7.1.12

சிறுதுளி - புத்தாண்டு ஸ்பெஷல்


அம்மாவில் தொடங்கி அம்மாவில் முடிக்க...
  • புத்தாண்டு இலவசப் பொருட்கள் - பொங்கலன்று தொடங்கி புத்தாண்டுக்குள் முடியும் என்று தமிழக அரசுக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
    • ஏதாவது தெரிகிறதா? சித்திரைப் பெருநாள் விழா என்பது மீண்டும் புத்தாண்டுப் பெருவிழாவாக மாறி விட்டது. 
    • புத்தாண்டு என்றால் அடுத்த புத்தாண்டா? [இரண்டாயிரத்து பதின்மூன்றா] 
    • அம்மாகிட்ட சில கேள்விகள் கேக்கலாம்தான் ஆனா பயமா இருக்கு..

  • "கச்சத்தீவில் மீன்பிடி உரிமை தமிழகத்துக்கு கிடையாது" 
    • உடனே இலங்கை அரசு இப்படித்தான் என்று தாறு மாறாகவெல்லாம் குதிக்காதீர்கள். சொன்னது இலங்கை அரசு இல்லை - மத்திய அரசு.
    • புத்தாண்டு உண்மை...

  • மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தென் ஆப்ரிக்கா பயணம். உர இறக்குமதி தொடர்பாக ஒப்பந்தம் போடுவதற்கும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் பயணம். 
    • பார்லிமேன்ட்லேயே பேசமாட்டார். இவர் கடல் கடந்து என்ன பேசப் போகிறார். தமிழ்நாட்டில் இருந்த எடமே தெரியலை அஞ்சா நெஞ்சன் ஆப்ரிக்காவுப் போகிறார் - சாரி தென் ஆப்பிரிக்காவிற்குப் போகிறார்.
    • தமிழகத்தில் வாய் பேச முடியாததால் நாடு விட்டு நாடு செல்கிறாரா?
    • புத்தாண்டுப் பயணம் - யார் கண்டார் புதிய உத்வேகத்தோடு காந்தி திரும்பி வந்தது மாதிரி போராட்ட உணர்வோடு வரலாம். [காந்தி மன்னிப்பாராக]

  • தமிழ் நாட்டில் வாசம் செய்யும் நம் சேர நாட்டு செஞ்சோற்று விரும்பிகள் - அதான் கேரளா தண்ணீர் தருகிறேன் என்று சொல்லுதே அப்புறம் என்ன - அப்படி என்றார்கள். 
    • அப்புறம் புதிய அணை கட்டி தமிழகம் அதை பராமரித்துக் கொள்ளலாம் என்றார் உம்மாண்டி. இன்று புதிய அணையை பராமரிப்பது கேரளத்திடமே இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். புதிய அணை கட்டினால்கூட நூற்றி இருபது அடி உயரத்தை விட கூடுதலாக கட்ட மாட்டார்கள்
    • எனவே செஞ்சோற்று விரும்பிகள் அமைதியாக இருப்பதே நல்லது. பேசாமல் அவர்கள் அனைவரும் ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதி மூன்று முறை ஜோதி வடிவில் காட்சி கொடுக்கும் மகரஜோதியை - காட்டிலாகா அதிகாரிகள் ஏற்றும் ஜோதியை - ஐயப்பனின் தரிசனம் என்று கொண்டாடிவிட்டு வரலாம். இன்னமும் அதைச் செய்கிறார்களே... 
    • நீதிமன்றத்தில் இதுநாள் வரை இவர்கள் தான் ஜோதியை ஏற்றியது என்று சொன்ன பிறகும், இப்படித் தேடித் தேடித் போகிற இவர்கள்தான் அறிவாளிகள் - ஒருவேளை ஐயப்பன் சொன்னால்தான் அணை கட்டுவதை விடுவார்களோ என்னவோ.
    • எல்லாரையும் மகர ஜோதிக்கு அழைத்திருப்பது - தினகரன் - விளங்கிரும்.
    • புத்தாண்டு ஏமாற்று ஜோதி 

