12.1.12

வாக்கு வாதம் - இ.க.வும் - மு. பெ யும்


தலைப்பின் நீளம் கருதி இடிந்தகரையை இ.க. எனவும் - முல்லைப் பெரியாறை  மு. பெ எனவும் குறுக்க வேண்டியதாகிப் போய் விட்டது.

கடந்த வாரம் ஒரு நாள் என் நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும் போது... முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டினார். அது முற்றிலும் தவறு என்று சொன்னார். கேரளா அரசியல்வாதிகளின் தவறான அணுகு முறை பற்றிப் பேசினார்.
அதே வேகத்தில் நான் கூடங்குளம் பற்றி பேச்செடுக்க அவர் சொன்னார் – “நான் கூடங்குள அணுமின் நிலையத்தை ஆதரிப்பவன் எனவே நம் வாதத்தை அப்படியே முடித்துக் கொள்ளலாம். மேற்கொண்டு எதுவும் பேச வேண்டாமே என்றார்.

அவர் மட்டுமல்ல பல பேர் இந்த அணுகுமுறை மட்டுமே சரி என்கிறார்கள் – அதாவது முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளாவை எதிர்ப்பவன் அதே சமயம் அணுமின் நிலையத்தை ஆதரிக்கிரவனாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

ஏன் இப்படி நினைக்கிறார்கள் என்று நான் நினைக்க பல காரணங்கள் எனக்கு தெரிகிறது.

  1. மனித வாழ்க்கையில் அச்சப் படுவது தவறு. இதுதான் ஒருவரை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அச்சப் படுவது தவறு என்றும் அதேபோல கூடங்குள விவகாரத்தில் மக்கள் அச்சப் படுவது தவறு என்றும் சொல்ல வைக்கிறது.
  2. இதனால் என்ன செய்ய வேண்டுமென்றால் – மனிதர்களின் மேல் நம்பிக்கை வைப்பதை விட ... தொழில் நுட்பத்தில் அறிவியல் அணுகு முறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதனால்தான் .... புதிப்பிக்கப் பட்ட அணை மீது நம்பிக்கை கொள்ளாத அரசும் [கேரளா] அரசின் பாதுகாப்பாக தயாரிக்கப் பட்டுள்ள உலையின் மீது நம்பிக்கை கொள்ளாத மக்களும் தவறு என்பதினால் ஒருவர் கேரளாவையும் மறு பகுதியில் கூடங்குளம் மக்களையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
  3. தேவையற்ற பண விரயம்... இவ்வளவு செலவு செய்து கட்டப் பட்ட அணை / இவ்வளவு பணம் செலவு செய்ய பட்டு கட்டப் பட்ட உலை இரண்டையும் அப்படியே கை விட முடியாது என்பதனால் ஒருவன் கேரளாவையும் அதே சமயம் கூடங்குள மக்களையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது..
  4. கூடங்குள மின்சாரம் அதிக வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். அணை தண்ணீர் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதனால் // வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதை ஆதரிக்கவும் அதே சமயத்தில் வளர்ச்சியைத் தடுப்பதை எதிர்க்கவும் வேண்டும் என்கிற அவசியத்தில் ஒருவன் கேரளாவையும் அதே சமயம் கூடங்குளத்தையும் எதிர்க்க வேண்டியிருக்கிறது.
  5. இரண்டுமே பொய் பிரச்சாரம் செய்கிறது. கேரளா அணை உடைந்து விடும் என்றும் அதே சமயம் கூடங்குள உலை உடைந்து விடும் என்பதும் பொய் பிரச்சாரம்...

எனவே இது போன்ற காரணங்களுக்காக தொழில் நுட்பத்தை ஆதரிப்பவர் / அறிவியல் மீது நம்பிக்கை வைப்பவர் அனைவரும் – முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளாவையும், இந்தியாவின் அல்லது தமிழக வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டவர் அனைவரும்... கூடங்குளத்தில் அணுஉலை வருவதை ஆதரிக்க வேண்டும் என்பதே சரி என்று நினைக்கிறார்கள்....


ஆனால் அது சரியா என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்...
எனது அணுகுமுறை -
அடுத்த பதிவில்...


கொசுறு:
இத்தகைய நம்பிக்கை கொண்டோர் அனைவரும் தமிழக மக்கள் மீதும், தமிழக வளர்ச்சியின் மீதும் அக்கறை கொண்டார்கள் என்பதையும் மறந்தது விடக் கூடாது. 

