நான் எழுத வந்து ரொம்ப நாளாச்சு. மூச்சு விட நேரமில்லை முடிவெட்ட நேரமில்லை. எல்லாம் இன்றோடு முடிந்து இன்னும் மூன்று நாட்கள் கொஞ்சம் வேலைப்பளு இல்லாமல் இருக்கலாம். நிறைய நடந்து விட்டது. இப்போதைக்கு ஒன்று மட்டும்.
இயற்கையின் சீரழிவிற்கு எல்லைகள் கிடையாது என்பதை உத்தர்கண்ட் மாநிலத்தில் வெள்ளம் மீண்டும் நினைவு படுத்தி இருக்கிறது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் வெறும் அனுதாபங்களோடு மட்டும் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டுமா என்கிற கேள்விகளை கேட்டாக வேண்டும். பல ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கியிருக்கும் இந்தக் காட்டாற்று வெள்ளம் வரும் என்று முன்பே தெரியுமா தெரியாதா? அடிக்கத் ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து ராக்கெட் பறக்கிறது. வானிலை முன்னறிவிப்பை நமக்குத் தெரியப்படுத்தும் தொழில் நுட்பம் நமக்கு இல்லை... அப்படியே இருந்தாலும் வரும் முன் என்ன செய்ய வேண்டும் என்கிற தயார் மன நிலை, மக்களைக் காப்பாற்ற துரித நடவடிக்கை....ரொம்பக் குறைவு.
[உடனே, காப்பாற்றச் சென்று இறந்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தி என்னைக் குற்றவாளியாக்க முயற்சிக்காதீர்கள்... அவர்கள் இறந்த ஹெலிகாப்டர்களை ஊழலில் தரம் குறைந்தவைகளாக வாங்கியதால் வந்தது.... வெறும் தொழில் நுட்பக் கோளாறால் மட்டுமல்ல.... அதை ஒழுங்காகச் செய்திருந்தால் இந்த இராணுவ வீரர்கள் இறந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை].
மழை வருமா இல்லையா, எந்த அளவுக்கு வரும் என்பது வரை இன்று துல்லியமாக கூகுல் முதல் யாகூ வரை தெளிவாகச் சொல்கின்றன... ஆனால் அதைக் கண்டு அதற்கான முன் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசுதான்... மழை பெரு வெள்ளமாக மாறுவது, மரங்களை வெட்டி காடுகளை அழிப்பது போன்ற நமது பணம் பார்க்கும் எண்ணம்தான் என்பதும் உண்மைதானே...
எனவே வெளி நாட்டு கட்டளைகளை ஏற்று பொருளாதார சீர் திருத்தம் என்ற பேரில், வெளி நாட்டு நிறுவனங்களுக்கும், தொழில் நுட்பம் என்ற பேரில் நாட்டை அழிவுப் பாதிக்கும் கொண்டு செல்லும் இந்த மன நிலையில் கொஞ்சம் மாற்றம் வந்தாலே போதும் பல ஆயிரக் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்.
சரி ஒரு மாதத்திற்கு முன்பே அறிக்கை தரக் கூடிய வானிலையின் மாற்றத்தைக் கண்டு பிடிக்க முடியாமலேயே இந்திய மக்கள் இப்படி ஆயிரக் கணக்கான மக்கள் இறந்து போயிருக்கிறார்களே ... சொல்லாமலே வரும் விபத்துகளை... [அணு உலை] அது கொண்டு வரும் விபரீதங்களைப் பற்றி நாம் யோசிப்பது கூட இல்லை என்பது வேதனைதான்... அதனால் முன்பே
நாம் தமிழக மக்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வோம்.
அனுதாபங்களை இறந்தவர்களுக்கு மட்டும்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை - இறக்க இருக்கிறவர்களுக்கும் சொல்லலாம். நான் செய்தது தவறென்றால்....
குஜராத் மாநில காங்கிரஸ், உடல்நலக் குறைவோடு இருக்கிற நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறது.
நெல்சன் மண்டேலாவுக்கும் காந்தியின் அஹிம்சாவுக்கும் நிறையத் தொடரபு இருக்கிறது என்பதை உலகம் அறியும். அந்த நெருக்கத்தில்தானோ என்னவோ வேறு யாரும் அனுதாபம் தெரிவுக்கும் முன்பே குஜராத் மாநில காங்கிரஸ் ரொம்ப வேகமாகவே அவர் இறப்பதற்கு முன்பே அனுதாபத்தைத் தெரிவித்திருக்கிறது. அதனால் அனுதாபம் தெரிவிப்பதில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
4 comments:
மழை வருமா இல்லையா, எந்த அளவுக்கு வரும் என்பது வரை இன்று துல்லியமாக கூகுல் முதல் யாகூ வரை தெளிவாகச் சொல்கின்றன... ஆனால் அதைக் கண்டு அதற்கான முன் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசுதான்... மழை பெரு வெள்ளமாக மாறுவது, மரங்களை வெட்டி காடுகளை அழிப்பது போன்ற நமது பணம் பார்க்கும் எண்ணம்தான் என்பதும் உண்மைதானே..
உண்மை ...உண்மை இது நூற்றுக்கு நூறுவீதம் உண்மை தான் ஐயா .
welcome back.
@Ambal adiyal
வணக்கம்... வருகைக்கு நன்றி...
@Unknown
தேங்க்ஸ்
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்