  •  அம்மாசொன்னதாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப் பட்டது. பத்திரிக்கைகள் எரிக்கப் பட்டது. இது அம்மாவிற்குத் தெரியாது. [நம்பிட்டோம்] 
    • சரியா தப்பா... இரண்டு பேருமே தப்புதான். 
    • மக்கள் போராட்டம் எல்லாம் தப்பு தப்புன்னு சொன்ன மகராசங்கேல்லாம் இப்ப கம்னு இருக்காங்க. ஒன்னு புரிஞ்சு போச்சு அதாகப் பட்டது -  அமைதிப் போராட்டம் எல்லாம் ஒத்து வராது...
    • அதனால் அம்மா வழிப் போராட்டம்தான் ஒத்து வரும். ஆக இதுதான் புத்தாண்டுப் போராட்டம்.  புதிய போராட்டம்.

கொசுறு கேள்வி

அ. தி.மு.க தொண்டர்கள் எதுக்கு கோபப்பட்டார்கள்?
மாமி என்று சொன்னதுக்கா?
இல்லை மாட்டுக் கறி சாப்பிட்டாங்கன்னு சொன்னதுக்கா?
நாம எல்லாரும்தான் மாட்டுக் கறி சாப்பிடுறோம். நான் சாப்பிடுவேன். அதுக்கு கோபப் பட வேண்டிய அவசியம் இல்லை.
மாமி இல்லைன்னா - இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே..
மாமிதான் அப்படின்னா கோபப் பட வேண்டிய அவசியம் இல்லைதானே?

    6 comments:

    Sankar Gurusamy சொன்னது…[பதிலளி]

    பல விசயங்களைப் பற்றி சொல்லி இருக்கிறீர்கள்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பெயரில்லா சொன்னது…[பதிலளி]

    புத்தாண்டு வாழ்த்துகள்...உங்களுக்கும் மம்மிக்கும்...-:)

    காட்டான் சொன்னது…[பதிலளி]

    வணக்கம் அப்பு நலமா?
    புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!

    நீங்க சொல்வதை பொல அம்மா கோவப்படுவது இருக்கட்டும் நான்கூட மாட்டு கறி சாப்பிடுவேன் ஆனா அது எனது தனிப்பட்ட உணவு பழக்கம். அதை போல அம்மா சாப்பிட்டா அது அவரின் தனிப்பட்ட உணவு பழக்கம் இதில ஏன் நக்கீரன் தேவையில்லாமல் தலையிட்டது?இதுதான் பத்திரிக்கை சுதந்திரமா?

    Unknown சொன்னது…[பதிலளி]

    வணக்கம் சங்கர்

    Unknown சொன்னது…[பதிலளி]

    @ரெவெரி
    வணக்கம்
    நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்.
    மம்மிக்கு என்னைப் பிடிக்காது..

    Unknown சொன்னது…[பதிலளி]

    @காட்டான்
    வணக்கம் காட்டான்.
    உங்கள் வலைப் பூ முகவரி மாறிவிட்டதால் என்னால் உங்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    தனிப்பட்ட விஷயம் என்பதும் அதில் பத்திரிக்கைகளின் தலையீடு தேவையில்லை என்பதும் சரியே.
    அதைத் தான் ஒற்றை வரியில் முடித்துக் கொண்டேன்.
    எனது விஷயம் என்பது இதை நக்கீரன் செய்தாலும் தினகரன் செய்தாலும் தவறே.
    ஆனால் அதற்காக அலுவலகத்தைத் தாக்குவது ... எரிப்பது இதில்தான் தவறு இருக்கிறது என்றும், அதை அவர்கள் எப்படிக் கையாளவேண்டுமோ அப்படிக் கையாளவேண்டும் என்றுதான் சொல்ல வருகிறேன்.
    ஆள்பவர்களுக்கு நீதி மன்றத்தின் மீது நம்பிக்கையில்லையா?
    அல்லது தார்மிகப் போராட்டம் எல்லாம் ஒன்றும் செய்யாதா?
    அப்படியெனில் உண்மையான தேவைகளுக்காகவும் நீதிக்காகவும் சாத்வீக முறையில் போராட்டம் செய்பவர்கள் பாவம்தானே..

    கருத்துரையிடுக

    பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்