21.7.11

சமச்சீரும் சாணக்கியத்தனமும்

 • கலைஞர் கருணாநிதி அரசியல் சாணக்கியர் என்றும், அரசியல் செய்வதில் அவரைப் போல யாரும் இல்லை என்றெல்லாம் நிறையப் பேர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அனால் நடப்பதைப் பார்த்தால் அதெல்லாம் ஒரு சுக்கும் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர் இன்றைய முதல்வரிடமிருந்து நிறைய அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.
 • இன்றைய முதல்வர் எதைச் செய்தாலும் தமிழக மக்களின் நலுனுக்காகவே செய்வதாகவே அனைவரும் இன்றைக்குப் பேசுகிற அளவுக்குச் இந்த எழுபது நாட்களாக எல்லாரையும் பேச வைத்திருக்கிறார் என்றால் - இதைத் தவிர வேறன்ன வேண்டும் ஆதாரம்.
 • புதிய சட்ட சபைக்குச் செல்வதில்லை. ஆனால் அதில் உள்  நோக்கம் எதுவும் இல்லை என்று அவர் சொல்லுகின்றார். தமிழகத்தில் சிறப்பான ஆட்சியைக் கொடுப்பதற்கு இது தடையாக இருக்கும் என்று சொல்லுகிறார் - வரிந்து கட்டிக் கொண்டு எல்லாரும் சரி என்று எழுதுகிறார்கள்.
 • சமச்சீர் கல்வி என்பது தரமாற்று இருக்கிறது என்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தை ரத்து செய்வதாக சொல்லுகிறார்கள் அம்மா. அது சரிதான் - அதில் வேறெதுவும் உள்குத்து இல்லை என்று எல்லாரும் நம்புகிறார்கள் - எல்லாரும் எழுதுகிறார்கள். 
 • சமச்சீர் கல்வியின் திட்ட ஆய்வுக் குழு என்பதில், உலகின் மிகச் சிறந்த கல்வியாளர்கள் திரு. ஜெயதேவும், திருமதி. ஒய். ஜி. பார்த்தசாரதி போன்றவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும், இவர்கள் மிகவும் காத்திரமாகப் படித்துப் பார்த்து சமச்சீர் கல்வி தரமற்றது என்று சொல்லுகிறார்கள். இப்படிப் பட்ட கல்வியாளர்கள் முன்பே கருணாநிதி அவர்களால் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். அப்போதுதானே சாணக்கியர். இன்று அவரே உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றித் தரவேண்டுமென கூழைக் கும்பிடு மட்டும் போடவில்லை அப்படியாக தமிழக முதலமைச்சருக்கு அறிக்கை விட்டிருக்கிறார் - முன்னாள் முதல்வர். அவர்  நியமித்த பாடத்திட்டக் குழுவின் ஆட்களைப் பாருங்கள் - ஐ.ஐ.டி. யின் இயற்பியல் பேராசிரியர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் வேதியியல் பேராசிரியர் போன்றவர்களை  வைத்து என்ன செய்ய முடியும்?
 • யாரைப் பார்த்தாலும் சமச்சீர் கல்வித்திட்டம் தரம் வாய்ந்ததாக இல்லை என்ற ஒரு குற்றச் சாட்டை வைக்கிறார்கள். படித்துப் பார்த்தவர்கள் குறைவு.  அதைப் பற்றிய முழு விவரமும், திட்டக் குழுவின் ஓட்டைகளையும் இங்கே படித்து அறியலாம்.
 • ஏறக்குறைய இரண்டு மாதங்கள் முடியும் நிலையில், பள்ளி மாணவர்கள் எதற்குப் பள்ளிக்குப் போகிறோம் என்று தெரியாமலேயே போய்க கொண்டிருக்கும் நிலை இன்னும் எவ்வளவு நாட்களுக்குப் போகும் என்று தெரியவில்லை. இப்போது மீண்டும் உச்ச நீதி மன்றத்திற்குப் போகிறது. தமிழக மாணவர்களை பழைய பழைய பாடத்திட்டங்களை பின்பற்றச் சொல்லுவதன் மூலம் தமிழக மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் இன்றைய முதல்வரை நாமும் பாராட்டுவோம். பழைய சட்டமன்றத்திற்கு சென்றதன் மூலம் மிகவும் உன்னதமான ஆட்சியைத் தரும் புதிய முதல்வரை வாழ்த்துவோம்.
 • தமிழக மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு இருப்பது போலவும் - இன்னும் சொல்லப் போனால் சமச்சீர் கல்வியைத் தடை செய்வேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்ததைப் போலவும் அதனால்தான் மிகுந்த சிரத்தையோடு இதில் ஈடுபட்டிருப்பதாகவும் எல்லாரையும் பேச வைக்கிற சாணக்கிய அம்மா, அய்யா விற்குப் பாடம் எடுக்க வேண்டும். எதைச் செய்தாலும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த முதல் நாளில் இருந்தே செய்ய வேண்டும் - இந்த வேகம்தான் விவேகம். அப்போதுதான் ஆட்சி முடியும் தருவாயில் எல்லாரும் இதை மறந்து போவார்கள். ஐயா இதையும் கற்றுக் கொள்ள வேண்டும். 
 • இந்த சானக்கியர்களுக்கு மத்தியில், எதைப் பற்றியும் கவலைப் படாமல் இருக்கும் பெற்றோர்கள் தான் மிகப் பெரிய சாணக்கியர்கள் போல இருக்கிறது. இரண்டு மாதங்கள் பிள்ளைகள் பள்ளிக்குப் போகின்றன. பொதுவாக மாணவர்கள் நலனில் எல்லாம் அக்கறை வேண்டாம் - தன் பிள்ளையின் மீதாவது ஒரு கரிசனை வேண்டாம். தன் வீட்டை விட்டு போனால் போதும் - பள்ளியில் படித்தாலும் சரி இல்லையென்றாலும் சரி என்கிற மாதிரி - என்று தள்ளி விடுகிற பெற்றோர்கள் கொஞ்சமாவது சிந்தனை செய்ய வேண்டாமா?
 • இந்தப் பெற்றோர் - ஆசிரியக் கழகங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஓட்டு மொத்த தமிழகமே அமைதி காக்கும் போது - பெற்றோர் ஆசிரியக் கழகங்கள் என்ன செய்து விட முடியும் என்று அமைதி காக்கிறதே - இதுதான் சாணக்கியத் தானம். ஆட்சியாளர்களை விட அமைதி காக்கிற நாம்தான் சாணக்கியர்கள். 
 • எதைச் செய்தாலும் அமைதி காக்கிற சாணக்கியத்தனம் - ஒரு பக்கத்திலிருந்து அப்படியே முழுவதுமாக மறுபுறம் சாயும் சாணக்கியத் தனம் - அடுத்த தேர்தலில் அப்படியே எதிர்ப்புறம் சாயும் சாணக்கியத் தனம். நமது சாணக்கியத்திற்கு ஈடு  - முன்னாளும் கிடையாது இந்நாளும் கிடையாது.

