அது என் தவறே!
உலகத்திற்கு நோக்கம் இருக்கிறதா இல்லையா என்பது பெரிய விவாதங்களை உள்ளடக்கியது.
இக்கட்டுரையின் மூலம் ஏதாவது ஒன்றை நாம் நிருபித்துவிட முடியும் என்ற எண்ணம் எனக்கு இல்லை – அதில் ஒரு முடிவுக்கும் வர இயலாது.
எந்த ஒரு நிலைப்பாடும் ஏதாவது ஒரு பார்வையிலிருந்து பல்வேறு சிக்கல்களையும், பல கேள்விகளையும் சந்திக்க நேரிடும்.
எல்லாமே interpretations என்கிற விதத்தில்
பல்வேறு சிக்கல்களையும் சந்திக்க நேரும்.
தங்களின் interpretations – படி அவரவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் ஊன்றியிருக்கிரார்கள்.
அதை சரி என்றோ தவறு என்றோ
திட்டவட்டமாக சொல்வதற்கு நமக்கு முடியாது.
ஆனால் ஒன்றை மட்டும் நாம் சொல்ல முயற்சிக்கலாம்.
நாமாக நோக்கத்தை கண்டுபிடிக்கிறோமோ
அல்லது உண்மைலே இருக்கிறதா என்கிற விவாதம் தேவையற்றது.
நாம் இருக்கிற இந்த இயந்திரத்தனமான உலகத்தில் –
நாமும் வேதிப் பொருள்களையும்,
மற்ற உயிரினங்கள் கொண்டிருக்கிற materials – ஐயும் கொண்டிருந்தாலும் –
ஏதோ ஒருவிதத்தில்
நாம் மேம்பட்டவர்களாகவே இருக்கிறோம்.
இதில் யாரும் மறுப்பதற்கு எதுவும் இருக்காது என்றே நம்புகிறோம் –
அவர்கள் materialists – ஆக இருந்தாலும் சரி அல்லது Idealists ஆக இருந்தாலும் சரி – utilitarianism பேசுகிறவர்களாக இருக்கட்டும் அல்லது, பயன்பாடு நிலையைக் கடந்தவர்களாக இருக்கட்டும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், மனித நம்பிக்கையுள்ளவர்கள் – யாராக இருந்தாலும் சரி –
மனிதர்கள் மற்ற விலங்குகளைக் காட்டிலும் சற்றே மேலானவர்கள் என்பதை மறுக்க மாட்டார்கள்.
அந்த மேலான குணம் எது என்பதைப் பற்றிய விவாதம் மேலும் பிரிவினையைத்தான் உண்டாக்கும்.
எனவே அந்த விவாதத்தையும் தவிர்த்து விடலாம்.
ஆனால் அந்த மேலான குணம் என்பது – தாவரங்களைக் காட்டிலும், ஆடு மாடுகளைக் காட்டிலும் மேலானது என்றால் – ஏதாவது ஒரு விதத்தில் நாம் பயனுள்ளவர்களாக இருப்பதே சரி என்று படுகிறது.
அதில் முதன்மையானது – மரம் பயனுள்ளதைப் போல (அதற்கு நோக்கம் என்று ஒன்று இல்லாவிட்டால் கூட), விலங்குகள், பயனுள்ளதைப் போல – நாம் பயனுள்ளவர்களாக இருப்பதுதான்.
இயற்கை விதிகளின் படி நமது கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ளாத விதிகள் அல்லது
அதற்கு அப்பாற்பட்ட புதிய டெக்னாலஜி என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்.
அப்படிப்பட்ட இவ்வுலகத்தை நாம் அதன் போக்கிலேயே அழிய விடுவோம்.
அதற்கு நாம் உதவி செய்ய வேண்டியதில்லை. அதுவாய் அழிந்து போகட்டும்.
நாம் வாழ்வதற்கு உகந்ததாய் இருந்த இவ்வுலகம் இன்னும் பல தலைமுறைகளைக் காணட்டும். அதற்கு நாம் பெரிதாய் ஒன்றும் செய்யாவிட்டாலும் – அதை அழிவுக்கு உட்படுத்தும் செயல்களைச் செய்யாமலே இருக்கலாம் என்பதுதான்.
பல கோடிக் கணக்கான ஆண்டுகளாய் ஏறக்குறைய சரியாய் இருந்த இந்த உலகத்தை மிக விரைவாய் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவியலாளர்களும் நமக்குச் சொல்கிறார்கள்.
Global Warming - ஐ நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மிக வேகமாய் பூமி சூடாகி வருகிறது –
அதற்கு modern (நவீன )மனிதர்களாகிய நாம்தான் காரணம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நம் தந்தை கடன் வாங்கினால் அதை நாம் அடைப்பது போல, பிறர் செய்த தவறுகளுக்கும் நாமே பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஊரை எல்லாம் பயன்படுத்திய ஐரோப்பிய நாடுகள் செய்த தவறுகளின் விளைவை நாமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். என்ன செய்வது? – பாதிப்பு என்பது அனைவருக்கும்தான்.
மரங்கள் இருப்பது நல்லது. இயற்கை சக்தியை விரயமாக்காமல் பயன்படுத்துவது – மக்கள் பரந்து விரிந்து வாழ்வது –
விளை நிலங்கள் விளைநிலங்களாகவே இருக்க விடுவது –
ஒவ்வொரு கிராமத்தையும் நகரத்தையும் முன்பு இருந்தது போல self-sufficient ஆக இருக்க வைப்பது –
இன்னும் இவைகளைப் போல என்ன செய்யலாம் என்பதை
அரசுகளும் நாமும் தான் தொடர்ந்து யோசிக்க வேண்டும்.
நமது சிறு செயல்களால், இன்னும் ஒரு ஆண்டாவது இந்த பூமி கூட வாழும் என்றால் அதுவே நாம் நமக்கு முன்பு மாசு படாமல் இந்த உலகை நமக்கு விட்டுச் சென்றவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் –
நாம் வாழ நம்மை அனுமதிக்கும் (தெரியாமல்தான்)
இந்த உலகத்திற்கு செலுத்தும் மரியாதை.
இல்லையென்றால், நம் உலகைத் தூய்மைப் படுத்தி நமக்கு உணவைக் கொடுக்கும் மரங்களை விட நாம் கீழானவர்கள் தான்.
மண்ணை விடக் கேவலமானவர்கள்தான்.
நமக்குப் பின் மண்ணும் மரமும் இருக்கும் –
நாம்தான் மாய்ந்து போவோம்.
எப்படி இருந்தாலும் மாய்ந்து போகும் நாம்
நல்லதை செய்து மாயலாமே – மாயமாகலாமே!
0 comments:
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்