15.1.12

பொங்கல்தான் தமிழ் புத்தாண்டு


முதலில் ஒரு சிறிய நினைவூட்டல் - கடந்த ஆண்டு பொங்கலன்று எழுதிய பதிவிலிருந்து சில வரிகள் - அதோடு தொடங்கலாம்.

"அ.தி.மு.க நண்பர்கள் இதைக் கொண்டாட மாட்டார்கள். அம்மையார் இதை அனுமதிக்க மாட்டார். இதுவரை ஏப்ரலில் வாழ்த்துச் சொன்ன கலைஞர் மூன்று ஆண்டுகளாய் “தை”யில் வாழ்த்துச் சொல்கிறார். மீண்டும் அம்மையார் வந்தால் மீண்டும் இந்தப் புத்தாண்டு ஏப்ரலில்தான் கொண்டாடப் படவேண்டும் என்று சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அரசு அலுவலகங்களுக்கு தை மாதம் நடக்கிற அலங்கார விளக்குகள் சித்திரைக்கு மாறும். அது “நந்தன” ஆண்டு சித்திரையில் [ஏப்ரல் 14 ல்] தொடங்கலாம்."  
                                                                           
                                                                                             முழுப் பதிவும் படிக்க...


  • பல ஆண்டுகளாக எனக்குத் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் அன்றுதான். அறிவியல் ரீதியாகவோ அல்லது, சங்க இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்து அதை என்பிப்பதற்கான தேவையோ அல்லது அறிவியல் பூர்வமாக பொங்கல் தான் புத்தாண்டு என்று சொல்வதற்கான நிலையில் நான் இல்லை. அதை நிறைய அறிஞர்கள், பதிவுலக நண்பர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு அரசு அறிவிப்பதனாலோ இன்னொரு அரசு அதை மாற்றி மற்றொரு நாள் அறிவிப்பதினாலோ பின் வரும் சந்ததியினருக்கு வரலாறு மாற்றிச் சொல்லப் படும் நிலை உருவாகும் என்பது அறிந்ததுதான். ஆனால் நாம் அதைத் தானே ஏற்றுக் கொள்ளுகிறோம். என்ன செய்வது? 

  • இந்த புதிய அறிவிப்பிற்குப் பிறகு அரசுக் கட்டிடங்களில் ஒளித்த மின்விளக்குகள் வேண்டுமானால் மறையலாம். நம் உள்ளங்களில் ஏற்றப்படும் விளைக்கை அணைக்க முடியுமா? இந்த அரசின் அறிவிப்பிக்குப் பிறகு தனி மனிதக் கொண்டாட்டத்தை தடை செய்யும் உரிமை அரசுக்கு இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு அரசினால் தமிழர்களின் தமிழ் புத்தாண்டு அங்கிகரிக்கப் பட்டது - அல்லது ஏற்கனவே உள்ள தவறை சரி செய்தது. மற்றொரு அரசு மீண்டும் தவறை உண்மை என்று உணர்த்தப் பார்க்கிறது. அது எந்த விதத்திலும் தமிழர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை மாற்றி விட முடியுமா அல்லது தடுத்து விட முடியுமா?

அதனாலே
பொங்கலோ பொங்கல் என்பதோடு
தை முதலே ஆண்டின் முதல் என்பதயும் சேர்த்து
முழக்கம் இட வேண்டியிருக்கிறது.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு அன்று பொங்கலிட்டு
புதிய உணவை - புதிய பானையில்
பொங்கி மகிழ்வோம்.


கொசுறு : 

தமிழ் புத்தாண்டு - தைப் பொங்கல் / வௌவால் 

மதுமதியின் தூரிகையின் தூறல் 

வானம் எனக்கொரு போதி மரம்

 கனடா வாழ் தமிழர் ஒருவரின் கட்டுரை  

25 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…[பதிலளி]

எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

Rathnavel சொன்னது…[பதிலளி]

எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

சி.பிரேம் குமார் சொன்னது…[பதிலளி]

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பரே

மயிலன் சொன்னது…[பதிலளி]

//ஒரு அரசு அறிவிப்பதனாலோ இன்னொரு அரசு அதை மாற்றி மற்றொரு நாள் அறிவிப்பதினாலோ பின் வரும் சந்ததியினருக்கு வரலாறு மாற்றிச் சொல்லப் படும் நிலை உருவாகும்//

பிரெச்சனையே இவிங்கதான்...

Sankar Gurusamy சொன்னது…[பதிலளி]

இனிய பொங்கல் / தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

http://anubhudhi.blogspot.com/

ananthu சொன்னது…[பதிலளி]

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

வவ்வால் சொன்னது…[பதிலளி]

அப்பு,

//ஒரு அரசு அறிவிப்பதனாலோ இன்னொரு அரசு அதை மாற்றி மற்றொரு நாள் அறிவிப்பதினாலோ பின் வரும் சந்ததியினருக்கு வரலாறு மாற்றிச் சொல்லப் படும் நிலை உருவாகும் என்பது அறிந்ததுதான். ஆனால் நாம் அதைத் தானே ஏற்றுக் கொள்ளுகிறோம். என்ன செய்வது? //

நீங்கள் பதிவில் முன்னோட்டமாக சொன்னதை 2008 இல் சட்டம் வந்தப்போதும் ஆட்சி மாறினால் இருக்குமா என்று பின்னூட்டங்களில் பேசிக்கொண்டோம்.நம்ம பதிவுக்கும் இணைப்பு தந்ததுக்கு நன்றி.

