11.7.13

கொலைகார்கள் நாங்கள்

  • உத்திரகான்ட்டில் ஒரே நாளில் ஆயிரம் உயிர்கள் ஒன்றாய் விழுந்தபோது கூட நான் கலங்கிப் போகவில்லை.  ஆனால் ஆயிரம் ஆண்டுகளாய் உன் போன்றோர் ஒவ்வொருவராய் இறக்கும் போதுதான் நான் வெறுத்துப் போகிறேன். 
  • உன் இறப்பு கொலையோ தற்கொலையோ எனக்குத் தெரியாது ஆனால் கொலைகாரர்கள் யாரென்று தெரியும் ... வேறு யார் நாங்கள்தான்... 
இளவரசனின் தற்கொலைச் செய்தியை - சில தமிழ் பத்திரிக்கைகள்... தர்மபுரி கலவரத்திற்குக் காரணமான இளவரசன் தற்கொலை என்று செய்தி வெளியிட்டு இருந்தன... கலவரத்திற்குக் காரணமான பல அய்னாக் கைகள்  சுதந்திரமாய் இருந்தது மட்டுமல்ல அதை நியாப்படுத்தவும் செய்து களிப்பில் மிதந்து கொண்டு இருக்கும், இறந்து போன இளவரசனை காரணம் காட்டும் சாதி வெறியர்கள் நாங்கள் கொலைகாரர்கள்தானே... 


தனி மனித உரிமை பேசும் நாங்கள், திருமணத்திற்கு மட்டும் சாதிக்குள் உரிமை பேசி அதை எங்கள் உரிமையாகவும் பேசி உன்னைக் கலகக்காரனாக்கின நாங்கள் கொலைகாரர்கள் தானே!

தீண்டாமை பாவச்செயல் உரக்க சொல்வோம் நாங்கள் ஆனால் அது எழுத்தில் மட்டும் இருக்க வேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாய் இருக்கும் நாங்கள் ...

இன்னும் பேசுவோம் மனித உரிமை.... இன்னும் பேசுவோம் தீண்டாமை பாவச் செயல் ... இன்னும் பேசுவோம் காதல் வாழ்க... 

ஆனால் இளவரசன்களை மட்டும் வாழ விடுவதாய் இல்லை...
வாழ்க காதல் ...  வாழ்க மனித உரிமை ... வாழ்க சுதந்திரம்...

6 comments:

ராஜி சொன்னது…[பதிலளி]

உத்திரகான்ட்டில் ஒரே நாளில் ஆயிரம் உயிர்கள் ஒன்றாய் விழுந்தபோது கூட நான் கலங்கிப் போகவில்லை. ஆனால் ஆயிரம் ஆண்டுகளாய் உன் போன்றோர் ஒவ்வொருவராய் இறக்கும் போதுதான் நான் வெறுத்துப் போகிறேன்.
>>
சென்ற வாரம் வரை இந்த விசயத்துல அதிகம் ஆர்வம் காட்டாத நான் இளவரசனின் மரணம் கேட நிமிடம் இனம் புரியா சோகம் மனதினுள்

KPR சொன்னது…[பதிலளி]

சரி இது போல வரலாற்றில் பலர் இறந்திருக்க அவர்கள் கொலையை கௌரவக் கொலை என்று தானே எழுதுவிர்கள் இப்ப என்ன சாதி கொலை??

Unknown சொன்னது…[பதிலளி]


எனக்கு வந்தா தக்காளி சட்னி,உனக்கு வந்தா ரத்தமா?

Unknown சொன்னது…[பதிலளி]

@ராஜி

உண்மைதான் சகோதரியே...

நாம் சாதிக்குள் உருளும் வரை ஒன்றும் செய்ய முடியாது...

Unknown சொன்னது…[பதிலளி]

@KPR

எப்போதும் அது சாதிக் கொலைதான்... சாதி வெறி பிடித்தவர்கள் தான் அதை கவுரவக் கொலை என்று நியாயப் படுத்துவார்கள்..

Unknown சொன்னது…[பதிலளி]

@Suma Nachinu

எனக்கு வந்தாலும் அது ரத்தம்தான் உங்களுக்கு வந்தாலும் ரத்தம்தான்... ஆனா அதை எல்லாரும் தெரிஞ்சுக்கனுமே..

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்