4 comments:

MUTHU சொன்னது…[பதிலளி]

ஐய்யா புலவரே, வஞ்சப்புகழ்ச்சி அணியில் எல்லோரையும் மிஞ்சி விட்டீரே. வாழ்த்துக்கள் மேலும் எழுதவும்.

அப்பு சொன்னது…[பதிலளி]

நம்ம இருக்கிற நிலையில இப்படிப் பகடி செய்துதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கிறது.

Saha, Chennai சொன்னது…[பதிலளி]

//
இந்தப் பெற்றோர் - ஆசிரியக் கழகங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஓட்டு மொத்த தமிழகமே அமைதி காக்கும் போது - பெற்றோர் ஆசிரியக் கழகங்கள் என்ன செய்து விட முடியும் என்று அமைதி காக்கிறதே - இதுதான் சாணக்கியத் தானம். ஆட்சியாளர்களை விட அமைதி காக்கிற நாம்தான் சாணக்கியர்கள்.
//


முக்கிய செய்தி.
பெற்றோர்- ஆசிரியர் கழகங்கள் கலைப்பு. அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் நள்ளிரவில் கைது.

பெருமதிப்பிற்குரிய மொதலமைச்சர் புரட்ச்சிதலைவி டாகுடர் அம்மா அவர்களின் புதிய கல்விமுறையான முதல் period -இல் நொண்டி விளையாட்டு, இரண்டாம் period - இல் சினிமா பாடல்கள். மூன்றாம் peroid -இல் வெட்டிக்கதை பேசுதல். நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் period -இல் தூங்குதல், குரட்டைவிடுதல் மற்றும் மூச்சுவிடுதல் (?!), ஏழு மற்றும் எட்டாம் period -இல் அவரவர் விருப்பத்திற்கிணங்க கோ-கோ, கபடி, புட்டு மற்றும் கில்லி விளையாட்டு என்ற அருமையான பாடத்திட்டங்களை பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் வரவேற்று அறிக்கை வெளியிடாத காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரிவான செய்திகளுக்கு பொயா நியூஸ் பாருங்கள்.

அப்பு சொன்னது…[பதிலளி]

சகா... இது கூட நல்லா இருக்கே. இது எனக்குத் தெரியாதே.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்