ஒரு அரசு கொண்டு வருவதை மற்றது புறம் தள்ளுவது இந்திய, தமிழக அரசியலில் சகஜமப்பா என்று சொல்லும் நிலை தான் இருக்கு.

ஒரு அரசு மாற்றியப்போதும் எல்லாம் தமிழ்ப்புத்தாண்டு என குதுகளிக்கவில்லை. இப்போ மாற்றியப்போதும் அய்யகோ என்று அலறவும் இல்லை.எனவே மக்கள் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே நிதர்சனம். அப்போ என்ன தான் செய்றாங்களா, ஜனவரி-1,பிப்-14 என நாட்களா இல்லை , சுவீட் எடு கொண்டாடு :-))

மக்களைப்பொறுத்தவரையில் பொருளாதார ரீதியாக அவர்களுக்கு பாதிப்பு உண்டாக்கினால் மட்டுமே அரசு நிர்வாகம் சரி இல்லை என்பார்கள்.

கலாச்சாரம், மொழி, உணர்வு, மண் , வாழ்வியல் இதில் எல்லாம் அரசு விளையாடினால் யாருக்கோ இது என்பது போலத்தான் போவார்கள்.

மீனவர்கள் கொல்லப்ப்டுகிறார்களா அது அவங்க தொழில் பிரச்சினை, இலங்கையில் தமிழர்கள் சாகிறார்களா அது அயல்நாட்டுப்பிரச்சினை.

முல்லைப்பெரியாரில் பிரச்சின்னையா அது தென்மாவட்ட விவசாயிகள் பிரச்சினை. இன்னும் சிலர் மழை நீரை தேக்கினால் போதும் என்பார்கள். சரி தான், ஆனால் இத்தனைக்காலம் இருந்த உரிமைக்கு என்ன பதில் கேட்டால் தேசியம் சொல்வாங்க.

இது போல தான் சித்திரையில் இருந்தால் என்ன தையில் இருந்தால் என்ன, ஏன் சர்ச்சைனு எல்லாதுக்கும் மண் புழுவா புதைந்துக்கிடப்பார்கள் மக்கள்.

ஆங்கிலப்புத்தாண்டு என்பது கூட இங்கிலாந்துக்காரனுதா இல்லையே அவனே ரோமானியர்களைப்பார்த்து கொண்டாடுகிறான். உண்மையில் அது இலத்தின்/ ரோம புத்தாண்டு.

ஜீவானந்தம் பரமசாமி சொன்னது…[பதிலளி]

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சி.கருணாகரசு சொன்னது…[பதிலளி]

வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

புலவர் சா இராமாநுசம் சொன்னது…[பதிலளி]

இனிய பொங்கல் + தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

என் வலை வந்து பாருங்கள்!

புலவர் சா இராமாநுசம்

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

இனிய பொங்கல் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அப்பு சொன்னது…[பதிலளி]

@நண்டு @நொரண்டு -ஈரோடு
தாமதத்திற்கு வருந்துகிறேன்.
வாழ்த்துக்களுக்கு
நன்றி

அப்பு சொன்னது…[பதிலளி]

@Rathnavel

ஐயா,
தாமதத்திற்கு வருந்துகிறேன்.
வாழ்த்துக்களுக்கு
நன்றி

அப்பு சொன்னது…[பதிலளி]

@சி.பிரேம் குமார்
வாழ்த்துக்களுக்கு
நன்றி

அப்பு சொன்னது…[பதிலளி]

@மயிலன்

மயிலன்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
புதிய ஆண்டு அனைவருக்கும் நல்லது செய்யட்டும்.
அரசு உட்பட..

அப்பு சொன்னது…[பதிலளி]

@Sankar Gurusamy

வணக்கம் சங்கர்,
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அப்பு சொன்னது…[பதிலளி]

@ananthu
வணக்கம் ஆனந்து,
வரவுக்கு நன்றி..
உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.

அப்பு சொன்னது…[பதிலளி]

@வவ்வால்

வௌவால் வணக்கம்.
உங்களது நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி.
நீங்கள் சொல்வது உண்மைதான்.
இன்றைய வாழ்வு பொருளாதாரம் சார்ந்து மாறிப்போனது உண்மைதான்.

ஆனால் மக்கள் தங்கள் பண்பாட்டு சூழலைச் சார்ந்தே பல விஷயங்கள் தீர்மானிக்கப் படுகின்றன என்பது நமக்குத் தெரியாமல் போனதுதான் வருத்தப் பட வேண்டியிருக்கிறது.

அப்பு சொன்னது…[பதிலளி]

@ஜீவானந்தம் பரமசாமி

வணக்கம்.
தங்கள் வரவு நல்வரவு ஆகுக.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.

அப்பு சொன்னது…[பதிலளி]

@சி.கருணாகரசு
வணக்கம் கருணாகரசு,
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அப்பு சொன்னது…[பதிலளி]

@புலவர் சா இராமாநுசம்
ஐயா,
வரவுக்கும் வலைப் பூவில் இணைந்ததற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாக இருக்கட்டும்.

அப்பு சொன்னது…[பதிலளி]

@ரெவெரி

ரெவரி,
வணக்கம்.
வாழ்த்துக்களுக்கும் நன்றி....

காட்டான் சொன்னது…[பதிலளி]

வணக்கம் அப்பு!
நான் ரெம்ப லேட்போல.? பொங்கல்;தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

அப்பு சொன்னது…[பதிலளி]

@காட்டான்
காட்டான்,
நான்தான் மிகத் தாமதம்.
நன்றி.

N.H.பிரசாத் சொன்னது…[பதிலளி]

Belated Pongal Wishes & Advance Happy Tamil new year. பகிர்வுக்கு நன்றி.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்