ஆட்சி செய்பவர்களுக்கும் விட்டே சென்றிருக்கான்

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

Iyya athai seiya muyathchi seitha orraaoruvan
V.PRAPAKARN AVANAIYUM INDIA chakkadai aracial
kolai seithathu. ALL INDIAN POLITICIAN ARE BLAAA
BLAAA.......

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

தமிழின அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்வதே.Iyya athai seiya muyathchi seitha orraaoruvan
V.PRAPAKARN AVANAIYUM INDIA chakkadai aracial
kolai seithathu. ALL INDIAN POLITICIAN ARE BLAAA
BLAAA.......

அப்பு சொன்னது…[பதிலளி]

@suryajeeva
ஜீவா வணக்கம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு.

உங்கள் கருத்து மிகச் சரியானது.

நன்றி.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்