24.7.13

இவர்களுக்கா நாம் அடிமைகளாய் இருந்தோம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகக் கெட்டு விட்டதாக தமிழக முன்னாள் முதல்வர் இன்று மிகப் பெரிய குற்றச் சாட்டை எழுப்பியிருக்கிறார்.... நமக்கு இன்னும் அதிகமாக நினைவுகள் மழுங்கி விட வில்லை என்பதை கணம் பொருந்திய முன்னாள் முதல்வருக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை நம் எல்லாருக்கும் இருக்கிறது. அதனால் இன்று எல்லாம் சரி ஆகி விட்டது என்று அர்த்தம் இல்லை.   
இன்றைய முதல்வர் எதனால் அந்நிய முதலீட்டை எதிக்கிறார் என்றும் அதன் பின்னால் உள்ள அரசியலும் எனக்குத் தெரியாது. ஆனால் அந்நிய முதலீட்டை அவர் எதிர்ப்பதை நான் முற்றிலுமாக ஆதரிக்கிறேன். எல்லாவற்றிலும் அந்நிய முதலீட்டை அதிகரித்த காங்கிரஸ் சுதேசிகள் கொஞ்சமாவது தங்கள் 'சுதேசித் தன்மையை' உணர்ந்தார்கள் என்றால் அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது. கலைஞர் உண்மையிலேயே மாற்றத்தை எதிர் பார்த்தால் மக்கள் நலனுக்கான போராட்டங்களை முன்னெடுப்பதே அவருக்கும் அவரது தளபதிகளுக்கும் நல்லது.


  • முல்லைப் பெரியாறு அணை வழக்கில் - தமிழக அரசு எப்படி உரிமை கோர முடியும் என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தமிழக அரசின் பதிலில் திருப்தி அடைய வில்லையாம். 1970 ஆம் ஆண்டு இரு மாநில ஆளுநர்களும் புதிப்பித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்பது திருப்தியாக இல்லையாம். பேசாமல் அந்தந்த மாநிலங்களின் எல்லைக்குள் இருப்பவை எல்லாம் அந்தந்த மாநிலங்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஒரு தீர்ப்பையாவது கொடுத்து விட்டுப் போகலாம்.... 
  • கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் - உச்ச நீதிமன்றத்தின் இன்னும் அரசாங்கம் நிறைவேற்ற வில்லை என்றும் அதனால் மின் நிலையத்தை இயங்க அனுமதிக்கக் கூடாது என்ற வழக்கை  தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறார்கள் உயர் நீதி மன்ற நீதிபதிகள்.  
  • சரியான காரணங்களோடு போனால் ஒத்தி வைக்கிறார்கள்.... வரலாற்று ஆவணங்களோடு போனால் திருப்தி அடைய மாட்டேன் என்கிறார்கள்.... என்ன செய்யலாம்? 
நாங்கள் சொன்னால்தான் சூரியன் கூட எழும் என்று சொன்ன இங்கிலாந்து ஆதிக்க வாதிகளின் அரண்மணையில் அடுத்து ஆள்வதற்கான புதிய இளவரசர் பிறந்திருக்கிராராம்... உலக மீடியாக்கள் லைவ் கவரேஜ் கொடுக்கின்றன... இங்கிலாந்து மக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கே ஒரு வாரிசு வந்தது போல ஆர்ப்பரிக்கிறார்கள்.... மக்களாட்சி மக்களாட்சி என்று சொன்னாலும் இன்னும் அரச பரம்பரையின் மீதான மோகம் கொஞ்சம் கூடக் குறைவதாய் இல்லை.. தமிழக ரசிகர் மன்றங்களுக்கும் இவர்களுக்கும் ஒன்றும் பெரிதாய் வித்தியாசம் இல்லை.. ரசிகர்களாவது நடிக்கிற கலைகர்களின் பின்னால் ஓடுகிறார்கள்... வெறும் பொம்மைகளின் மீது ஓடுகிறார்கள் இங்கிலாந்து மக்கள்... இன்னும் மக்களாட்சி மீது முழுமையான நம்பிக்கை இல்லாத இங்கிலாந்து மக்கள்...

கேவலம் இவர்களுக்கா நாம் அடிமைகளாய் இருந்தோம். அந்நிய முதலீட்டின் வழியாய் இவர்களைப் போன்றவர்களுக்குத் தான் அடிமைகளாய் இருப்போம்... கெஞ்சி தண்ணீர்ப் பிச்சை கேட்டு மலையாளர்களுக்கும், கன்னடர்களுக்கும் அடிமைகளாய் இருப்போம். நம் மக்களின் உயிர் கொடுத்து நம் அண்டை மாநிலத்தவருக்கு ஒளிகொடுப்போம் என்றென்றும் அடிமைகளாய்...
இந்தியா ஒளிர்க...


1 comments:

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

தம் உரிமைகளை கோர வேண்டிய இடத்தில், தமது நலன்களைப் பேண வேண்டிய இடத்தில் எப்போதும் தோல்விக் கண்டுள்ளது தமிழக அரசாங்கங்கள். மென்போக்காகவும், மேம்போக்காகவும் தமது நலன்களை விட்டுக் கொடுப்பு செய்கின்றன. அண்டை மாநிலங்களிடம் தம் தரப்பு நியாயங்களையும் எடுத்துக் கூறவும் தவறிவிட்டுள்ளன. காங்கிரஸ், திமுக, அதிமுக மூன்றும் இதே தான் செய்து வந்துள்ளன.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்