3.9.10

உலகத்தின் நோக்கம் 5

சரி தவறு என்றால் அது அறம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகிறது.
அறம் என்பதை நிலை நிறுத்த நோக்கம் இல்லையென்றால் அது தேவை என்று சொல்வதும் கடினம்.

ஆனாலும் நமக்காகத் தான் நாம் அதை உருவாக்கிக் கொள்கிறோம் - என்றால் அதை மிகவும் மென்மையாகவே வலியுறுத்த முடியும்.

எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அப்படியெனில் பெரும்பான்மையின் அடிப்படியிலும் சரி தவறு என்பதை நிர்ணயம் சித்துவிட முடியாது. மெயன்ஸ்ட்ரீமுக்குள் வராத மக்களின் விருப்பமும், வாழும் வழி வகைகளும் தவறு என்றும் சொல்லிவிட முடியாது.

ஏனெனில் அவர்களும் மனிதர்கள் என்ற அளவிலாவது அவர்களின் விருப்பமும் சரியாகிறது. எந்த ஒரு தனி மனிதனின் விருப்பத்தையும் தவறு என்பது அதிகார போதையிலிருந்து வருவதாகவே இருக்கும்.

பணம் தான் ஒருவனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்கிற விதத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையைத் தான் எல்லாரும் முன் வைக்க விரும்புகிறார்கள்.
அமெரிக்கா தன் நாடு தன் மக்கள், தன் வாழ்வு என்கிற விதத்தில் எல்லா நாட்டையும் இன்னும் சுரண்டிக் கொண்டிருக்கிறது.

எனில் இயற்கைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை தவறு என்று சொல்லிவிட முடியாது. கரியமில வாயு வெளியிடுவதைக் குறைப்பதற்கு அமெரிக்கா ஒரு போதும் முன்வராது. ஏனெனில் அதன் நிலைப் படி அது அவர்களின் வாழ்வின் வசதி வாய்ப்புகளைப் பாதிக்கும்.

ஏனெனில் எதற்கும் நோக்கம் இல்லாத பொழுது நாம் எதனை முன்னிறுத்தியும் பயனில்லை.
எனவே நோக்கம் இயற்கைக்கும் உண்டு என்கிற கட்டமைப்பில் இறங்க வேண்டுமோ என்பதுதான் மனதுக்குப் படுகிறது.
மேலும்... 

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்