10 comments:

Sankar Gurusamy சொன்னது…[பதிலளி]

நீங்கள் கூறுவதுபோல இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. பயம் என்பது பொதுவானதுதான் என்றாலும், வேஷம் கட்டி பயமுறுத்துவதற்கும் (முல்லை பெரியார்) கத்தியை கழுத்தில் வைத்து பயமுறுத்துவதற்கும் (கூடன் குளம்) வித்தியாசம் இருக்கிறது என நினைக்கிறேன்.

இது காங்கிரஸின் சதியாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் முல்லைப் பெரியாரை விட்டுக் கொடுக்க நீங்கள் கூடங்குளத்தை ஏற்கவேண்டும் என ஒரு ட்ரேட் ஆப் க்காகவும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டிருக்கலாம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

http://anubhudhi.blogspot.com/

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

மயிலன் சொன்னது…[பதிலளி]

அணை உடைந்து விடுமோ என்பது தேவையற்ற அச்சம்..(நிபுணர் குழு உடையாது என்று நம்பிக்கை அளித்த பின்னும் )
அணு உலை ஆபத்துகள் உண்டாக்கும் என்பது ஊர்ஜிதமான உண்மை..

மேலும்
அணையால் தமிழகத்திர்காவது நல்லது நடக்கும் என்று வைத்து கொள்வோம்..ஆனால் அணு உலையால் எவர்க்கும் எந்த நன்மையையும் இல்லை..அதனால் ஒருவேளை மின்சாரம் கிடைத்தால் அது மூன்று சதவிகிதத்திற்கு குறைவான தேவையையே பூர்த்தி செய்யும்..ஆனால் அதற்கு செலவிடும் தொகையை வேறு வழி மின்சார உற்பத்திக்கு செலவிடின் பயன் மிக அதிகம்...

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

அணு உலை ஆபத்துகள் உண்டாக்கும் என்பது ஊர்ஜிதமான உண்மை..

மேலும்
அணையால் தமிழகத்திர்காவது நல்லது நடக்கும் என்று வைத்து கொள்வோம்..ஆனால் அணு உலையால் எவர்க்கும் எந்த நன்மையையும் இல்லை..அதனால் ஒருவேளை மின்சாரம் கிடைத்தால் அது மூன்று சதவிகிதத்திற்கு குறைவான தேவையையே பூர்த்தி செய்யும்..ஆனால் அதற்கு செலவிடும் தொகையை வேறு வழி மின்சார உற்பத்திக்கு செலவிடின் பயன் மிக அதிகம்... //

Well said மயிலன்...

DeEpAK KaRtHiK (420) சொன்னது…[பதிலளி]

ellam avan seyal !
DEEp@K

அப்பு சொன்னது…[பதிலளி]

@Sankar Gurusamy

சங்கர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஒவ்வொரு முறை ஒரு போராட்டம் வரும் போதும் அதை திசை திருப்புவது மாதிரியான செயல்கள் நம் நாட்டில் வருவது சரிதான். ஒருவேளை நீங்கள் சொன்னது போல, மத்திய காங்கிரஸ், கேரளா காங்கிரசைத் தூண்டி விட்டு, பலர் சொல்லுவது போல, அறிவியலை நம்புங்கள் என்று மக்களை அதன் பால் ஈர்த்து இடிந்தகரைப் போராட்டத்தை ஒன்றும் இல்லாமல் செய்து விடக்கூடிய அளவுக்கான சகுனித்தனம் இருக்கலாம்.

அப்பு சொன்னது…[பதிலளி]

@மயிலன்

மயிலன்,
மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
அடுத்த பதிவு எழுதுவதற்கான வேலையையை மிகச் சுலபமாக்கி விட்டிர்கள்.

அப்பு சொன்னது…[பதிலளி]

@ரெவெரி
நன்றி ரெவரி,

நானும் ஆமோதிக்கிறேன்.

அப்பு சொன்னது…[பதிலளி]

@DeEpAK KaRtHiK (420)
தீபக்,
அவரே பாவம் -- என்ன பேசுறதுன்னு தெரியாம இருக்கிறாரு.
ஒருவேளை அவர்தான் காரணமா இருக்குமோ!

அவன் - என்பது மாண்பு மிகு மன்மோகனைத் தானே குறிக்கிறது?

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்